கனவு தோழன் – 16

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அன்புள்ள தோழிகளே !

கனவு தோழன் அடுத்தப் பதிவை கொடுத்துள்ளேன்!உங்கள் கருத்தை எதிர் பார்த்து நான்......கனவு தோழன் – 16பவளத்தை அழைத்து வந்த கபிலன் அவளை மாடி வளைவில் நிறுத்தி அவளுக்கு எதிர் புறம் நின்று கொண்டான்,அவள் மீது கொள்ளை காதல் இருந்தாலும் படிக்கும் வயதில் அவளைத் திசை திருப்ப அவனுக்கு விருப்பமில்லை,மேலும் முறையாகத் தான் அவளிடம் காதலை சொல்ல வேண்டுமென்று இருந்தான்,திருமணம் முடிந்து தனது காதலை வெளி படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணம்.அவனது அத்தை மீனாட்சியே அதிசயித்துப் போனார்,இப்புடி பட்ட மருமகன் கிடைத்தது அவர்களுக்கு வரம் தானே!,இந்த காலத்தில் காதலர்கள் என்றால் வாரம் ஒருமுறையாவது வெளியில் செல்ல வேண்டும்,ஊர் சுற்ற வேண்டும் என்பது ஓர் ஐதீகம் என்ற நிலையில், கபிலன் பவளத்திடம் போனில் கூட அழைத்துப் பேசாமல் இருப்பதை எண்ணி அவருக்கு ஆச்சிரியமாகத் தான் இருந்தது.நேசத்தைக் கூட அவர்களது திருமணம் முடிந்து நானே சொல்லி கொள்கின்றேன் என்று மீனாட்சியிடம் சொல்லிவிட்டான்,அதாவது பெரியவர்களே முடிவு செய்தது போல் இருக்கட்டும் என்று அவன் நினைக்க,இன்று தனது வாயாலே சொல்ல வைத்துவிட்டனர்...தன்னவளிடம் தனது நேசத்தைச் சொல்லி விட எண்ணித்தான் இப்போது பவளத்தை அழைத்து வந்தது, கபிலனின் நேர் கொண்டு காண அஞ்சி தலையைக் குனிந்து கொண்டாள் எப்பொழுதும் போல் இன்றும் அவளது குண்டு கன்னங்கள் அவனை ஈர்க்க அவனது கண்ணியம் ஒரு நொடி ஆட்டம் கண்டது என்னமோ உண்மை தான்.அவன் அவளை நெருங்க ஒரு நூல் இடைவெளி இருக்க "நறுமுகியி நறுமுகியீ நீ ஒருதாட்டி நில்லு என்று பாடி கொண்டு வந்தான் அவனது ஆருயிர் நன்பன் நமது மும்பை வாழா......................இது தான் சாக்கென்று பவளம் சிட்டாகப் பறக்க,கபிலனோ ஏக கடுப்பில் திரும்பி அவனை முறைத்தான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் அவனது பாட்டைத் தொடர,கபிலன் அவனது வாய்யை இறுக்கப் பற்றி மூடினான்,உன் தமிழ்ல தீய வைக்க எப்போதும் போல ஹிந்தி பாட்டைப் பாட வேண்டியது தான,எதுக்குடா தமிழை கொலை பண்ற.............கபிலனின் கையைத் தனது வாயில் இருந்து எடுத்துவிட்டவன்,மச்சி ஸ்ரீஜா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டடா………..,என் பொண்டாட்டி தமிழ் தானே அதான் தமிழ் பாட்டு பாடினேன்...............உனக்கு அதுல என்னடா பொறாமை என்று யாதவ் கேட்க.........கபிலனோ ஆமாண்டா ஏன் கேட்க மாட்ட.............இப்போதான் பவளத்துக்கிட்ட பேசலானு அவளை தனியா கூட்டிட்டு வந்தேன் நீ என்னடானா போடா........என்று சலித்து கொண்டவனை, பார்த்து இரண்டு எட்டுப் பின் சென்ற யாதவ் தெரிந்து தாண்ட பாட்டு பாடினேன்,இப்போ புரியுதா என் நிலைமை,இனி நிச்சியம் முடியுற வரைக்கும் உனக்குப் பார்க்க மட்டும்தாண்டா அனுமதி.......................என்று சொல்லிய யாதவ் ஓட்டமெடுக்க......“டேய் துரோகி கையில மாட்டுன செத்தடா நீ!” என்று கபிலன் கத்திகொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்...........அழகிய நட்பு,அன்பான குடும்பம்,நல்ல குணம் கொண்ட மனிதர்கள் இத்தனை அழகான சூழலில் அனைவருக்கும் மனம் இனித்தே கிடந்தது, அது புயலுக்குப் முன் வரும் அமைதி என்பதை யார் சொல்வதாம்......கார்மேகம் அனைவரையும் அழைத்தார்,அவரது அழைப்பிற்கு மதிப்பளித்து அனைவரும் கூடினர்.கபி அடுத்த வாரம் நிச்சியம் வச்சுக்கலாம் இரண்டு மாசம் கழித்துத் திருமணம் அப்புடின்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்,நீ என்ன சொல்லுற.எனக்கு இதுல சம்மதம் தான்ப்பா ஆனா நிச்சியம் மாலை வச்சுக்கலாம்,காலையில ஸ்ரீஜா யாதவ் கல்யாணத்தை முடுச்சுடலாம்........டேய் என்று சீதாவும்,கார்மேகமும் ஒரு சேர கத்தினார்,சீதா கோபமாக என்னடா விளையாடுறியா அவளுக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணலாம் யோசுச்சு வச்சு இருக்கேன் தெரியுமா,மாப்பிள்ளையைத் தான் நீ பார்த்துட்டா கல்யாணமாவது எங்க இஷ்டப்படி நடக்கட்டும் முடிவாக உறைக்க.......தனது நன்பனின் நிலையைக் கூற முடியாது சூழ்நிலையை எண்ணி மருகினான்,எப்படி அவரைச் சமாளிப்பது என்று அவன் எண்ணி கொண்டு இருக்கையில் யாதவ் பேச தொடங்கினான்........

அம்மா எனக்குச் சொந்தம் அப்புடின்னு யாருமில்லை,ஆடம் பரமா கல்யாணம் பண்ண எனக்குப் பிடிக்கல,அதுவும் இல்லாம ஸ்ரீஜா இன்னும் படிப்பை முடிகலை,நானும் மேல படிக்கனும் அதுக்கு அடுத்த வாரம் வெளி நாடு போறேன்,நான் வர மூன்று வருடம் ஆகும்,அதுனால பதிவு திருமணம் சரியா வரும்,அவளுக்கும் இதில் சம்மதம் தான் என்று ஸ்ரீஜாவை ஒரு பார்வை பார்க்க,அவளும் ஆமாம்மா, அடுத்து அவள் பேசுவதற்குள்.சீதா அவளைப் பார்த்து என்னடி ஆம்மாம்மா....................அப்புறம் எதுக்கு உனக்கு அம்மானு நான் என்று முறுக்கியவரை அனைவரும் சேர்ந்து சமாளித்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது................அடுத்து வந்த நாட்கள் அழகான நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும்,ஸ்ரீஜாவிற்குத் திருமணம் முடிந்து தான் தன் திருமணம் என்று கபிலன் முடிவு செய்து யாதவ்விடன் சொன்னான்,அவனுக்கும் அதுவே சரியென்று பட நண்பனுக்குத் துணை நின்றான்..........இன்னும் இரு தினம் தான் இருந்தது ஸ்ரீஜா திருமணத்திற்கும், கபிலனின் நிச்சயத்திற்கும் பெரியவர்கள் முகூர்த்த புடைவை எடுக்கச் செல்ல,ஸ்ரீஜா எதுவாக இருந்தாலும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கு அசைன்மெண்ட் முடிக்கனும் என்று சொல்லிவிட்டால்......அவர்களும் அவளை வற்புறுத்தவில்லை யாதவ்வும் வெளி நாடு செல்வதில் மும்மரமாக ஈடு பட்டான்,தனது ஆசை காதலிக்கு வைரத்தால் ஆனா நகைகளை வாங்க ரொக்கமாகப் பணத்தை கபிலனிடம் கொடுத்தான்,அவனும் தனது தோழிக்கு வித விதமாக நகைகள் வாங்கினான்.

என்று விவரம் தெரிந்து ஸ்ரீஜா தனது தோழி, அவளுக்குத் தான் மட்டுமே என்று எண்ணினானோ அன்றே அவளுக்காகச் சிறுக சிறுக நகைகளைச் சேர்க்க ஆரமித்து விட்டான்,இந்த அன்பு தோழன்..இவர்களுடன் கபிலனும் பவளமும் செல்ல தனித்து இருந்த ஸ்ரீஜாவை பார்க்க வந்தான் யாதவ்,காலையிலே தனது நன்பனை மிரட்டி தான் அனுப்பினான்,டேய் கபி நான் கொஞ்சம் நேரம் ஸ்ரீஜா கூட இருக்கனும் அதுனால ஷாப்பிங் கொஞ்சம் லேட்டவே பண்ணு என்ன?நீ சொன்னாலும் சொல்லாட்டியும் லேட்டா தாண்ட ஆகும்.........என்ன செல்லத்த ரொம்ப படுத்துனா பிச்சு புடுவேன்டா என்று அவனை மிரட்டவும் மறக்கவில்லை..........விசில் அடித்து கொண்டே கால்லிங் பெல்லை அழுத்தினான் யாதவ்,கதவை திறந்த ஸ்ரீஜா அவனை சத்தியமாக எதிர் பார்க்கவில்லை ஒரு சிறு புன்னைகையுடன் வாங்க என்று அழைத்தவள் அடுத்து என்ன செய்ய என்று எண்ணுகையில்..........வீட்டுல யாருமில்ல போல என்று சொல்ல,அவளுக்கு அவனது குரலில் இருந்த பேதம் என்னது என்று புரியவில்லை ,ஆமா எல்லாரும் புடவை எடுக்க போயிருக்காங்க உங்ககிட்ட கபி சொல்லலையா என்று அவள் பேசி கொண்டே போக,அவன் அவள் அருகில் மிக அருகில், அவனது நெருக்கத்தில் மௌனம் கொள்ள...........அவனோ ஸ்ரீ இன்னும் இரண்டு நாள் அப்புறம் நீ, ஸ்ரீஜா கேசவ் யாதவ் பிரிஜித்........என்னைய பார்த்துக்க,எனக்கே எனக்குன்னு அன்பு காட்ட ஒரு உறவு,ஐ ஜஸ்ட் லவ் இட் ...........அவனது ஆவல் தம்தும்பும் பேச்சும்,ஆசை கொண்ட கண்களும் அவளது வாய்க்கும் மூளைக்கும் பெரிய பூட்டு போட்டு பூட்டிக்கொண்டது..........இப்போ எனக்கு உன்னை என்று நிறுத்தியவன் அவளது இதழை பார்க்க,பயந்து பின் வாங்கினால் ஸ்ரீஜா,அதில் கோபம் கொண்டவன் இப்போ எதுக்குடி என்னை பார்த்து பயப்புடுற என்று கத்தியவன் மீண்டும் அவளை நெருங்க,இப்போது அவள் அவளது அறைக்கு ஓட்டம் எடுத்தால்...ஏய்,என்னாடி நான் என்ன வில்லனா என்று கேட்டு கொண்டே அவளை தொடர்ந்தான்,அவனுக்கு தனது அன்பை அவளிடம் கொட்டி விட வேண்டும் என்ற எண்ணம்,அவுளுக்கோ அவன் மீது காதல் இருந்தாலும்,அவனுடன் பேசி பழக குறுகிய காலமே கிட்டியதே!இதை எண்ணி தான் கபிலனும் அவனிடம் எடுத்து சொன்னான்,நமது மும்பை வாழா எங்கே காது கொடுத்து கேட்டது., அது மும்பை எக்ஸ்பிரஸ் போல அல்லவா வேகம் கொண்டது..........அவள் அறையை மூடிக்கொள்ள முயல அவளைத் தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தான்,என்னாடி… இப்போ நான் என்ன பண்ணுனேனு இப்புடி ஓடி ஒளியுற,அவள் மிரள விழிக்கத் தனது கோபத்தை அடைக்கியவன் ஸ்ரீமா இப்போ கல்யாணம் முடுஞ்சு போன நான் வர மூன்று வருடம் ஆகும் டி,அந்த மூணு வருஷம் நீ எல்லாம் என்னால எப்புடி இருக்க முடியும்,அதுனால ஒரே ஒரு கிஸ் ப்ளீஸ் டி........

ஆ..............என்று அலறியவள் முடிய............என்று சொல்வதற்குள் அவளது இதழை அமுத்தி மூடிக்கொண்டான்,அவளது திமிறலில் அதிகமாக அவனும் தனது வேகத்தைக் கட்டினான்,ஸ்ரீஜாவின் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டு இருந்தது,அவளது இதழை இவன் இதம் பார்க்க,அவளது பற்கள் அவனைப் பதம் பார்த்துவிட்டது,அவனது முரட்டுத் தனத்தைப் பார்த்தவள் கோபம் கொண்டு தனது பற்களால் அவனது இதழை பற்றிக் கொண்டாள்.......அவனது இதழில் குருதி பெறுக,அவளது கண்ணிலும் பெருகியது,ரோஜா நேரத்தை பூசி கொள்ளும் அவனது நிறத்திற்கு அவள் கொடுத்த காயம் அப்பட்டமாகத் தெரிந்தது,அவளது கோபம் மறைந்து அவனை அழுது கொண்டே அனைத்து கொண்டாள் சாரி பிர்ஜித்...............சாரி............கண்மூடி சிறு வளைவுடன் அவள் கொடுத்த காயத்தை ரசித்தான்.தோள் கொடுப்பான்..........
 
Last edited:

Advertisements

Top