• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

''கரை உடைத்த காரிகை..!!'' அத்தியாயம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்




கரை: 1


மூன்றாம் பாலில்
முகவரி இழந்த மங்கையின்
கருவிழி காரிகை இவள்



''வர்தினி.. வர்தினி..'' அவளுக்கு மட்டுமே கேட்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வாசினி மெதுவாக அழைக்க,

கண்ணை கசக்கிய வண்ணன் எழுந்த வர்தினி வாயை திறக்கும் முன்பே சத்தம் செய்யாதே என்று சைகை செய்த வாசினி ''பின் பக்கம் வா..'' என்று மெதுவாக சொல்லிவிட்டு முன்னாள் செல்ல வர்தினியும் பின்னோடு செல்ல முயற்சித்த போது,

''எங்கடி போற..'' என்ற தாயின் குரலில் பயந்து போன வாசினி இருளில் தன் சுவாசத்தை அடக்கி மறைத்து கொள்ள, வர்தினி சுண்டு விரலை காட்டினாள் , அதை பார்த்த பர்வதம் ''பின் பக்கம் போ, அக்கா ரூம்க்கு போகாத'' என்றதும் தான் வாசினியின் சுவாசம் சீரானது,


சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு வர்தினி வாசினியின் பின்னால் அரைக்கண் திறந்து தூக்கத்தில் தள்ளாடி செல்ல, பர்வதம் தடைப்பட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தார்...

வெளியில் வந்த வேலை முடிந்தது என்பது போல மீண்டும் வர்தினி உள்ளே செல்ல திரும்பியதும், பயந்து போன வாசினிக்கு அப்போது தான் புரிந்தது இவள் தான் அழைத்து எழவுமில்லை , தன்னை தொடர்ந்து பின் பக்கம் வரவில்லை என்று. ( பயபுள்ள இயற்க்கை அழைப்புக்கு தூக்க கலக்குத்துல வந்து இருக்கு )

வர்தினியின் வாயை பொத்தி சற்று தூரம் தூக்கி வந்த வாசினி அவள் தூக்கம் தெளிய வைத்தவள் ''நம்ம இங்க இருந்து வேற ஊருக்கு போய்டலாம் வர்தினி..'' என்றதும் ''ஏன் அக்கா அப்போ அம்மா ..'' கேள்வி கேட்ட குழந்தையிடம் என்ன பதில் சொல்லுவது எப்படி இந்த நரகத்தில் இருந்து மீட்டு செல்வது என்ற எண்ணத்தில் கலக்கமும், கவலையுமாக வாசினி தடுமாற,

''அந்த ஊர்லயாவது என்கூட மத்த பசங்க விளையாட வருவாங்களா, என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவீங்களா அக்கா, ..'' கேள்வி கேட்டதை மறந்து தனக்கான தேடலை எதிர்பார்ப்போடு கேட்க,

கவலை நீங்கி '' கண்டிப்பா நிறைய பசங்க வருவாங்க, அவங்களோட விளையாடலாம் , அதோடு நீ பள்ளிக்கூடமும் போகலாம், அப்புறம் அம்மாவும் வருவாங்க '' சொன்னவள் நல்ல பதிலுக்காக கலக்கத்தோடு வர்தினி முகம் காண,


''ஐ ஜாலி ஜாலி..'' மகிழ்ந்தவள் ''அப்போ நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வறேன் அக்கா ..'' வர்தினி பதிலில் பயந்த வாசினி என்ன சொல்லி எப்படி சமாளிப்பது என்று தடுமாறினாள், பின்பு தெளிந்து,


''நீ என்னை நம்புறியா வர்தினி...'' சின்ன குழந்தையிடம் சிறகொடிந்த குழந்தை கேட்டது,


''ம்...'' என்றதும் ''அப்படினா எந்த கேள்வியும் கேட்காம என் கூட இப்போ..'' எதோ சொல்ல வந்த வர்த்தியிடம் ''எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியா என்னோட வரணும்...'' என்றதும் சம்மதாமகா தலையசைத்த குழந்தை தாயின் கரத்தை பற்றிக்கொண்டு விடியலை நோக்கி இருளில் பயணித்தது...


ஆம் மருத வாசினி , சந்திர வர்தினியின் தமக்கை இல்லை பதிமூன்று வயதில் பத்து மாதம் அவளை சுமந்து ஈன்று எடுத்த (குழந்தை) தாய்..


வாசினியின் அம்மா பர்வதம் விலைமாதர், அவருக்கு பிறந்த மருதவாசினி தன்னுடைய உடலின் வயதுக்கு மீறிய நல்ல வளர்ச்சியினால் பத்து வயதில் பருவம் எய்தியதும் வலுக்கட்டமாக மூன்றாம் பாலில் முகவரி தொலைக்க, பதிமூன்று வயது குழந்தை ஒரு குழந்தைக்கு தாயானது,


வர்தினி, வாசினியை அம்மா என்று அழைத்தாள் அவளின் மதிப்பு குறைந்து போகும் என்று இன்று வரை ஈன்றவள் இவள் என்று அறியாமல் சொல்லி கொடுத்தது போல அக்கா என்று அழைத்து வருகிறாள்...



பத்து வயதில் இருந்து இதோ இன்று இரவு வரை இருள் வாழ்க்கையை எதிர்க்க முடியாத இயலாமையினால் அனுதினமும் வெந்து வாழ்வை வெறுத்து இருந்தவள், தான் பெற்று எடுத்த பிள்ளைக்கும் இதே நிலை வரப்போகின்றது அதுவும் இன்னும் சிலதினங்களில் என்றதும், இதே இன்று துணிந்து விட்டாள் எதிர்த்து போராட, அன்று அவளுக்கு துணை நிற்க யாருமில்லை ஆனால் இன்று அவள் இருக்கிறாள் அவளின் குழந்தைக்கு,


வாசினி துணிந்து சென்றுவிட்டாள் தன் குழந்தையோடு சில தடைகளை கடந்து ஆனால் இனி அவர்களின் வாழ்வில் எத்துணை எத்துணை தடைகளும் இன்னல்களும் வருமோ தெரியாது, ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறாள். தன் மீது படிந்த இருள் என்றும் தன்னுடைய சேயை அண்டவிடாமல் காக்க வேண்டும் என்று...


ஆனால் அவள் அறியாத ஒன்று அவளின் இருள் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வராமல் தடுக்க எதிர்காலத்தில் சந்திர வர்தினி பல இன்னல்களை அனுபவிக்க போகிறாள் என்று...


தடைகள் பல கடந்து அவர்ளுக்கான ஒரு கூட்டை அமைத்து வருடங்கள் எட்டு கடந்துவிட்டது ஆனால் வாசினியின் நிலை மட்டும் மாறவில்லை,



''அம்மா...இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம்னு தான அங்க இருந்து என்னை கஷ்டப்பட்டு கூட்டிகிட்டு வந்தீங்க அப்புறம் ஏன் இன்னும் அதை நீங்க தொடரனும்...'' அன்று கேள்வி கேட்காமல் வந்தவள் இன்று கேள்விகளால் அனுதினமும் அன்னையை திணறடிக்கின்றாள்


''தொடர வேண்டிய கட்டாயம் வர்தினி..'' இந்த பதில் அவளது கோபத்தை தூண்ட ''அது தான் ஏன்னு கேட்குறேன்...''

''ஏன்னா பெண்கள் பெரும்பாலும் மூன்றாம் பாலுக்கு வடிகாலாக தான் பார்க்கப்படுகிறாங்க..''

''நான் கேட்டதுக்கு இது தான் பதிலா....'' என்றவள் தோரணை நீ பதிலை சொல்லாமல் இன்று நான் விடப்போவது இல்லை என்று சொல்லாமல் சொல்ல...


'' இங்க பாரு வர்தினி உன்னை காப்பாற்ற தான் நான் இதுவரை போராடினேன் இனியும் போராடுவேன் ..'' என்றதும்


''அதுதான் கேட்குறேன் என்னை காப்பாற்ற போராடுற நீங்க உங்களை காப்பாற்ற ஏன் போராட மாட்டுறீங்க..''

''என்னை காக்க போராடி உன்னையும் சேர்த்து பலி கொடுக்க சொல்லுறியா..'' ஆவேசத்தோடு கேட்க

''முயற்சி பண்ணாம எப்படி நீங்க முடிவு இதுதான்னு சொல்ல முடியும்..''பதில் அளிக்க முடியாமல் திணறிய வாசினி ''உன் வயசுக்கு தகுந்தாற் போல பேசு வர்தினி..'' கோபத்தில் கொப்பளிக்க


''என் வயசுல நீங்க எனக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்த்தீங்க ,இப்போ நான் உங்களுக்கு அறிவுப்பால் கொடுத்து வளர்க்க முயற்சி பண்ணுறேன்..'' சற்றும் அசராமல் சொன்னவள்



''இனி நீங்க இந்த இருளில் தொலைய வேண்டாம் அம்மா வெளிச்சத்தை நோக்கி வாங்க...'' மன்றாடியவள் மனத்திரையில் இன்று மாலை கோவிலில் கோவிலில் நடந்தது காட்சிகளாய்,

இறைவியை தரிசித்து விட்டு வாசினியும் வர்தினியும் ஒரு தூணுக்கு பின்னாள் அமர்ந்து இருக்க அங்கு வந்த ஒரு பெண் ''நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று கேட்டு..'' பல சாபங்களை விட்டாள் '' உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் கோவிலுக்கு வருவதால் தாண்டி கடவுள் கல்லாகிப்போச்சி..'' என்றவள் வாசினி முடியை பிடித்து தள்ள, அவள் கீழே விழாமல் தாங்கிய வர்தினி,


''நீங்க எல்லாம் தப்பே பண்ணாத நல்லவங்களும் இல்ல, எங்க அம்மா போல ஆளுங்களால மட்டும் கடவுள் கல்லா போகல...''என்று எதிர்த்து பேச


''வர்தினி..'' அமைதியா வா என்று வாசினி சொன்னதையும் ''என்னடி சொன்ன ..'' இவள் எல்லாம் தன்னை தாழ்த்தி பேசுவதா கோபம் கொண்ட பெண் கன்னத்தில் அறைந்ததையும் பொருட்படுத்தாமல்,



''நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க தான் அதான் காலம்காலமா உங்க வீட்டுக்கு ஆம்பிளைங்க பண்ற தப்பை மறந்து , மன்னிச்சி, மறைச்சி எங்க அம்மா போல கெட்டவங்களை உருவாக்குறீங்க...அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் நீங்க ஆசைக்கும் அகம்பாவத்துக்கும் என் அம்மா போல ஆளுங்க '' என்றதும்

''இந்த வயசில் எப்படி பேசுது பாரு இன்னும் வளர்ந்ததும் இது எத்தனை பேரோட குடியை கெடுக்குமோ...'' கூட்டத்தில் பெண் ஒருத்தி சொல்ல, இதற்கு மேல் இங்கு இருந்தால் தங்களுக்கு தான் ஆபத்து என்று உணர்ந்த வாசினி மகளை கோவிலில் இருந்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள், இரவு சாப்பிடாமல் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டால் வர்தினி,

வாசினியின் எந்த சமாதானத்துக்கும் வர்தினி செவிசாய்க்கவில்லை, இறுதியில் ''சரி இனி நான் இதை செய்ய மாட்டேன் நம்ம இந்த ஊரைவிட்டு வேற எங்கயாவது போய் கௌரவமா வாழலாம்..'' என்றதும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு தூங்கியவள், மறுநாள் பள்ளிக்கு தாயையும் அழைத்து சென்று மாற்று சான்றிதழ் வாங்கிக்கொண்டு வந்ததோடு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு விடியலை நோக்கி காத்திருக்க, காலம் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியது...

விபச்சார வழக்கில் கைது செய்ப்பட்டு வாசினி சிறையில் அடைக்கப்பட, வர்தினி சிரிய பெண் என்பதால் சிறைக்கு வெளியில் உட்காரவைக்கப்பட்டாள்....


வருவாள் .....

my dear friends please share your reviews and comments, its help me to improve my writing... thank u all
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
Enna vantha udane ulla thallitinga 😳😳vasniye kuzhalanthai, antha kuzhanthaiku kuzhanthaiya 😳🥺Pattamboochiyai paranthu Vilaiyadum vayathil enna kodumai ithu 😭🤧🤧aama niraiya pengal aangal seium thavarai kandukka mattanga,antha thappa panura pengala pesuvanga, niraiya pengal intha vibachara thavarai seiya Vaippathu intha aangal thaan😡😡vasini ammava adichu Sunnambu kavaikul podanum🤬🤬
 




Attachments

Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
Enna vantha udane ulla thallitinga 😳😳vasniye kuzhalanthai, antha kuzhanthaiku kuzhanthaiya 😳🥺Pattamboochiyai paranthu Vilaiyadum vayathil enna kodumai ithu 😭🤧🤧aama niraiya pengal aangal seium thavarai kandukka mattanga,antha thappa panura pengala pesuvanga, niraiya pengal intha vibachara thavarai seiya Vaippathu intha aangal thaan😡😡vasini ammava adichu Sunnambu kavaikul podanum🤬🤬
oru curiosity create panna than ma... ippo antha kodumai than pala idangalil nadakkuthu, ini varum kalam ellam konjam konjama marum nu nambuvom....neenga solliteenga illa pottudalam....thanks for the wonderful comment..keep supporting me..
 




Farhana

மண்டலாதிபதி
Joined
Sep 2, 2021
Messages
127
Reaction score
161
Location
Rakwana
Social la nadakkura prblms a kaila aduthurikinga writer g....all the best for your episodes journey .....ஏதோ ஒரு தாக்கம் உள்மனதிலே......வாசிக்கும் போது .....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top