• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இக்கட்டுரை எப்படி இருக்கிறது?

  • பயனுள்ளதாக

  • சுவையாக

  • பயனுள்ளதாகவும் சுவையாகவும்

  • நேர விரயம்!

  • இன்னும் எளிதாய் இருக்கலாம்...


Results are only viewable after voting.

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் எழுத்தாளர்களே... :)

இலக்கணம் கற்கும் இலக்குடன் வந்த உம்மைத்
தலைவணங்கி வரவேற்கிறேன்... வருக, வருக!

ஏதோ எனக்குத் தெரிந்ததை
எளிமையுடன் விளக்க முற்படுகிறேன்,

புரிகிறதா, மேலும் குழப்புகிறதா என்று
சிறிதும் தயக்கமின்றிச் சிந்தையில் தோன்றியதைச் சொல்க...

வங்கக் கடல்போல வளர்ந்திருக்கும் இலக்கணத்தை
எங்கிருந்து தொடங்குவது என்ற வினா எழுகிறதோ?

சொல்லிடை ’வன்கணம்’ தோன்றிடும் போதெல்லாம்
வல்லினம் மிகுமா? மிகாதே விடுமா? என்ற
பொல்லாத வினாதான் பெரும்பான்மைத் தமிழர்க்கும்
நில்லாத தொல்லைதரும் நீண்ட சிக்கலிங்கு...

அங்கிருந்தே தொடங்குவோம், அடிப்படையாய்த் தொடர்களில்
எங்கெல்லாம் வல்லினம் மிகும் மிகாதென்ற
நுட்பங்கள் சிலவுண்டு நொடியில் கற்றுத்
திட்பமாய்க் கட்டுரையும் கதைபலவும் இயற்றலாம்...

[எதோ ஒரு ‘ஃப்லோல’ கவிதை நடையாவே வருது... உங்கள்ல பலருக்கு இது எரிச்சல் / அச்சமுறுத்தலாம், அதனால் நடையை மாத்திக்குறேன்...]

”வல்லினம் மிகுதல்” - இன்றைய தமிழரின் தலையாய இலக்கணச் சிக்கல்களில் இதுதான் முதன்மையானது எனலாம்!

பல ஊடகங்களும் முன்னணி எழுத்தாளர்களும் கூட இதற்கு அஞ்சி இதை அடியோடு கைவிட்டுவிட்டனர்!

ஆனால், பலரும் அஞ்சி ஓடும் அளவிற்கு இது அப்படி ஒன்றும் கடினமான இலக்கணமே அல்ல!

சொல்லப் போனால், வல்லினம் மிகுதல் மிக நுட்பமான, இயல்பான ஒரு அமைப்பு.

இதை விதியாகப் பார்ப்பதால்தான் கசக்கிறது! இதனை ஒரு இயல்பு என்று பாருங்கள்...

ஆம், சில குறிப்பிட்ட ஒலிக் கூட்டணிகளை நம் நாவினால் இயல்பாக உச்சரிக்க இயலாது, தமிழ் இலக்கணம் அத்தகைய இடங்களில் நாக்கு இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கும்படிச் சில அமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாய், ‘உடம்படுமெய்’ என்ற ஒரு அமைப்பைப் படித்த நினைவு இருக்கிறதா?

இரண்டு உயிரெழுத்துகள் அடுத்தடுத்து வந்தால் நம்மால் அவற்றைத் தொடர்ச்சியாக உச்சரிக்க இயலாது என்பதே உண்மை!

இடையில் ஒரு சிறிய இடைவெளி (gap) உண்டாகும்.

இந்த இடைவெளியைத் தவிர்த்து, எளிதாகவும், இயல்பாகவும், தொடர்ந்தும் அவ்வொலிகளை உச்சரிக்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் ‘உடம்படுமெய்’ என்பது.

எடுத்துக்காட்டாய், ‘திரு+அரங்கம்’ என்ற சொல்லைக் கவனியுங்கள்.

இதில் ‘திரு’ என்பதன் இறுதியில் (ஈற்றில்) ஒரு உயிரும் (), ‘ரங்கம்’ என்பதன் முதலில் ஒரு உயிரும் () உள்ளன,

திருஅரங்கம்’ இணைகையில் நாம் இவ்விரு உயிர்களையும் அடுத்தடுத்து உச்சரிக்க வேண்டியிருக்கும்.

உச்சரித்துப் பாருங்கள்!

(ஒன்று உச்சரிக்க இயலாது, அல்லது இடைவெளிவிட்டே உச்சரிக்க வேண்டியிருக்கும்.
தொடர்ந்து ‘உஅ’ என்று சொல்ல இயலாது!)

இச்சிக்கலைத் தீர்க்க இவ்விரு உயிர்களுக்கும் இடையில் ஒரு மெய்யெழுத்து சேர்க்கப்படுகிறது.

‘உ+அ’ கூட்டணியைப் பொறுத்தவரை ‘வ்’ என்ற மெய்யெழுத்து வந்தால் தோதாக இருக்கும் என்று நம் புலவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, ‘திரு+அரங்கம்’ என்பதை (இடையில் ஒரு ‘வ்’ சேர்த்து,) ‘திருரங்கம்’ என்று உச்சரிக்கின்றோம்!

(அவ்வாறே எழுதவும் செய்கிறோம். மொழியின் முதன்மைப் பயன்பாடு பேசுதல்தான். அடுத்ததுதான் எழுதுதல். எனவே, பேச்சு மொழிக்கு ஏற்ற அமைப்பிலேயே பெரும்பான்மை இலக்கணம் அமைந்திருக்கும். எழுத்துமொழிக்கான வசதிகள் தமிழைப் பொறுத்தவரை குறைவுதான்! (பிற இந்திய மொழிகளில் ‘கூட்டெழுத்து’ என்ற அமைப்பு உள்ளது! அதிகம் விலகுகிறோம்... மீண்டும் தலைப்பிற்கு!)

அதே, ’ஒலி+அலை’ என்ற சொல்லைப் பாருங்கள், இங்கே ’’, ‘’ என்ற இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து வருகின்றன.

இங்கும் ‘வ்’ என்ற மெய்யெழுத்தைப் போட்டு உச்சரித்துப் பார்ப்போமா?

ஒலிவலை’ (சொல்லின் பொருளே மாறிவிட்டதைப் போலத் தோன்றுகிறது அல்லவா?!)

இங்கே பொருத்தமான மெய்யெழுத்து ‘ய்’ என்று நம் புலவர்கள் கண்டறிந்துள்ளனர்:

ஒலிலை

இவ்வாறே, இரண்டு உயிர் அடுத்தடுத்து வந்தால், முதலில் உள்ள உயிர் ’அ’ மற்றும் ’உ’ குடும்பமாக* இருந்தால் ’வ்’வும்,
‘இ’ குடும்பமாக இருந்தால் ‘ய்’யும் இடையில் (உடம்படு மெய்யாக) வர வேண்டும் என்று கண்டறிந்து அமைத்துள்ளனர்.

[*குடும்பம் என்று நான் குறிப்பிட்டது ‘இனம்’ என்று இலக்கணம் சொல்லும் ஒப்புமையுடைய எழுத்தொலிகளை;

அகரக் குடும்பம் / இனம்: அ, ஆ
உகரக் குடும்பம் / இனம்: உ, ஊ, ஒ, ஓ, ஔ
இகரக் குடும்பம் / இனம்: இ, ஈ, எ, ஏ, ஐ
]

ஆக, ‘உடம்படுமெய்’ என்ற இலக்கண அமைப்பு மொழிக்கு இன்றியமையாதது என்பதை ஒத்துக்கொள்வீர்கள்தானே?

விஷயம் என்னவென்றால், இலக்கணம் இன்றியமையாதது என்று திணிக்கப்படுவதில்லை, அது இயல்பானதும் கூட!

சொற்களையும் ஒலிகளையும் இயல்பாக, அதிக சிரமமின்றி, உச்சரிக்கத்தான் இலக்கணம்!

ஓரளவு நல்ல தமிழ்ப் பழக்கம் (செந்தமிழும் நாப்பழக்கம்!) உள்ளவர்கள் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாலே இலக்கண அமைப்பை உணர்ந்துகொள்ளலாம்!

(நான் ‘ஓரளவு நல்ல தமிழ்ப் பழக்கம்’ என்று குறிப்பிட வேண்டியதன் தேவை நமது ஆங்கில மொழிப் பயிற்சியால் ஏற்பட்டது! ஆங்கிலத்தின் உச்சரிப்பு முறைகளும் அடிப்படைகளும் வேறு, அதில் அதிகம் பழகிவிட்ட நமது இளந்தலைமுறைகளுக்குத் தமிழ் இயல்பாக வருவது கடினமாகிவிடுகிறது! இவர்கள் தங்கள் உச்சரிப்பை நம்பி இலக்கணத்தை அறிதல் சற்றே (ரொம்பவே!!) கடினம்!)

இவ்வகைதான் வல்லினம் மிகுதலும்!

அது நம் நாக்கின் இயல்பு!

வல்லினம் மிகாத இடத்தில் மிகுத்தாலும், மிக வேண்டிய இடத்தில் மிகாது விடுத்தாலும் உச்சரிப்புச் சிக்கல் ஏற்படுவதை உணரலாம்!

சரி, அறிமுகமே அதிகமாகிவிட்டது, இத்துடன் இப்பதிவை நிறுத்திக்கொள்கிறேன்.

ஒரு சிறிய பயிற்சியாக நீங்கள் இக்கட்டுரையை மீண்டும் வாசியுங்கள், இதில் எங்கெல்லாம் வல்லினம் மிகுந்துள்ளதோ அங்கெல்லாம் வல்லினம் மிகாமல் உச்சரித்துப் பாருங்கள், ஏதேனும் நெருடுகிறதா? இல்லையா?

(’இல்லை’ என்பவர்கள் கவல்க! (கவலைப்படற்க!) போகப் போகக் கற்போம்...)

(என்ன, இது எளிதாகவும் படிக்கச் சுவாரசியமாகவும் இருக்கிறதா? இல்லையென்றால் தயங்காது சொல்லிவிடுங்கள், வெவ்வேறு ‘பாணி’யை முயன்று பார்ப்போம்... நம் நோக்கம் கற்றல் மட்டுமே!)

அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்...

நன்றி,
--வி :cool:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அண்ணா.. வல்லினம் மிகாமல் வாசித்துப் பார்த்தேன். அந்த இடத்தில் நம் உச்சரிப்பில் நம்மை அறியாமலே வல்லினம் மிகுகிறது சிறு கூடுதல் ஒலி மூலம். நான் கூறுவது சரியாத் தவறா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது இது தான். நன்றி.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நான் முதலில் இருந்து வல்லினம் இல்லாமல் படித்து பார்த்து சொல்கிறேன். ??
நன்று... (படித்து*ப்* பார்த்து*ச்* சொல்லுங்கள்... :giggle::giggle:)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நன்று... (படித்து*ப்* பார்த்து*ச்* சொல்லுங்கள்... :giggle::giggle:)
ஹிஹி.. அடுத்துச் சரியாக கூறியிருப்பேன்.. ??.. இது ஒரு பழக்கம் எனக்கு.. முதலில் எழுதி விட்டுப் பின் தேவைப்படும் இடத்தில் வல்லினம் மிக வைப்பேன். ??? அதில் சில வார்த்தைகளில் விடுப்பட்டு போய்விடும் தான். பார்ப்போம் ணா
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அண்ணா.. வல்லினம் மிகாமல் வாசித்துப் பார்த்தேன். அந்த இடத்தில் நம் உச்சரிப்பில் நம்மை அறியாமலே வல்லினம் மிகுகிறது சிறு கூடுதல் ஒலி மூலம். நான் கூறுவது சரியாத் தவறா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது இது தான். நன்றி.
சரிதான் தங்காய்... நம் நாவின் இயல்பு அப்படி!

வல்லின ஒலிகளை மொழியியலில் ‘வெடிப்பொலிகள்’ (plosives) என்போம். இவற்றை ‘தடுப்பொலிகள்’ (stops) என்ற பெயராலும் அழைப்போம்.

இவற்றை உச்சரிக்கையில் நமது குரல் நாண் (vocal cord) முற்றாக மூடிக்கொள்ளும், எனவே அடுத்த ஒலியை உச்சரிக்கத் தேவையான காற்று சற்று இடைவெளிவிட்டுத்தான் வரும்... அதனால்தான் இவற்றை ‘மிகாமல்’ (மெய்யெழுத்தாக வருகையில் அங்கு வரும் அழுத்தம் (stress [syllable stress]) காரணமாக இந்த அடைப்பு ஈடு செய்யப்படுகிறது!) உச்சரிக்கவே இயலாது - குறிப்பிட்ட அமைப்புகளில் (அவற்றைத்தான் அடுத்தடுத்துக் காண இருக்கிறோம்!)

இன்று எக்சு-ரே கருவிகளை எல்லாம் கொண்டு நாம் அளந்தறிந்த இந்த நுட்பங்களை 2000 / 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனது நுண்ணறிவால் உணர்ந்து சொல்லிச் சென்றுள்ளார் என்பதே வியப்பு!
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
அருமையாக உள்ளது. பள்ளிப் பருவத்துக்கே போயிட்டேன். இன்னும் நிறைய இலக்கணங்கள் போடுங்கோ.
1555606732888.png1555606766913.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top