கல்வி பற்றி சுவாமி விவேகானந்தர்?

#1
கல்வி பற்றி சுவாமி விவேகானந்தர்?

பாமரர்களாகிய பொது மக்களை வாழ்க்கை போரட்டதிருக்கு தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி , உறுதியான நல்ல ஒழுக்கத்தையும் , பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிபடுத்தப் பயன்படாத கல்வி , அதை கல்வி என்று சொல்வது பொருத்தமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கை தந்து ஒருவனைத் தந்து சொந்தக் கால்களில் நிற்கும் படி செய்கிறதோ ,அது தான் உண்மையான கல்வியாகும்.
கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விசியங்களை போட்டு திணித்து வைப்பதல்ல. அப்படி திணிக்கப்படும் அந்த விசியங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்கு தொந்தருவு கொடுத்துகொண்டே இருக்கும்.
வாழ்க்கையை உருவாக்க கூடிய , மனிதனை மனிதனாக்க கூடிய, நல்லொழுக்கத்தை வளர்க்க கூடிய கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கி கொள்ள வேண்டும்.
நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்து கொண்டு ,அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையுளும் ஊடுருவி நிற்க செய்தால்-- ஒரு பெரிய புத்தக சாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருபவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
நியுட்டன் புவிஈர்ப்பு சக்தியைக் கண்டு பிடித்தார் என்று சொல்கிறோம். அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளதிலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டு பிடித்தார்.
காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதில் இருந்துதான் வந்திருகிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிக பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலே அடங்கி இருக்கிறது. வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.

படித்ததில் பிடித்தது
 

Latest Episodes

Sponsored Links

Top