• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வன்- 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-22


பீச்சில் கால்கள் நனைய அவனோடு சேர்ந்து நடந்து கொண்டிருந்தவளுக்கு இயலரசி சொன்னது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதை பற்றி அவள் யோசித்துக் கொண்டிருக்க அவன் தன் கையோடு கைகோர்த்து கொண்டதும் மெல்ல திரும்பி அவனை பார்த்தாள்..

இப்போது அவனை எதுவும் மறுக்க முடியாது என்பதால் அவள் அமைதியாக இருக்க அவனோ அவள் மனம் மாறிவிட்டாள் என நினைத்தான்..

"எலிக்குட்டி கொஞ்ச நேரம் அந்த போட் கிட்ட உட்காரலாமா..?" என கேட்க அவளும் சரி என தலையாட்டியதும் இருவரும் சென்று அமர்ந்தார்கள்..

வெகு நாட்கள் கழித்து அவளுடனான தனிமையை ரசிப்பதால் நெடுமாறன் ஒரு உல்லாசமான மனநிலையில் இருந்தான். எழிலரசியும் தன் தங்கை எப்படியும் இன்று வெளியேறிவிடுவாள் என நம்பிக்கையுடன் இருந்ததால் முகம் மென்மையை தத்தெடுத்திருந்தது. அவளையே பார்த்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று அவள் கைகளை எடுத்து அதில் முத்தம் வைத்தான். அதில் அவனை திரும்பி பார்க்க அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவள் தலையை குனிந்து கொண்டாள்..

அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தியவன் மென்மையாக அவள் இதழில் முத்தமிட்டான். அவள் மறுத்து ஏதாவது சொல்வாளோ என தயக்கமாக முத்தமிட்டவன் அவள் முகம் பார்க்க எதுவும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்திருந்தாள். அவள் ஏற்றுக் கொண்டாள் என நினைத்தவன் புன்னகையுடன் மீண்டும் அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு வெகு நாட்களுக்குப் பின் கிடைத்த அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தான். முதலில் எழிலரசி திணறினாலும் பிறகு அமைதியாகவே இருந்தாள் அதனால் மீண்டும் மீண்டும் அவள் இதழை சிறை செய்தான். சற்று நேரத்தில் அவள் மூச்சு விட சிரமப்படவும் அவளை விட்டு வேகமாக விலகியவன் "சாரிடா சாரி..!" என்றவாறு அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து மார்பில் சாய்த்துக் கொண்டான்..

இருவரும் கடல் அலைகளை பார்த்தவாறு இருந்தனர். மீண்டும் அவளை தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன், "ஏன் பிரின்சஸ் நம்ம குழந்தையை பத்தி உனக்கு ஏதாவது கனவு இருக்கா..?" திடீரென அவன் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..

எதற்காக கேட்கிறான் என தெரியாமல் என்ன சொல்வது என திணறியவளை, "குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யோசிக்கலாம்னு இருப்ப சரி பரவால்ல விடு ஆனா எனக்கு நிறைய கனவு இருக்கு", என சொன்னவனை அவள் ஆச்சரியமாக பார்த்தாள்..

"என்ன பிரின்சஸ் அப்படி பாக்குற நான் இதையெல்லாம் யோசிச்சிருப்பேனான்னு நினைக்கிறியா..? அதெல்லாம் நிறைய என் மனசுல இருக்கு. இப்ப எல்லாம் உன்கிட்ட சரியா பேச முடியுறது இல்ல அதான் என்னால சொல்ல முடியல. நமக்கு என்ன குழந்தை பிறந்தாலும் சரி நல்லா படிக்க வச்சு ரொம்ப பெரிய ஆளாக்கணும். என்னதான் எங்க அம்மா என் மேல பாசமா இருந்தாலும் அவங்களால என் கூட முழுநேரமும் இருக்க முடியல. அதனால நீ எப்பவும் குழந்தை கூட தான் இருக்கணும். அப்பா பாசம் என்னன்னே எனக்கு தெரியாது ஆனா என் குழந்தைக்கு அது முழுசா கிடைக்கணும். என் குழந்தை என்ன ஆசைப்பட்டாலும் அதுக்காக நான் எது வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்", எனக் கண்கள் மின்ன கூறியவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்..

அவள் வெற்றுப் பார்வையில் என்ன உணர்ந்தானோ ஒரு கணம் நிலை தடுமாறிப் போனான். ஏன் இப்படி பார்க்கிறாள் அவள் பார்வையில் என்ன இருக்கிறது என அவன் யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் தான் அவனது போனுக்கு மெசேஜ் வந்தது. புருவமத்தியில் முடிச்சுடன் அதைப் பார்த்தவன் சட்டென்று எழுந்து அவளையும் கிளம்பச் சொல்லி உடனே காருக்கு அவளை அழைத்து வந்து காரை எடுத்தான்..

அவன் அதிவேகமாக காரை ஓட்ட உள்ளே உட்கார்ந்து இருந்த எழிலரசிக்குத்தான் வயிற்றைப் பிடித்து இழுப்பது போலத் தோன்றியது ஆனால் அவன் இறுகிய முகத்தை பார்த்து பயந்து எதுவும் சொல்லாமல் இருந்தாள். இயலரிசி அங்கிருந்து தப்பித்து இருக்க வேண்டும் அதனால்தான் இவன் முகம் இவ்வளவு கோபத்தை காட்டுகிறது. ராஜுவுக்கு இதனால் பாதிப்பு வராமல் இருக்க வேண்டும் பாவம் எங்களுக்கு உதவி செய்யப்போய் அவர் மாட்டிக்கொண்டால் இவர் என்ன செய்வாரோ தெரியவில்லை..

போகும்போது அரை மணி நேரத்திற்கு மேலாக கார் பயணம் இருக்க வரும் போது பத்தே நிமிடத்தில் முடிந்து விட்டது. இயலரசியை அழைத்துக் கொண்டு முகிலனின் ஆட்கள் இங்கிருந்து சென்று இருப்பார்களா..? இவ்வளவு சீக்கிரம் இவன் திரும்பி வருவான் என தெரியாதே. நிச்சயம் என்னை அழைத்துக் கொண்டு சென்றிருந்தால் மாட்டி இருப்பார்கள் ஏனெனில் இங்கே அருகில் கார் நிறுத்தி வைக்க முடியாது என தூரத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள். இந்த நிலைமையில் என்னால் அவ்வளவு தூரம் அவ்வளவு வேகமாக சென்றிருக்க முடியுமோ என்னவோ. நெடுமாறன் தன்னை அழைத்துச் சென்றதும் நல்லதுக்குத்தான் என நினைத்தாள்..

அவர்கள் கூட சென்றிருந்தால் தன்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை என்றாலும் விட்டு செல்லாமல் இயலரசி அவளையும் அழைத்துச் செல்ல தான் நினைத்திருப்பாள் அதனால் எல்லோருமே சேர்ந்து கூட மாட்டி இருக்கக்கூடும். காரிலிருந்து இறங்கிய பின் வேகமாக அவன் வீட்டின் பின்புறம் செல்ல ஓட்டமும் நடையுமாக அவனை பின் தொடர்ந்து எழிலரசி தானும் சென்றாள். நெடுமாறனிடம் இருந்த அளவுக்கு பதற்றம் எதுவுமில்லாமல் எழிலரசி நிதானமாகத்தான் வந்து கொண்டிருந்தாள் ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியில் அதற்குமேல் நகரக்கூட முடியாமல் உறைந்து போய் நின்று விட்டாள்..

ஏற்கனவே கன்னம் வீங்கி நின்றிருந்த இயலரசியை மீண்டும் அடிக்க தன்வீர் பாய்ந்து கொண்டிருந்தான் அவர்களுக்கு இடையில் நின்று ராஜு அவனை தடுத்து கொண்டிருந்தான். இது எப்படி..? இல்லை நடக்க வாய்ப்பே இல்லையே, எப்படி இவள் மாட்டினாள். எல்லாம் சரியாகத்தானே திட்டம் போட்டிருந்தோம் அதையும் தாண்டி எப்படி இவள் மாட்டி இருக்க முடியும். போன வேகத்தில் நெடுமாறன் ராஜுவை விலக்க அடுத்த நிமிடம் தன்வீர் பாய்ந்து இயலரசியை இரண்டு அறை விட்டிருந்தான். அதில் கீழே விழ போனவளை அதுவரை உறைந்து போய் நின்றிருந்த எழிலரசி ஓடிப்போய் தாங்கிக் கொண்டாள்..

அடுத்து அவளை அறைவதற்குள் குறுக்கே நின்றிருந்த எழிலரசி தடுக்க ராஜுவும் தன்வீரை பிடித்து இழுத்தான். அதில் கோபம்கொண்ட நெடுமாறன், "ராஜு இதுல நீ தலையிடாத இது உனக்கு தேவையில்லாதது" என சொன்னான்..

"எப்படிடா எனக்கு தேவையில்லாததுன்னு சொல்லுவ. அப்படிப் பார்த்தா ஆரம்பத்திலிருந்து நீ செய்ய சொன்ன எதுவுமே எனக்கு தேவையில்லாதது தான் அதை எல்லாம் உனக்காக தானே செஞ்சேன். இவங்களோட ராகவன் மாமாவ ஆக்சிடென்ட் பண்ணதுல இருந்து அந்த தியேட்டர்ல எழிலரசி கிட்ட பிரச்சனை பண்ணவங்கள காலி பண்றது வரைக்கும் எல்லாம் எனக்கு தேவையில்லாதது தான். அப்போ எல்லாம் எனக்கு தேவையானதா இருந்தது இப்போ தேவையில்லாதாதா மாறிடுச்சா. இத்தனைக்கும் ராகவன் யார்னு கூட எனக்கு தெரியாது அவருக்கு எப்படி ஆக்சிடெண்ட் ஆனதுன்னு தெரிஞ்சிக்க நான் விசாரிச்சப்போ தான் எனக்கு உண்மையே தெரியவந்தது. எத்தனையோ தடவ அது ஏன்னு நான் யோசிச்சிருக்கேன் ஒரு வேளை எழிலரசி கிட்ட உண்மைய சொன்னதுனால தான் அப்படி செஞ்சியோன்னு நினைச்சேன். எனக்கு எவ்வளவோ குழப்பம் இருந்த போதும் உன் மீது நம்பிக்கை வைச்சேன். இப்போ வரையிலும் அதைப் பத்தி நான் உன் கிட்ட கேட்டுருக்கேனா..? எல்லாத்தையும் விடு இயலரசியை இப்படி செய்ய உனக்கு எப்படிடா மனசு வந்தது..?" என அவன் கோபத்தோடு கேட்க அவ்வளவு நேரம் அவன் சொன்னதில் அதிர்ச்சியான எழிலரசியும் இயலாரசியும் திகைப்புடன் ராஜுவை பார்த்தபடி நின்றிருந்தனர்..

"அதெல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம் ராஜு முதல்ல எப்படி இங்க இருந்து தப்பிச்சு வெளில வந்தா அதை சொல்லு..?" என நெடுமாறன் ஒரு வேகத்துடன் கேட்க எழிலரசிக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்ததால் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்..

எழிலரசியும் நெடுமாறனும் அங்கிருந்து புறப்பட்ட பிறகு சொன்னபடியே சரியாக 7 மணியாக பத்து நிமிடம் முன்பு வந்து ராஜு மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டான். தான் எல்லாவற்றையும் நிறுத்திய பிறகு சிக்னல் செய்ததும் இயலரிசி இறங்கி வந்தால் போதும் என்றுதான் சொல்லி இருந்தான் ஆனால் அவள் முன்னமே இறங்கி செல்லவும் புரியாமல் அவளைப் பார்த்திருந்தான். அவள் போய் கதவில் கை வைத்தால் மொத்த திட்டமும் பாழாகிவிடுமே என அவசரமாக ராஜு அவள் பின்னே ஓட அவள் பாதி தூரம் செல்லும் போதே அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது..

இது எப்படி நடக்கும் என யோசனையுடன் ராஜு அப்படியே நின்றுவிட இயலரசியும் அதை எதிர்பார்க்கவில்லை. கதவின் அருகே சென்று மறைந்து நின்று கொள்ளலாம் என்று நினைத்துதான் அவள் சீக்கிரமாக கிளம்பி அங்கே சென்றிருந்தாள் ஆனால் அலாரம் அடிக்கவும் என்ன செய்வது என தெரியாமல் சட்டென்று ஓடிப்போய் கதவில் கை வைக்க அதற்குள் தன்வீர் ஓடி வந்து அவளை பிடித்து விட்டான். அலாரம் அடிக்க காரணமாக இருந்தது அங்கிருந்த ஒரு பூனை தான் அது மதில் மேலே ஏறி நின்றதில்தான் அலாரம் அடித்திருந்தது. இயலரிசி அவசரப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் மேலே சென்று அவளது அறையிலேயே முடங்கிக் இருக்கலாம். இப்போது என்ன செய்வது என கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த ராஜூ தன்வீர் இயலரசியை அறையவும் ஓடிப்போய் அவனை தடுத்து நிறுத்தினான். அதன்பிறகு தான் போனில் வந்த மெசேஜை பார்த்துவிட்டு நெடுமாறன் அங்கே வந்து சேர்ந்தது..

இதை முழுவதுமாக சொல்லவில்லை என்றாலும் சொன்னதை வைத்து இப்படித்தான் நடந்திருக்கும் என எழிலரசி யூகித்துக்கொண்டாள். இப்போது ராஜூ கோபத்துடன், "நீ எழிலரசி கூட சந்தோசமா வாழனும்னு தான் நீ சொன்னதெல்லாம் செஞ்சேன். எனக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்கு அதை நல்லபடியா நீ வாழணும்னு நினைச்சேன். இது தான் நீ அவ கூட சந்தோஷமா வாழுற லட்சணமா..? இயலரிசியை கொடுமைப்படுத்தினா எழில் எப்படி உன் கூட சந்தோஷமா வாழுவா. அந்த அளவுக்குக் கூட யோசனை இல்லாம உன் புத்தி மழுங்கிப் போயிடுச்சா..? காலம் பூரா இப்படி மிரட்டியே உன்னால அவகூட வாழ்ந்திட முடியுமா..?" என நெடுமாறனையே கூர்மையாக பார்த்தபடி கேட்டான்..

எப்போதும்போல பின்னந்தலையை தட்டிக் கொண்ட நெடுமாறன், "இப்போ நீயும் இயல் கூட சேர்ந்துட்டியா ராஜு..? என்ன உனக்கு காதல் கண்ணை மறைக்குதா..? அவதான் என்கிட்ட இருந்து எழிலை பிரிக்க முயற்சி பண்றான்னு நினைச்சா இப்ப நீயும் அவ கூட சேர்ந்துட்டியா..? எழில் என்கூட இருக்கணும்னு தான் இவ்வளவும் செய்றேன் அது உனக்கு புரியலையா..?" எனக் கேட்டான்..

"புரியுதுடா ஆனா அவ உன் கூட பாசத்துலயும் அன்புலயும் இருக்கணுமே தவிர இப்படி பயத்துலயும் நடுக்கத்துலயும் இருக்க கூடாது அத நீ புரிஞ்சுக்கலயே..?"

"அப்படித்தானேடா இருந்தா. இந்த இயல் இங்கே வரதுக்கு முன்ன வரையிலும் என்னோட பிரின்சஸ் அப்படித்தானே இருந்தா. எல்லாம் இவளால தான் இவ மட்டும் வரலைன்னா நாங்க எப்பவும் போல சந்தோஷமா இருந்திருப்போம். நான் எழில் மேல உயிரையே வச்சிருக்கேன் அவளைப் பார்த்ததிலிருந்து அவளை எந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன்னு மத்தவங்களுக்கு தெரியுதோ இல்லையோ உனக்கு தெரியுமே..? எப்படியெல்லாம் அவ கூட சந்தோஷமா வாழணும்னு கனவு கண்டுருப்பேன் ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் கலைச்சுட்டு போயிட்டாளே. அந்த கோபத்துல தான் அவளை யார் என்ன செஞ்சாலும் எனக்கு இரக்கமே வரமாட்டேங்குது", என இயலரசியையே வெறியுடன் பார்த்தபடி சொன்னான்..

அவன் பார்வையில் உள்ளுக்குள் பரவிய குளிருடன் அவள் எழிலரசி பின்னால் மறைந்து நின்று கொண்டாள். இதற்குமேல் நெடுமாறனிடம் பேசிப் பயனில்லை என புரிந்து கொண்ட ராஜு முதலில் இயலை நல்லபடியாக உள்ளே அனுப்பி வைப்போம் என நினைத்தான்..

"சரி முதல்ல இவங்க ரெண்டு பேரையும் உள்ள அனுப்பி வை அதுக்கப்புறம் எதா இருந்தாலும் பேசிக்கலாம்", என அவன் சொல்ல நெடுமாறன் முடியாது எனும் விதமாக தலையசைத்தான்..

ஏன் என புரியாமல் பார்த்த ராஜுவிடம், "இனிமே இவள இங்க வைக்கிறது நல்லதுக்கு இல்லடா உடனே வேற எங்கேயாவது அனுப்பி வைக்கணும்", என சொல்ல தன்வீரைத் தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர்..

"என்னடா சொல்ற எங்க அனுப்பி வைக்கப் போற..?"

சற்று யோசித்தவன், "இப்போதைக்கு நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கட்டும். அடுத்த வாரத்துல இவள தீவுல இருக்க நம்ம வீட்டுக்கு மாத்திடலாம்", என சொல்ல மீண்டும் திகைப்புடன் எல்லோரும் அவனை பார்த்தனர்..

"அங்கயா அங்க எதுக்குடா..?"

"இல்லடா இனி இவள இங்க வச்சா சரிவராது.."

தயக்கத்துடன், "இனி அவ எங்கேயும் போகாம கவனமா பார்த்துக்கலாமேடா..?" என தன்னால் முடிந்த வரை ராஜு அவனை தடுத்து பார்த்தான் ஆனால் நெடுமாறன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்..

"ஒவ்வொரு நாளும் இவ எப்படி தப்பிச்சு போவாளோ எப்ப எங்கிட்ட இருந்து எழில பிரிச்சி கூட்டிட்டு போவாளோன்னு பயந்துகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. நம்ம தீவுல இருக்க வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டா அவளால கண்டிப்பா அங்க இருந்து எங்கயும் தப்பிக்க முடியாது", என சொல்ல வந்ததிலிருந்து இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் எல்லோரும் அதிர்ந்தார்கள். இப்படி ஏதாவது செய்வான் என்று தானே இந்த திட்டத்தை சொதப்பி விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தது இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே. அடுத்து யாருக்கும் என்ன செய்வது என புரியாமல் இருக்க நெடுமாறன் தன்வீரிடம் கண்ணை காட்டினான்..

அவன் வேகமாக வந்து இயலரசியை பிடித்து தரதரவென இழுத்து செல்ல அவள் வர முடியாது என அவனுடன் போராடினாள். அவனை உதறி தள்ளியதில் தரையில் போய் விழுந்து விட்டாள் ஆனால் அவன் தரையில் விழுந்த அவளது கையை மட்டும் பிடித்து இழுத்து செல்ல உடல் முழுவதும் தரையில் உராய்ந்தபடி அவள் கதறுவதையும் பொருட்படுத்தாமல் தன்வீர் அவளை இழுத்துச் சென்று காரில் தள்ளினான். இயலரசி படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் அவள் பின்னே ஓடி சென்று தன்வீர் கையை விடும்படி எழிலரசி எவ்வளவோ போராடியும் அவன் அவளை தரையில் போட்டு இழுத்து சென்றான். இயலின் கால்கள் தரையில் உரசி ரத்தம் வழிவதைப் பார்த்து அதற்குமேல் முடியாமல் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து எழிலரசி கதறத் தொடங்கினாள்..

அவள் எவ்வளவோ போராடியும் தன்வீர் அவளை காரில் ஏற்றுவதை தடுக்க முடியவில்லை. இருவரையும் கண்டு ராஜுவுக்கு வேதனையாக இருந்தாலும் இப்போது போய் தடுத்தால் நிச்சயமாக நெடுமாறனுக்கு தன் மீது சந்தேகம் வந்துவிடும் என்பதால் அமைதியாக இருந்தான். தன்வீர் அவளை காரில் ஏற்றியதும் தானும் நெடுமாறனிடம் கெஸ்ட் ஹவுஸ் செல்வதாக சொல்லிக்கொண்டு வேகமாக அவர்களோடு சேர்ந்து காரில் ஏறிக்கொண்டான். இப்போதைக்கு ராஜூவை நெடுமாறனால் தடுக்க முடியாது என்பதால் அவனும் எதுவும் பேசாமல் சரி என தலையாட்டினான்..

அவர்கள் எல்லோரும் சென்ற பிறகும் எழிலரசி தன் கதறலை நிறுத்தவில்லை அவள் அருகில் வந்த நெடுமாறன் ஒரு பெருமூச்சுடன் அவள் தோளைத் தொட அவன் கையை வேகமாக தட்டி விட்டவள் அவனை எரித்து விடுவது போல பார்த்தாள்..

வேகமாக எழுந்து அவன் காலரை பிடித்து உலுக்கியவள், "இப்போ உனக்கு சந்தோஷம்தானே..? பாவி..! என் வாழ்க்கை, என் சந்தோஷம், என் நிம்மதி எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைச்சிட்டியே இதற்காகவா உன்னை காதலித்து கல்யாணம் செய்தேன். சின்ன பிள்ளை அவள் அவளை இப்படி செய்ய உனக்கு எப்படி மனசு வருகிறது நீ எல்லாம் மனிதனே கிடையாது மிருகம்" எனக் கை ஓயும் வரை அவனை அடித்து தீர்த்தவள், "ஐயோ..! பெரிய தவறு செய்து விட்டேனே இப்படி ஒருவனை காதலித்து நான் தான் இக்கட்டில் மாட்டிக்கொண்டால் என் தங்கையையும் மாட்டி வைத்து விட்டேனே", என தன் தலையில் அடித்துக்கொண்டு கதறித் தீர்த்தாள்..

அவளையே வலியும் வேதனை சுமந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக சிம்பா ஓடிவரவும் சுதாரித்துக் கொண்டான். எழிலரசி அவனை அடித்ததை பார்த்து அது அவளைத் தாக்க வருகிறது என்பதை புரிந்து கொண்டு "நோ சிம்பா..!" என அவன் கத்தவும் அது அவள் மேல் பாயவும் சரியாக இருக்க சட்டென்று அவளை தள்ளி விட்டு அவன் குறுக்கே வர அவன் மீது பாய்ந்து இருந்தது. அவனைப் பார்த்ததும் கடிக்காமல் விட்டுவிட்டாலும் சிம்பா அவன் மேல் பாய்ந்ததில் அதன் கால்களில் இருந்த கூர்மையான நகங்கள் கீறி அவன் உடலில் ரத்தம் வழிந்தது..

எழிலரசி அது எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஆனால் சீட்டாவை அவன் தடுத்து நிறுத்தியதில் அவனிடம் கோபமாக திரும்பினாள்..

"ஏன் அதை தடுக்குற அதாவது என்னை கொன்னு போடட்டும். அப்படி ஏதாவது நடந்து இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முடிவு வரட்டும். நான் உயிரோட இருக்கிற வரையிலும் என்னால எல்லாருக்கும் கெடுதல் தான். இப்போ மட்டும் என்ன கெட்டு போச்சு இப்போவே போய் நான் ஏதாவது பண்ணிக்கிறேன் அப்பதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும்", என அவள் எழுந்து ஓட மேலிருந்த சிம்பாவை தள்ளி விட்டு அவனும் அவள் பின்னால், "நோ பிரின்சஸ்..!" என்றபடி ஓடி வந்தான்..

வேகமாக ஓடிவந்து அவளை பிடித்து தடுத்து நிறுத்தியவனை திரும்பி முறைத்தவள், "மரியாதையா கையை விடு என்ன ஆனாலும் என்னை உன்னால தடுக்க முடியாது" என கத்தினாள்..

அவளிடம் இனி பொறுமை வேலைக்காகாது என புரிந்து கொண்ட நெடுமாறன், "இங்க பாரு பிரின்சஸ் உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அதுக்கப்புறம் நான் யாரையும் விடமாட்டேன். உனக்காக மட்டும் தான் இயல கொடுமை பண்ணாலும் உயிரோட வச்சிருக்கேன். உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அதுக்கப்புறம் உன் தங்கச்சிய மட்டும் இல்ல உன் குடும்பம் உனக்கு நெருக்கமானவங்க யாரையும் உயிரோட விடமாட்டேன்", எனக் கண்களில் ஒருவிதமான வன்மத்துடனும் வெறியுடனும் அவன் சொல்ல எழிலரசி திகைத்துப் போய் அப்படியே நின்றிருந்தாள்..

அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாலும் அவள் வெறித்த பார்வையை மட்டும் மாற்றாமல் அப்படியே இருந்தாள். எப்படியும் தப்பித்தே ஆக வேண்டும் என்ன செய்தாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் அதுவும் இயலரசியை இங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு முன் நடந்து முடிந்தாக வேண்டும்..

******************

முகிலனுக்கு அவன் ஆட்களின் மூலம் தகவல் சென்று விட்டது. அவர்கள் போவதற்கு முன் அலாரம் அடித்ததால் சுதாரித்து அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார்கள். உடனே அவர்களை சென்று பார்க்கவேண்டும் எனத் தோன்றினாலும் இப்போதைக்கு அங்கே சென்றாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பெருமூச்சுடன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நேராக தன் மேலதிகாரியை பார்க்கப் போனான். இந்த முறை எஸ்பியிடம் செல்லாமல் நேராக ஐஜியிடம் சென்றான். எஸ்பி நெடுமாறன் ஆள் என்பது ஏற்கனவே முகிலனுக்கு தெரியும்..

முரளிதரன் ஐஜிக்கு வேண்டியவன் அவன் சாவில் நெடுமாறன் மேல் சந்தேகம் இருந்தாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் அவனை கைது செய்ய முடியவில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்தவுடனே ஐஜியும் அவனை அர்ரெஸ்ட் செய்ய வாரண்ட் கொடுத்து விட்டார். அங்கிருக்கும் இரண்டு பெண்கள் உயிருக்கு ஆபத்து இயலரசி எப்படி இருக்கிறாள் என தெரியவில்லை. அதனால் உடனே செல்ல வேண்டாம் நான் சென்று முதலில் நிலைமையை பார்த்துவிட்டு பிறகு எதுவாக இருந்தாலும் செய்யலாம் என சொல்லி விட்டான்..

ஐஜியும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து கொள்ள சொல்லிவிட்டார். அதனால் அவனை கைது செய்வதில் பெரிதாக பிரச்சனை இருக்காது ஆனால் அதற்கு முன் எழிலரசியும் இயலரசியும் பத்திரமாக மீட்க வேண்டும்..
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,145
Location
Salem
Mattikitangala Iyal....😱
Oru poonai aala plan veena pochu....☹
Unmaya Ezhil um Iyal um pavam....🥺

Maran romba Cunning ah irukaru....😨
Avaruku thevai treatment....
But avar panradha patha avaruku ena aagumo....🙄
Avaruku oru nalla situation la valarra chance kedchirundha nalla paiyan ah irundhurupar la .....😕

Avar panradhuku kandipa iruku....😑
Modhal ah avar nadandhutadhu, pesanadhulam nenacha avara ipd nu thonudhu....😱😔

Raju mattum ena panvaru....
Mukilan.... arreste warrant lam vangirukaru paklam....🤩
Ena agumo....😅

Nice Episode Dear....❤
 




Last edited:

PAPPU PAPPU

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
412
Reaction score
778
Location
india
டேய் முகிலா எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடு டா
 




Last edited:

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Mattikitangala Iyal....😱
Oru poonai aala plan veena pochu....☹
Unmaya Ezhil um Iyal um pavam....🥺

Maran romba Cunning ah irukaru....😨
Avaruku thevai treatment....
But avar panradha patha avaruku ena aagumo....🙄
Avaruku oru nalla situation la valarra chance kedchirundha nalla paiyan ah irundhurupar la .....😕

Avar panradhuku kandipa iruku....😑
Modhal ah avar nadandhutadhu, pesanadhulam nenacha avara ipd nu thonudhu....😱😔

Raju mattum ena panvaru....
Mukilan.... arreste warrant lam vangirukaru paklam....🤩
Ena agumo....😅

Nice Episode Dear....❤
மிக்க நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
டேய் முகிலா எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடு டா
மிக்க நன்றி sis..
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஐயோ இயல் மாட்டிகிட்டாலா 🙆🏻🙆🏻🙆🏻🙆🏻

இந்த பூனை வந்து பிளான் மொத்தத்தையும் குழப்பி விட்ருச்சே🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️, இனி எப்படி தப்பிப்பா, பாவம் தான் அவ🤧🤧🤧🤧

மாறா, நீ முதலில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ, இல்லைனா உன் பிள்ளைக்கு கூட ஆபத்து நேராலாம் டா புரிஞ்சுக்கோ டா🙄🙄🙄🙄

ராஜு நியாயமா பேசறான்👌👌👌👌

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
888
Reaction score
1,326
Location
Chennai
Ezhil kuda romance, iyalah kodumai panradhu repeat, excorts kuda sanda podra ezhil,mukhil kita help kekra ezhil repeat, azhugachi munchi ezhil,iyalamayil ezhil,edhuvume seya mudiyada Raju,ethavena seyya thuniyara nedhu Maran repeat
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
ஐயோ இயல் மாட்டிகிட்டாலா 🙆🏻🙆🏻🙆🏻🙆🏻

இந்த பூனை வந்து பிளான் மொத்தத்தையும் குழப்பி விட்ருச்சே🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️, இனி எப்படி தப்பிப்பா, பாவம் தான் அவ🤧🤧🤧🤧

மாறா, நீ முதலில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ, இல்லைனா உன் பிள்ளைக்கு கூட ஆபத்து நேராலாம் டா புரிஞ்சுக்கோ டா🙄🙄🙄🙄

ராஜு நியாயமா பேசறான்👌👌👌👌

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
மிக்க நன்றி sis..
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Ezhil kuda romance, iyalah kodumai panradhu repeat, excorts kuda sanda podra ezhil,mukhil kita help kekra ezhil repeat, azhugachi munchi ezhil,iyalamayil ezhil,edhuvume seya mudiyada Raju,ethavena seyya thuniyara nedhu Maran repeat
😃😃மிக்க நன்றி sis..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top