• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே-14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-14

குழந்தை உண்டானது தெரிந்து நெடுமாறன் கோபப்படுவான் அதை வைத்துக் கொள்ளக் கூட விரும்ப மாட்டான் என்று தான் எழிலரசி நினைத்திருந்தாள். எழிலரசியின் அன்பு எப்போதும் தனக்கு மட்டுமே வேண்டும் என நெடுமாறன் நினைப்பதை அவள் புரிந்து வைத்திருந்தாள். அதனால் தான் இப்படி ஒரு பயம் எழுந்து அவளை வாட்டிக் கொண்டிருந்தது ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல அவளை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டான். இவன்தான் அன்று நாய்க்குட்டிக்கு அப்படி ஒரு கொடூரத்தை நிகழ்த்தியது என்று யாரும் சத்தியம் செய்தால் கூட நம்பியிருக்க மாட்டார்கள்..

என்னவெல்லாம் சாப்பிட வேண்டுமென்று அவளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான். எழிலரசி ரொம்ப வீக்காக இருந்ததால் டாக்டர் அவளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சொன்னார். அவனை பார்த்தாலே பயமாக இருந்தது அவன் அருகில் வந்தால் தன்னால் உள்ளம் நடுக்கம் கொண்டு விடும் ஆனால் இந்த மாதிரியான எந்த எண்ணமும் இல்லாமல் அவன் சகஜமாக அவளிடம் எப்போதும் போல பேசினான். உண்மையில் இவன் இப்படித் தானா இல்லை நடிக்கிறானா எப்படி ஒரு மனிதனால் அப்படி இருக்க முடியும் முதல் முறையாக அவனை பார்த்து குழப்பமாக இருந்தது..

அவனை விட்டு தள்ளி இருக்கலாம் என நினைத்தால் அவன் அதற்கு விடவே இல்லை. எப்போதும் போல தானாக வந்து அவள் மடியில் படுத்துக்கொண்டு ஏதாவது பேசுவது இரவு எப்பொழுதும் போல பால்கனியில் அமர்ந்து உணவு ஊட்டச் சொல்வது என அவளை ஒரு வழி செய்து விட்டான். எதையும் செய்ய முடியாது என சொல்லவும் முடியாமல் அவனுக்கு இயல்பாக அதை செய்யவும் முடியாமல் தவித்துப் போனாள். யாரிடம் தன் மனக்குமுறலை பகிர்ந்து கொள்வது என்றே தெரியவில்லை. அவளுக்கு இன்று இயலரசியை விட்டால் நெருக்கமானவர்கள் யாருமே இல்லை அவளிடம் பேசலாம் என அழைத்தால் ஒரு வாரமாக அவள் போன் சுவிட்ச் ஆஃபிலேயே இருக்கிறது. மேலும் அவனோடு இருந்தால் மனரீதியாக தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்னும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் அவனின் டார்ச்சர் எல்லையை கடந்து சென்று கொண்டு இருந்தது..

அன்று தன்னைப் பார்ப்பதற்காக யாரோ வந்திருப்பதாக சொல்லவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை நாளில் இயலை தவிர வேறு யாரும் அவளை தேடி வந்ததில்லை. அதே யோசனையோடு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவள் கீழே தன் தாயை தந்தையை பார்த்ததும் ஆசையோடு அவர்களை நோக்கி ஓடிவந்தாள். ஆனால் வாசலிலேயே அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற நெடுமாறனை பார்த்ததும் சட்டென்று அவளது வேகம் தடைபட்டது. கண்களில் ஒருவித குரூரத்துடன் தன் தாய் தந்தையை அவன் பார்த்திருக்க இதே போன்ற குரூரமான பார்வையைத் தான் அவள் அந்த நாய்க்குட்டியை தூக்கி வைத்திருக்கும் போதும் அவனது கண்களில் இருக்கும். அப்போதெல்லாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டவளுக்கு இப்போது அவனைப் பற்றி தெரிந்த பிறகு மனதை ஒருவித பயம் கவ்விக்கொண்டது..

அவனின் அந்தப் பார்வையில் எழிலரசி மட்டும் அவர்களை நெருங்கினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பது போல இருக்க சட்டென்று தன் வேகத்தை குறைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்..

பொதுவாக இருவரையும் பார்த்து, "ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க..?" என கேட்டாள்..

மணிகண்டன் முகத்தில் ஏமாற்றம் மட்டுமல்ல சொல்ல முடியாத வேதனையும் வந்து ஒட்டிக்கொண்டது. தன்னை பார்த்ததும் தன் மகள் தாவி வந்து அணைத்துக் கொள்வாள் என்று அவர் எதிர்ப் பார்த்திருக்க அவளோ சம்பிரதாயமாக புன்னகைத்து எப்படி இருக்கிறீர்கள் என பொதுவாக கேட்டது அவருக்கு பெரிய அடியாக இருந்தது..

உண்மையிலேயே மணிகண்டன் இயலரசியைப் பற்றி கேட்க வந்ததெல்லாம் ஒரு சாக்கு தான். எப்படியும் அவள் இங்கே இருந்தால் எழிலரசி தன்னிடம் சொல்லி இருப்பாள் என்பது அவருக்கு தெரியும். மகளைப் பார்த்து வெகு நாட்களாக ஆனதால் இதை சாக்காக வைத்து அவளை பார்த்து ஆசை தீர கண்களில் நிரப்பிக் கொள்ளலாம் என்றுதான் வந்திருந்தார். ஆனால் இப்போது அவர் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு மட்டுமே தெரிந்தது. பணத்தை கண்டதும் தன் மகளும் மாறிவிட்டாளோ என அவர் யோசித்தார்..

அதே வெறுப்பை குரலிலும் காட்டி, "சுந்தரி அவகிட்ட என்ன விஷயமா வந்தமோ அத சீக்கிரம் கேட்டுட்டு கெளம்பு எனக்கு நிறைய வேலை இருக்கு", என அவள் முகம் பார்க்காமல் திரும்பிக்கொண்டார்..

அவரைப் பார்த்து வேதனையாக இருந்தது போதும் இருவரையும் இங்கிருந்து கிளப்பினால் போதும் என நினைத்த எழிலரசி, "என்னம்மா என்ன விஷயம்..?" என்று இப்போது அழகு சுந்தரியை பார்த்தாள்..

அழகு சுந்தரிக்கு மணிகண்டனின் மனநிலை புரிய தான் செய்தது. அதேbநேரம் மகள் ஏதோ சொல்ல முடியாத இக்கட்டில் இருக்கிறாள் என அவள் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார். ஆனால் அதை எப்படி கேட்பது அதற்கு அவகாசமும் இல்லை என்பதை உணர்ந்தவள் முதலில் இயலரிசியை பற்றி கேட்க நினைத்து அவளை காணவில்லை என்பதையும் ஒரு வாரமாக தேடி கொண்டிருப்பதையும் சொன்னார்..

"என்னம்மா இப்படி சொல்றீங்க அவ எங்க போறான்னு உங்க கிட்ட சொல்லிட்டு போகலையா..?" என அதிர்ச்சியாக கேட்டாள்..

"லைப்ரரி போறதா சொல்லிட்டுதான் போனா ஆனா போலீஸ் விசாரிக்கும் போது அங்க இருந்து உன்னை பார்க்க வர்றதா சொல்லிட்டு வந்துருக்கா. அதுக்கு அப்புறம் அவ வீட்டுக்கு வரல அதனால தான் உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தோம்", என்று சொல்ல இந்தமுறை இன்னும் அதிகமாக எழிலரசி அதிர்ந்தாள்..

தன்னால் கணவனின் புறம் பார்வை செல்ல அவனோ அங்கே யாருடனோ போனில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான். சேச்சே அப்படியெல்லாம் இருக்காது ஏன் என் புத்தி இப்படி தேவையில்லாமல் வேலை செய்கிறது. அவள் வாசல் கேட்டைத் தாண்டி சென்றதை பார்த்த பிறகு தானே உள்ளே போனேன் அதனால் நான் நினைப்பது போல எதுவும் இருக்க வாய்ப்பில்லை..

"இல்லம்மா அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு சரியா பேசாம கூட உடனே கிளம்பி போய்ட்டா. அதுக்கப்புறம் நான் அவளுக்கு போன் பண்ணினா போன் எடுக்கவே இல்ல. ஒரு நாள் கூட நமக்கு தெரியாம அவ எங்கேயும் போகமாட்டா ஒரு வாரம் இருக்கான்னா இதுல ஏதோ இருக்கும்மா. போலீஸ் கிட்ட இன்னும் விசாரணைய தீவிரமா தொடங்க சொல்லுங்க", என அவள் பரபரத்தாள்..

"அவங்களும் எல்லா பக்கமும் தேடிகிட்டு தான் இருக்காங்க ஆனா ஒரு துப்பும் கிடைக்கல", என கண்களில் வழிந்த நீரோடு அழகு சுந்தரி சொல்லிக் கொண்டே இருக்க சட்டென்று அவர் கையை பிடித்துக்கொண்டு, "அவளுக்கு எதுவும் ஆகாதும்மா நாம யாருக்கும் எந்த தப்பும் செய்யல. சீக்கிரம் அவ கிடைச்சிருவா கவலைப் படாம இருங்க", என ஆறுதல் படுத்தினாள்..

அவர்கள் இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்தவாறு உள்ளே வந்த நெடுமாறனின் பார்வையில் பட்டென்று கையை விலக்கி கொண்டவள் எழுந்து நின்றாள். அவனும் முகத்தை மாற்றிக்கொண்டவாறே அவர்களைப் பார்த்து புன்னகையுடன், "வாங்க மாமா வாங்க அத்தை..!" என வரவேற்றான்..

அவனைப் பார்த்ததும் சட்டென்று ஷோபாவில் இருந்து எழுந்த மணிகண்டன் அழகு சுந்தரியை எழச் சொன்னவர், "அவளைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் நமக்கு சொல்ல சொல்லு வா போகலாம்", என்றவாறு முன்னே செல்ல அழகு சுந்தரி மகளிடம் தலையசைத்து விடைபெற்று அவளை திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியே சென்றார்..

அம்மா அப்பா வெளியே சென்றதும் தன் அறைக்கு வந்தவள் கட்டிலில் படுத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். இயலரசிக்கு என்ன ஆனதோ என மனது கிடந்து அடித்துக்கொண்டது தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என தன் மீதே ஆத்திரமாக வந்தது. அறைக்குள் வந்த நெடுமாறன் ஏதோ ஒரு பைலை தேடி எடுத்துக் கொண்டு அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே அருகில் வந்து, "அழுதியா என்ன..?" எனக் கேட்டான்..

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருக்கவும், "உன்ன தான் கேட்கிறேன் பதில் சொல்லு..?"என அவளையே பார்த்தான்..

"ஏன் அழுக கூட எனக்கு அனுமதி இல்லையா..?" என வெடித்தாள்..

"நீ அழுதா எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல. இன்னும் நீ நிறுத்தாம அழுதுக்கிட்டே இருந்தா உன் அழுகைக்கு காரணமானவங்களை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது", என உறுமினான்..

அவன் உறுமலில் பயந்துபோய் சட்டென்று வாயை மூடிக்கொண்டு விட அவள் கன்னத்தை ஆறுதலாக தட்டிய நெடுமாறன் புன்னகையுடன் தட்ஸ் மை கேர்ள் என சொல்லி விட்டு வெளியே சென்றான். மீண்டும் எழிலரசிக்கு அழுகை வர வெளியே சென்றவன் பிறகு கதவருகில் நின்று திரும்பிப் பார்க்கவும் சட்டென்று தொண்டைக் குழிக்குள்ளேயே அழுகையை அடக்கிக் கொண்டாள். அதில் நெஞ்சு வலிப்பது போல இருந்தது..

"நான் ஒரு வேலையா போறேன் நைட் வர லேட்டாகும் வேலைக்கார அம்மாட்ட சொல்லிட்டு போறேன். கரெக்டா நேரத்துல சாப்பிட்டுட்டு மாத்திரையை போட்டுடு என்ன ஓகேவா..?" என கேட்க அவளும் சரி என தலையாட்டினாள்..

அவன் போனதை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் கண்ணீரில் கரைந்தவள் இயலரிசி நினைவாக தன்னிடம் இருந்த புடவையை எடுத்து பார்த்தவள் அதை நெஞ்சோடு அணைத்துகொண்டாள். அவள் கைகளில் இருந்த பிரேஸ்லெட்டை சுற்றி விட்டவாறு அவளையே நினைத்திருந்தாள். இருவருக்கும் ஒரே போன்ற அமைப்புடைய பிரேஸ்லெட்டை எழிலரசி பிறந்தநாளுக்காக இயலரசி வாங்கி கொடுத்தது. இருவரும் அதை எந்தக் காரணம் கொண்டும் கழற்றியதே இல்லை. ஒருவர் இல்லாத போது மற்றவருக்கு அந்த பிரேஸ்லெட் தான் ஆறுதல் போல தோன்றும்..

"அரிசிப் புட்டு எங்கடி போன..? என் எல்லா பிரச்சனைக்கும் உன்னால மட்டும் தான் தீர்வு சொல்லமுடியும்னு நினைச்சேன். இப்போ நீ எங்க போனேன்னு தெரியலை எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரம் திரும்பி வந்துடுடி. இங்க என்னால எவ்வளவு நாள் சமாளிக்க முடியும்னு தெரியல ரொம்ப பயமா இருக்குடி", என அவள் போக்கிலேயே பேசிக்கொண்டே அறைக்குள்ளேயே உலாத்திக் கொண்டிருந்தவள் தன் புகைப்படம் இருக்கும் அந்த அறைக்குள் வந்ததும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..

எப்போதும் அந்த புகைப்படத்தைப் பார்த்தால் அவளுக்கு கூச்சமாக இருக்கும். நெடுமாறனிடம் கூட சுவர் முழுவதும் இவ்வளவு பெரிய படம் எதற்கு பார்க்க வெட்கமாக இருக்கிறது என்று கூட சொல்லி இருக்கிறாள். ஆனால் இன்று என்னவோ அந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்த போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. இயலரிசியை நினைத்தபடியே கண்ணீர் உகுத்தவள் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்து கால்களில் முகம் புதைத்துக் கொண்டாள்..

அழுது ஓய்ந்தவள் அந்தப் புகைப்படத்தையே பார்த்தபடி அமர்ந்திருக்க அவள் கை விரலில் இருந்த அந்த மோதிரம் அவளுக்கு வித்தியாசமாய் இருந்தது. இந்த புகைப்படம் திருமணத்திற்கு முன்பு வரைந்தது ஆனால் அதில் அவள் போட்டிருக்கும் மோதிரம் மட்டும் திருமணத்திற்குப் பின்பு நெடுமாறன் வாங்கித் தந்தது. அது எப்படி எனக்கு பரிசளிக்கும் முன்பே இந்த புகைப்படத்தை வரைந்து இருக்கிறான் நான் அதை போட்டுக் கொள்வேன் என எந்த தைரியத்தில் நினைத்தான். இப்போது தான் என்னை போட்டுக் கொள்ள வைத்து விட்டானே அந்த தைரியத்தில் தான் நினைத்திருப்பான் என விரக்தியாக நினைத்துக் கொண்டாள்..

அந்த சுவரில் இருந்த மோதிரத்தை வருட ஏதோ வித்தியாசமாய் பட்டது. ஸ்விச் போன்று இருந்த அதை நன்றாக அமுக்க அந்த சுவரின் வலது மூலையில் சட்டென்று கதவு திறந்தது. அப்படியே சுவர் போல் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கதவு இருந்ததே இவ்வளவு நாள் அவளுக்கு தெரியாது. அதை பார்க்க சாதாரணமாக சுவர் போன்று தான் இருந்தது. இந்த இடத்தில் இப்படி ஒரு உள்ளறை இருக்கும் என்பது எழிலரசிக்கு தெரியாது..

எதனால் இங்கே ஒரு ரகசிய அறை யோசனையுடன் அந்தக் கதவின் அருகே வந்தவள் உள்ளே போகலாமா வேண்டாமா என அங்கேயே நின்றாள். ஏதாவது முக்கியமான பொருட்கள் வைத்திருந்து நான் உள்ளே போய் ஏதாவது ஆகிவிட்டால் நெடுமாறன் கோபப்படுவானே என பயமாக இருந்தது. அதையும் மீறி ஏதோ ஒரு உள்ளுணர்வு உள்ளே போக சொல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே சென்று மொபைலின் உதவியால் சுவற்றில் இருந்த சுவிட்சை தேடி போட்டு அந்த அறையை பிரகாசமாக்க மிக நுண்ணிய ஒளி மட்டுமே அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த சிறிய ஒளியிலும் அந்த அறையின் மூலையில் யாரோ ஒரு பெண் படுத்து இருப்பது தெரிந்தது. யோசனையுடன் அவள் அருகே சென்று அவள் தோள் மீது கை வைக்க அந்தப் பெண்ணும் பயத்தில் நடுங்கிக் கொண்டு, "என்னை ஒன்றும் செய்து விடாதே என்னை விட்டுவிடு" என கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த பிரேஸ்லெட்டை பார்த்ததும் எழிலரசிக்கு தூக்கிவாரிப் போட்டது..

"இயல்..?!" என எழிலரசி உச்சகட்ட அதிர்ச்சியுடன் அவளை பார்க்க அவளும் அப்போதுதான் கண் மலர்த்தி பார்த்து அக்காவை கண்டுவிட்டு போன உயிர் திரும்பி வந்த மகிழ்ச்சியுடன், "எழில்..!" என்றபடி தாவி அவளை அணைத்துக் கொண்டாள்..

*****

"அரசிம்மா என்ன பண்ற..?" என அவளை அழைத்துக் கொண்டே அறையின் உள்ளே வந்தவன் அவள் கட்டிலின் மேல் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், "சாப்டியா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு வா. நாம எப்பவும் போல பால்கனியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்", என புன்னகையுடன் சொன்னான்..

நெடுமாறனை வெறுப்புடன் முறைத்துப் பார்த்த எழிலரசி வலது பக்கம் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த இயலை திரும்பிப்பார்க்க அப்போதுதான் அவனும் அங்கே பார்த்தாள். அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் எழிலரசியை திரும்பிப் பார்க்க அவள் கொலை வெறியுடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
நம்ம எழில் அ எப்படி லாம் பயப் படுத்தராரு....🥺 எங்களையும் தான்....😅
அந்த ஃபோட்டோ பின்ன கதவா....
அதுல எழில் ஆ....😳
நான் சொல்லல....அவர் ஏதும் பண்ணிருக்க சான்ஸ் இருக்கு னு....🧐😕
இப்படி அவர்க்கிட்ட சண்டை போட தைரியமா உட்காந்துருக்காங்களே....😱
அடுத்த எபில என்ன நடக்குமோ....
😕
நைஸ் எபிசோட் சிஸ்....❤
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
911
Reaction score
1,367
Location
Chennai
Ada kadavule...avankita theriyatha mariye nadichirkalame...Avan ipa inum over ah react panuvane
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடப்பாவி பயலே, என்னடா இப்படி இருக்க நீ, அதுவும் அவ தங்கையா போய் இப்படி நீ இருக்கற வீட்டிலே அடைசசி வெச்சி இருக்க🙄🙄🙄🙄

அப்படி என்னடா உரிமை உணர்வு உனக்கு அவ மேல, இது கண்டிப்பா சாதரான அன்பு இல்ல....

இன்னும் யாருக்கும் தெரியாத உண்மை ஏதோ அவன் பாஸ்ட் லைஃப் லா இருக்கு, அது தெரியணும் அப்ப தான் அவன் ஏன் இப்படி பன்றான்னு புரியும்.....

அது தெரிஞ்சது நால தான் ராகவன் இப்ப கோமா லா இருக்காரா🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
நம்ம எழில் அ எப்படி லாம் பயப் படுத்தராரு....🥺 எங்களையும் தான்....😅
அந்த ஃபோட்டோ பின்ன கதவா....
அதுல எழில் ஆ....😳
நான் சொல்லல....அவர் ஏதும் பண்ணிருக்க சான்ஸ் இருக்கு னு....🧐😕
இப்படி அவர்க்கிட்ட சண்டை போட தைரியமா உட்காந்துருக்காங்களே....😱
அடுத்த எபில என்ன நடக்குமோ....
😕
நைஸ் எபிசோட் சிஸ்....❤
நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Ada kadavule...avankita theriyatha mariye nadichirkalame...Avan ipa inum over ah react panuvane
Epdiyum velila poga முடியாது athan நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
நம்ம எழில் அ எப்படி லாம் பயப் படுத்தராரு....🥺 எங்களையும் தான்....😅
அந்த ஃபோட்டோ பின்ன கதவா....
அதுல எழில் ஆ....😳
நான் சொல்லல....அவர் ஏதும் பண்ணிருக்க சான்ஸ் இருக்கு னு....🧐😕
இப்படி அவர்க்கிட்ட சண்டை போட தைரியமா உட்காந்துருக்காங்களே....😱
அடுத்த எபில என்ன நடக்குமோ....
😕
நைஸ் எபிசோட் சிஸ்....❤
Epdiyum poga mudiyathu
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அடப்பாவி பயலே, என்னடா இப்படி இருக்க நீ, அதுவும் அவ தங்கையா போய் இப்படி நீ இருக்கற வீட்டிலே அடைசசி வெச்சி இருக்க🙄🙄🙄🙄

அப்படி என்னடா உரிமை உணர்வு உனக்கு அவ மேல, இது கண்டிப்பா சாதரான அன்பு இல்ல....

இன்னும் யாருக்கும் தெரியாத உண்மை ஏதோ அவன் பாஸ்ட் லைஃப் லா இருக்கு, அது தெரியணும் அப்ப தான் அவன் ஏன் இப்படி பன்றான்னு புரியும்.....

அது தெரிஞ்சது நால தான் ராகவன் இப்ப கோமா லா இருக்காரா🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Adutha epi la நன்றி sis..
 




Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
enga Ezhila ku dhilla pathiya psych oda den ku la ye poi thangachiya thukuthu...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top