• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

"கரை உடைத்த காரிகை" முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
"கரை உடைத்த காரிகை"

நாயகி : சந்திரவர்த்தினி

நாயகன் : சாகரன்


முன்னோட்டம்


நதி அடங்கி செல்லும் வரை கரை உண்டு,

கரையுள் அடங்கி செல்லும் நீரால் யாவருக்கும் வளமான வாழ்வுண்டு

அடங்கி போகும் நீர் நங்கைக்கு ஒர் இலக்கணம் என்பதால் தான்

நதிகளுக்கு பெண்ணின் பெயர்களோ..?

வருகிறாள் சந்தரவர்த்தினி

இவள் இருக்கரை நடுவில் ஓடும் சந்தரவர்த்தினி ஆறு அல்ல

ஆழ்ந்த அறிவிவும், அளவில்லா மனோபலமும் கொண்ட நங்கை இவள்

பல தடைகளை மட்டும்மல்ல சில கரைகளையும் உடைக்க வருகிறாள்

இவள் ...!

"கரை உடைக்கும் காரிகை'' சந்திரவர்த்தினி





"தாலி பெண்ணுக்கு மட்டும் வேலி இல்லை , அதை கட்டினவனுக்கும் தான் .." நக்கலாக சொன்னவன் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இருந்தவளை தன்னை நோக்கி இழுத்தவன், பெண்ணவள் கழுத்தில் இருந்த தாலியை தன் விரல் கொண்டு வெளியில் இழுத்து,


''இதை காட்டாமல் நான் உன்னை பலவந்தமாக தொட்டாள் நீ பொங்கி எழும் போது இந்த உலகம் உனக்கு துணை நிற்கும், ஆனால் இப்போது மஞ்சள் கயிறு மாயம் செய்யும் ஒரு நாள் திருந்துவான் இல்லை நீ திருத்த முயற்சி பன்னு , பொறுத்துப் போனு பலரும் உனக்கு அறிவுறை தான் சொல்வார்கள், என்ன ஒரு விந்தை, இது தான் உன் விதி... இல்லை என்னோட சதி...''என்றவன் அவளது மறுப்பு வெறுப்பு எதிர்ப்பு என்று எதையும் கண்டுகொள்ளாமல் அவளை ஆட்கொண்டவன் முடிவில் அவளது ஆடைகளை முகத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டான்...

நெஞ்சத்தில் வஞ்சமும் அவனை வீழ்த்தும் எண்ணமும் மலையளவு இருந்தாலும் அவனை எதிர்க்கவோ இல்லை ஏமாற்றிவிட்டு இங்கிருந்து தப்பிக்கவோ முடியாது என்பதை கடந்து வந்த வலிகளும் அதற்க்கு அடையாளமாக இருக்கும் காயங்களும் உணர்த்திக்கொண்டு இருக்க உணர்வுகளை தொலைத்தவளாய் உடைகளை அணிந்துகொண்டு குளியலறை நோக்கி சென்றாள் வர்த்தினி...


நீருக்கு அடியில் நின்றுகொண்டு இருந்தவளின் மனம் இன்றோடு எல்லாம் முடிந்து விடாத என்று பேராசை கொண்டது, நடவாது என்று தெரிந்தும் அதை மனம் நாடுவது மனித இயல்பா அல்லது நம்பிக்கையா...? கேள்விகள் வார்த்தியிடம் விடை யாரிடமோ..?


உள்ளத்தில் எண்ணங்கள் பல ஓடிக்கொண்டு இருந்தாலும், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், தனது அன்றாட வேலைகள் என்று கொடுக்கப்பட்ட, இல்லை இல்லை இடப்பட்ட கட்டளைகளை செய்ய ஆரம்பித்தாள் ...


காலை தேநீர் தொடங்கி அனைவருக்கும் அறுசுவை விருந்து செய்தவள் அந்த வீட்டின் உரிமைக்காரர்கள் தொடங்கி வேலைக்காரர்கள் வரை வயிறார உண்டு முடிந்து விட பெண்ணவள் உட்கொண்டது ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பில்லாத கஞ்சி மட்டுமே, அவள் அந்த கஞ்சியை குடிப்பதை ஒரு வித குரூரத்தோடு கண்டு ரசித்தவன்...

"வாய்க்கு ருசியா சாப்பாடு, சொகுசான வாழ்க்கை , வளமான எதிர்காலம் இதுக்காக ஆசைப்பட்டு தான உண்மையை சொல்லாம பணத்தோடு ஊரைவிட்டு போன, கடந்த ஐந்து வருசமா நீ ஆசைப்பட்ட மாதிரி வாழந்த இல்ல அதற்கும் நீ செய்த துரோகத்துக்கும் தணடனையான இனி உன் ஆயுசுக்கு இது தான் உனக்கு நிரந்தரம்..கர்மா இஸ் எ பூமராங் வர்த்தினி, உன்னால எங்க வீட்டு தேவதை பட்ட, படுற துன்பங்களுக்கு தான் இப்போ நீ அனுபவிக்கிற, இன்னும் இன்னும் உன்னை அனுபவிக்க வைப்பேன்..''குரலை உயர்த்தாமல் உள்ளக்கிடங்கை உரைத்தவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட வஞ்சமும் அழுத்தமும் வஞ்சியவளின் தேகத்தை நடுங்க செய்தது, அதை கண்டவன் திருப்தியோடு சென்றுவிட,


'நிலையில்லாத வாழ்க்கை இதில் என்னுடைய இந்த நிலை நிரந்தரமா...' மனதுக்குள் எள்ளலாக எண்ணியவள், 'நீங்க சொன்னது சரிதான் சாகரன் கர்மா இஸ் எ பூமராங், நான் தூக்கி போட்ட பூமராங் என்னை நோக்கி வரும் போது அது என்னை தாக்காம தடுத்து பிடிக்க எனக்கு தெரியும், தெரிந்ததை தான் இப்போ செயல்படுத்திகிட்டு இருக்கேன், விரைவில் என் பதிலடியை நீங்க பார்ப்பீங்க..' என்று எண்ணிய வஞ்சியவளின் வஞ்சம் விண்ணை விஞ்சும்...


விரைவில் அத்தியாங்களோடு வருகிறேன் உங்கள் அனாமிகா 74


பிழை இருப்பின் மன்னித்து எடுத்துக்காட்டவும், திருத்திக்கொள்கிறேன்...



நன்றி..
 




Last edited:

DhruvAathavi

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
211
Reaction score
303
Location
Kanchipuram
தாலி பொண்ணுக்கு மட்டும் வேலிஇல்லை கட்டினவனுக்கும் தானே. அப்ப அதை அவனே அபகரித்தாலும் அது தப்புதானே...

புயலாய் திரும்பும் சந்திரவர்தினிக்காக காத்திருக்கிறேன்.

அப்படி என்ன தப்பு செய்தாள் வதனி?🤔🤔 ஆனாலும் உப்பில்லாது கஞ்சி யோசிக்கவே😧😷🤐

பூமாராங்கிலிருந்து தன்னை எப்படி காத்துக்கொள்கிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...தோழி..
 




Anamika 74

நாட்டாமை
Author
Joined
Nov 15, 2021
Messages
27
Reaction score
40
தாலி பொண்ணுக்கு மட்டும் வேலிஇல்லை கட்டினவனுக்கும் தானே. அப்ப அதை அவனே அபகரித்தாலும் அது தப்புதானே...

புயலாய் திரும்பும் சந்திரவர்தினிக்காக காத்திருக்கிறேன்.

அப்படி என்ன தப்பு செய்தாள் வதனி?🤔🤔 ஆனாலும் உப்பில்லாது கஞ்சி யோசிக்கவே😧😷🤐

பூமாராங்கிலிருந்து தன்னை எப்படி காத்துக்கொள்கிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...தோழி..
தப்பு பண்ணுறதால தான் அவன் ஆன்டி ஹீரோ



என்ன தப்புன்னு விரைவில் தெரிய வரும்

உங்களோடு சேர்ந்து பயணிக்க நானும் ஆவலாக காத்திருக்கிறேன் ..

நன்றி தோழி உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும்
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
5வருடமாக தேடி அவளை உடலால் ,மனத்தால் துன்புறுத்துகிறாயோ? ஆடு எவ்வ்ளோ தூரம்னு பார்க்கலாம் !வர்த்தினியின் ஆட்டத்திற்காக ஆவலுடன் :::::
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top