• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கப்பல் மாதா ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
கப்பல் மாதா!

ஆண்டவரின் படைப்பான மனிதனிடம் பல வித்தியாசங்களை நாம் பார்த்திருக்கலாம். அதே போல், மனிதன் ஆண்டவருக்காக ஆலயம் எழுப்பும் வகையிலும் வித்தியாசங்கள் இருக்கும் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம், உவரி மக்கள் தேவ மாதாவிற்காக எழுப்பப்பட்ட ஆலயம் வித்தியாசமாகவே உள்ளது.உவரி கடற்கரையில், கப்பல் விமானத்தை தாங்கியபடி , இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.

அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. கடலை நம்பியே வாழும் மீனவர்களுக்கு ஆதாரமாக இருப்பது கப்பல் என்றும், விண்ணில் பறக்க ஆதாரமாக இருப்பது விமானம் என்றும், விண்ணையும் மண்ணையும் இணைப்பது மேரி மாதா என்பதினாலே இவ்வாலயம், விமானத்தை தாங்கியபடி கப்பல் இருப்பதாக மார்ட்டின் என்ற ஆசிரியர் என்பரின் ஆலோசனை பேரில் உருவம் அமைக்கப்பட்டது.

கடலை நோக்கி அமைக்கப்பட்ட இந்த கப்பல் ஆலயம், கரையில் இருந்து பார்க்கும் போது, அந்த கப்பல் கடலில் நீந்துவது போலவே காட்சி தருகிறது. "என்னை நம்பி வா மகனே! இந்த வாழ்வென்னும் கடலில் நீந்த நான் கற்று தருகிறேன்" என்று செல்வ மாதா, தேவ மாதா கூறுவது போலவே இருக்கிறது.

இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது. முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாம்.

வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆறு வழிகள் கொண்ட இந்த கப்பல் ஆலயத்தில், 2017 ஆம் ஆண்டு ஆலய வாசலில் மூன்று உருவம் கொண்ட மாதாவை பிரதிஷ்டை செய்தனர். இதற்கு ஒரு சிறப்பு காரணமும் இருக்கிறது.

  • பிதாவாகிய சர்வேஸ்வரின் மகளாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!

  • சர்வேஸ்வரனின் தாயாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!

  • பரிசுத்த ஆவியாகிய ஆண்டவரின் பத்தினியாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!
என்ற அருள் நிறைந்த மரியேவில் கூறப்பட்டது போலவே, தேவமாதாவை ஆண்டவரின் மகளாக, தாயாக, மனைவியாக மூன்று உருவங்கள் மூன்று திசைகள் நோக்கும்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, இந்தியா, நெதர்லாந்து, ஜெர்மன், வடிகன், ஃப்ரான்ஸ் போன்ற மாநிலங்களில் கொடிகள் ஆலயத்தின் தூண்களில் வரையப்பட்டுள்ளன. அமைதியை வேண்டி வரும் மக்களுக்காக, கப்பல் ஆலயம் அருகில் ஒரு தியான அறை உள்ளது.

இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது.

77047983.jpg

kappal-matha-18.jpg

kappal-matha-14.jpg
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நான் இந்த சர்ச் kku போயிருக்கேன். Good feel??
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,125
Reaction score
4,626
Location
Coimbatore
So great? naan Ange ponathilla. Pic pakkumpothu poganumnu thonuthu sis?
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,437
Location
Vellore
வாவ் படிக்கும் போதே அங்க போகனும் போல தோனுது... Nice article dear ❤❤❤❤
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அற்புதமான கோவில், எங்கள் ஊரில் இருந்து 1/2மணி நேரத்தில் இங்கு போய் விடலாம், எனக்கு தெரிந்து ஜாதி மத பேதமின்றி அனைவரும் மாதாவை தரிசிக்க செல்வார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top