• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருந்துளைகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
1619007671328.png

நமது சூரிய குடும்பம் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் Sagittarius A என்ற இடத்தில் அமைந்துள்ள கருந்துளையைத்தான் சுற்றி வருகிறது.
1916-ம் ஆண்டு, கருந்துளை என்று ஒன்று இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அப்போது `கருந்துளை' என்ற பெயர் பழக்கத்தில் இல்லை. 1967-ம் ஆண்டுதான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்ற பெயரை உருவாக்குகிறார். அதுவரை இருக்கிறதா? இல்லையா? என்ற கணிப்புகளிலேயே இருந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்படுகிறது. அன்று தொடங்கி இன்று வரை நம்மால் நேரடியாக அணுகமுடியாத இந்த விசித்திரத்தைப் பற்றி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளும், புனைவுகளும் உருவாக்கப்பட்ட வண்ணம்தான் உள்ளன.
1619007710536.png
சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியுமா?
பொதுவாகக் கருந்துளையின் அளவைப் பொறுத்து அதை மூன்றாகப் பிரிக்கின்றனர் - ஸ்டெல்லர் கருந்துளைகள் (Stellar blackholes), சூப்பர்மேசிவ் கருந்துளைகள் (Supermassive Blackholes) மற்றும் இன்டர்மீடியட் கருந்துளைகள் (Intermediate Blackholes). இவற்றுள் ஸ்டெல்லர் கருந்துளைகள் என்பது அளவில் சிறியதாகவும் மிகுந்த அடர்த்தி உடையதாகவும் காணப்படும். நம் சூரியனைவிட ஐந்து மடங்குக்கு மேல் பெரிதாக உள்ள நட்சத்திரங்கள் தன் அந்திமகாலத்தில் 'நட்சத்திர கருந்துளையாக' (Stellar Blackholes) மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
1619007752365.png
சூரியனைவிட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட கருந்துளையாக மாறும்போது ஒரு நகரத்தின் அளவே இருக்கும். இந்தக் கருந்துளைகளின் அடர்த்தியும் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சில நூறு மில்லியன் ஸ்டெல்லர் கருந்துளைகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

அளவில் பெரியதாக இருக்கும் கருந்துளைகளையே `Super Massive Blackholes' என்றழைக்கின்றனர். இதன் அளவு சூரியனைவிட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும். இந்த அளவு பெரிய கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று இன்று வரை தெளிவான விளக்கத்தை அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், இந்த வகையான பெரிய கருந்துளைகளைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.
நம் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் எப்படி சூரியனைச் சீரான இடைவெளியில் சுற்றி வருகிறதோ, அதேபோல் நம் சூரியக் குடும்பம் மொத்தமும் இப்படி ஒரு கருந்துளையைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கேலக்ஸியின் மையத்திலும் ஒரு Super Massive Blackhole உள்ளது. அந்தக் கேலக்ஸியில் உள்ள நட்சத்திரக் குடும்பங்கள் யாவும் அதன் மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றி வரும்.
கருந்துளைகள் அளவில் பெரியதாக அல்லது சிறியதாக மட்டுமே இருக்கும் என்ற கருத்து அறிவியலாளர்களிடையே நிலவி வந்தது. ஆனால், இதற்கு இடைப்பட்ட அளவிலும் கருந்துளைகள் இருக்கும் எனக் கண்டறிந்தனர். மிகவும் குறுகிய இடைவெளியில் இருக்கும் பல நட்சத்திரங்கள் தொடர்ந்து கருந்துளைகளாக மாறும்போது அவை ஒரு சங்கிலித் தொடராக ஒன்றை ஒன்று ஈர்த்து Intermediate Blackhole ஆக மாறுகின்றன.
நமக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளையே 3,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நமது சூரிய குடும்பம் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் Sagittarius A என்ற இடத்தில் அமைந்துள்ள கருந்துளையைத்தான் சுற்றி வருகிறது.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அணு முதல் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்கள் அனைத்தும் தற்சுழற்சி வேகம் கொண்டவை. தற்சுழற்சி வேகம் நாளடைவில் அவற்றிற்கு குறையும்போது அவை கருந்துளையாக மாறுமா?

அதற்கான ஆற்றலையே இழந்தபின் எப்படி கருந்துளையாக மாறி எல்லாவற்றையும் இழுக்கும்? அப்போது அது எங்கிருந்து அதற்கான ஆற்றலைப் பெற முடியும்?
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
@SAROJINI ungaluku answer inga irukunu ninaikkaren sis.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top