• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கர்ணன் பட பாடல் - தொடர்ச்சி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
படித்ததில் பிடித்தது ??

கவியரசர் நினைவு நாள் சிறப்பு பதிவு.

"கர்ணன்"படத்தில் யுத்த காலத்தில் எதிரிகள் சேனையில் இருக்கும் பீஷ்மர் போன்றோரை கண்டதும், அவர்கள் தன் உறவினர்கள் அவர்களை கொல்ல மனம் வரவில்லை என்று அர்ஜுனன் மனம் தளர்ந்து தனது வில்லை கீழே போட்டதும், பகவான் கண்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறார். அப்போது பாடப்படும் பாடல் இது. "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா"...இப்பாடலை பாடியவர் - டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன். இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பாடலை இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன். இப்பாடல் ராகமாலிகையில் அமைந்துள்ளது.

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..

ஓ அர்ஜுனா, மரணத்தை எண்ணி மனம் கலங்கிடும் உனக்கு மரணம் என்றால் என்னவென்று சொல்கிறேன் கேள்; மானிடரின் ஆன்மா ஒருபோதும் மரணம் எய்துவதில்லை. மறுபடி மறுபடி பிறந்து வரும். இங்கு உனது கடமை உயிர்களை (எதிரிகளின்) கொல்வது. ஒவ்வொரு எதிரியையும் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்றுதான் என்று அறிவுறுத்துகிறார் கண்ணன். இந்த வரிகள் நாட்டை இராகத்தில் அமைந்துள்ளன.

என்னை அறிவாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிவாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

என்னை நீ அறிந்து கொண்டால் எல்லா உயிர்களும் எனதே என்பதும் உனக்கு புரியும். நீ இந்தக் கண்ணனின் மனது கல்மனது என்றெண்ணி உனது காண்டீபத்தை நழுவ விட்டாயோ! சகல உயிர்களும் நானே ஆவேன், மன்னரானாலும், மக்களானாலும், மரம் செடி கொடி போன்ற ஜீவராசிகளானாலும் அனைத்தும் நானே. இதை சொன்னவனும் சொல்பவனும் கண்ணனாகிய நானே. தர்மம் வாழ்வதற்கு நீ இப்போது துணிந்து நில் என்று அவனுக்கு தைரியமூட்டுகிறார் பகவான் கண்ணன். இந்த வரிகள் சஹானா இராகத்தில் அமைந்துள்ளன.

புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

இதுதான் புண்ணியம் என்று இந்த உலகம் கூறினால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே சேரும் போற்றுபவர்கள் போற்றுவதும் தூற்றுபவர்கள் தூற்றுவதும் கண்ணனையே அடையட்டும்.

இங்கு அனைத்தும் கண்ணனே. கண்ணனே வழி காட்டினான், கண்ணனே செய்யென்று உரைத்தான், கண்ணனே இங்கு கொலையும் செயகின்றான் (நீ செய்யும் கொலையை) ஆகையால் நீதான் அவர்களைக் கொல்லப் போகிறாய் என்று மனம் கலங்கி உனது கடமையை செய்யத் தவறாதே, காண்டீபத்தை கையிலேந்தி இப்போர்க்களமெல்லாம் சிவக்கும் வண்ணம் உன் கடமையை செய்வாயாக என்று கடமையை போதிக்கிறார் கண்ணன். இந்த வரிகள் மத்யமாவதி இராகத்தில் அமைந்துள்ளன.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

இதுவும் மத்தியமாவதி இராகத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள்:
நல்லோர்களின் முன்னேற்றத்திற்கும், தீய சக்திகளை அழிப்பதற்கும்,
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், நான் எல்லா யுகங்களிலும் வருவேன்.
என்று கூறுகிறார் பகவான் கண்ணன்.

இப்பாடலை தனது கணீர் குரலில் மிகவும் உணர்வு பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பாடியிருக்கிறார் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன். அவர் ஒருவரால் மட்டுமே பாட முடியும் இது போன்ற பாடல்களை. கவியரசர் இப்பாடலிலேயே கீதையின் பொருள் முழுவதையும் நமக்கு உணர்த்திவிடுகிறார். இவர் வால்மீகி, வியாசர் போன்றோரது காலத்தில் பிறந்திருந்தால் இன்னொரு இதிகாசம் நமக்கு கிடைத்திருக்கும்.

மெல்லிசை மன்னர்களோ காலத்தை கடந்து நிற்கும் அருமையான இசையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அது நாம் செய்த பாக்கியம். இப்பாடலை கேட்டதும் அனைவரும் வாழ்க்கை என்றால் என்ன என்று நிச்சயம் சிந்திப்பார்கள் சிறிதேனும். அவ்வளவு பொருள் நிறைந்த பாடல் இது!

கீதையின் சாரத்தை எளிய தமிழில் கவியரசர் வடித்துக் கொடுக்க, அதற்கு உயிரூட்டியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top