• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே-18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-18


முகிலன் இன்று எப்படியும் எழிலரசியை சென்று சந்திக்க வேண்டுமென நினைத்திருக்க வேந்தனிடமிருந்து உடனே கிளம்பி வரச்சொல்லி போன் வந்தது. ஏதாவது முக்கியமான விஷயம் இல்லாமல் அவன் அப்படி கூப்பிட மாட்டான் என்பதால் வேறு எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் உடனே அவனைப் பார்க்க கிளம்பி விட்டான். வேந்தன் அழைத்திருந்தது ராகவன் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனைக்கு தான். இத்தனை நாட்களாக தொடர் முயற்சியின் பலனாக ராகவன் கண் விழித்திருக்க அவரிடம் இயலரிசி காணாமல் போன விஷயத்தை வேந்தன் ஒருவாறு சொல்லி விட்டிருந்தான்..


ராகவனுக்கு இயலரசியிடம் பேசிய போது இருந்த உடல்நிலை இப்போது மோசமாக மாறி விட்டிருந்தது. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு இருந்ததனால் அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. முழுவதும் சொன்னால் தான் இவர்களால் அடுத்து என்னவென்று யோசிக்க முடியும். அதனால் நெடுமாறன் சீனிவாசன் என திக்கி திணறி பேசியவர் பிறகு தன் பையனிடம் ஜாடை காண்பிக்க அவர் புரிந்து கொண்டு மும்பையில் இருக்கும் உங்கள் டாக்டர் நண்பரா எனக் கேட்டான். ஆமாம் என சொல்லி அவர் வீட்டு அட்ரஸ் என எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுக்குமாறு சொன்னார் அதன் பிறகு மீண்டும் மயக்க நிலைக்கு சென்று விட்டார்..


சீனிவாசனுக்கு முயற்சிக்க அவர் எங்கேயோ வெளியூர் சென்று இருப்பது தெரிந்தது. அதற்குள் எழிலரசியை பார்த்துவிட்டு வந்து விடலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி மறுநாளே எழிலரசி வீட்டுக்கு செல்ல இந்த முறை அந்த காவலாளி அதிகம் அவனிடம் மறுப்பு தெரிவிக்கவில்லை ஏற்கனவே எதிர்பார்த்து இருப்பார்கள் போல. வேந்தனும் முகிலனும் உள்ளே செல்ல ஏற்கனவே அங்கே ராஜு வந்து அமர்ந்திருந்தான். இருவரையும் யார் என்னவென்று கேட்டு ராஜு கைகுலுக்கி வரவேற்றான் எழிலரசியை பார்க்க வந்திருப்பதாக சொல்ல அவர்களை அமர வைத்து அவர்களோடு தானும் சோபாவில் அமர்ந்து கொண்டான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் அவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டான்..


வேலையாளை அழைத்து எழிலரசியை அழைத்து வர சொல்லிவிட்டு அவர்களுக்கு காபி எடுத்து வர சொன்னான். சற்று நேரத்தில் நடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாக மாடியிலிருந்து இறங்கி வந்த எழிலரசியை பார்த்த முகிலனின் கண்களில் சிறு வலி தெரிந்தது. வேந்தனையும் முகிலனையும் பொதுவாக பார்த்து கண்களுக்கு எட்டாத சிறு புன்னகையுடன் வாங்க என்றவாறு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். கலகலவென்று சிரிக்கும் அவளது புன்னகை முகம் தன்னை இத்தனை நாட்கள் கழித்துப் பார்த்ததில் கண்டிப்பாக அதிகமாகி இருக்கத்தான் வேண்டும். அதற்குக் கூட வழியில்லாமல் மிக மெல்லிய சிரிப்பு என்று கூட சொல்ல முடியாது அதை சமாளிப்பு என்று தான் சொல்ல வேண்டும்..


எப்படி இருக்கிறாய் இது எத்தனாவது மாதம் என சாதாரணமாக நலம் விசாரிப்புக்கு பிறகு இயலரசி காணாமல் போய் கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆனதால் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாக சொன்னான். அவளுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா எனக் கேட்க ராஜு குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான் பிறகு அவனே அவர்களிடம் விஷயத்தையும் கேட்டான்..

மூன்று மாதங்களுக்கு முன்னதாக நெடுமாறன் வெளிநாடு செல்ல வேண்டிய ப்ராஜெக்ட்டுக்கு அவன் செல்லாமல் இந்த முறை ராஜுவை அனுப்பிவைத்தான் இதுபோல இதுவரை நடந்ததில்லை. இந்தியாவிற்குள்ளாக இதுபோல பலமுறை நடந்திருக்கிறது ஆனால் வெளிநாட்டு ப்ராஜெக்ட்டுக்கு இருவரும் சேர்ந்து தான் செல்வார்கள். அப்படி இல்லை எனில் நெடுமாறன் மட்டும் செல்வான் இந்த முறை தான் தன்னை மட்டும் அனுப்பியது..


எழிலரசி முகத்தில் பதற்றம் தெரிய மற்றவர்களைக் காட்டிலும் ராஜு அவளை யோசனையாக பார்த்தான். எதையோ மறைக்கிறாள் ஆனால் இயலரசி விஷயத்தில் இவள் அப்படியெல்லாம் நடந்து கொள்கிற ஆள் இல்லையே ராஜு யோசனையாக அமர்ந்திருக்க முகிலன் அவளை கடுமையாக பார்த்தான்..


"இங்க பாரு எழில் நீ உண்மைய சொன்னா தான் எங்களால ஏதாவது செய்ய முடியும். இப்படி அமைதியாவே இருந்தா நிச்சயம் அது உங்க ரெண்டு பேருக்குமே ஆபத்துல தான் முடியும் புரிஞ்சுக்கோ", என சொல்லிக் கொண்டிருக்க அழுத்த நடையுடன் அந்த வீட்டையே நிறைத்துக் கொண்டு நெடுமாறன் வந்து சேர்ந்தான்..


அவர்கள் பேசுவதை கண்காணித்துக் கொண்டிருந்த தன்வீர் அவன் வந்ததும் அங்கிருந்து நகரவும் இப்போது எழிலரசி அவனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்ட நெடுமாறன், "என்ன ஏஎஸ்பி சார் அவ இருக்கிற நிலைமை தெரிஞ்சும் அவகிட்ட போய் மிரட்டி பேசிக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு எது வேணும்னாலும் என்கிட்ட தாராளமா கேட்கலாம்", என சொன்னான்..


அவனை முறைத்துப் பார்த்த முகிலன் சிறு அலட்சிய பார்வையுடன், "உங்க கிட்ட ஏதாவது கேட்கணும்னா கண்டிப்பா கேட்கிறேன் சார். இது அவகிட்ட கேட்க வேண்டிய கேள்வி அதனால தான் கேட்டுகிட்டு இருக்கேன்", என சொன்னான்..


"அவளா..?! அப்ப ஏஎஸ்பி சார்க்கு என் மனைவி கூட நல்ல பழக்கம் தான் போலருக்கு. சரி உக்காருங்க எப்படியும் அவ உடல்நிலைல உங்களுக்கும் அக்கறை இருக்கும் அதனால நான் கவலைப்பட வேண்டியதில்ல", என சொன்னவன் அவளோடு சேர்ந்து சாவகாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்..


ஆனால் அவளோ அமர முடியாமல் நெளிந்து கொண்டே இருக்க நெடுமாறன் பார்த்த பார்வையில் தலை குனிந்தவாறு அசையாமல் கல் போல அமர்ந்து கொண்டாள். மூவருக்குமே அவளது செய்கை வித்தியாசமாக பட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை..


கடைசியாக இயலரசியை எப்போது பார்த்தாய், என்ன சொன்னாள் என்ற கேள்விகளுக்கு எழிலரசி மென்று முழுங்கி பதில் சொல்லிக் கொண்டிருக்க இன்னும் கொஞ்சம் விட்டால் நிச்சயம் மயங்கி விழுந்து விடுவோம் என்ற நிலைமையில் எனக்கு தலை வலிக்குது என அவள் எழுந்து கொள்ள, "சரி உனக்கு உடம்பு சரியானதும் சொல்லு மறுபடியும் நாங்க விசாரணைக்கு வருவோம்", என அவளை ஒரு ரகசிய பார்வை பார்த்துவிட்டு முகிலன் எழுந்து கொண்டான்..


அவனது பார்வையில் ஏதோ புரிந்தது போல இருந்தாலும் சரி என தலையசைத்துவிட்டு யோசனையுடன் மாடியேறி சென்றாள். பாதி தூரம் சென்றவள் எழிலரசி என்னும் குரல் அழைக்க திரும்பி பார்த்தாள் முகிலன் தான் அழைத்திருந்தான்..


கணீரென்ற அவனது குரலில்.,

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
என்ற பாரதியாரின் கவிதையை அவளுக்கு சொல்லி காட்டினான்..


"உனக்கு பாரதியோட இந்த
கவிதை ரொம்ப பிடிக்கும் அதுல நிமிர்வு பத்தி சொல்லி இருப்பாரு. உன்கிட்டயும் எப்போதுமே ஒரு நிமிர்வு இருக்கும் அதுதான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே. இப்போ குழந்தை சுமந்துகிட்டு இருக்க இந்த நேரத்துல அந்த நிமிர்வும் துணிச்சலும் தைரியமும் உனக்கு ரொம்ப முக்கியம். உன்னை நீ சோர்வடைய வெச்சிட்டேன்னா எவ்வளவு சின்ன பிரச்சனையா இருந்தாலும் அது பெரிய பிரச்சினையா தோணும். அதுவே நீ தன்னம்பிக்கையோட இருந்தா எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் அது சின்னதா தோணும். தைரியமா துணிச்சலா யோசி நிச்சயம் உன்னால எதையும் சுலபமா கடந்து வர முடியும்.."


அவள் கண்களில் திரண்டிருந்த கண்ணீரை அவனுக்கு காட்டாமல் முகம் திருப்பிக் கொண்டு தலையை மட்டும் ஆட்டியபடி வேகமாக மாடி ஏறி தனது அறைக்கு சென்றுவிட்டாள். முகிலனையே வெறித்துக் கொண்டிருந்த நெடுமாறன் கண்களில் அவ்வளவு குரோதம் நிறைந்திருந்தது..


அன்று இரவு பால்கனியில் நிலவை ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த எழிலரசிக்கு முகிலன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவளும் இயலரசியும் துணிச்சலான பெண்கள் தான் எவ்வளவோ பிரச்சனைகளை வீடு வரை கொண்டு வராமல் சமாளித்திருக்கிறார்கள். அதெல்லாம் கல்லூரியில் படிக்கும் போது நடக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள் தான் என்பது பெரிய பிரச்சனை ஒன்று வரும்போது தான் தெரிகிறது. அவர்கள் வயதுக்கு அதுவே அப்போது பெரிய பிரச்சனையாய் தெரிந்தது. அதை அவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்ட விதம் நிறைய பேரின் பாராட்டை பெற்றுக் கொடுத்தது..


ஒரு பெரிய இடத்துப் பையன் எழிலரசியின் மீது ஆசிட் வீசுவேன் என்ற போது உன்னால் முடிந்ததை செய் என தைரியமாக சொன்னாள். அவன் அதை செய்யத் துணிந்த போது அதை தைரியமாக தடுத்து நிறுத்தினாள் ஆனால் மற்றவர்கள் இதை இப்படியே விடக்கூடாது என பயந்த போது இரு பெண்களும் சேர்ந்து அவன் வீட்டுக்கே சென்று அவன் செய்ததை சொல்ல அந்த பெற்றவர்கள் நல்லவர்களாக இருந்ததால் அவனை திட்டி அடித்து அந்த ஊரிலேயே வைக்காமல் வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஒருவேளை அவன் தொடர்ந்து ஏதாவது செய்ய முன் வந்திருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இருவரிடமும் இருந்தது..


இப்போது விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்தவள் முகிலன் சொன்னதை யோசித்துப் பார்த்தாள். உண்மையில் அது பெரிய பிரச்சனை தான் அதையே அந்த வயதில் சாதாரணமாக கடந்து வந்த எங்களுக்கு இதை கடந்து வர முடியாதா. நிச்சயம் முடியும் புதிதாகத் தோன்றிய உத்வேகத்தோடு திரும்பிப் பார்த்தால் நெடுமாறன் வந்து கொண்டிருந்தான். எழுந்த உத்வேகம் தனக்குள்ளேயே அடங்கி கொள்ள மறுபடியும் அங்கேயே அமர்ந்தாள்..


"என்ன பிரின்சஸ் இங்க இருக்க சாப்பிட்டியா இல்லையா..?"


"இல்ல எனக்கு பசிக்கல", எரிச்சலுடன் அவள் குரல் வெளிவந்தது..


"ஏன் பசிக்கல..? மணி ஆயிடுச்சு உனக்கு பசிக்கலன்னாலும் குழந்தைக்குப் பசிக்கும் இல்லையா..? வா சாப்பிடு", என அழைத்தான்..


"எனக்கு பசிச்சா எனக்கு சாப்பிட தெரியும் சும்மா என்னை தொந்தரவு பண்ணாதீங்க", என வெளிப்படையாகவே எரிந்து விழுந்தாள்..


"ஏன் பிரின்சஸ் உனக்கு என்ன கோவம்..?"


"ஏன் உங்களுக்கு தெரியாதா..?"


"நீ சொன்னா தானே தெரியும்..?"


"எங்கள கொண்டு வந்து இங்க அடைச்சி வச்சிருக்கீங்க கோபம் வராம கொஞ்சவா செய்வாங்க..?"


"ஓ அந்தக் கோவமா..?" என புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்து கொண்டவன், "சரி இப்போ உன் கோபம் போக என்ன செய்யணும்..?" எனக் கேட்டான்..


"ம்ம் எங்க ரெண்டு பேரையும் வெளியில விடணும்", என சொன்னாள்..


"அது முடியாதே" மீண்டும் புன்னகை அவனிடம்..


"அப்புறம் ஏன் என்கிட்ட கேக்குறீங்க..?" முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்..


"சரி பிரின்சஸ் என்ன உனக்கு வெளியில விடனும் அவ்வளவுதானே நான் விட்டுர்றேன் போதுமா..?" என கேட்க அவள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்து, "உண்மையாவா சொல்றிங்க..?" எனக் கேட்டாள்..


"உண்மையா தான் சொல்றேன் ஆனா என்ன நான் மட்டும் தான் உங்களைத் தடுக்க மாட்டேன். மத்தபடி வேற யார் தடுத்தாலும் அதை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு", என அவன் சொன்னதும் அவள் முகம் மீண்டும் சுருங்கியது. ஏற்கனவே அந்த நாய்கள் அவளை சுத்தலில் விட்டுக் கொண்டிருந்தது. இரண்டும் ஜோடியாக தோட்டத்தை சுற்றிலும் கண்காணித்து கொண்டிருக்கிறது இதில் எங்கே அதுகளை மீறி செல்வது..


"நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் நிச்சயம் ஒரு நாள் நாங்க இங்கருந்து தப்பிச்சு போவோம். கூடிய சீக்கிரம் அந்த நாள் வரும் எனக்கு நம்பிக்கை இருக்கு", என சொன்னாள்..


"என்ன நம்பிக்கை இன்னைக்கு வந்துட்டு போனானே அவனா..?" என அவன் கூர்மையாக அவளைப் பார்த்தான்..


திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினாலும் முகம் கடுகடுக்க, "அப்படியே வச்சுக்கோங்க" என்றவள் மறுபடியும் திரும்பி நிலவை வெறிக்க ஆரம்பித்தாள்..


அவனுக்கு இப்போது கோபத்தை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக கூட இருந்தது. பின்னந் தலையை தட்டி தன்னை சமாதானப் படுத்திக் கொள்வது அவளுக்கு ஓரக்கண்ணில் தெரிந்தது. அதிக கோபம் வந்தால் அவன் இப்படித்தான் செய்வான் உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தைரியமாகவே அமர்ந்திருந்தாள்..


"சரி இப்போ இயலரசி சாப்பிட்டா நீயும் சாப்பிடுவல்ல..?" என முதலில் கேட்ட கேள்விக்கே வந்திருக்க திகைப்புடன் அவனை திரும்பி பார்த்தாள்..


பைக் ரேஸ் நடந்த அன்று தன்வீரால் பிடிக்கப்பட்டு அவனிடம் அடி வாங்கியதில் இயலரசி உடம்பு சுகம் இல்லாமல் இருக்கிறாள். இப்போது போய் அவளை கஷ்டப்படுத்தினால் நிச்சயம் அவள் தாங்க மாட்டாள். அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அந்த அறையை கடந்து இயல் இருக்கும் அறைக்குள் நுழையும் சத்தம் கேட்டதும் நொடியும் தாமதிக்காமல் எழுந்து அவன் பின்னே ஓடினாள்..


அதற்குள் அந்த தன்வீருடன் கூட இருக்கும் இன்னொரு காவலாளி சாப்பாட்டை கொண்டு வந்து அவளிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்க எழிலரசி மூச்சிரைக்க ஓடி வந்து நின்றாள்..
"நான் சாப்பிடுறேன் அவளை விட்டுடுங்க ", என சொல்ல நெடுமாறன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மார்பின் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான். ஏற்கனவே அந்த காவலாளிக்கு அன்று பெண்கள் இருவரும் தப்பி சென்றதில் நெடுமாறனிடம் வாங்கிய வசவுகளும் கன்னத்து அறைகளும் ஆத்திரத்தைக் கிளப்பி இருந்தது. அதில் இன்று அவளுக்குப் பணிவிடை செய்ய வைத்ததில் இன்னும் உக்கிரமானவன் சாப்பிட முடியாமல் இயல் தவித்த போது வேண்டுமென்றே அவள் வாயில் உணவை அள்ளி திணித்தான். அவள் அத்தனையையும் வாந்தியாக வெளியேற்றிக் கொண்டிருந்தாள் அதைக்கூட பொருட்படுத்தாமல் மீண்டும் வேண்டும் உணவை அள்ளி திணித்தான்..


அதுவரை நெடுமாறனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவள் அந்த அடியாள் செய்யும் செய்கையில் கோபம் கொண்டு அவன் அருகில் வந்து வேகமாக அவனை பிடித்து இழுத்து தள்ளினாள்..


"என்ன மனுஷன் நீ..? அவளோட நிலைமையை பார்த்தும் மேல மேல வச்சி திணிக்கிறியே நீ எல்லாம் மனுஷ ஜென்மம் தானா..?" என எகிற அவன் பல்லை கடித்துக் கொண்டு எழுந்து நின்றான்..


அவன் நின்ற தோற்றத்தில் உள்ளுக்குள் குளிர் பரவ அவனைப் பார்த்தவள் பக்கத்தில் நின்றிருந்த நெடுமாறனை பார்க்க அவன் உலகையே அழிக்க துடிக்கும் மூன்றாம் உலகத்து வீரன் போல நின்றிருந்தான். சட்டென்று வந்த யோசனையாக வேண்டுமென்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அடியாளின் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்..


"உடம்பு சரி இல்லாம சோர்ந்து போய் கிடக்கிற பொண்ணு கிட்ட வீரத்தை காட்டுறியே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா..? தைரியம் இருந்தா என் கிட்ட காட்டு", என அவனுக்கு ஓங்கி நான்கு அறைகளையும் பரிசாக தந்திருந்தாள். இத்தனை நாட்கள் நாங்கள் பட்ட பாட்டுக்கு கொஞ்சமாவது திருப்பித் தர வேண்டாமா. அதுவரை தன் முதலாளியை எண்ணி பொறுத்துக் கொண்டிருந்தவன் அதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் கழுத்தை பிடித்து சுவற்றோடு வைத்து அப்படியே தூக்கி பிடித்தான்..


அவள் கண்கள் மேலே செருக அவன் கைகளில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள் ஆனால் அடுத்த நிமிடமே அந்த அடியாள் சுருண்டு விழுந்தான். தொண்டையை பிடித்துக்கொண்டு சற்று நேரம் இருமியவள் ஏற்கனவே இதை எதிர்பார்த்ததுதான் ஆனால் அடுத்து அவன் செய்தது எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த அடியாளை அடித்து துவைத்தவன் அடுத்த நிமிடம் அவன் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து குண்டுகளால் அவன் உடலைத் துளைத்திருந்தான்..
துப்பாக்கி சத்தமும் அந்த அடியாளின் அலறல் சத்தமும் கேட்டு இரண்டு பெண்களுமே நடுங்கி அந்த அறையின் மூலையில் அமர்ந்து கொண்டார்கள்..


கடைசியில் நெடுமாறன் சொன்னது மட்டுமே அந்த அறையில் எதிரொலித்தது.


"என் பிரின்சஸ் மேலே கைய வைக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?"
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Mukilan....
Indha heroines la yendhan nallavan ah vitutu kettavan ah love panrangalo....😅🙄
Sari naamalum Vijay samathu nu dhana nambunom...😅
Avar panradhellam pathi solla varthai ila....😔😔🤯
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
910
Reaction score
1,365
Location
Chennai
Adai ,enanga da nadakudhu.mudiyalada sami.avan ennamo ellaraiyum konukita varan,ketave all ilatha Mari...
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Mukilan....
Indha heroines la yendhan nallavan ah vitutu kettavan ah love panrangalo....😅🙄
Sari naamalum Vijay samathu nu dhana nambunom...😅
Avar panradhellam pathi solla varthai ila....😔😔🤯
😃😃 நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Adai ,enanga da nadakudhu.mudiyalada sami.avan ennamo ellaraiyum konukita varan,ketave all ilatha Mari...
Avangaluku kavalai irukathu nallvanga than oru thappu panitu kavalai padurathu.. நன்றி sis..
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அட ஏண்மா நீ வேற இப்படி பண்ற, அவனே வேற மாதிரி இருக்கான் நீ இன்னும் அவனுக்கு உடுக்கை அடி, இன்னும் நல்ல ஆடுவான்🙄🙄🙄🙄

முதல்ல அவன் சொல்றத செய், அப்ப தான் செக் அப் எல்லாம் கூட்டி போவான், அப்ப ஏதாவது செய்ங்க....

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தைன, அவ தான் தண்டனை அனுபவிக்கிறா பாவம், அது தான் வேணுமா உனக்கு....

உன் கிட்ட வேகம் இருக்கற அளவு விவேகம் இல்ல எழில்....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அட ஏண்மா நீ வேற இப்படி பண்ற, அவனே வேற மாதிரி இருக்கான் நீ இன்னும் அவனுக்கு உடுக்கை அடி, இன்னும் நல்ல ஆடுவான்🙄🙄🙄🙄

முதல்ல அவன் சொல்றத செய், அப்ப தான் செக் அப் எல்லாம் கூட்டி போவான், அப்ப ஏதாவது செய்ங்க....

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தைன, அவ தான் தண்டனை அனுபவிக்கிறா பாவம், அது தான் வேணுமா உனக்கு....

உன் கிட்ட வேகம் இருக்கற அளவு விவேகம் இல்ல எழில்....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
கரெக்ட் தான் sis மிக்க நன்றி..
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
என்னடா இவன் பிரின்சஸ் பிரின்சஸ்சுனுகிட்டு😠😠😠
1643710309247.jpeg

எழில் அவனை மாத்தகூடிய சக்தி உனக்கு மட்டும் தான் இருக்கும்மா🙄🙄🙄🙄 அவன் நல்லவன் தான் ஆனால் ஓவர் பொசசிவ்னஸ்னால இப்படி எல்லாம் பண்றான் போல🥺🥺🥺🥺🥺
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top