• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கபடி(kabadi)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கபடி(kabadi)
1638768351005.png

கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களின் ஒன்றாக உள்ளது.ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்)தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.கபடி அதாவது கை+பிடி =கபடி. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர் .மொத்த விளையாட்டு நேரம் 40 நிமிடங்கள்.இந்தியாவில் தான் முதன் முதலில் உருவாகியது இந்த கபடி விளையாட்டு..

கபடி வரலாறு:

கபடி விளையாட்டு பண்டைய காலத்தில் தோன்றியது.இது இன்றும் தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களும்,தெற்காசிய ஆசியாவில் இந்த விளையாட்டு பரவியது.1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கபடி சர்வதேச வெளிப்பாட்டைப் பெற்றது.1938 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் இந்தியா தேசிய விளையாட்டுகளில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.1950 ஆம் ஆண்டில் அனைத்து இந்தியா கபடி federation (AIKF) நடைமுறைக்கு வந்தது 1979 ஆம் ஆண்டில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் , 1979 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெற்றன.

முதல் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 1980 நடைபெற்றது மற்றும் இறுதிப் போட்டியில் மற்ற அணிகள் நேபாளம் ,மலேசியா மற்றும் ஜப்பான்.1990 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் ஏழு அணிகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுகளில் முதல் முறையாக இந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது..2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற கபடி போட்டியின் முதல் உலக்க கோப்பைபை இந்தியா வென்றது .

முதல் ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் 2005இல் ஹைதாரபாத்தில் நடைபெற்றது .இந்தியா தங்கம் பதக்கம் வென்றது .2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை மக்காவில் நடைபெற்ற 2வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாடியது மீண்டும் இந்தியா தங்க பதக்கம் வென்றது..

கபடி விதிகள் :

ஜல்லிக்கட்டை மையைப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. விளையாட்டில் ஒரு குழுவிற்கு 7 பேர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின் போது வீரர்களுக்கு காயம், உடல்நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்குவர்.
ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிர் அணியில் ஒருவர் மூச்சை அடக்கி பாடிக் கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வரவேண்டும்.

தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.

ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக தமிழர்களால் விளையாடப்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள்.
இவ் விளையாட்டிற்கான ஆடுகளம் வெறும் நீள்சதுரமான இடம். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

சல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் கபடிக் கபடி என்று விடாமல் பாடிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல், கபடிக் கபடிக் என்று பாடிக் கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுபவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

கபடிக் கபடிக் என்பதை
நாந்தான் வீரன்டா
நல்லமுத்துக்கோன் பேரன்டா
ெவள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
என்றும்
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.
என்றும் பாடிச் செல்வதும் உண்டு.

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக இருப்பது நல்லதல்ல.
இவ்வாறு இவ்விளையாட்டு மாறி மாறித் தொடரும். இறுதியில் வெற்றி பெற்ற குழு அறிவிக்கப்பட்டு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்படும். இவ்விளையாட்டு கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தேசிய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்படுகின்றன.

கபடி விளையாட்டில் பல ஆண்டுகளாக நம் நாடு “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வருவது நமக்கெல்லாம் பெருமை ஆகும். நம் தமிழகத்தில் வீர விளையாட்டான கபடி – சிறுவர்கள் அணி, இளைஞர்கள் அணி என செயல்பட்டு வருகின்றது.

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெற்று சாதனை படைப்போம்.

கபடி என்பது ஒரு இந்திய விளையாட்டு, அதன் விளையாட்டுக்கு சக்தி மற்றும் திறன் இரண்டுமே தேவை.

இது ஒரு எளிய மற்றும் மலிவான விளையாட்டு மற்றும் பெரிய விளையாட்டு பகுதி அல்லது எந்த விளையாட்டு உபகரணங்களும் தேவையில்லை.

1) மைதானம்
மைதானம் நிலை மற்றும் மென்மையான / பாய் மேற்பரப்பாக இருக்கும்
கபாடியின் விளையாட்டு மைதானம் பூமி, உரம் மற்றும் மரத்தூள் ஆகியவற்றால் ஆனது மட்டமாகவும் மென்மையாகவும் இருக்கும். தரை 121/2 மீட்டர் x
10 மீட்டர் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் ஜூனியர்ஸுக்கு அளவீட்டு 11 மீட்டர்
x 8 மீட்டர் இருக்க வேண்டும். வரையப்பட்ட நடுப்பகுதி விளையாட்டு மைதானத்தை இரண்டு நீதிமன்றங்களாக பிரிக்கிறது.

விளையாட்டு மைதானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மீட்டர் அகலமுள்ள துண்டு இருக்கும், இது லாபி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாதியிலும், நடுப்பகுதியில் இருந்து சுமார் 3 மீட்டர் தூரத்திலும் அதற்கு இணையாகவும் தரையின் முழு அகலத்தின் கோடுகள் வரையப்படும். இவை பால்க்(Baulk) கோடுகள்

1. சர்ஜீவ்னி :
தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும். இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை.

பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே. மீதி ஐவரும் ரிசர்வ் (மாற்று விளையாட்டு வீரர்கள்).

'சுண்டு நாணயம்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இரண்டாம்பகுதியில் மாற்றி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.

பாடி வருபவரின் கை,கால், இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும். அவர் வாயை பொத்தக்கூடாது. மீறிச் செய்தால் அது ஃபவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.
ஒருவர் ,பல முறை ரைடு போகலாம். ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட். எதிரணியில் உள்ள அனைவரையும் 'அவுட்' செய்தால், இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள்

2 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்) :
நம்ம ஊரில் விளையாடப்படும் 'சர்ஜீவினி' முறை கபடிக்கு எல்லா வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம். ஆனால் 'அமர்' முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர் மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். தொடப்பட்ட நபர் உடனே மைதானத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற அவசியம் கிடையாது. பாடி வருபவர் திரும்பிப் போகும் வரை பிடிக்க முயற்சி செய்யலாம். இந்த விதிமுறைதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும். இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு 'வட்டக்கபடி' என்ற பெயரும் உண்டு.

3. ஹுட்டுட்டு :
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விளையாடப்படும் விளையாட்டு. பிரிட்டிஷ் ராணுவத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடுகிறார்கள். ஸ்காட்லாந்து கிராமங்களில், வேறு மாதிரியான நெறிமுறைகளை வைத்து விளையாடபடும் விளையாட்டு ஹுட்டுட்டு. அமர், ஹுட்டுட்டு போன்ற கபடி விளையாட்டுகளில் விதிமுறைகள் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு கபடி போட்டியில் நிறைய ரூல்ஸ் இருக்கிறதாம்.

கபடி விளையாடுபவர்களின் எண்ணிக்கை : இரு அணிகள்(ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர்).

ஆட்ட நேரம்: 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார்.
ஆடுகளம்: மேடு பள்ளம் இல்லாத ஒரு நீள்சதுரமான சமதள இடம்.

பயன்கள்: கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெறலாம்.

சிறப்பு: சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top