கவிஞன் ஆக்கினாய் என்னை

#1
கவிஞன் ஆக்கினாய் என்னை
- (வஞ்சி விருத்தம்)

கட்டழகி உன்னழகைக் கண்டதினாலென்
கண்மீதே எனக்கின்று காதல்வந்தது
பட்டுஇதழ் பட்டுவெளி வந்ததினாலென்
பெயரும்கூட வெகுவாக இனிக்கின்றது

காதலியாய் நானுன்னை பெற்றதினாலே
கண்ணாடி சொன்னபொய் புரிந்துபோனது
நீவந்து போகின்றாய் என்பதினாலே
நான்காணும் கனவுகளும் இளமையானது

உன்கைகள் என்கையைப் பிடித்ததினாலே
என்கையே எனக்கின்று அருமையானது
நங்கைநீ என்காதல் ஏற்றுக்கொண்டதால்
நண்பரிடை எனக்குமிக பெருமையானது

வஞ்சிபெயர் தன்னுள்ளே கொண்டதினாலே
வடமொழியும் என்மொழியாய் ஆகிப்போனது
கொஞ்சிபேசும் உந்தமிழைக் கேட்டபின்னாலே
கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் மறந்துபோனது

சித்திரமே நீயெனக்கு சொந்தமானதால்
செந்தமிழில் பாட்டெழுதும் புலமைவந்தது
கற்றறிந்த பெரியவர்கள் மத்தியிலேவோர்
கவியென்று எனக்குமொரு பெயரும்வந்தது

வீயார்
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
படிப்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது.
எதுகை மோனை கொஞ்சி விளையாடுகிறது.
தாளம் தப்பாத வார்த்தைப் பிரயோகம். மகிழ்ச்சி தம்பி.
வாழ்த்துகிறேன்... கவிஞரையும்... கவிஞர் ஆக்கியவளையும்.🌼🌼
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top