கற்புநிலை யாதெனில் - 10

Kathambari

Author
Author
SM Exclusive Author
#1
நான்காவது நாள்…

அந்த நாள், அவள் எழுந்து கொள்ளும் போதே அத்தனை அலுப்பாக இருந்தது… உடலில் லேசான சூடு தெரிவது போன்றும் இருந்தது… நேற்றையக் கடுமையானப் பயணம் மற்றும் மழையில் நனைந்ததின் விழைவு என நினைத்தாள்..

சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்ற நினைப்பும் இருந்தது.. ஆதலால் எழுந்து குளித்து முடித்து வந்தாள்.. அன்று அவள் பிறந்த குழந்தையின் பாதத்தின் நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள்… இதுவரை இல்லாமல், இன்று கூந்தலைப் பின்னல்களாக அடக்கியிருந்தாள்…

அவளின் அறையை விட்டு வெளியே வந்தவள், அவன் கணினியில் மும்முரமாக வேலை செய்வதைப் பார்த்து விட்டு, நேராகச் சாப்பாட்டு மேஜைக்குச் சென்று அமர்ந்தாள்… சிறிது வினாடிக்குப் பின்னே, அவளை நிமிர்ந்து பார்த்தவன், தன் வேலையை விட்டுவிட்டு, அவள் அருகே வந்தான்….

“நல்ல டயர்டா இவ்வளவு நேரம் தூங்கிட்ட… “ என்றான்.

“ம்ம்ம்.. “ என்பதைத் தவிர வேறு எதுவும் அவள் சொல்லவில்லை…

“நல்லா சாப்பிட்டுக்கோ, இன்னைக்கு நிறைய எனர்ஜி தேவை… “

திரும்பவும் “ம்ம்ம்…“ என்று சொல்லிச், சாப்பிட ஆரம்பித்தாள்..

அவள் உண்டு முடித்தவுடன், இருவரும் கிளம்பினர்…

********

அடுத்து அவர்கள் சென்ற இடம் பாண்டவா குகைகள்(pandava caves or arvalem caves)… கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகளைத் தாண்டி, கோவாவின், எழிலைக் காட்டிடும், பாரம்பரியச் சின்னமாக இருப்பது…

Arvalem-Caves.jpg

அவன் இங்கே கூட்டி வந்ததில், அவளுக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஏனெனில் வீட்டில் அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்தாலே தெரியும், அவனுக்கு வரலாறும், வரலாற்று இடங்களும் பிடிக்குமென்று…

காரை விட்டு இறங்கியவுடன்.. “நிறைய நடக்கணும்.. தெம்பு இருக்கா… “என்று கேட்டபடியே ஆரம்பித்தான்..

உடலுக்குள் இருக்கும் தண்ணீரை எடுத்து, வெளியில் வியர்வையாகத் தள்ளும் அளவிற்கு வெயிலின் காட்டம் இருந்தது… உடல் சுடுவதின் அளவும், அதிகமாவது போல இருந்தது… ஆனாலும் “சரி” என்று சொன்னாள்..

ஒவ்வொரு குகைக்கும் ஒரு கதை சொன்னான்.. இப்படியே பேச்சுக்களும், நடைப் பயணமும் ஒரு மணி நேரம் சென்றது… உடல் ஒத்துழைப்பு தராவிட்டாலும், அவனுக்காக அதைப் பொருத்துக் கொண்டு நடந்தாள்… அவனுக்கும் அவள் ஏதோ ஒட்டுதல் இல்லாமல் இருப்பது போல் இருந்தது….

அந்நேரத்தில் அவனுக்குக் கைப்பேசியில் அழைப்பு வந்தது… அவளிடம் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு.. “ என்று சொல்லித் தனியேச் சென்றான்..

அவளால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை… வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால், சற்றுத் தொலைவில் இருந்த மரத்தின் நிழலில் போடப்பட்டிருந்த சாய்வு மேடையில் சென்று அமர்ந்தாள்… சிறிது நேரத்தில், அவன் பேசி முடித்து திரும்பியவுடன், அவள் மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அங்கே வந்து நின்றான்…. நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் சோர்வு தெரிந்தது..

“என்ன அதுக்குள்ளே டயர்டா… இன்னும் நிறைய நடக்கணும்.. அப்புறம் இங்கிருந்து பார்த்தா ஒரு பால்ஸ் தெரியும்.. அதையும் பார்க்கலாம்.. வா.. போகலாம்.. “ என்றான்.

ஆனால் அவள் எழுந்து கொள்ளவில்லை…

“ஏன் என்னாச்சு.. “ என்று கேட்டவன், அவள் அருகே அமர்ந்து, கைப்பிடித்து “வா.. “ என அழைத்தான்… ஆனால் அந்தக்கணம், அவள் உடம்பின் சூடு, அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. பின் அவளின் நெற்றி, கழுத்தில் தொட்டுப் பார்த்தான்…

“பீவரா… “ என்றான்.

“ம்ம்ம்.. அப்படித்தான் இருக்கு.. “ என்றவளின் குரல், அத்தனை சோர்வைத் தாங்கி வந்தது.

“காலையிலேயே, இதான் டயர்டா இருந்தியா… “

அவனைப் பார்த்து, மெல்லிய கீற்றாய் புன்னகை தந்தாள்.

“சொல்லிருக்கலாமே.. சரி வா, வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்… “ என்று அழைத்தான்.

“இல்ல… இன்னைக்கு பார்க்கவேண்டிய இடத்தை பார்த்திடலாம்… அடுத்து இந்த மாதிரி சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல… “

“சான்ஸ் கிடைக்காது.. நாமதான் உருவாக்கணும்.. பேசாம வா.. “என்று கையை பிடித்து அழைத்துச் சென்றான்… கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் மனதை அவளுக்கு எளிதாகச் சொல்லி விடுகின்றான்…

வரும்வழி முழுவதும், பரிவுடன் அவளைப் பார்த்தவாரே வந்தான்…. இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்… மருத்துவமனைக்கு போக வேண்டிய தேவையில்லை என்று அவள் சொன்னதால், வாங்கி வந்திருந்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு, அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்… இரவு ஆரம்பிக்க சற்று முன்தான் எழுந்து வெளியே வந்தாள்…

வெளியே அவன் இல்லாததால், அவனது அறையில் இருந்து வேலை செய்வான் என்று நினைத்தாள்… என்ன செய்வது என்று தெரியாமல், அங்கும் இங்கும் நடந்தவள், கடைசியில் சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்து கொண்டாள்..

ஆனால் அவனோ, அறையில் கவலைகள் பூசிய முகத்துடன் இருந்தான்... இந்தப் பத்து வருடங்களில், இதே போன்று காய்ச்சலோ, வேறு பிரச்சனைகளோ வந்திருக்கலாம்… ‘இன்று தன்னிடம் சொல்லாதது போல யாரிடமும் சொல்லாமலேயே அன்றைய பொழுதுகளையும், கடந்து வந்திருப்பாள்’ என நினைக்கும்போதே வேதனையாக இருந்தது… பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியன, அந்தப் பழுப்பு விழிகள் என எண்ணிக்கொண்டன நீலவிழிகள்…

வேதனையை மறைத்து, வெளியே வந்தவன் அங்கே அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்து நின்றான்…

“இப்போ எப்படி இருக்கு.. “என்று கேட்டுவிட்டு… திரும்பவும் நெற்றி, கழுத்து எனத் தொட்டுப்பார்த்தான்… அவளின் கண்கள், அவன் கண்களை நேராகச் சந்தித்தன…

அப்போது அவள் இருந்த நிலையில், அவன் தொடுகை எந்த உணர்வையும் அவளுக்கு உணர்த்தவில்லை…. ஆனால் இப்போது, அவனின் தொடுகையில் இருந்த அக்கறை, அவளை மேலும் மேலும் அவன் பக்கம் சாயச் சொன்னது…

“சாப்பிடுறியா… “என்றான்.

“… “

“ரூம்ல சும்மா தான் இருந்தேன்.. டோர நாக் பண்ணிருக்கலாமே…”

“..... “

“ஏன் தனியா உட்கார்ந்திருக்க.. “

“..... “

“சரி சாப்பிடு… “என்று அவளுக்கு எல்லாம் எடுத்து வைத்தான்…

அவளுக்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை… அவனை, அந்தச் சூழ்நிலையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்… சாப்பிட ஆரம்பித்தவளிடம்…

“டோன்ட மிஸ்டேக்கன்… இதுக்கு முன்னாடி இப்படி சிக்நெஸ் வந்தா என்ன பண்ணுவ… “

“ஹாஸ்பிட்டல் போவேன்… “என்று அவன் கேள்வி புரிந்தும், புரியாதது போல் பதில் தந்தாள்.

“ச்சே… நான் அத கேட்கல.. யாரு டேக் கேர் பண்ணுவாங்க…“என்று அவளுக்குப் புரிய வைத்தான்.

அருகில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகியவள்.. “நானேதான்… “ என்றாள், லேசான தழுதழுக்கும் குரலில்….

நம்மை நாமே கவனித்துக் கொள்வது, என்பதில் எந்தக் கவலையும், வருத்தமும் இல்லை.. ஆனால் அதை ஒருவர் கவனித்துக் கேட்கும் போதுதான், அதன் தன்மையான ‘தனிமை’ உணரப்படும்…. அவளும் உணர்ந்தாள்…

“டேப்லெட் போட்டுட்டு... போய் ரெஸ்ட் எடு… “என்றான் கனிவாக…

“தூக்கம் வரல.. அதான்ல கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன்… “ என்று வரவேற்பு அறையில் இருந்து மெத்தைகளைக் காட்டினாள்…

அங்கு அவளை அழைத்துச் சென்று, அமர வைத்தவன்.. “கொஞ்ச நேரம் டிவி பாக்கிறியா.. “என்றான்.

“இல்ல, வேண்டாம்…. நான் டீவியே பார்க்கறதில்லை.. சும்மாவே ஒக்காந்து இருக்கேனே.. “

“ப்ச்.. சும்மா எப்படி?? இன்னைக்குப் பாரு… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான், என்னோட ரூம்ல இருந்து பார்க்கப்போறேன்… ஸோ நீ டிவி பாரு.. சரியா.. “ என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் சென்று விட்டான்.

அவள் டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வந்தவள், ஏதோ செய்திச் சேனல் ஒன்றை வைத்து விட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்… அந்தநேரத்து முக்கியச் செய்தியாக, திரையில் அன்று நடந்த சாலை விபத்துப் பற்றியச் செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது.. அந்தக் கோரக்காட்சிகள், அது விவரிக்கப்பட்ட விதங்கள், உறவுகளின் பரிதவிப்புகள் என அனைத்தையும் உள்வாங்கின அவளது விழிகள்… அது, அவளை திரும்பவும், பத்து வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்றது… முழங்காலை மடித்துக் கொண்டு, அதில் முகம் புதைத்தாள்…

தற்செயலாக வெளிவந்த அவன், “என்ன பண்ற.. “என்றான்.

கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“ஹேய்.. என்னாச்சு… பீவர் இன்கிரிஸ் ஆகுதா.. ஹாஸ்பிட்டல் போலாமா.. “ என்று கேட்டான்…

இப்போது, டிவியைப் பார்த்தாள்… அது அவனுக்கு, அவளின் கலங்கிய கண்களின் காரணம் சொன்னது…

“டிவிய ஆப் பண்ண வேண்டியது தான… “

“ ரிமோட் எங்க…. “

“உன் பக்கத்துலதான் இருக்கு… எடு“
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#3
“ஓ.. “ என்றவள் ரிமோட்டை எடுத்து அவனிடம் தந்தாள்.. டிவியை நிறுத்தி விட்டான்… தரைத் தளத்தோடு போடப்பட்டிருந்த மெத்தையில் அமர்ந்திருந்த அவளின் எதிரே ஒரு ‘பீன் பேக் ‘ எடுத்துப் போட்டு அமர்ந்தான்.

“என்னாச்சுன்னு சொல்லு… “

“ஒன்னுமில்ல… நடந்ததெல்லாம் ஞாபகம் வந்துருச்சி.. இதுக்குத்தான் நான் டிவியே பார்க்கிறதில்ல.. பாட்டு மட்டும்தான் கேட்பேன்… “என்று அவனின் மேல் குற்றம் சுமத்தினாள்.

“ம்.. புரியுது.. “

“புரியாது… யாருக்கும் புரியாது… “ என்றாள் விரக்தியாக…

“ச்ச்.. திரும்பத் திரும்ப, எதுக்கு நடந்து முடிஞ்சதயே பேசிகிட்டு இருக்க…எல்லாத்தையும் மறந்திட்டு வாழப் பாரு..” என்றான். அதில் அக்கறை, கோபம் சரிவிகிதத்தில் இருந்தது.

“என்னமோ இன்னைக்கு அம்மா அப்பா நியாபகம் வந்திருச்சி… அதான் உங்கிட்ட சொன்னேன்… ப்ச் ஸாரி.. “ என்று உதடுகளைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருக்க முயற்சித்தாள்..

தீடீரென கண்கள் கடந்து வந்த, ஒரு துளிக் கண்ணீரை, ஒற்றை விரல் கொண்டு, சுண்டி விட்டாள்… அவனுக்கு நன்றாகவே தெரிந்தது, அவள், அழவேண்டாம் என்று நினைக்கிறாள் என்று…

“ஹேய்.. நான் அந்த.. “என்றவன், பேசும்போதே அவள் இடையில் புகுந்து…

“உனக்கு நான் பேசுறது பிடிக்கலையா… எனக்கு, உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் சொன்னேன்… நீ பேசுறதெல்லாம் நான் கேட்கிறேன்ல.. அது மாதிரி இதையும் கேட்டுக்கோயேன்… “என்று உடைந்து போன குரலில் கெஞ்சினாள்.

“ம்ம்ம்ம், கேட்கிறேன்.. ஆனா நான் பேசுறத உனக்கு புரியுதா?? “ என்று நயமாக, அவளைத் திசை திருப்பினான்…

“ஏன் புரியாம? … நல்லாவே புரியுது… நீ எதுக்காக பேசற.. எந்த அர்த்தத்தில் இதெல்லாம் பேசிகிட்டு இருக்க.. எல்லாமே புரியும்… “ என்றாள், அவன் எழுதிய காதல் கடிதங்கள், கவிதைகள் மற்றும் காவியங்களைப் படித்து முடித்தவளாய்…

“அப்போ, நான் பேசுறது புடிச்சிருக்கா.. “

சிரித்துக்கொண்டே “எதையும் டைரைக்டா கேட்கனும்.. இன்டேரைக்டா கேட்டா எனக்கு பிடிக்காதனு சொல்வ.. ஆனா இத மட்டும் ஒரு நாளாவது நேரடியா கேட்டிருக்கியா??.. ஏன்னா.. ” என்று அவள் முடிக்கும் முன்னே..

“உன்னய எனக்குப் பிடிச்சிருக்கு… என்னய பிடிச்சிருக்கா.. “ என்று சட்டென்று காதலைச் சொன்னான்.

“ரொம்ப ஈசியா கேக்குற..ஆனாலும் சொல்றேன்… பிடிச்சிருக்கு.. ஆனா அதுக்கு மேல எதுவும் கிடையாது.. நீயா கற்பனை பண்ணிக்காத.. “ என்று கட்டளைகள் இட்டாள்….

“ரொம்ப சோதிக்கிற.. “என்றவனின் குரலில் வருத்தம் எட்டிப் பார்த்தது.

“எனக்கு எப்படி இருந்திருக்கும், நீ பேசுறப்ப… ”என்று சிரித்தாள், அப்பொழுதும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் கரை புரண்டன…

“அப்படி நான் பேசறப்ப, என் மேல கோபம் வந்திச்சா… “

“இல்ல.. எனக்கு யார் மேலயும் கோபம் வராது.. ஆனா சில சமயம் தம்பி மேல மட்டும் கோபம் வரும்.. “

“உன் தம்பி மேல!.. உனக்கு கோபம் வருமா?? …. நம்புற மாதிரி இல்ல..”

“நிஜமா சொல்றேன், அவன் மேல கோபம் வரும்.. அவன் மட்டும் அன்னைக்கு, அப்படி அடம் பிடிக்காம இருந்தா.. நாங்களும் பஸ்லதான இருந்திருப்போம்… “

“நீ தேவையில்லாம பேசுற… ம்ம் உன்னய பர்ஸ்ட் நாள் பார்த்தப்ப எப்படி பேசுன… நான் கூட, ரொம்ப தெளிவான பொண்ணுனு நினைச்சேன்.. ஆனா அதுக்கப்புறம்.. “

“என்ன அதுக்கப்புறம்… “

“இந்த திரி டேய்ஸ்ல.. சம் டைம்ஸ் தெளிவா பேசுவ.. பட் மோஸ்ட் ஆப் தே டைம், அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்ல… “

“அன்னைக்கு என்னய பார்த்துக்க யாரும் இல்லை.. அதனால அப்படி பேசிருப்பேன்… ஆனா இந்த மூனு நாளா, என்னய பார்த்துக்க நீ இருக்கிற.. அதான் இப்படி… “என்றாள் கேலிப் புன்னகையுடன்…

“மூனு நாள் மட்டுமில்ல.. எப்பவும் பார்த்துக்கிறேன்… “என்றான் அவனும் விடாமல்…

“திரும்பவும் ஆரம்பிக்கிற… “ என்று சலித்துக் கொண்டாள்.

“நிறுத்தினாதான, திரும்ப ஆரம்பிக்கிறதுக்கு.. நான்தான் நிறுத்தவேயில்லையே… நிறுத்தவும் மாட்டேன்… “

திரும்பவும் அவள் கண்கள் குளமாகியதைப் பார்த்தான்… கட்டியணைத்து, ‘நான் இருக்கேன், உனக்காக’ என்று தன் காதலை உணர்த்த வேண்டும் என்ற வேகம் அவனுள்.. ஆனால் இவளிடம் மிகுந்த கவனத்துடனே நெருங்க முடியும் என்பதால், அவனும் தடுமாறினான்…

“தப்பா நினைக்கலனா, என்னோட ரூமுக்கு வர்றியா.. உன்கிட்ட ஒன்னு காட்டனும்… “என்றான்.

“என்ன கேள்வி இது??... உன்னப் போய் தப்பா நினைப்பேனா ?? .. “ என்றாள்.

அவள் வாழ்ந்த சூழலில், ஒருவனை மூன்று நாளில் நம்புகிறாள் என்றால் , எந்த அளவுக்கு அவன் மீது காதல் கொண்டிருக்கிறாள், என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது…

“சரி.. வா.. “ என்று அவன் அறைக்குள் அழைத்துச் சென்றான்…

அன்றுதான், முதன்முதலாக அவன் அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்… மற்ற அறைகளைப் போலவே, இதுவும் வித்தியாசமா இருந்தது… தரையில் போடப்பட்டிருந்த மெத்தைகள்.. படுக்கையின் பக்கவாட்டில் கேம்ப் ஃபயர் (camp fire) வடிவில் இருந்த, நைட் லேம்ப் (night lamp)... அதன் மேலே, வட்டவடிவில் பெரியதாக ஒட்டப்பட்டிருந்த இலக்கங்கள், அதன் நடுவில் கடிகார முட்கள்… ஒரு பக்கச் சுவர் முழுவதும், தத்துவங்கள் சொல்லும் சுவரொட்டிகள்..

“இதென்ன.. “ என்று ஆரம்பித்தவளிடம்…

“போதும்.. அங்கயே பார்த்துக்கிட்டிருக்க…. நான் அதப் பார்க்கக் கூட்டிட்டு வரல.. கொஞ்சம் திரும்பி பாரு.. “என்றான்.

அவன் பார்க்கச் சொன்ன இடத்தில், பார்த்தவளுக்கு ஆச்சரிய அவஸ்தையாக இருந்தது… அந்தப் பக்கச் சுவர் முழுவதும், அவளுடைய புகைப்படங்கள்… இந்த மூன்று நாட்களில், அவளது சந்தோஷ தருணங்களை எல்லாம், அவனின் அறைச் சுவற்றில், சிறை செய்து வைத்திருந்தன, அந்தப் புகைப்படச் சட்டங்கள்….

“எப்படி இருக்கு… “ என்றான்.

“ தேவையில்லாத வேல பாக்குற… “

“எப்படி இருக்கு… “ என்று, திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டு பதில் வேண்டி அடம்பிடித்தான்…

“எப்ப இதெல்லாம் பண்ற… “ என்றாள், இன்னும் ஆச்சரியம் அடங்காமல்… அதே நேரத்தில் பதிலும் சொல்லாமல்….

“போட்டோஸ் எடுத்தாச்சு, அப்புறம் ஃப்ரேம் போடறது என்ன பெரிய வேலையா… “என்றான் எளிதாக…

அவள் அவனையே, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்…

“சில போட்டோஸ் சரியா எடுக்கலையோ… இல்ல கரைக்டா ப்ரேம் பண்ணலையோ“ என்று கவலையுடன் யோசித்தான்.. ‘எப்படி இருக்கு ‘ என்ற கேள்விக்கு இப்போது பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்..

“ச்சே.. ரொம்ப அழகா இருக்கு… “ என்று பதில் சொல்லி, “அய்யோ.. “ என்று நாக்கைக் கடித்தாள்…

அவனுக்கு வேண்டிய பதில் கிடைத்ததால், சிரித்துவிட்டு… “எல்லாம் நீதான்…” என்று கண் சிமிட்டல் செய்தவன்.. “சரி அந்த கார்னர்ல பாரு… “ எனக் கைகாட்டினான்.

அவன் கைகாட்டிய மூலையில் இருந்தது, ஒரு பீங்கான் பூஜாடி.. அது முழுவதும் விதவிதமான வண்ணங்களில் மலர்களால் நிரப்பப்பட்டிருந்தது….

“இதையும் வாங்கிக்கிட்டயா… “

“ம்ம்ம்… “

“எங்க வாங்கன… “

“ஆன்லைன்ல… சரி.. சொல்லு, இதுல எந்தக் கலராவது மிஸ்ஸாகுதா?.. சொன்னேனா, அந்தக் கலர் பிளவரும், வாங்கிப் போடலாம்… “ என்று சிரித்தான்.

“ம்ம்ம்… பார்க்கிறேன்.. “ என்று விதவிதமான வடிவங்களில் இருந்த, பூக்களை ரசித்து ரசித்துப் பார்த்தவள்… “இதே மாதிரி என் ரூம்லயும் வாங்கி வைக்கலாமா… “ என்று ஆர்வத்துடன் கேட்டாள்…

அவனும் இதை அவளிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை… ஆனால் ‘உனக்கில்லாததா’ என்பது போல் இருந்தது, அவனின் பார்வையும், புன்னகையும்…

கேள்வி கேட்ட பின்னரே, ‘என்ன கேட்டோம்‘ என்று புரிந்தது அவளுக்கு .. அதை மாற்றும் எண்ணத்தில்… “ஆனா உன் ரூமுக்கு, இந்த மாதிரி போட்டோஸ்.. இந்த பூஜாடி… செட்டே ஆகலப்பா…. “ என்றாள்.

“ம்ம்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுச்சி… ஆனா என்னோட லவ்வருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்கும்… “என்று முதன் முறையாக, அவளை ‘நீதான் என் காதலி ‘ என்ற இடத்தில் வைத்தான்…

இதைக் கேட்டவள், தன் இடது கரத்தால், தொண்டையில் லேசாக தட்டிக் கொடுத்துக் கொண்டே, விழிகளை அங்கும் இங்கும் அலைய விட்டாள்…

அவள் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்தவன்… “சரி வா வெளியே போய் பேசலாம்.. ” என்று அறைக் கதவத் திறக்க யத்தனித்தான்..

ஆனால் அவளோ அங்கேயே நின்று கொண்டிருந்தாள்…

“என்ன.. “

“அந்தப் பால்கனிய பார்க்கனும்… “ என்று அவனின் அறை பால்கனி நோக்கி, கை நீட்டினாள்…

“வா.. “ என்று, அவளை அழைத்துச் சென்றான்…

செயற்கை புற்தரை அமைப்புக் கொண்ட பால்கனியின் தரை.. ஒரு புறத்தில் இருந்த கேனோப்பி( canopy) …மறுபக்கத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள்… எதிரே தெரிகின்ற இரவு நேரத்து, கோவா நகரத்தின் அழகு…

“இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோமா… ” என்றாள்.

“ம்ம்ம்…உட்காரு… “ என்று அங்கிருந்த, கேனோப்பியைக் காட்டினான்…

அவன் பால்கனி சுவரில் சாய்ந்து நின்று கொண்டான்… அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவள் அருகில் அவன் அமராதது…

“உனக்கு செடியெல்லாம் வைக்கப் பிடிக்காதா… “என்றாள்.

“ம்.. பிடிக்காது.. உனக்கு பிடிக்கும்னா சொல்லு..வச்சிரலாம்… “

“அய்யோ.. நீ வேற… எனக்கும் பிடிக்காது.. ஆனா எங்க பெரியம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்… “

“ஓ.. “

“உன்னப் பத்தி சொல்லேன்… “

“என்னப் பத்தி, என்ன சொல்ல.. உனக்கே தெரியுமே.. “

“நான் அதைக் கேட்கள… உன் அம்மாவப் பத்திச் சொல்லு…. அவங்க எப்ப உன்னவிட்டு …அதப்பத்தி.. “

“ஓ.. நான் செவன்த் படிக்கிறப்ப… “

“அப்பவேவா.. எப்படி சமாளிச்ச… “

“பாட்டி இருந்தாங்க, அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க… அப்புறமா அண்ணி வந்தாங்க… அதுக்கப்புறம் அவங்க பேமிலிய கைடு பண்ணாங்க.. “

“உன்னோட அப்பா.. “

“அப்பா ரொம்ப பேச மாட்டாரு… பேங் விட்டா வீடு, வீட்ட விட்டா பேங்குனு, ரிட்டயர்ட் ஆகிற வரைக்கும், அப்படியே இருந்தாரு… அப்புறம் நான் வளர, வளர கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மறந்திருச்சி… மறக்கல பழகிருச்சு.. ”

“நல்ல கூட்டுக் குடும்பம் இல்லையா… “

“நீ வேற பாட்டிக்கும் அண்ணிக்கும் ஒரே ப்ராப்ளமா இருக்கும்… ஒத்தே வராது.. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வேற வரும்... பாட்டி கொஞ்சம் ஓவரா பேசுவாங்க, பட் அண்ணி நல்லா சமாளிச்சிருவாங்க.. இப்போ அடிக்கடி பாட்டி என்கிட்ட சொல்றது, ‘உனக்கு கல்யாணம் முடிஞ்சதும், நான் உன் கூட வந்துருவேனுதான்’.. அண்ணா சொல்வான், ‘பாவம்டா உன்னக் கல்யாணம் பண்ணப்போற பொண்ணுனு’… பட் யாரு என்ன சொன்னாலும், எனக்கு என்னோட பாட்டிதான் பிடிக்கும்… “

“நீ உன்னோட பாட்டி பத்திச் சொல்லச் சொல்ல, அவங்களப் பார்க்கனும்னு தோணுது… “

“வர்றியா.. கூட்டிட்டுப் போறேன்… பாட்டியைப் போயி பார்த்துட்டு வந்துரலாம்… “ என்றான் ஆவலாக..

“வேண்டாம்… வேற ஏதாவது பேசு… “

“சரி, திருச்சிக்கு கூட்டிட்டு போகவா… “

“அங்கே போனாலும், பழைய ஞாபகம்தான் வரும்.. எனக்கு இந்த மூனு நாளா, கொஞ்சம் எல்லாத்தையும் மறக்குற மாதிரி இருக்கு… அதான் வேண்டாம்… “

“உனக்கு கோவா பிடிக்குதா.…”

“இத ஒரு நாலு நாளைக்கு முன்னாடி கேட்டிருந்தா, நிச்சயமா பிடிக்கலனு சொல்லிருப்பேன்.. ஆனா இப்ப, ரொம்ப் பிடிச்சிருக்கு.. “என்றாள்.

அவனின் பார்வையில் ‘தான் அவள் மனதை ஜெயித்துக் கொண்டிருக்கிறோம் ‘ என்று தெரிந்தது..

“எதுக்கு நின்னுகிட்டே இருக்க.. வந்து உட்காரு.. “என்றாள்.

“ம்.. “ என்று கேனோப்பியின் ஒரு ஓரத்தில் உட்காரப் போனவனை..

“இங்க… என்… பக்.. பக்க.. பக்கத்தில உட்காரேன்… “ என்று விழிகளால் யாசித்தாள்.

‘இவளுக்கு என்னாச்சி, இன்று‘ என்று யோசித்தபடியே அவள் அருகில் வந்து அமர்ந்தான். சில நிமிடங்கள் அல்ல, நிறைய நிமிடங்கள், இருவரின் மெளனங்களிலே கடந்தன…. என்ன பேசவென்றே தெரியாத கட்டத்தில் இருந்தனர்…

திடிரென “உன்ன ஏன்டா பார்த்தோம்னு இருக்கு… பார்க்காமலே இருந்திருக்கலாம்… அப்படியே வாழ்ந்திட்டு போயிருப்பேன்.. ஆனா இப்ப பாரு.. “ என்றாள், திரும்பி அவன் கண்களைப் பார்த்து..

“இப்பவும் ஒன்னுமில்லை… “என்றான் அவனும் அவள் கண்களை நேராகப் பார்த்து….

மறுப்பாகத் தலையை மட்டும் அசைத்தாள்…

“உன்கிட்ட ஒன்னு கேட்கனும்… ஆனா நீ வேற எதுவும் நினைக்க கூடாது… நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்க கூடாது…. வேற எந்த மாதிரியும் எடுத்துக்க கூடாது… “ என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள்…

“கேளு… “
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#4
“நான்.. நான்.. கொஞ்ச… கொஞ்ச.. நேர… நேரம் உன்… உன்னோட.. தோள்ல சாஞ்சிக்கவா…. “என்று தயங்கித் தயங்கி, தடுமாறிய குரலில் கேட்டாள்.

“இதுக்கெல்லாம் கூட நீ என்கிட்ட பெர்மிஷன் கேட்பியா… இல்ல கேட்கனுமா… “

“இல்ல.. ஏற்கனவே ஒரு தடவ… “

“உன்ன ஹேர்ட் பண்ணிட்டேனா…”

‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.

“ எனக்கு தெரிஞ்சே… “

“ச்சே ச்சே, அப்புறமா நீ பழகறப்ப புரிஞ்சிருச்சி.. நீ வேனும்னு செஞ்சிருக்க மாட்டேனு.. “

“எப்பனு சொல்றீயா.... “

“அன்னைக்கு நைட்டு, உன்னோட புது பிசி… பிசினஸ் பத்திச் சொல்… சொல்லும் போது, நா… நான் ‘கன்க்ராட்ஸ் ‘ சொல்லி, கைய நீட்டினேன்.. ஆனா நீ கை கொடு… கொடுக்கவே இல்லை…ரொம்ப கஷ்டமா இருந்திச்சி… அப்புறம் எனக்கு நானே சமா… சமாதானம் சொல்லிக்கிட்டேன், நம்ம தகுதி என்ன… “என்று அவள் தழுதழுக்கும் குரலில் முடிக்கும் முன்னே…

“சாய்ஞ்சிக்கிட்டே பேசிறியா… “ என்றான் அவளின் வேதனை தாங்காமல்…

“ம்ம்ன்.. “ என்று நீர்கோர்த்த விழிகளை விரித்து, அவனைப் பார்த்தாள்…

“தோள்ல சாய்ஞ்சிக்கிட்டே பேசிறியா… “ என்றவன் குரலும் பாரம் தாங்கி வந்தன…

ஆயிரம் ஏக்கங்களுடன் அவள் விழிகள் அங்குமிங்கும் அலைப்புற்றது.. மனம் முழுவதும் சஞ்சலத்துடன், ஒவ்வொரு நொடியும் யோசித்து யோசித்துத் தலையை சாய்த்துக் கொண்டு வந்து, பின் அவன் தோள்களில் மெதுவாக, வாகாகத் தலை சாய்த்துக் கொண்டாள்… சில நொடிகளில் அவன் தோள் வளைவுகளில் நிம்மதியுடன் தலையை அழுந்த, புதைத்துக் கொண்டாள்.. அதற்குப்பிறகு அவள் பேசவே இல்லை…. அவனும்தான்.


நீலவிழிகளுக்கோ...

நட்சத்திரங்கள் பூத்த வானம்….

நடுநிசி தந்திடும் அமைதி…

நிலவொளியில் நானும் நீயும்..

நிசப்தங்களும் புரிந்திடும் தனிமை…

நீதான் வேண்டுமென...

நிர்பந்திக்கும் எனதுள்ளம் ..

நின்னைத் தாங்கும் என் தோள்கள்…

நீள வேண்டும் ஆயுள் முழுதும்...

பழுப்பு விழிகளுக்கோ…

பிரகாசமாய் நட்சத்திரங்கள்...

பால்நிலவொளியில் நீயும் நானும்…

பார்வைகள் பேசிடும் தனிமை…

பிரியம் காட்டிடும் காதலன்…

பாதுகாப்பு தந்திடும் தோள்கள்..

பாசம் உணர்த்தும் உன் நெஞ்சம்…

புதிதாய் என்னுள் பூத்த காதல்..

பகையாய் எந்தன் கடந்த காலம்…


_20190521_080338.JPG
(தொடரும் )
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top