• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

''கரை உடைத்த காரிகை..!!'' அத்தியாயம் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
கரை: 2

சிறைபிடித்தவன் அடைத்துவைக்கவில்லை
சிறகிருத்தும் பறக்கமுடியவில்லை
ஏனெனில்
விதியின் தூண்டிலில் இரையாக நான்
பலி(பாவி)யாக ப(சி)லர்




"தாலி பெண்ணுக்கு மட்டும் வேலி இல்லை , அதை கட்டினவனுக்கும் தான் .." நக்கலாக சொன்னவன் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இருந்தவளை தன்னை நோக்கி இழுத்து , பெண்ணவள் கழுத்தில் இருந்த தாலியை தன் விரல் கொண்டு வெளியில் எடுத்து,


''இதை காட்டாமல் நான் உன்னை பலவந்தமாக தொட்டாள் நீ பொங்கி எழும் போது இந்த உலகம் உனக்கு துணை நிற்கும், ஆனால் இப்போது மஞ்சள் கயிறு மாயம் செய்யும் ஒரு நாள் திருந்துவான் இல்லை நீ திருத்த முயற்சி பன்னு , பொறுத்துப் போனு பலரும் உனக்கு அறிவுறை தான் சொல்வார்கள், என்ன ஒரு விந்தை, இது தான் உன் விதி... இல்லை என்னோட சதி...''என்றவன் அவளது மறுப்பு வெறுப்பு எதிர்ப்பு என்று எதையும் கண்டுகொள்ளாமல் அவளை ஆட்கொண்டவன்,

''நீ விரும்பி ஆசைப்பட்டது தான் நடக்குது இதுக்கு நீ சந்தோசப்படணும் இப்படி விருப்பம் இல்லாதது போல நடிக்க கூடாது'' என்றதும்


''உன்னை நம்பினேன் அதான் விரும்பி பல கனவுகளோடு வாழ ஆசைப்பட்டான் அது எப்போவோ உன்னால கானல் நீரா மாறிப்போச்சு...என்றவளின் வாக்கியத்தை முடிக்க விடாமல்,


''நான் உன்னை மறுத்ததுக்கு தான் எங்க வீட்டு பொண்ணு வாழ்க்கையை அழிச்சி என்னை மட்டும் இல்லை எங்க மொத்த குடும்பத்தையே பழிவாங்கிட்டியே, இப்போ அவ வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கா, அப்படி அவ தவிக்கும் போது நீ மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும், இல்லை நான் தான் உன்னை அப்படி வாழ விட்டுவிடுவேனா என்றவன், மீண்டும் அவள் உடல் மற்றும் உள்ளத்தில் காயங்களை உண்டாக்கினான்.


நெஞ்சத்தில் வஞ்சமும் அவனை வீழ்த்தும் எண்ணமும் மலையளவு இருந்தாலும் அவனை எதிர்க்கவோ இல்லை ஏமாற்றிவிட்டு இங்கிருந்து தப்பிக்கவோ முடியாது என்பதை கடந்து வந்த வலிகளும் அதற்க்கு அடையாளமாக இருக்கும் காயங்களும் உணர்த்திக்கொண்டு இருக்க உணர்வுகளை தொலைத்தவளாய் உடைகளை அணிந்துகொண்டு குளியலறை நோக்கி சென்றாள் வர்த்தினி...


நீருக்கு அடியில் நின்றுகொண்டு இருந்தவளின் மனம் இன்றோடு எல்லாம் முடிந்து விடாத என்று பேராசை கொண்டது, நடவாது என்று தெரிந்தும் அதை மனம் நாடுவது மனித இயல்பா அல்லது நம்பிக்கையா கேள்விகள் வார்த்தியிடம் விடை யாரிடமோ..?


உள்ளத்தில் எண்ணங்கள் பல ஓடிக்கொண்டு இருந்தாலும், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், தனது அன்றாட வேலைகள் என்று கொடுக்கப்பட்ட இல்லை இல்லை இடப்பட்ட கட்டளைகளை செய்ய ஆரம்பித்தாள் ...


காலை தேநீர் தொடங்கி அனைவருக்கும் அறுசுவை விருந்து செய்தவள் அந்த வீட்டின் உரிமைக்காரர்கள் தொடங்கி வேலைக்காரர்கள் வரை வயிறார உண்டு முடிந்து விட பெண்ணவள் உட்கொண்டது ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பில்லாத கஞ்சி மட்டுமே, அவள் அந்த கஞ்சியை குடிப்பதை ஒரு வித குரூரத்தோடு கண்டு ரசித்தவன்...

"வாய்க்கு ருசியா சாப்பாடு, சொகுசான வாழ்க்கை , வளமான எதிர்காலம் இதுக்காக ஆசைப்பட்டு தான எனக்கு வலை விரிச்ச அதிலில் இந்த சிங்கம் சிக்கலைன்னு எங்க வீட்டு புள்ளிமானை சில நரிகளை வேட்டையாடவச்சு அதுக்கு அவங்க கொடுத்த பணத்தோடு ஊரைவிட்டு போன, கடந்த ஐந்து வருசமா நீ ஆசைப்பட்ட மாதிரி வாழந்த இல்ல அதற்கும் நீ செய்த துரோகத்துக்கும் தணடனையான இனி உன் ஆயுசுக்கு இது தான் உனக்கு நிரந்தரம்..

கர்மா இஸ் எ பூமராங் வர்த்தினி உன்னால எங்க வீட்டு தேவதை பட்ட, படுற துன்பங்களுக்கு தான் இப்போ நீ அனுபவிக்கிற இன்னும் இன்னும் உன்னை அனுபவிக்க வைப்பேன்..''குரலை உயர்த்தாமல் உள்ளக்கிடங்கை உரைத்தவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட வஞ்சமும் அழுத்தமும் வஞ்சியவளின் தேகத்தை நடுங்க செய்தது, அதை கண்டவன் திருப்தியோடு சென்றுவிட,


'நிலையில்லாத வாழ்க்கை இதில் என்னுடைய இந்த நிலை நிரந்தரமா...' மனதுக்குள் எள்ளலாக எண்ணியவள், 'நீங்க சொன்னது சரிதான் சாகரன் கர்மா இஸ் எ பூமராங், நான் தூக்கி போட்ட பூமராங் என்னை நோக்கி வரும் போது அது என்னை தாக்காம தடுத்து பிடிக்க எனக்கு தெரியும், தெரிந்ததை தான் இப்போ செயல்படுத்திகிட்டு இருக்கேன், விரைவில் என் பதிலடியை நீங்க பார்ப்பீங்க..'

எண்ணங்கள் பல மனதில் ஓடினாலும் கரங்கள் அது வேலையை செய்ய '' தரம் கேட்ட நீயெல்லாம் என் மகனுக்கு தாரமா, கூடிய சீக்கிரம் உன் கதையை முடிக்கிறேன்...'' என்ற சாகரனின் தந்தை குணசீலன் சொல்லிவிட்டு செல்ல, அதை அலட்சியம் செய்தவள் அறைக்கு சென்று தனது தாய்க்கு அழைத்து அவர்களின் நலத்தை விசாரித்து விட்டு , சில வார்த்தைகள் பேசிவிட்டு தான் நலமாக இருப்பதாக சொல்லி இணைப்பை துண்டித்தவள்,
சாகரன் பின்னால் நிற்பதை உணர்ந்து,



''இன்னைக்கு என்னோட அம்மா இவ்ளோ சந்தோசமா நிம்மதியா இருக்க நீயும் ஒரு காரணம் சாகரன், அந்த நன்றியை நான் எப்பவும் மறக்க மாட்டேன், அதே சமயம் எனக்கு செய்ய நினைத்ததை நான் உங்க வீட்டுக்கு பெண்ணுக்கு திரும்ப கொடுத்தேன் அவ்ளோ தான் அதுக்கு நான் என்னைக்கும் வருந்த மாட்டேன், ஏன்னா நான் சந்திரவர்தினி மற்ற சாதாரண பொண்ணுங்க போல என்னோட வாழ்க்கை இல்லை அப்படி இருக்கும் போது என்னோட குணங்கள் மட்டும் ஏன் அவங்களை போல இருக்கணும்னு எதிர்ப்பாக்குறீங்க...'' என்றதும்


''இப்படி பேசினா உடனே நட்பு கரம் நீட்டி பழைய சாகரனா மாறிடுவேன்னு இன்னுமா நம்புற..'' நக்கலாக கேட்டவன்



''நமக்குள்ள இருந்த நட்பை நீ என்னைக்கோ கொன்னுட்ட, இனி அது எப்பவும் மீண்டு வராது ..'' என்றவன் சில கசப்பான நினைவுகளை மறக்க உடனே அங்கிருந்து வெளியேறிவிட வர்தினி சில பசுமையான நினைவுகளில் மூழ்கிவிட்டாள்...



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்நிலையத்தில் வாசினி சிறைக்கு உள்ளேயும் வர்தினி வெளியேயும் இருந்த போது , தற்கொலைக்கு முயன்ற இருபது வயது வாலிபனை காவல் ஆய்வாளர், காப்பாற்றி அழைத்து வந்து அவனது இல்லத்துக்கு தொடர்பு கொண்ட போது அவன் தந்தை தமிழ்நாட்டில் ஒரு முக்கிய புள்ளி என்று தெரியவந்ததோடு அவரே மகனை அழைத்து செல்ல காவல் நிலையம் வருவதாக சொன்னதும் அவனுக்கு ராஜஉபச்சாரம் காவல்நிலையத்தில்..

''உங்க தகுதிக்கு நீங்க ஏன் காவல்நிலையம் போகணும் ஒரு வார்த்தை சொன்னா அவங்களே கொண்டு வந்து விட போறாங்க..'' உடன் இருந்த நண்பர் சொல்ல, அதற்க்கு பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையை சிந்திவிட்டு, மகன் தற்கொலைக்கு முயன்றதை பற்றி சற்றும் கவலைகொள்ளாமல் காவல்நிலையத்துக்கு புறப்பட்டார் திரு . குணசீலன், சாகரனின் தந்தை..


ஏற்கனவே மனம் நொந்து இருந்தவன் அவர்களின் கவனிப்பை ஏற்காமல் அலட்சியப்படுத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் மீது கோபம் கொள்ள,வளியவர்களிடம் பட்ட அவமானத்தை எளியோரிடம் அதிகாரமாக காட்டி திருப்திப்பட்டுக்கொண்டனர்...

வேண்டாம் வேண்டாம் என்று மறுப்பவனுக்கு விதவிதமாக உணவு கொடுத்தவர்கள் தாகத்தில் தவிக்கும் தனக்கு தண்ணீர் கொடுக்காமல் புறக்கணிப்பதை கண்டவள், பசியில் சாகரனை சுற்றி மேசையில் இருந்தவற்றை ஒரு வித பாவத்தில் பார்ப்பதை கண்ட சாகரன் என்ன நினைத்தானோ உணவு பொருளை காட்டி வேண்டுமா என்று கேட்க ஆம் என்றும் இல்லை என்று மறுக்க, தனது கவலை மறந்து அதில் சுவாரசியம் ஆனவன் அவள் அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தவன், மற்றவரின் கவனத்தை கவராமல் அவளோடு பேச ஆரம்பித்தான்...

''நான் சாகரன், நீ...''

''சந்தரவர்தினி''

''உனக்கு பசிக்குது தான..''

''ஆமாம்''

''அப்போ ஏன் நான் வேணுமான்னு கேட்டதுக்கு வேண்டம்ன்னு சொன்ன..''சாகரன் கேட்டதும்

''எனக்கு சாப்பாடு வேணும் ஆனா உங்களுக்காக அவங்க குடுத்த சாப்பாடு சாப்பாடு வேண்டாம்..'' என்றதும்

''அது தான் ஏன்..'' அவளது பதில் சாகரனுக்கு எரிச்சலையும், குழப்பத்தையும் அளித்தது,


''பணக்காரனானா உங்களுக்கு அவங்க வாங்கின சாப்பாட்டை நீங்க கொடுத்து நான் சாப்பிட்டாலும் அதை நான் திருடி சாப்பிட்டதாதான் இங்க நினைப்பாங்க, நீங்க கொடுத்து நான் சாப்பிட்டதா நான் சொன்னாலும், நீங்க சொன்னாலும் நம்பமாட்டாங்க அதான்...'' என்றவளின் பதில் அவனை ஒரு கணம் திகைக்கவைத்து பின் சிந்திக்கவைத்தது,பின்


''நீ ஏன் இங்க இருக்க..'' சாகரனின் கேள்விக்கு வர்தினி பதில் சொல்லாமல் ''நீ ஏன் இங்க இருக்க'' என்று எதிர்கேள்வி கேட்க,

சிறுபெண்ணிடம் அதை சொல்ல தங்கியவன் ''என்னோட அப்பாவால..'' பாதி உண்மையை வெறுப்போடு சொல்ல,


அவள் சாதாரணமாக 'ம்..' என்றதும் அவனுக்கு என்னோவோ போல இருந்தது, அதை அவளிடமே கேட்க, அவள் அவளின் நிலையை நினைத்து,

''அவங்க செஞ்ச தப்புனால இங்க இருந்தாலும், அவங்களை வெறுத்து ஒதுக்காம அவங்க தப்பை நம்ம தான திருத்தணும்..'' அவளுக்கு தெரிந்ததை சொல்ல, அது அவனை சற்று தெளியவைத்து மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது,


மீண்டும் அவன் வர்தினியோடு பேச முயன்ற போது அதை அவனது தந்தையின் வருகை தடுத்துவிட, தந்தை மீது வெறுப்பும் கோபமும் இருந்தாலும் அதை காட்டும் சூழல் இது இல்லை என்பதை உணர்ந்து அமைதியாக இருக்க,


காவல்நிலையம் வந்த குணசீலன் தனது பணத்தின் செழுமையையும் கௌரவத்தோடு சற்று மகன் மீதான பாசத்தையும் காட்டிவிட்டு மகனோடு வீட்டுக்கு புறப்பட , சாகரன் அமைதியாக தந்தையை பின்தொடர்ந்தான்

சாகரன் ஒரு வேலை சந்திரவர்தினியை பார்த்து அவளோடு பேசாமல் இருந்து இருந்தால் அவனது மனநிலை இந்த அளவிற்கு தெளிந்து இருக்காது என்பது மட்டும் உண்மை..


வருவாள்...

keep supporting me, share your comments.. its help me to improve my self..thank u all...
 




PAPPU PAPPU

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
412
Reaction score
778
Location
india
வர்த்தினியை இப்படி படுத்துவதற்கு என்ன காரணம் டா.எல்லாம் ஆண்கள் பெண்களிடம் எப்போதும் தன் வலிமையை காட்டுவது உடல் அளவில் தான் .அதற்கு இவனும் விதிவிலக்கில்லை போல.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Ennathu adukulla 12yrs ah, enda sagar unnoda kovathai ipapdi pennoda udambula dan kaatanuma da unake asimgama illai ah idai vida nee avalai konnu potu irukalam da nee um vidhivilakkila da poda, nice dear thanks.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் வர்த்தினி சூப்பர், என்ன கெத்து🔥🔥🔥

அவளால் அவன் வீட்டு பொண்ணுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து இருக்கு, அது கூட அவளுக்கு வந்ததா அவ அவளுக்கு திருப்பி விட்டு இருக்கா.....

யாரா இருந்தாலும், இதை செய்வாங்களோ தெரியல, அது என்ன மாதிரி பிராப்ளம்னு தெரியல, அதன் தன்மையா பொறுத்து தான் அவளை தப்பு சொல்றத வேணாமானு தெரியும்.....

அவன் வீட்டு பொண்ணு அப்படினதும் இவளுக்கு தான் எத்தனை துன்பம்🤧🤧🤧🤧

இதுக்கு எல்லாம் காரணம் அவன் அப்பாவா இருப்பாரா?????

ஏதோ நல்லது செய்து இருக்கான் சாகர் அவ அம்மாக்கு, அப்ப அவன் ஒன்னும் அவளோ கெட்டவன் இல்ல.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
வர்த்தினியை இப்படி படுத்துவதற்கு என்ன காரணம் டா.எல்லாம் ஆண்கள் பெண்களிடம் எப்போதும் தன் வலிமையை காட்டுவது உடல் அளவில் தான் .அதற்கு இவனும் விதிவிலக்கில்லை போல.
பெண்களோட மனசு வலிமையானது என்று அவங்களுக்கு தெரியும் போல அதான் இப்படி உடல் அளவில் அவங்களை துன்புறுத்தி சந்தோசப்பட்டுக்குறாங்க, விரைவில் தெரிய வரும்..

thank sfor the comment, keep supporting me
 




Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
Ennathu adukulla 12yrs ah, enda sagar unnoda kovathai ipapdi pennoda udambula dan kaatanuma da unake asimgama illai ah idai vida nee avalai konnu potu irukalam da nee um vidhivilakkila da poda, nice dear thanks.
avamanan partha anti hero , hero ayiduvar... unga athangam puriyathu, thanks dear, keep supporting me
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top