• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே-16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-16


காவலுக்கு இருந்த அவனது ஆள் தன்வீர் இயலரசியை மீண்டும் அறைக்குள் அடைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட எழிலரசி நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். அவளது அருகில் பால்கனியில் அமர்ந்து இருந்த நெடுமாறன் புன்னகையுடன் அவளது கையில் தட்டை திணித்து எப்போதும் போல தனக்கு உணவு ஊட்டி விடுமாறு சொன்னான். நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் பயத்தில் அமர்ந்திருந்த எழிலரசிக்கு அது நிச்சயம் இவன் என்ன மனிதன் என்ற எரிச்சலை தந்தது..

அதுதான் இயலரசி சொன்னாளே இவன் சாதாரண மனிதன் இல்லை சைக்கோ என்று, அப்படி கோபத்துடன் நினைத்தாலும் உள்ளுக்குள் அவளுக்கு வலிக்கவும் செய்தது. உயிருக்குயிராய் அவனை காதலித்து தொலைத்து விட்டேனே இப்போது அவனை வெறுக்கவும் முடியாமல் தவிக்கிறேன். என்ன நடந்தாலும் இயலரிசியை இதில் இருந்து மீட்டே ஆக வேண்டும்..

அவன் முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவனுக்கு ஊட்டி முடித்தாள். அவளது மடியில் படுத்து தூங்கும் அவனை பார்த்து அத்தனை கோபம் பெருகியது. அப்படியே எதையாவது தூக்கி மண்டையில் போட்டு விடுவோமா என நினைத்து கொண்டே நிமிர்ந்த போது அந்த சிம்பா அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்களின் பளபளப்பில் மனதுக்குள் ஒரு நிமிடம் திக்கென்று இருந்தது. ச்சை இது ஒன்று முதலில் இதை தொலைத்தால் தான் எதுவாயிருந்தாலும் நிம்மதியாக திட்டமிட முடியும்..

இயலரிசியை நினைத்தபோது தன்னால் கண்ணீர் பெருகியது தன்னைக் காப்பாற்ற வந்தவளுக்கு இந்த கதியா வரவேண்டும். அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து தப்பி போக முடியுமா என்பது சந்தேகம் தான். அதுவும் இந்த சிம்பா சீட்டா இதுகளை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தன் உயிரை கொடுத்தாவது அவளை இங்கு இருந்து அழைத்துச் சென்றே ஆக வேண்டும் அவள் இப்படி கஷ்டப் படுவதை தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது..

வேந்தன் அவளை தேடி வீட்டிற்கு அருகே தானே வருவதாக சொல்லி இருக்கிறான் பிறகு ஏன் வரவில்லை. ஒருவேளை நெடுமாறனால் அவனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து இருக்குமா. எழிலரசி மனதுக்குள் நிச்சயம் தங்களை தேடி யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. அப்படி யாரும் வரவில்லை என்றாலும் கிடைக்கும் ஒரு சின்ன வாய்ப்பையாவது பயன்படுத்தி இங்கிருந்து தப்பிக்க பார்க்க வேண்டும். தனக்காக இல்லை என்றாலும் இயலரிசி இங்கிருந்து அனுப்பவாவது அதைப்பற்றி யோசிக்க வேண்டும்..

உருகி உருகி அவனை காதலித்து விட்டு இப்போது அவனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அவனை விட்டு ஓடிப் போக முடிவெடுப்பது தவறுதான். ஆனால் இந்த மாதிரியான ஒருவனை அப்படியே ஏற்றுக்கொள்ள அவள் ஒன்றும் தெய்வ பிறவியும் இல்லையே. இப்போது அவனைப் பார்த்தால் பயம் ஒன்று தான் மிச்சமாய் இருக்கிறது அவன் அருகில் ஒவ்வொரு நிமிடமும் பதைபதைப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது..

நான்தான் அவனை பற்றி தெரிந்து கொள்ளாமல் காதலித்து இங்கு வந்து மாட்டிக் கொண்டால் தன்னால் இயலரசியும் கஷ்டப்பட வேண்டுமா. இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் பாசம் அதிகம். அந்த பாசம் தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் இயலரசியை இங்கே வர வைத்திருக்கிறது. அவள் அங்கே எப்படி இருக்கிறாளோ தன்னை மீறி வெளிவந்த கண்ணீர் நெடுமாறனின் முகத்தில் ஒரு துளி பட்டு விட்டது. அதிலேயே கண்விழித்து விட்டவன், "என்ன பிரின்சஸ் இன்னும் தூங்கலையா..?" எனக் கேட்க சட்டென்று அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

"இதோ தூங்க போறேன்", என சொன்னவளையே கூர்மையாகப் பார்த்தவன், "சரி படு..!" என அவளை படுக்க வைத்து விட்டு நகர்ந்து கொண்டான். எங்கே அவன் தன்னை தீண்டுவானோ கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைப்பானோ என்று அவளுக்கு பயம் இருந்துகொண்டே இருந்தது நல்லவேளையாக அவன் அப்படி எதுவும் செய்யவில்லை..

அதன் பிறகு ஒழுங்காக சாப்பிடாமல் தூங்காமல் இயலரசி நினைவாகவே சுற்றித்திரிந்த எழிலரசியை கண்டு நெடுமாறனுக்கு ஆத்திரம் வந்தது. வயிற்றில் குழந்தையுடன் இருப்பவள் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் தங்கையை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு குழந்தைப் பற்றிய நினைவாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் அந்த இயலரசி அவளை என்ன செய்கிறேன் என்று பார் நினைத்துக்கொண்டான்..

கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்துவிட்டது அடிக்கடி இயலரசியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அடிக்கடி அவளை பார்க்க விடவில்லை என்றாலும் எப்பவாவது ஒரு முறை அந்தக் காவல் ஆள் நிற்கும்போது அவளைப் பார்த்துவிட்டு கண்களால் மன்னிப்பை யாசித்து விட்டு எழிலரசி திரும்பி வருவாள். அன்றும் இயலரசி ஞாபகமாகவே அமர்ந்திருந்தவளைக் கண்டு இனியும் அவளை அப்படியே விடக்கூடாது என ஒரு முடிவுடன் அவளருகில் வந்தான்..

"என்ன பிரின்சஸ் ஏதோ தீவிர யோசனையில இருக்க போல..?" என கேட்க அவள் திடுக்கிட்டு அவனை விழித்துப் பார்த்தாள். இப்போதெல்லாம் இப்படித்தான் அவனைக் கண்டாலே எழிலரசி அரண்டு போகிறாள். அதனாலேயே அவளை விட்டு தள்ளி இருக்கிறான் இப்போது அவள் நான்காவது மாத கருவை வேறு சுமந்து கொண்டிருக்கிறாள்..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மாதான்", அவன் முகத்தை பார்க்காமல் பதில் சொன்னாள்..

"சரி சாப்பிட்டியா..?" என நெடுமாறன் கேட்க தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

"என்ன..?"

"வந்து.. இயல் சாப்பிட்டாளா..?"

சட்டென்று அவன் முகம் முழுவதும் ரத்த நிறம் பூசிக் கொண்டது. அவன் முகம் காட்டிய கடுமையில் அதிர்ந்து விழித்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சத்தமிட்டு, "தன்வீர்..!" என அழைத்தான்..

இப்போது எதற்கு அந்த விஷ ஜந்துவை அழைக்கிறான். அவன் காண்டாமிருக உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்கே வந்து நின்று, "சொல்லுங்க சார்..!" என்றான்..

"அவள அழைச்சிட்டு வா", என சொல்ல எதற்காக இயலரசியை அழைத்து வரச் சொல்கிறான் ஒருவேளை விடுவிக்க போகிறானோ ஆர்வமுடன் அவன் முகம் பார்த்தாள் ஆனால் அவன் முகம் ரொம்பவும் கடுமையாய் இருந்தது. ஏதோ ஒன்று அவன் செய்யப் போகிறான் என அவள் மனது அடித்துச் சொன்னது..

ஜீவன் இல்லாமல் அறையின் உள்ளே அழைத்து வரப்பட்ட தங்கையை கண்டதும் வேறு எதை பற்றிய நினைவும் தோன்றாமல் ஓடி சென்று அவளை அணைத்து கொண்டாள். அவள் கண்களில் இருந்த கண்ணீர் சரசரவென்று இறங்க இயலரசி சோர்ந்து போன முகத்தில் கண்ணுக்கு எட்டாத ஒரு புன்னகையை பதிலாக தந்தாள். அவர்களது அந்த பிணைப்பை கண்டதும் நெடுமாறனுக்கு இன்னும் முகம் மோசமாய் மாறியது..

"உனக்கு ஒன்னும் இல்லையேடி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இயல்.." என நிற்காமல் வழிந்த கண்ணீருடன் எழிலரசி அவளை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்..

அதற்கு இயலரசி வாயை திறந்து பதில் சொல்லும் முன், "உன்ன அழக் கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன்ல", என நெடுமாறன் உறும சட்டென்று அவள் பயத்துடன் அவனை திரும்பி பார்த்தாள்..

"வந்து.. நான்.. அவ.." என சொல்ல வார்த்தை வராமல் தடுமாறினாள்..

"உனக்கு என்ன இப்ப அவ சாப்பிடணும் அவ்வளவு தானே. தன்வீர் அன்னத்தை ரெண்டு ப்ளேட்ல சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லு", என்று சொல்ல அந்த சமையல் செய்யும் வயதான பெண்ணும் எடுத்து வந்து கொடுத்து விட்டுப் போனாள்..

தன்வீர் அதை வாங்கி இரண்டு பெண்கள் கையிலும் கொடுக்க எழிலரசி இப்போதும் இயலரசியை பார்த்தாள். அவள் கையில் வாங்கிக் கொண்டாலும் அதை சாப்பிடாமல் நெடுமாறனையே வெறித்துப் பார்த்தாள்..

"இங்க பாரு இயல் நீ சாப்பிடாததுனால உங்க அக்காவும் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கா சீக்கிரம் சாப்பிடு", என நெடுமாறன் அவளை விரட்டினான்..

என்னவோ அவன் சொன்னதற்குப் பிறகு அந்த சாப்பாட்டை கையால் தொடவும் இயலுக்கு பிடிக்கவில்லை. அவனையே முறைத்துப் பார்த்து, "எனக்கு வேண்டாம்" என்றாள்..

"ஏன் வேண்டாம்..?"

"எனக்கு இப்ப சாப்பிட தோணல அதோட வயிற்றுப் பிரட்டல் வேற அதிகமா இருக்கு.."

"அதை பத்தி எனக்கு கவலை இல்ல. நீ சாப்பிட்டா தான் எழில் சாப்பிடுவா அதனால நீ சாப்பிடு.."

"நீ சொல்லி சாப்பிடனும்னு எனக்கு அவசியம் இல்ல நான் சாப்பிட முடியாது.."

"தேவை இல்லாம என்னை கோபப்படுத்தாதே பின்னால நீதான் ரொம்ப வருத்தப்படுவ.."

"இன்னும் வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு..? எங்க அக்காவ காதல்ங்குற பேர்ல இங்க கூட்டிட்டு வந்துட்ட, உன்னைப் பத்தின சுயமே தெரியாம காதலிச்சு கல்யாணம் பண்ணி இப்போ வயத்துல ஒரு குழந்தையோடயும் இருக்கா. உன்னை பத்தின உண்மை தெரிஞ்ச என்ன அடைச்சு வச்சிருக்க இதைவிட நீ என்ன கொடுமை படுத்தப் போற..?" என எப்போதும் அவளோடு இருக்கும் அந்த நிமிர்விலேயே பதில் சொன்னாள்..

"வேண்டாம் நீ பேசுறது எனக்கு ரொம்ப கோபம் வருது", என அவன் பின்தலையில் தட்டிக்கொண்டே இங்கேயும் அங்கேயும் நடந்தான்..

"நான் ஏன் பேசக்கூடாது நல்லா பேசுவேன். என்ன பண்ணுவ இன்னும் பண்றதுக்கு என்ன இருக்கு..? கொல்லப் போறியா தாராளமா கொல்லு ஆனா என் உயிரே போனாலும் ஒரு செகண்ட் முன்னாடி எங்க அக்காவை உன்கிட்ட இருந்து காப்பாத்திட்டு தான் போவேன். கண்டிப்பா அக்காவ காப்பாத்தி இங்க இருந்து கூட்டிட்டு போகாம நான் சாக மாட்டேன் அந்தக் கடவுள் என்னை சாகவும் விடமாட்டாரு உன்னால முடிஞ்சத பண்ணு", என இயலரசி ஆக்ரோஷமாக கத்தினாள்..

சோர்ந்து போயிருந்த அவள் உடலிலிருந்து இத்தனை தெம்பு எப்படித்தான் வந்தது என அவளையே பார்த்துக் கொண்டிருந்த எழிலரசி நெடுமாறனை கவனிக்கவில்லை. ஆனால் இயலரசி பேச பேச அவன் முகம் உக்கிரமாய் மாறியிருந்தது அவன் கண்களில் நெருப்பு தெறிக்க இயலரசியின் அருகில் வந்தான்..

"என்ன சொன்ன என் பிரின்சஸ என்கிட்ட இருந்து பிரிச்சிடுவியா..? அதுக்கு நான் உன்ன விட்டா தானே", என்றவன் அவளின் முடியை கொத்தாய் பிடித்து அங்கிருந்த சுவற்றில் மோதினான்..

அவன் செய்கையை எதிர்ப்பார்க்காத எழிலரசி ஐயோ என்றபடி அவனருகில் ஓடிவர அதற்குள் அந்த தன்வீர் அவளை பிடித்து இழுத்தான்..

"என்னங்க ப்ளீஸ் அவளை விட்டுடுங்க தயவு செஞ்சு அவளை விட்டுடுங்க உங்களைக் கெஞ்சிக் கேக்குறேன் ப்ளீஸ்", என அவள் உயிர் நோக கத்தியும் பயனில்லாமல் மீண்டும் மீண்டும் சுவற்றில் மோத இயலரசியின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது..

இதற்கு மேல் கொஞ்சம் விட்டாலும் அவளுக்கு என்ன வேண்டுமானாலும் நேரும் என உணர்ந்த எழிலரசி வேகமாக தன்வீரை தள்ளி விட்டு அங்கிருந்து சுவற்றில் வேகமாக தன் தலையை பலம் கொண்ட மட்டும் மோதிக்கொண்டாள்..

அவள் செயலில் பதறிய நெடுமாறன் இயலரசியை அப்படியே போட்டு விட்டு அவளருகில் ஓடிவர, "என்ன தொடாதீங்க என் பக்கத்துல வந்தீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்", என முறைத்து அவனை எச்சரித்து விட்டு வேகமாக தன் தலையில் வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் இயலரசியை நோக்கி ஓடினாள்..

அதன்பிறகு இயலரசியின் காயம் ஆற ஒரு மாதம் வரை ஆனது. அதுவரை அவளுக்கு வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்க்கப்பட்டது. எழிலரசிக்கும் காயம் இருந்தாலும் இயலரசியின் அளவுக்கு ஆழமாக இல்லை. இயலரசியை நினைத்தாலே எழிலரசிக்கு கண்ணீர் பெருகியது அதை நெடுமாறனுக்கு நேராக காட்டவும் முடியவில்லை. அவன் பார்த்தாலே அதற்கும் சேர்த்து அவளை சித்திரவதை செய்ய ஆரம்பித்தான். இங்கிருந்து தப்பிக்கும் வரை கொஞ்சம் கஷ்டம் என எழிலரசி நினைத்ததுதான் ஆனால் இத்தனை கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. நெடுமாறன் இத்தனை பெரிய மூர்க்கன் என்பதே இப்போது தானே தெரிந்தது..

ஐந்தாவது மாதம் தொடங்கி விட்டதால் எந்த உணவும் அவ்வளவு சீக்கிரம் எழிலரசிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சனை வேறு அதனால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டாள். இயலரசி சாப்பிடாததால் தான் எழிலரசியும் சாப்பிட வில்லை என தவறாகப் புரிந்து கொண்ட நெடுமாறன் அன்று இயலை அவள் முன்னால் இழுத்து வர சொன்னான். தன்வீரிடம் அவளை சாப்பிட வைக்க சொல்ல அவனோ அவள் வாயில் உணவை அடைக்க ஆரம்பித்தான். ஒரு வாய் உணவை கொடுத்து விட்டு அவள் சாப்பிடக் கூட அவகாசம் கொடுக்காமல் மேலே மேலே உணவை திணிக்க சாப்பிட முடியாமல் கண்கள் மேலே சொருக ஆரம்பிக்க அதைக் கண்டு கொள்ளாமல் மேலும் அவள் வாயில் உணவை அடைக்க நிச்சயம் அவள் தொண்டைக்குழிக்குள் மாட்டி மூச்சு நின்றுவிடும் என பயந்த எழிலரசி அவனை ஒரு அடிபட்ட பார்வையுடன் வெறித்து பார்த்தாள்..

"ப்ளீஸ் அவளை விடுங்க நான் சாப்பிடுறேன்", என கத்திக்கொண்டே இவளும் வாயில் உணவை அடைக்க அது அப்படியே வெளியில் வந்தது..

குடலே வெளியில் வந்து விடும் போல வாந்தி எடுத்து முடித்தவள் சோர்வுடன் நெடுமாறனை பார்த்து, "எனக்கு பிரக்னன்சி சிக். ப்ளீஸ் அவளை எதுவும் பண்ணாதீங்க உங்கள கெஞ்சி கேக்குறேன்", என கையெடுத்துக் கும்பிட்டாள்..

அவள் கையை வந்து பிடித்துக் கொண்டவன், "நீ கேட்டு நான் வேணான்னு சொல்லுவனா பிரின்சஸ். இதுக்கு ஏன் இப்படி வருத்தப்படுகிற அவளை அழைச்சிட்டு போ தன்வீர்", என அவனிடம் சொல்லிவிட்டு எழிலரசியை புன்னகை முகமாக அணைத்துக் கொண்டான்..

நான் வருத்தப்பட்டால் இவனால் தாங்க முடியாது என அடிக்கடி சொல்லி இருக்கிறான். அப்படியானால் இதை வைத்து இவனிடம் நைச்சியமாக பேசி பார்க்க வேண்டும் என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். அதே போல அந்த வாரத்தில் மாலை வந்த நெடுமாறனிடம் நல்லவிதமாகவே பேசினாள். முடிந்தவரை உதடுகளில் புன்னகையை இழுத்து ஒட்ட வைத்துக் கொண்டாள்..

"பிரின்சஸ் உன்னை இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா..? எப்ப பார்த்தாலும் சோகமாவே இருக்க அந்த மாதிரி உன்ன பாக்க எனக்கு பிடிக்கவே இல்லை இப்படியே இரேன்", என அவளை கொஞ்சினான்..

"சரி நான் இப்படியே இருக்கேன். உங்க கூட கொஞ்சம் பேசணும் டீ குடிச்சுட்டு வாங்க நான் பால்கனியில வெயிட் பண்ணுறேன்", என அங்கே சென்று அமர்ந்தாள்..

"ரொம்ப நாள் கழிச்சு என் பிரின்சஸ் என் கிட்ட பேசணும்னு சொல்றா இப்ப டீயா முக்கியம்..?" என எதிரில் வந்த அமர்ந்த அவனை புன்னகையுடன் பார்த்து விட்டு, "சரி உட்காருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்", என எழுந்து சென்று அவள் அவனுக்கு டீ எடுத்து வந்து கொடுத்தாள்..

அவன் குடித்து முடித்ததும், "நான் உங்க கிட்ட ஏதாவது கேட்டா நீங்க கோபப்பட மாட்டீங்களே..? செய்வீங்க தானே..?" என முன்னெச்சரிக்கையாக கேட்டு கொண்டாள்..

"எனக்கு உன் மேல எந்த கோபமும் வராது பிரின்சஸ். இதுவரையில் நான் அப்படி உன் மேல ஏதாவது கோபப்பட்டு இருக்கேனா நீயே சொல்லு..? அது மட்டுமா நீ கேட்டு நான் எது செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கேன்", என சிரித்தான்..

அது என்னவோ வாஸ்தவம் தான் என மனதில் நினைத்துக் கொண்டவள் ஆனால் என்னை தவிர எல்லோரிடமும் அந்த கோபத்தை காட்டி விடுகிறானே என அதையும் சேர்த்து நினைத்துக் கொண்டாள்..

"அது வந்து.. நான் உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன் தயவு செஞ்சு இயலரசிய இங்கருந்து வெளியே அனுப்பிடுங்க ப்ளீஸ்", என பயந்து கொண்டே சொல்லி முடித்தாள்..

"நீ பேசணும்னு சொல்லும்போதே அவளை பத்தி தான் இருக்கும்னு நினைச்சேன் பிரின்சஸ்", என ஒரு எரிச்சலுடன் சொன்னவன், "அவளை வெளில அனுப்பினா கண்டிப்பா எல்லார்கிட்டயும் என்ன பத்தி சொல்லி இங்க இருந்து உன்ன அழைச்சிட்டுப் போயிடுவா அதனால கண்டிப்பா அவளை வெளில விட மாட்டேன்", என உறுதியாக சொன்னான்..

"நான்தான் உங்களை விட்டு போக மாட்டேன்னு சொல்றேனே..?" என அவனை கெஞ்சலாக பார்த்தாள்..

"ஆனா உண்மை தெரிஞ்ச அன்னைக்கு என்னை விட்டுட்டு போகலாம்னு பார்த்த தானே..? பின்ன எப்படி உன்ன நம்புறது..?" என கேட்டான்..

"அது இயலரிசிய இங்கிருந்து அனுப்பி வைக்கணும்னு ஒரு வேகத்துல செஞ்சது இனி அப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்ல அவன் நம்ப மாட்டேன் என்பது போல தலையை ஆட்டினான்..

ஒரு பெருமூச்சுடன், "சரி கொஞ்ச நாள் நீங்க ஹாஸ்பிடல்ல சேர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாமே நானும் உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்றேன்", என சொல்லிப் பார்த்தாள்..

"அப்போ மத்தவங்க மாதிரி நீயும் என்ன பைத்தியம்னு நினைக்கிறியா..?" எனக் கண்களில் ஒரு வலியுடன் கேட்டான்..

"அப்படி எல்லாம் இல்லைங்க டாக்டர் கிட்ட காமிச்ச நல்லது அதனால தான் சொன்னேன்.."

"முடியாது அங்க போனா எப்படியும் என்கிட்ட இருந்து உன்னை பிரிச்சிடுவாங்க.."

என்னக் கேட்டாலும் ஒத்து வர மாட்டேன் என்கிறானே என நினைத்தவள் கடைசி வாய்ப்பாக, "நான் கேட்டா எதுவும் மாட்டேன்னு சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே..?" எனக் கேட்டாள்..

"இதுக்கான பதில் நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் உனக்காக எது வேணும்னாலும் செய்வேன். ஆனா உன்ன விட்டு கொடுக்கிற மாதிரி எது வந்தாலும் அது அந்த ஆண்டவனே சொன்னாலும் செய்ய மாட்டேன்", என சொன்னவனின் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அடுத்து அவளை பேசவிடாமல் செய்தது..

*****

முகிலனுக்கு எதனால் இப்படி தன்னை வாட்டி எடுக்கிறார்கள் என புரியவில்லை. இயலரசி கேஸை எடுத்ததிலிருந்து அதை மேற்கொண்டு தொடர முடியாமல் மேலிடத்திலிருந்து இப்படி வேலைகள் குறிக்கிட்டுக் கொண்டே இருந்தது. அவனால் அதை உதறித் தள்ளவும் முடியவில்லை இயலரசியைத் தேடவும் முடியவில்லை..

வேந்தன் கண்விழிக்க கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆனது அதன் பிறகு அவனிடம் விசாரித்தபோது இயலரசி அங்கே தான் வர சொன்னாள் சென்று பார்க்கும்போது அவளை காணவில்லை. அவளுக்கு போன் செய்து கொண்டே அங்கே ஒதுக்குப்புறமான இடத்தில் நின்ற போது ஒரு கார் அவனை இடித்துச் சென்றிருக்கிறது. நெடுமாறன் வீடு இருந்தது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அதனால் வேந்தனை யாரும் கவனிக்கவில்லை. நினைவிழந்த அவனை யாரோ தூக்கிச் சென்று தண்டவாளத்தில் போட்டிருக்கிறார்கள்..

தன்னிடம் இயலரசி கடைசியாக பேசும்போது ஏதோ பதற்றத்தில் இருந்ததாக சொன்னான். எழிலரசியை பார்க்கப் போவதைப் பற்றி முன்னமே அவள் எதுவும் சொல்லவில்லை. அங்கு சென்று திரும்பி வரும்போது தான் வேந்தனை அழைத்திருந்தாள். எழிலரசி வீட்டுக்கு சென்று வந்தார்களா ஏதாவது விஷயம் தெரிந்ததா என மணிகண்டனை விசாரித்தபோது அவர் எழிலரசியின் விசாரித்து வந்ததை சொன்னார். அங்கிருந்து கிளம்பி விட்டதாக எழிலரசி சொன்னதும் மேற்கொண்டு அதைப் பற்றி அவளிடம் விசாரிக்க தோன்றவில்லை. நிச்சயம் அவள் பொய் சொல்ல மாட்டாள் என எல்லோருக்குமே தெரியும். அதுவும் அவள் தங்கை விஷயத்தில் சொல்லி இருக்கவே மாட்டாள் அவளுக்குமே என்ன ஆனது என்று தெரிந்திருக்காது..

ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் என்பதால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்த போது யாராவது அவளை கடத்திச் சென்றிருக்கலாம் என யோசித்தார்கள். அது சம்பந்தமாக எழிலரசியிடம் பேசலாம் என்றால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. எப்போது அவள் வீட்டுக்கு சென்றாலும் வீட்டினர் யாரும் இல்லை என்றே பதில் வருகிறது. அந்தக் கேஸ் இப்போது அவனுடைய கண்காணிப்பின் கீழ் இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இயலரசியின் போன் கடைசியாக எங்கே செயலிழந்து இருக்கிறது என கண்டுபிடித்த போது அது சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு இடத்தை காட்டியது..

இது ஒரு பக்கம் இருக்க அவன் வேலைகளும் அவனை நெட்டித் தள்ளியது. மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு இயலரசியை தேட முடியவில்லை. ஏனெனில் இந்த வேலைக்காக அவன் எத்தனை தூரம் முயன்று இந்த நிலையை அடைந்திருக்கிறான் என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பக்கம் எழிலரசி, இயலரசியை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருந்தது. வேலை முக்கியமா இயலரசியை தேடுவது முக்கியமா என அவன் முடிவு எடுக்கும் ஒரு நேரமும் வந்தது. அதற்குள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முடிந்து விட்டிருந்தது. அதற்குக் காரணம் தன் இத்தனை வேலைப் பளுவுக்கும் காரணம் நெடுமாறன் என்று அறிந்தது தான்..
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
911
Reaction score
1,367
Location
Chennai
Ada pavi nedumara...ipadi oru family ah kashtapadhutharaye...writer ji,eppa Avan adi vangara kalam varum
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
Nedumaran ku treatment kodukanum...
But avar adhuku samadhika matraru....
Pavam Ezhzil and Iyal....😔
Mukilam ku therinjiducha....🧐
Ipolam Nedumaran ah patha namakum bayam ah dha iruku....😔
Avaruku apdi oru past ilana ipd manareedhiya bathika patruka matar la....
Avar oru patient so avaruku sari aaganum....
Andha nilamai la thapichu poita pothum nu dha thonum adha thappu solla mudiyadhu....🥺
Avar nilamai ah patha pavam ah iruku but adha vida romba bayama iruku....
So ena nadakumo....🤔
Nice episode Dear....❤
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Nedumaran ku treatment kodukanum...
But avar adhuku samadhika matraru....
Pavam Ezhzil and Iyal....😔
Mukilam ku therinjiducha....🧐
Ipolam Nedumaran ah patha namakum bayam ah dha iruku....😔
Avaruku apdi oru past ilana ipd manareedhiya bathika patruka matar la....
Avar oru patient so avaruku sari aaganum....
Andha nilamai la thapichu poita pothum nu dha thonum adha thappu solla mudiyadhu....🥺
Avar nilamai ah patha pavam ah iruku but adha vida romba bayama iruku....
So ena nadakumo....🤔
Nice episode Dear....❤
நன்றி sis..
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
முகிலனுக்கு நெடுமாறன் மேல சந்தேகம் வந்திரிச்சா😲😲😲😲
ராஜூ ஏன் பேசாம இருக்கான் அவனும் இதுக்கெல்லாம் கூட்டா🤨🤨🤨🤨
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
முகிலனுக்கு நெடுமாறன் மேல சந்தேகம் வந்திரிச்சா😲😲😲😲
ராஜூ ஏன் பேசாம இருக்கான் அவனும் இதுக்கெல்லாம் கூட்டா🤨🤨🤨🤨
மிக்க நன்றி sis..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top