• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே- 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்- 15


அந்த அறைக்குள் இருந்து இயலரசியை வெளியே அழைத்து வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. சோர்ந்து போயிருந்த இயலரசியை கைத்தாங்கலாக அழைத்து வந்து உணவு உண்ண செய்து குளிக்க வைத்து உடைமாற்றி அமர வைத்ததும் மெல்ல அவள் பேச தொடங்கினாள்..


இயலரசி அத்தை வீட்டிற்கு போன ஒரு வாரத்திலேயே ராகவன் மாமாவின் மகனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அப்பாவை விட்டுவிட்டு எதற்காக தன்னை அழைக்கிறார்கள் என ஆச்சரியமாய் இருந்தபோதும் ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக அவர்களை சென்று தான் பார்த்தாள். எப்போதாவது நினைவு வருவதும் போவதுமாக இருக்க ராகவனிடம் எதையும் தெளிவாக கேட்க முடியவில்லை. பேச்சு எழிலரசியை பற்றி என்றதும் கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று அடிக்கடி அவரை சென்று பார்க்க ஆரம்பித்தாள்..


அவள் வருகையை ராகவன் மாமா எதிர்ப் பார்த்திருப்பார் போல நினைவு வந்து அருகில் அவளைப் பார்த்ததும் கண்களை எட்டாத ஒரு சிரிப்பை உதிர்த்தார். அவர் கண்களில் இருந்த அந்த குற்ற உணர்ச்சி அது எதனால் என இயலரசிக்கு தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. இப்போது அவர் இருக்கும் நிலைமையில் எதையும் விசாரிக்க வேண்டாம் சாதாரணமாக அவர் உடல்நலத்தை மட்டும் கேட்போம் என நினைத்தவள் புன்னகையுடன் அவர் அருகில் சென்றாள்..


"அங்கிள் எப்படி இருக்கீங்க இப்போ பரவாயில்லையா..?" என கேட்டாள்..


"ம்ம்ம்.." என பலவீனமாக தலையாட்டியவர், "உன்னிடம் பேச வேண்டும்", என முணுமுணுத்தார்..


"இப்போ உங்க உடம்பு இருக்கிற நிலைமையில பேச முடியுமா அங்கிள் இல்லைன்னா பொறுமையா பேசலாம்.." என அவள் தயக்கத்துடன் சொன்னாள்..


"இல்லம்மா நான் பேசியே ஆகணும் என்னால தான் எழிலரசி அவன் கிட்ட போய் மாட்டிக்கிட்டா. நான் கொஞ்சம் அவசரப்படாம இருந்து இருக்கலாம் ஆனா அவன் எழிலரசி கிட்ட நேரடியா போயிருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா. அவ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டதும் என்னால தாங்கவே முடியல. எல்லாம் என்னால தானேன்னு குற்ற உணர்ச்சியாக இருக்கு.." என அவர் புலம்பவும் அவர் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டாள்..


"அங்கிள் இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க அவர் ஜெயிலுக்கு போனது எங்க எல்லாருக்குமே வருத்தம் தான். அப்பாவுக்கும் அதை ஏத்துக்க முடியல இருந்தாலும் நான் நேரடியா அவரை பார்த்துருக்கேன் அங்கிள். எழிலரசி மேல அவர் உண்மையான அன்பு வைத்திருக்கிறார் அதோட அவர் கதையை கேட்டபோது அவர் மேல எதுவும் பெருசா தப்பு இருக்க மாதிரி தெரியல. அந்த சின்ன வயசுல எதார்த்தமா அவங்க அம்மாவையும் அவரையும் காப்பாத்திக்க பண்ணுனது கொலையில போய் முடிஞ்சிருக்கு. நம்மள மாதிரியான நடுத்தர வர்க்கத்தில் இதெல்லாம் பெரிய விஷயம் தான் அங்கிள். ஆனா அதையும் தாண்டி அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்காங்க அதையும் யோசிக்கணும் இல்லையா", என அவரை தேற்றும் விதமாக சொல்லிக் கொண்டிருந்தவள் அவர் பார்வையில் இருந்த ஏதோ ஒன்றில் சட்டென்று பேச்சை நிறுத்தினாள்..


மனம் ஒரு நொடி துணுக்குற்றது.
"என்ன அங்கிள்..?" என குழப்பமாக அவரை பார்த்தாள்..


"அது மட்டுமா இருந்தா இப்ப இல்லைன்னாலும் எப்பவோ ஒரு காலம் அவனை எல்லாராலையும் ஏத்துக்கிட்டுருக்க முடியும். விஷயம் அது மட்டுமே இல்லையேம்மா அவனைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம நான் தான் அவசரப்பட்டுட்டேன். ஆனா உண்மையை சொல்லனும்னா உங்க அப்பாவோட சேர்ந்து எவ்வளவு விசாரிக்கணுமோ அவ்வளவு விசாரிச்சோம்மா அவனை பத்தி எதுவுமே வெளியில வரல. அந்த சீனிவாசன் மட்டும் எனக்கு தெரிஞ்சவனா இல்லாம போயிருந்தா நிச்சயம் இது எப்பவுமே வெளில வந்திருக்காது. இப்பவும் கூட எல்லாத்தையும் சாமர்த்தியமா மறைக்கத்தான் நினைச்சிருக்கானுங்க", என சொன்னவர் ஒரு அலட்சிய சிரிப்புடன், "என்ன பண்ணாலும் ஒரு நாள் அவனாவே அவனை வெளிப்படுத்திக்கிற நேரம் நிச்சயம் வந்திருக்கும். அன்னைக்கு நமக்கெல்லாம் அவனை பத்தி தெரிஞ்சிருக்கும் ஆனா இதுல எழிலரசி மாட்டிப்பான்னு நான் நினைச்சே பார்க்கலம்மா", என அவர் முகம் கலங்க சொன்னார்..


இயலரசி பொறுமை இழந்தவளாக, "என்ன அங்கிள் என்னன்னு தெளிவா சொல்லுங்க..? நீங்க சொல்ல சொல்ல எனக்கு பயமாயிருக்கு. என்னதான் பிரச்சினை..? எதுல எழிலரசி மாட்டிப்பா", என தன் உடன் பிறந்தவளை காக்கும் பொருட்டாக அவள் பரபரத்தாள்..


"எல்லாம் அந்த ராட்சஸன் கிட்ட தான்மா.."


"யாரை அங்கிள் சொல்லுறீங்க அத்தானையா..?" அவள் ஆச்சர்யமாக பார்த்தாள்..


அவர் முகம் கடுகடுக்க, "அந்த கொலைகாரப் பாவிய தான்மா சொல்றேன். நான் விசாரித்த வரைக்கும் தொழில் வட்டாரத்துல அவன மாதிரி ஒரு பிசினஸ்மேன் கிடையாதுன்னு தான் சொன்னாங்க. அதே மாதிரி ஆசிரமத்துல அவனை மாதிரி மனிதநேயமுள்ள ஒரு நல்ல மனுஷனை பார்க்கவே முடியாதுன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் தான் போட்டோவை எடுத்துக்கிட்டு உங்க அக்கா கிட்ட கொடுக்கவே நாங்க வந்தோம்", என சொன்னவரை இடைமறித்து, "அவரோட சின்ன வயசு பத்தி நீங்க தெரிஞ்சிக்க நினைக்கலையா அங்கிள்..?" என கேட்டாள்..


"எல்லாம் அப்பறம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்மா அவனோட சொந்த ஊரான ஈரோட்டுக்கு போய் அவனைப் பற்றி விசாரிச்ச போது அவங்க அப்பா அம்மாவை பத்தி நல்ல விதமா தான் சொன்னாங்க. கஷ்டப்பட்ட குடும்பம் இப்போ அவங்க மகன் பெரிய பிசினஸ்மேனா இருக்கிறத நினைச்சு எல்லோருமே பெருமைப் பட்டாங்க. யாருக்குமே அவங்க அம்மா அப்பா செத்துப் போனதோ எப்படி செத்தாங்கன்னோ தெரியல. ஏன்னா அது எல்லாம் நடந்தது மும்பையில இல்லையா அதனால தான். அதை மனசுல வச்சிக்கிட்டு தான் அவன் தன் சொந்த ஊரோட அட்ரஸ கொடுத்திருப்பான் போல. நானும் தன்னை பத்தி மறைக்க நினைக்காம எல்லாத்தையும் தர்றதா நினைச்சுகிட்டேன். அதுக்கு அப்புறம் அங்க குடியிருந்து சென்னைலையும் நாங்க விசாரிச்சோம் எல்லாம் திருப்தியா தான் இருந்துச்சு. அவங்க அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்துருக்காங்க அவங்க அப்பா குடிகாரர் போல. அதுக்கு அப்புறம் பிழைப்பு தேடி அவங்க மும்பை போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. இதுவரையிலும் நாங்க விசாரிச்சதெல்லாம் உண்மை தான் இதுக்கு அப்புறம் அவன் மும்பை அட்ரஸ்னு கொடுத்தது போலி. அங்க விசாரிச்சப்போ தான் அவங்க அம்மா அப்பா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டதுனால அக்கம் பக்கத்துல இருந்தவங்க எல்லாம் சேர்ந்து அவனை அனாதை ஆசிரமத்துல சேர்த்துட்டதா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் தான் அவன் பெரிய பிசினஸ் மேன் ஆயிட்டானே அதைப் பத்தியும் பெருமையா சொன்னாங்க", என எரிச்சலுடன் சொன்னார்..


"ஏன் அங்கிள் ஒருவேளை அவங்க அம்மா அப்படிப்பட்ட தொழில் செஞ்சது, அவர் ஜெயிலுக்கு போனது இதெல்லாம் தெரிஞ்சா நம்ம ஒத்துக்க மாட்டோம்னு தான் இப்படி பண்ணிட்டாரோ..? உண்மையும் அதுதானே அங்கிள் அதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்ப ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டோமே.."


"இதெல்லாம் தெரிஞ்சா பெரியவங்க நாங்க தான் ஒத்துக்கிட்டுருக்க மாட்டோம் ஆனா உங்க அக்கா அவன காதலிக்கிறாளே அவ அப்படில்லாம் அவனை விட்ருக்க மாட்டா.."


"அது என்னவோ உண்மைதான் அங்கிள் என்ன தான் அப்பா சொன்னதை கேட்டு கிட்டு அவர் கூட பேசாம இருந்தாலும் அவருக்கு ஒன்னுன்ன உடனே எதைப் பத்தியும் யோசிக்காம கல்யாணமே பண்ணிக்கிட்டாளே.."


"அதுதான்மா அவன் பிளானே. காதல்னு அவளை விழ வச்சிட்டா உங்க அக்கா அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான்னு நினைச்சிருப்பான். அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சா நிச்சயம் உங்க அக்கா கூட இருக்க மாட்டா.."


"என்ன அங்கிள் சொல்லுறீங்க அப்படி என்ன உண்மை.."


"வேற என்ன அவன் ஒரு பைத்தியங்குற உண்மைதான்", என வெறுப்புடன் சொன்னார்..


"பைத்தியமா..?!" என உச்சகட்ட அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தவள், "என்ன அங்கிள் சொல்றீங்க..?" என திகைப்புடன் கேட்டாள்..


"ஆமாம்மா அவன் ஒரு பைத்தியம். எனக்கே அவனை விசாரிக்க மும்பை போன அப்புறம் தான் தெரியும்.."


"என்ன அங்கிள் சொல்லுறீங்க..? அவரைப் பார்த்தா அப்படி தெரியலையே. அவர் கூட நானும் பழகி இருக்கேன் கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும் அவருக்கு எதுவும் இல்ல. அப்படி இருக்குறவரால எப்படி தொழில்ல இவ்வளவு தூரம் சாதிச்சிருக்க முடியும்..?"


"முழு பைத்தியமா இருந்தா எல்லாருக்கும் தெரியும் ஆனா அவன் ஒரு சைக்கோ பைத்தியம். யாரோ ஒருத்தர் இத சொல்லியிருந்தா கூட நான் அப்படியே கண்டுக்காம போய் இருப்பேன் ஆனால் மும்பைல என் பிரண்டு ஒருத்தன் இருக்கான். இவனை பத்தி விசாரிக்க போனப்போ வேலை நல்லபடியா முடிஞ்சிடுச்சின்னு நான் கோயிலுக்குப் போனேன். அப்போ என் கூட படிச்ச சீனிவாசன் அங்க தான் டாக்டரா வேலை பாக்குறான் எதார்த்தமா அவனை அங்க சந்திச்சேன். கையோட என்ன அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்ட்டான் அது அந்த கடவுளோட கருணைதான் இல்லன்னா அவன பத்தி தெரியாமலே போயிருக்கும். எதார்த்தமா வந்த வேலையைப் பத்தி சொல்லும் போது உன் பிரண்டு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறீங்களா. மும்பை தானா எனக்கு தெரிஞ்சு இருக்குமே யார்னு கேட்டு போட்டோவை வாங்கிப் பார்த்தான். பார்த்ததும் அவன் முகத்துல அப்படி ஒரு அதிர்ச்சி. அவன் தான் அவனோட மும்பை வாழ்க்கைய பத்தியும் அவங்க அப்பா அம்மா இறந்து அவன் ஜெயிலுக்கு போனது பத்தியும் சொன்னான். ஆனா அவன் பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பேஷண்ட்டுக்கு சீரியஸ்னு போன் வந்ததுனால இதை மட்டும் சொல்லிட்டு நாளைக்கு இதைப் பத்தி பேசலாம் கொஞ்சம் விரிவா பேசணும் நீ போய் தூங்குன்னு சொல்லிட்டு போய்ட்டான். அதுக்கு அப்புறம் உடனே உங்க அப்பா கிட்ட போன் பண்ணி அவன் ஜெயிலுக்கு போன விஷயத்தை மட்டும் சொன்னேன். அவனுக்கு அதுவே போதுமானதா இருந்துச்சி இதுக்கு மேல இந்த கல்யாண விஷயத்த பேச வேண்டாம்னு சொல்லிட்டான். நானும் அவன் யோசிக்கிறது கரெக்டு தான்னு அதோட விட்டுட்டேன்.." என நிறுத்தியவர் இடைவெளியில்லாமல் பேசிக் கொண்டிருந்ததால் சற்று இருமினார்..


அவருக்கு ஆசுவாசம் அளிக்க சற்று நேரம் கொடுத்து அவர் நெஞ்சை தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவளே, "அப்பறம் என்ன ஆச்சு அங்கிள்..?" என கேட்டாள்..


"அவன் பார்க்க போன அந்தப் பேஷண்ட் இறந்துட்டாங்கம்மா அதனால சீனிவாசனால உடனே திரும்பி வர முடியல. மணியும் உடனே கல்யாணத்த நிப்பாட்டிடுறதா சொன்னதால எனக்கு அது பெருசா தெரியல. சீனிவாசன் கிட்ட கல்யாணத்த நிப்பாட்டிட்டதா சொன்னதால இரண்டு நாள் எனக்கு ஹெவி வொர்க் இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுடா அப்புறம் பேசலாம்னு சொல்லிட்டான். அதுக்கு அப்புறம் தான் அவன் எல்லாம் சொன்னான். முதல்ல நெடுமாறன் அவங்க அப்பாவ கொன்னுட்டதா அர்ரெஸ்ட் பண்ணியிருக்காங்க. அதுவும் அவன் சாதாரணமா கொல்லலம்மா பல இடத்துல அவரை குத்தி கொன்னுருக்கான்.."


"ஜெயில்ல இருந்த அவன் பிஹெவியர் எல்லாம் வித்தியாசமா இருந்திருக்கு அதை கொஞ்ச நாளிலேயே கண்டுபிடிச்சுட்டாங்க. அங்க இருக்கிற கைதிகளை செக் பண்ண போறப்போ இவனோட வித்தியாசமான நடத்தையில சந்தேகம் வந்து சீனிவாசன் அவன ஹாஸ்பிடல் அழைச்சிட்டு வர சொல்லிருக்கான். சீனிவாசன் அங்க தான் அரசாங்க மருத்துவரா வேலை பாக்குறான். அழைச்சிட்டு வந்து நெடுமாறன டெஸ்ட் பண்ணவுமே அவன் சின்ன வயசுல இருந்து அதிகமா பாதிக்கப்பட்டு இருக்கான்னு தெரிஞ்சு போச்சு. அவன் வளர்ந்த அந்த சூழ்நிலை, யாரும் அவனோட அதிகம் பழகாதது, தனிமையில இருந்தது எல்லாம் அவன பாதிச்சிருக்கு. அதோட சேர்ந்து அவங்க அப்பாவோட டார்ச்சர். அம்மாவைத் தேடி அழும்போதெல்லாம் அவனை சமாதனம் பண்ணாம அடிச்சு கொடுமை பண்ண ஆரம்பிச்சுருக்கார். அதுல அவனுக்குள்ளேயே ஒரு வெறி இருந்திருக்கு அந்த கோபத்துல தான் அவங்க அப்பாவை கொலை செஞ்சது.."


"அவன் எப்போ எப்படி மாறுவான்னு அவனுக்கே தெரியாது திடீர் திடீர்னு ஒவ்வொரு முகம் காட்டுவானாம். ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்துருக்கான் அந்த நேரத்துல பணத்துக்காக தன் பிள்ளையே பைத்தியம்னு பட்டம் கட்டி அதே ஹாஸ்பிடல்ல ஒரு பெரியவரையும் சேர்த்துருக்காங்க. ஏற்கனவே அவர் அங்க ரவுடியா இருந்தவர் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கமாகி அவர் கேட்ட உதவியால அவர் பிள்ளையை கொல்ல சம்மதிச்சிருக்கான். தன்னோட பவரை யூஸ் பண்ணி பாதி ட்ரீட்மென்ட்ல இருந்த நெடுமாறனை அவர் வெளியில அனுப்பி இருக்கார். அந்தப் பெரியவர் கேட்டபடியே அவர் மகனை கொலை செஞ்சவன் அவர் உதவியால அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துருக்கான். அந்தப் பெரியவர் தான் அங்க ஸ்பான்சர்ங்குறதனால உடனே அவங்களும் சேர்த்து கிட்டாங்க. அதுக்கு அப்புறம் அவர் சாகுற தருவாயில் இருக்கும் போது தான் இவன் கிட்ட எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டு எல்லாருக்கும் நல்லது பண்ண சொல்லிவிட்டு இறந்து போயிருக்கார்.."


"அதுக்கப்புறம் அவன் பெரிய ஆளாயிட்டதனால சீனிவாசனால எதுவும் பண்ண முடியல ஆனா நெடுமாறனோட ட்ரீட்மென்ட் முழுசா முடியல. அதனால அவன் நிச்சயம் ஏதாவது செய்வான் நமக்கு தான் அதை பத்தி தெரியாம இருக்கும்னு சொன்னான். உங்க அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட் அவன் கிட்ட இத சொல்லி அவன பயமுறுத்த வேண்டாம்னு நான் விட்டுட்டேன் ஆனா உன் கிட்டயும் எழிலரசி கிட்டயும் பேசணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் அதுக்குள்ள தான் இந்த ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு", என தொண்டை அடைக்க சொல்லி முடித்தார்..


அயர்ந்து போய் அமர்ந்திருந்த இயலரசியை பார்க்க அவருக்கு பாவமாகத்தான் இருந்தது. திடீரென அவரை நிமிர்ந்து பார்த்து, "இந்த ஆக்சிடெண்ட் இது எப்படி அங்கிள்..?" என கேட்டாள்..


மணிகண்டனின் இரு பெண்களும் புத்திசாலிகள் தான் என அவர் நினைத்தது முற்றிலும் சரிதான் என ராகவன் தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டார்..


"நீ நினைக்கிறது சரிதான்மா அவன் நான் மும்பை போனதுல இருந்தே என்னை நோட் பண்ணிக்கிட்டு இருந்திருப்பான் போலருக்கு. சீனிவாசன் வீட்டுக்கு நான் போவேன்னு அவன் எதிர்பார்க்கல உடனே சொல்லாதது அவனுக்கு ஒரு நிம்மதி. நிச்சயம் நான் உண்மைய சொல்லிடுவேன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு அதனாலதான் இந்த ஆக்சிடென்ட் அது மட்டும் இல்ல உங்க அக்கா கூட திடீர் கல்யாணமும் அதனாலதான்", என சொன்னார்..


"ஆனா இதெல்லாம் எதுக்காக அங்கிள் எழிலரசிய அவர் கல்யாணம் பண்ணிக்கிறதால என்ன நடக்கப் போகுது..?"


"அது எனக்கும் தெரியலம்மா ஆனா அவன் ஒன்னு நினைச்சா அதை சாதிக்காம விடமாட்டானாம் அப்படித்தான் இந்த கல்யாணமும் நடந்துருக்கு. இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணம்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு", என வருத்தத்துடன் சொன்னார்..


உடம்பு சரியில்லாத இந்த நிலையில் இவரை ஏன் வருந்த வேண்டும் என நினைத்தவள், "அப்படி எல்லாம் இல்ல அங்கிள் உங்கள ஒரு கருவியா அவன் யூஸ் பண்ணிக்கிட்டான் அவ்வளவு தான் மற்றபடி நீங்க மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. ஒருவேளை நீங்க ஒத்துக்காம இருந்திருந்தா அவன் வேற ஏதாவது வழி யோசிச்சு இருப்பானே தவிர அப்படியே விட்டுருக்க மாட்டான். நீங்க இத நெனச்சு பீல் பண்ணாதீங்க அங்கிள் இதுதான் நடக்கனும்னு இருக்கும்போது அதை யாராலையும் மாத்த முடியாது. இனிமே எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் கவலைப்படாம இருங்க", என சொல்ல அதற்காகவே காத்திருந்தது போல மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டார்..


வெளியில் வந்த இயலரசிக்கு முதலில் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஒரே குழப்பமாக இருந்தது. முதலில் எழிலரசியை சென்று பார்த்தால் தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும் அதோடு அவள் எப்படி இருக்கிறாள் என பார்க்க வேண்டும் என நினைத்தவள் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் மறுநாள் கிளம்பி வந்து விட்டாள். தன் நெருங்கிய தோழியை தவிர வேறு யாரிடமும் எழிலரசி வீட்டுக்கு செல்வது பற்றி சொல்லவில்லை. அதே போல அங்கே சென்றதும் நெடுமாறனை பார்த்து பேச்சே எழவில்லை அத்தனை பயமாக இருந்தது..


இது சரிவராது அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்ல முடியாது அப்பாவால் அதிர்ச்சியான எந்த விஷயத்தையும் தாங்க முடியாது. அதனால் வேந்தனிடம் சொல்லி இனி அவனை அழைத்துக் கொண்டு தான் இங்கே வர வேண்டும் அக்காவை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்தவள் அவனுக்கு போன் செய்து எழிலரசி வீட்டுக்கு வர சொல்லி விட்டு அங்கே காத்திருந்தாள். அங்கே நின்ற நேரம் அந்த காவலாளியின் பார்வை அவளுக்கு பயத்தை விளைவிக்க சட்டென்று அந்த இடத்திலிருந்து விடுவிடுவென்று நடந்தாள்..


அதன்பிறகு இந்த அறைக்குள் தான் கண்விழித்தாள் அவ்வப்போது அந்த காவலாளி வந்து தான் சாப்பாடு வைத்து விட்டுப் போவான். ஆனால் பயத்தில் அவள் எதுவும் சாப்பிடாமல் இருக்க கோபத்தில் அவளை அடித்து தான் சாப்பாடு வைத்தார்கள் ஒரு கட்டத்தில் சோர்ந்து மயங்கி விழுந்திருந்தாள். அந்த நேரத்தில் தான் எழிலரசி அறைக்குள் வந்து அவளை அழைத்து வந்தது..


அவள் எல்லாம் சொல்லி முடித்தது போது எழிலரசிக்கு என்ன மாதிரி உணர்வது என்றே தெரியவில்லை. தான் ஆசையாசையாய் காதலித்தவன் இப்படிப்பட்டவன் என அவளால் நம்பவே முடியவில்லை. எதைப்பற்றியும் யோசித்துக் கொண்டிராமல் இங்கிருந்து கிளம்புவது தான் நல்லது என அறைக்கு வெளியே நகர அவனுடைய வளர்ப்பு நாய்கள் வாசலிலேயே காவல் இருந்தது. அதை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து தன் போனை தேட அதையும் காணவில்லை. அப்பா அம்மா வந்து சென்ற பிறகு அறைக்குள் வந்த நெடுமாறனை நினைத்துப் பார்த்த போது அவன் வேலையாய் தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள். இங்கிருந்து அவன் ஆட்களை மீறியோ அந்த நாயை மீறியோ ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ன செய்வது என்ற மலைப்புடன் அப்படியே அந்த கட்டிலில் அமர்ந்திருந்த போது தான் நெடுமாறன் திரும்பி வந்தது..


வீட்டிற்கு வந்த அன்று இயலரசியை பார்த்த போதே அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என நெடுமாறன் உணர்ந்து கொண்டான். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிவளை தன் ஆட்கள் உதவியுடன் கொண்டு வந்து அந்த அறையின் உள்ளே அடைத்து வைத்து விட்டான். இப்போது அவள் எல்லாவற்றையும் எழிலரசியிடமும் சொல்லிவிட்டாள். இதற்காகத் தானே அவளை அடைத்து வைத்தது. எழிலரசி ஒருவார்த்தை பேசவில்லை ஆனால் இதெல்லாம் எதற்காக என அவள் பார்வையில் கேள்வி இருந்தது..


"எல்லாம் உனக்காகத்தான் பிரின்சஸ்", என புன்னகைத்தான்..


இந்த பதிலில் இரு பெண்களுமே திகைத்தார்கள். இயலரசிக்கு எந்த தவறும் செய்யாத அவனை இருமுறை அறைந்ததால் ஒரு வேளை பழிவாங்க திருமணம் செய்து இருப்பானோ என்ற எண்ணம் கூட தோன்றியது. ஏனெனில் அந்த மாதிரி காரணம் கூறிக்கொண்டு கொடுமை செய்பவர்கள் முக்கால்வாசிப் பேர் சைக்கோவாக தானே இருக்கிறார்கள் ஆனால் அவன் கண்ணில் இருந்த காதலில் துளியளவும் பொய் இல்லையே அது தான் உறுத்தியது..


"என்ன பாக்குற பிரின்சஸ் உண்மையத்தான் சொல்றேன் உன்ன பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருச்சு. அதிலும் உன் தைரியம் ரொம்ப பிடிச்சது எங்க அம்மா மாதிரியே நீயும் அழகு ஏன் எங்க அம்மாவை விட நீ ரொம்ப அழகு ஆனா எங்க அம்மாகிட்ட இல்லாத தைரியம் உன்கிட்ட பார்த்தேன். எனக்கு எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். அந்த தைரியம் மட்டும் இருந்திருந்தா எங்க அப்பாவை எதிர்த்து வெளில வந்திருப்பாங்களேன்னு யோசிச்சுருக்கேன். உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு நீதான் எனக்கு எல்லாமேன்னு தோணுச்சு. உன்னை பத்தி தெரிஞ்சிக்க நினைச்சப்போ உங்க வீட்ட எதிர்த்து நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தெரிய வந்துச்சு அதனால தான் இவ்வளவு ட்ராமா பண்ண வேண்டியதா போச்சு. எல்லாம் நல்லபடியாகவே முடிஞ்சிருக்கும் அந்த ராகவன் மட்டும் சீனிவாசனை பார்க்காம இருந்திருந்தா", என பெருமூச்சு விட்டவன், "சரி மறுபடியும் உன் தங்கச்சியை கொண்டு போய் அந்த ரூம்ல விட்டுட்டு நீ எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வா. நாம எப்பவும் போல பால்கனியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்", என புன்னகையுடன் சொன்னான்..


என்ன மாதிரியான மனிதன் இவன் என எழிலரசி அவனை வியப்புடன் பார்த்தது ஒரு நிமிடம்தான் ஆனால் அடுத்த நிமிடமே முகம் கடுகடுக்க, "இனி ஒரு நிமிஷம் கூட நாங்க இங்க இருக்க மாட்டோம். எவ்வளவு பொய், எவ்வளவு பித்தலாட்டம் உங்கள மாதிரி ஒருத்தரை எப்படி நான் காதலிச்சு கல்யாணம் பண்ணேன்னு தெரியல. தயவுசெஞ்சு எங்களை விட்ருங்க ப்ளீஸ்", என அவனைத் தள்ளிக் கொண்டு இயலரசி சோர்வாக இருந்ததால் அவளை அணைத்துப் பிடித்தபடி வெளியில் சென்றவள் படி இறங்கி ஹால் வரை தான் சென்றிருப்பாள். அதற்குள் "சிம்பா..!" என்ற அவனது கர்ஜனையில் திடுக்கிட்டு நின்று அவனை திரும்பி பார்த்தாள்..


அவன் அதனிடம் என்ன சொன்னானோ இருவரையும் அது துரத்த ஆரம்பிக்க இயலரசியை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு எழிலரசி வெளியில் ஓடினாள். தோட்டம் வரை கூட சென்றிருக்க மாட்டார்கள் அதற்குள் இயலரசியின் மேல் பாய்ந்த சிம்பா அவளை கீழே தள்ளி அவள் மேலே ஏறி நின்றது. அவள் குரல் வளையின் அருகில் அதன் கூரிய பற்களை கொண்டு செல்ல எழிலரசி கதறிவிட்டாள்..


"ஐயோ அவள விட்ருங்க உங்க கால்ல கூட விழுறேன் ப்ளீஸ்", என மடங்கி அமர்ந்தவள் அங்கே வந்த நெடுமாறனை பார்த்து கதறி கொண்டிருந்தாள்..


அவள் அருகில் அமர்ந்த நெடுமாறன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு, "அழாத பிரின்சஸ் நீ வேற யாருக்காகவும் அழுறது எனக்கு பிடிக்காது", என சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கொட்டியது. இயலரிசி அப்படி ஒரு நிலையில் இருக்கும்போது அவளால் அழுகாமலும் இருக்க முடியவில்லை. திரும்பி இயலரசியையும் அவள் மேலிருந்த நாயையும் தவிப்புடன் பார்த்தாள்..


அவன் அதை கண்டு கொள்ளாமல், "உன்னை அழாதன்னு சொன்னேன்", என உறும மறுபடியும் பயந்து இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள்..


"தட்ஸ் மை கேர்ள்..!" என புன்னகைத்தவாறு சிம்பா என அழைக்க இயலரிசி மேலிருந்து அந்த நாய் எழுந்து வந்தது..


நாய் அங்கிருந்து நகர்ந்ததும் ஓடிசென்று இயலரசியை தூக்கி எழிலரசி கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள். அக்கா என அவளும் பயத்துடன் அவளை தாவி அணைத்துக் கொண்டாள்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Ninachen....avaruku ipd mana reedhiya problem irukum nu....☹
Avlo samathu paiyan ah irundhare....ipo ipdlam kodoorama nadandhukararu....😔
Avaruku ipo thevai treatment dhan....😕
Pavam Ezhil & Iyal....😔
Anaiku adhan Iyal vandhangala....🙄
Nice episode dear....❤
Waiting for next episode....😊
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
1641975110698.jpg

Avar nilamaiya kindal panala....😔
But ipd dha avar nadandhukararu....
Adhan oru Chinna meme....😅
Epdi iruku nu pakravanga solitu ponga friends....😅
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் மாறா ஏண்டா இப்படி🙄🙄🙄🙄

நினைச்சேன், அவன் அப்பா வா சாதாரணமா கொன்னு இருக்க மாட்டான்னு😳😳😳😳

அவனுக்கு இது தேவை தான் நாளும், இப்பவும் அப்படியே இருக்கறது ரொம்ப ஆபத்து அவளுக்கும் & குழந்தைக்கும்....

எழில் தான், அவனை ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்க வைக்கணும்.....

அதுக்கு அவளுக்கு நிறைய பொறுமை வேணும், இல்லைனா நிலமை இன்னும் மோசம் தான் ஆகும்😒😒😒

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Ninachen....avaruku ipd mana reedhiya problem irukum nu....☹
Avlo samathu paiyan ah irundhare....ipo ipdlam kodoorama nadandhukararu....😔
Avaruku ipo thevai treatment dhan....😕
Pavam Ezhil & Iyal....😔
Anaiku adhan Iyal vandhangala....🙄
Nice episode dear....❤
Waiting for next episode....😊
நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அடேய் மாறா ஏண்டா இப்படி🙄🙄🙄🙄

நினைச்சேன், அவன் அப்பா வா சாதாரணமா கொன்னு இருக்க மாட்டான்னு😳😳😳😳

அவனுக்கு இது தேவை தான் நாளும், இப்பவும் அப்படியே இருக்கறது ரொம்ப ஆபத்து அவளுக்கும் & குழந்தைக்கும்....

எழில் தான், அவனை ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்க வைக்கணும்.....

அதுக்கு அவளுக்கு நிறைய பொறுமை வேணும், இல்லைனா நிலமை இன்னும் மோசம் தான் ஆகும்😒😒😒

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நன்றி sis..
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
ஆத்தாடி ஆத்தா கர்ணக்கொடூரமா இல்ல இருக்கு😳😳😳😳ஏம்மா எழில் எப்பிடி இதில இருந்து தப்பிச்சு
அவனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி மாத்தபோற🥺🥺🥺🥺
பாவம் இயல் அவளை இனி விட்டுவைப்பானா தெரியலயே😩😩😩😩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top