• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

களம்புகல் ஓம்புமின் | சிறுகதை - முன்தேவை (prerequisite) :-)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
வேலைப்பளு அதிகம் சகோ... அதான்!

அந்த "இவ்வே பீலிசூடி...' பாடல் பாடத்துல இருக்குமே? அது 'வஞ்சப்புகழ்ச்சி அணி'க்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு!

'களம்புகல் ஓம்புமின்...' பாடல் 'உயர்வு நவிற்சி அணி'!

????
Bro na Romba poor student.. might be miss Padam நடத்தும்போது தூங்கிட்டேன்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Bro na Romba poor student.. might be miss Padam நடத்தும்போது தூங்கிட்டேன்.
நம்பிட்டேன் ???????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வணக்கம் அன்பான வாசகர்களே...

எனது அடுத்த சிறுகதையைப் பதியுமுன், அதன் முன் தேவையான சில சங்கப் பாடல்களையும் அவற்றின் பின்புலம், கருத்து ஆகியவற்றையும் உங்களைப் படிக்க வைத்துவிட்டால், உங்களின் வாசிப்பனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த ‘முன் தேவை’ பதிவு!

(இந்தியாவுலயே... ஏன், உலகத்துலயே, ஒரு சிறுகதைக்கு ப்ரீரிக்வசைட் போட்ட ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன்... போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ஔவையாருக்கே! ஹி ஹி!)

இந்தக் கதை நான் ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்திய ‘சங்க இலக்கிய சிறுகதைப் போட்டி’க்காக எழுதியது. போட்டியின் விதி சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளை எழுத வேண்டும் என்பதுதான். (இக்கதைக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது!)

அப்போட்டிக்காக நான் 5 கதைகள் எழுதினேன் (5-வது கதையை முடிக்கவில்லை!)

புறநானூற்றில் ஔவையார் பாடியதாக இருக்கும் சில பாடல்களின் அடிப்படையில் இந்தக் ‘களம்புகல் ஓம்புமின்’ கதையை எழுதியுள்ளேன்.

அதியமான் நெடுமானஞ்சி என்ற அரசனுக்கும் தொண்டைமான் என்ற அரசனுக்கும் பகை. அதியமான் மீது தொண்டைமான் போர் தொடுக்கிறான்...

அப்போது அதியமானின் ஆதரவில் இருக்கும் ஔவையார் தனது புலமைத் திறத்தாலேயே அப்போரை நிறுத்திவிடுகிறார்.

இந்த அரும்பெருஞ்செயல் அவர் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் பதிவாகியுள்ளது:

களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந்
தெம்முளு முளனொரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே

-புறநானூறு, ஔவையார், பாடல் 87

”பகைவர்களே, போர்செய்யும் நோக்குடன் போர்க்களத்திற்கு வருவதைக் கைவிடுங்கள்!
எங்களிடமும் ஒரு வீரன் இருக்கிறான், ஒரே பகலில் எட்டு தேர்களைச் செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுதும் உழைத்து செய்த ஒரேயொரு தேர்ச்சக்கரத்தைப் போன்றவன் அவன்!”



இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல்
மடவர லுண்கண் வாணுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
எறிகோ லஞ்சா வரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே!

-புறநானூறு, ஔவையார், பாடல் 89

”அழகான இடையில் அணிகள் அணிந்த விரலியே! உன் நாட்டில் போர் வீரர்களும் இருக்கிறார்களோ?” என்று (எள்ளலாகக்) கேட்கும் அரசனே! (கேள்,) அடிக்கும் கொம்புக்கு அஞ்சாத பாம்பைப் போன்ற (அச்சமறியாத) இளைய வீரர்களும் இருக்கின்றனர், அது மட்டுமின்றி, பொதுவெளியில் கட்டப்பட்ட போர் முரசம் காற்றில் அதிர்ந்தால் கூட ‘ஆஹா, போர் வந்தது’ என்று மகிழும் எங்கள் தலைவனும் உள்ளான்!

(விரலி - ஔவையார், கேள்வி கேட்டவன் - தொண்டைமான், ஔவையார் குறிப்பிடும் தலைவன் - அதியமான்)



இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே!

-புறநானூறு, ஔவையார், பாடல் 95

(அதியமானின் தூதாக வந்த ஔவையாருக்குத் தொண்டைமான் தனது படைக்கருவிகள் வைத்திருக்கும் கொட்டகையைச் சுற்றிக் காண்பிக்கிறான். அங்கே நெய்பூசிப் பளபளவென்று அடுக்கப்பட்டிருக்கும் புதிய படைக்கலங்களைக் கண்டு ஔவையார் அஞ்சி, தன் தலைவனிடம் சென்று தனது பெருமையைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறான். ஆனால், ஔவையார் செய்தது முற்றிலும் நேர்மாறான செயல். வஞ்சப்புகழ்ச்சியால் தொண்டைமானையே ஒரு கலக்கு கலக்கிவிட்டுச் செல்கிறார் அவர்!)

”இங்கோ (தொண்டைமானின் கொட்டகையில்), மயில் பீலி சூட்டப்பட்டும், மாலை அணிவிக்கப்பட்டும், நெய் பூசப்பட்டும் கூர்மையான புதிய ஆயுதங்கள் அடுக்கப்பட்டுள்ளன!

அங்கோ (அதியமானின் கொட்டகையில்) பகைவர்களைக் குத்திக் குத்திக் கூர்மை மழுங்கி கொல்லனின் பட்டறைக்கு அனுப்பப்பட்டுள்ளன...
என்றும், தன்னிடம் (அதிகம்) இருந்தால் பரிசாகக் கொடுத்தும், இல்லாத போது தானும் உடனுண்டும் மகிழும் எங்கள் தலைவனின் வேல்!”


(’உண்டாயிற் பதங்கொடுத்து’ என்பதை ஔவையாரின் இன்னொரு பாடலான ‘சிறிய கட்பெறினே’ என்ற பாடலிலும் காணலாம். அதியமான் இறந்தபின் ஔவையார் கையறு நிலையில் (ஒப்பாரி) எழுதிய பாடலது. அதிலும் இவ்வாறே ‘கொஞ்சமாக இருந்தால் எனக்குக் கொடுத்துவிடுவான், நிறைய இருந்தால் அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்வான்...’ என்று கூறுகிறார்! இந்த இயல்பே அவனிடம் ஔவையார் போன்ற புலவர்கள் அதிக மரியாதையும் பாசமும் கொண்டு இறுதிவரை உடனிருக்கக் காரணமாக இருந்தது எனலாம்!)

அதியமானின் சார்பாய் தொண்டைமானிடம் தூது சென்ற ஔவையார் மிக நுட்பமாகத் தனது சொல்லாற்றலால் அவர்கள் மனத்தில் கலக்கத்தையும் அச்சத்தையும் விதைத்துவிடுகிறார் என்பதை இப்பாடல்களை ஊன்றிப் படித்தால் உணரலாம்.

இதையே நான் ஒரு அறிவியல்-புனைவு அமைப்பில் எனது சிறுகதையாக எழுதியுள்ளேன்.

நாளை அக்கதைப் பதிவேற்றப்படும், படித்து மகிழுங்கள்...

(பின்குறிப்பு: வரலாற்றில் பல ஔவையார்கள் இருந்துள்ளனர். குறைந்தளவு 6 வெவ்வேறு ஔவையார்களாவது இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர் கணிப்பு! எனது கருத்தும் அஃதே! இவற்றுள் முதன்மையானவர் சங்ககால ஔவை.

நாம் பெரும்பாலும் நினைப்பது போல இந்த சங்க ஔவை கிழவியாக இருந்திருக்க வேண்டிய தேவை இல்லை. இவர் ஒரு விரலி (பாடல் பாடி ஆடுபவர். பாணர்களின் உடனிருக்கும் இசைக்கலைஞர்கள். ‘பெண்பால் பாணர்’ எனலாம். ‘பாடினி’ என்பவரும் கிட்டத்தட்ட இவ்வகையே!)

இந்தச் சங்க ஔவை அழகான இளம்பெண்தான! எனினும் நான் என் கதையில் ஔவையைக் கிழவியாகவே காட்டியுள்ளேன் - பரவலாகப் படிந்துவிட்ட படிமத்தை மாற்ற விரும்பாமையால்!)

:):)(y)(y) வி

Based on this plot I did a skit with kids last year here...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Based on this plot I did a skit with kids last year here...
Wow... Super sis... Do you have a recording of it available in YouTube or somewhere?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top