• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கலிமா😍

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
🤗السلام عليكم ورحمه الله وبركاته



இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்பதில் முதலாவது கலிமா "

கலிமாக்கள் ஐந்து இன்று அவற்றை பற்றி காணலாம்❤😍

கலிமா என்பது அல்லாஹ் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்.

முதலாம் கலிமா (தய்யிப்)

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله
லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்

இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைதவிர வேறு இலாஹ் (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..
.

2.கலிமா ஷஹாதத்


அஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.

பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.

3. கலிமா தம்ஜீது

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்

அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிழ்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.

4. கலிமா தவ்ஹீது

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.

பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மர்ணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.

5. கலிமா ரத்துல் குஃப்ர்

அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.

பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்

யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோறுகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீன்டேன்.

மேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன், வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கிறேன்.

குறிப்பு: நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கலிமாக்களையும் தினமும் அதிகமாக ஓதிவருவதால், உள்ளத்தில் பேரோளி ஜொலிக்கும் அல்லாஹ்வின் அச்சமும் உறுதியும் நிலைக்கும்.

அனைவருக்கும் புரிய வேண்டும் என்று தமிழில் கொடுத்திருகிறேன் யாருக்காவது அரபியில் வேண்டும் என்றால் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் போஸ்ட் செய்கிறேன்❤😍🤗
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top