• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
எபிலாக்
nwdn_file_temp_1618388013427.jpg
“சில பேர் எந்த அளவுக்கு காதலிப்பாங்கன்னா அதுல அவங்களையே மறந்து போற அளவுக்கு.. அவங்களோட காதல் யாருக்காகவோ அவங்க ரொம்பவே சேஃபா இருப்பாங்க.. பிகாஸ் தேவைப்படுற அளவுக்கு காதல் கொட்டிக்கிடக்கும்.. இந்த வகையான காதலை பிரிக்கலாம்.. அழிக்க முடியாது.. சரியா ஹாண்டில் பண்ண தெரியலைன்னா கண்டிப்பா அழிவு தான்.. பட் என் விஷயத்துல காயத்துக்கு மருந்தா இருக்கும்னு தெரியும்.. பட் இவ்ளோ பெரிய சேஞ்சஸ் கொடுக்கும்னு எதிர்பார்க்கலை.. இவ்ளோ போராட்டத்துக்கு அப்புறம் அவன் குரலை கேட்டேன்.. நிஜமா?? பிரம்மையா?? யோசிக்க தோணலை.. பட் நான் அவனை பார்த்தேன்.. அதே சிரிப்போட எந்த சேஞ்சசும் இல்லாம.. சரி எனக்கு என்ன ஆச்சு?? அவனை மிஸ் பண்ணாத மாதிரி கேசுவலா நிக்குறேன்.. தெரியல”
-தாரா

அழைத்தவனின் மந்திர குரலில் மன்னவனென கண்டுகொண்டவளாக மெய்மறந்து பின்தொடர்ந்த தாரா வந்து சேர்ந்த இடம் வளர்ந்த கட்டிடத்தின் மேல்மாடி.. கால்கள் தன்னிச்சையாகவே நடந்து கட்டைச்சுவற்றின் அருகே நின்று கீழே எட்டிப்பார்த்தால் எட்டுத்திக்கும் எழிலாய் கிடந்தாள் பசுமையைப் போர்த்திக்கொண்ட பூமித்தாய்..
தென்றல் காற்று தேகத்தைத் தழுவிச்செல்ல, கலைந்த முடிக்கற்றைகளை காதோரமாய் ஒதுக்கிவிட்டு நின்றவளின் பின்னால் அவனின் சுவாசத்தை உணரத் தவறவில்லை..

“உடைக்குறதே உருவாக்குறதுக்காக தான்னு திரும்பவும் அதே பொய்யை சொல்லி என்னை திரும்பவும் கன்வின்ஸ் பண்ணிடாத ஆர்யன்.. இந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ணுறதுக்கு நான் இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கணும்..” என காற்றோடு கதைத்துக் கொண்டிருந்தாள் தாரா..

“கன்வின்ஸ் பண்றதுக்காக வரலை தாரா.. திரும்பவும் நாம ஸ்டார்டிங் பாயிண்ட்லேயே வந்து நிக்கிறோம்னு ஞாபகப்படுத்துறேன்..” என்ற குரலில் பட்டென திரும்பவும் அது பிரம்மை இல்லை.. அவனே தான்..

ஆனால் இன்னுமே பாதங்கள் பாறையாய் இறுகிட, துடித்த உதடுகளை நனைத்துச் சென்றது நயாகராவாய் கொட்டிய கண்ணீர் அருவி.. “ஆர்யன்..” என திக்கித் தடுமாறி உச்சரிக்க, அவனோ இருகரம் உயர்த்தி அழைத்தான்.. இந்த ஒரு கணம் போதாதா?? செட்டைக்குள் அடைந்திடும் கோழிகுஞ்சாய் மாறிட.. “இட்ஸ் ஓகே.. தாரா..” என மெலிதான புன்னகையோடு முதுகை நீவிவிட்டாலும் அவளின் கண்ணீருக்குத் துணையாக இவனின் கண்களும் கலங்கித் தான் போயிற்று..

“விட்டுட்டு போகணும்னு முடிவே பண்ணிட்டல்ல..” என விசும்பல்களுக்கு நடுவே கேட்ட தாராவின் முகத்தை மெல்ல கைகளில் ஏந்தினான்.. “ப்ச்.. தாரா.. டோன்ட் க்ரை..” என கண்ணீரை துடைத்து, “என்னோட வந்துடுறியா??” என கேட்டவனின் கண்களில் ஏக்கம் தழும்பியிருந்தது..

இதழ் விரித்து அழுகையைக் கட்டுப்படுத்தியவாறே “ம்ம்..” என சம்மதிக்க, அவன் எப்படி?? ஏன்?? வந்தான் என்ற கேள்விக்கு இடமின்றி போயிருந்தது.. வந்தது அவளின் மனதை வென்ற மணாளன் என்பது போதாதா??


எதுவுமே நடவாதது போல வந்த தாராவைக் கண்டதும் மெல்லிய முறைப்புடன் கம்ப்ளைன்ட் செய்வதற்காக ஸ்டேஷன் சென்ற சத்யதேவிற்கு அழைத்து தகவலை கூறினாள் பல்லவி.. பின், “எங்கே போயிருந்த தாரா??” என தொலைத்து விட்ட பதற்றத்தில் கடிந்திட, “வார்ட் பாய்க்கு ரூம் நம்பர் கன்பியூஸ் ஆகிடுச்சு போல.. ப்ச்.. பாவம்.. அப்படியே எனக்கும் ரிலாக்ஸா நடந்துட்டு வரலாம்னு தோணிச்சு.. சரி.. கிளம்பலாமா??” என அவள் பாட்டிற்கு சாதாரணமாக பேசிவிட்டு, கிளம்ப எத்தனித்தாள்..

எட்டி கையை பிடித்து நிறுத்திய பல்லவி, “தாரா, எனக்கு ஒரு விஷயம் சொல்லு.. கூட்டிட்டு போன வார்ட் பாய் வாய்ஸ் ஆர்யனை மாதிரி இல்லையா?? இல்லை அது ஆர்யனே தான்..” என உறுதியாய் கேட்கவும், “ஆர் யூ ஜோக்கிங்?? பல்லவி.. என்னை அரெஸ்ட் பண்ணினதும் எனக்காக நீ கோர்ட்ல ஆஜரானதும் ஆர்யன் மர்டர் கேஸ்ல தானே.. நான் தான் குழப்பிக்குறேனா??” என குழப்பிவிட்டாள் தாரா..

உண்மை என்றால் இந்நேரம் தாராவிடத்தில் சிறு சலசலப்பு தோன்றியிருக்க வேண்டும்.. ஒருவேளை ஆர்யனை பற்றிய பழைய நினைவுகளை பற்றி யோசித்து கொண்டிருந்ததனால் கூட பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.. என்று தலையை மெதுவாக தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பல்லவி..

சில நாட்களுக்கு பிறகு,

“பல்லவி, ஐ யாம் சாரி..”

“வேணாம் என்கிட்டே எதையும் பேசாத.. தாரா ப்ளீஸ்.. போயிடு..”

“கடைசியா ஒரு ஹக் கூட பண்ண மாட்டியா?? ஜஸ்ட் உனக்கு ஒரு ஹக்கும் எனக்கு ஒரு கிளாசும் எடுத்துக்கலாம்னு வந்தேன்..” என்ற தாரா கல்யாண கோலத்திலிருந்த பல்லவியின் அருகே தன்னுடைய ஆறுமாத வயிற்றைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்..

“இந்த சிக்ஸ் மந்த் உன்னோட சந்தோஷத்தை கெடுத்துட கூடாதுன்னு தான் சொல்லலை பல்லவி..” என அவளின் முகத்தை நிமிர்த்த, “வேற எப்படி ரொம்ப சந்தோஷமான நாள்ல சொல்லலாம்னு நினைச்சியா?? என் கல்யாணத்துல வந்து நிக்குற..” என்ற பல்லவி இன்னும் கோபமாகத் தான் இருந்தாள்..

“எனக்கு இது தான் சரியான நேரம்னு தோணிச்சு.. இதை விட்டா வேற நல்ல வாய்ப்பு கிடைக்காது..” என தாரா பேசிக்கொண்டிருக்கும் போதே, “எதுக்கு?? இப்படி சிக்ஸ் மந்த் ப்ரெக்னன்ட்டா இருக்குற நீ எங்க எல்லாரையும் விட்டுட்டு தூரமா போறதுக்கா??” என சிடுசிடுத்த பல்லவி திருப்பிக்கொண்டாள்..

அவளை தன்பக்கமாய் நகர்த்திய தாரா, “உங்களை பிரிஞ்சு போகணும்னு எல்லாம் ப்ளான் பண்ணிட்டு இல்லை.. பட் சிச்சுவேஷன் அப்படி அமைஞ்சிடுச்சு.. நான் ஆறுமாசமா இருக்குறேன்.. யாராவது என்னன்னு கேட்டா பதில்லை.. நான் மட்டும் இல்லை என்னை சுத்தி இருக்குறவங்களும் இதுல பாதிக்கப்படுவாங்க.. இன்க்ளூடிங் உன்னோட பியூச்சர்..” என இடைநுழைந்தாள் தாரா..

“அப்படி எல்லாம் யாரும் பேசிட முடியாது.. இதுனால எங்களுக்கு பிரச்சனைனு நானோ ஆஷிக்கோ சொல்லலையே..”

“இல்லை பல்லவி.. பட் இது தான் உண்மை.. எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு தான்.. அதனால இங்க எதுவும் மாறப்போறதில்லை.. அதுக்கு நான் இங்க இருந்து கிளம்புறது தான் சரி.. ஏற்கனவே என்னை ப்ரோடேக்ட் பண்றதுக்காக நீ உன்னோட லைப்ல வேற எதுலேயும் கான்சன்ரேட் பண்ணவே இல்லை.. இப்ப ஆஷிக் வந்தாச்சு.. உன்னோட லைபை நீ சந்தோசமா வாழ்ந்து தான் ஆகணும்.. இதுவரைக்கும் நான் அவுட் ஆஃப் கண்ட்ரோல் போகும் போது சமாளிச்சீங்களே தவிர ஹாஸ்பிடல்ல அடைச்சிடல.. அதுக்காக நான் ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..” என எடுத்து கூறிக்கொண்டிருந்தாள் தாரா..
“அதுக்கு உன்னோட எந்த ப்ராப்பர்ட்டியும் தேவை இல்லை..” என வாங்க மறுத்த பல்லவியின் தோள்களில் கரம் வைத்த தாரா, “இந்த உலகத்துல சினிமாக்கள்ல காட்டுற காதல் யார்மேல வேணா வரலாம்.. பட் என்னோட உண்மையான காதல் இந்த பல்லவி மட்டும் தான்.. எந்த சிச்சுவேஷன்லயும் விட்டுட்டு போகாம எனமேல நம்பிக்கை வச்சு சப்போர்ட் பண்ணி இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணினது நீதானே.. ஆர்யனோட வீடு ப்ளஸ் என்னோட பிளாட்டை உன் பேருக்கு மாத்திட்டேன்.. உள்ளே நம்மளோட திங்க்ஸ் எல்லாமே இருக்குது.. உன்னோட மேரேஜ் கிப்ட்டா தான் தர்றேன்.. எல்லாம் சரியாகிடும் பல்லவி..” என தாரா கூறிக்கொண்டிருக்கும் போதே பல்லவி வாயை பொத்திக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.

பின் இருவரும் இறுதியாக இரண்டு கிளாஸ்கள் நிதானமாக அருந்திவிட்டு ஒரு அணைப்போடு தாரா விடைபெற்றுக்கொள்ள, “குட் பை சொல்ல மாட்டேன் தாரா.. நீ திரும்பி வரணும்..” என்றாள் பல்லவி பிரியா விடையுடன்..

ஆர்யன் கூறியபடியே இந்த ஆறுமாதங்கள் பல்லவியோடு நாட்களை கழித்த தாரா, இங்கிருந்தால் பழைய நினைவுகளே வந்து செல்வதால் தூரதேசம் செல்வதாய் கூறிக்கொண்டு விடைபெறுகிறாள் ஆஷிக்-பல்லவி திருமணத்தன்று.. பல்லவியை சமாளிப்பதை விட சத்யதேவ் தான் மிக பெரிய அதகளமே செய்துவிட்டார்.. ஊரின் எல்லையில் காத்திருந்த ஆர்யன் அவளோடு காரில் ஏறிக்கொள்ள, அவர்களின் காதல் பயணம் விட்ட இடத்தில் இருந்து துவங்கியது..

சில வருடங்களுக்கு பிறகு,

மேஜையில் ஒரு காகிதத்தை வைத்துவிட்டு மூச்சிரைத்த ஆஷிக்கை ஆயாசமாய் நோக்கிய பல்லவி.. ‘பாரு’ என கண்களாலேயே கூறவும், எடுத்து வாசித்தவளுக்கு எதுவும் பிடிபடவில்லை..

“தெளிவா பாரு பல்லவி..”

“புதுசா குழந்தை பிறந்தவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்குறாங்க..” என்ற பல்லவி குறும்பாய் முறைக்க, “ப்ச்.. அதில்ல.. நடத்துறவங்களை கவனி.. மிஸ்டர்.சைக்கியார்டிஸ்ட, மிசஸ்.ப்ரொபசர்.. கிளம்பி போன தாராவை இப்ப வரை காண்டாக்ட் பண்ணவே முடியலை.. அது மட்டுமில்லை.. அவந்திகா கூட கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு இன்டர்ன்ஷிப் போயிருக்குறது கூட இதே ஏரியாவுக்கு..” என கூறவுமே விஷயம் புரிந்தது..

அடுத்த நாளே, சத்யதேவோடு மூவரும் குறிப்பிட்ட இடத்தை அடையும் பொழுது சில பெற்றோர்கள் வெளியில் காத்திருந்தனர்.. பல்லவி-ஆஷிக் தம்பதிகளாக பதிவு செய்து உள்ளே நுழைந்திட, தனியே வந்த சத்யதேவ் பாவமாய் மாட்டிக்கொண்டார்..

“ஹே.. அதிரா.. அதீஈ..” என அழைத்து கொண்டே தத்தி தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையை பிடிக்க வந்த அவந்திகாவை கவனித்து விட்டார் சத்யதேவ்.. எதிர்பாரா சமயத்தில் தந்தையை அங்கு காணவும் “ப்பா..” என ஒட்டிக்கொண்டு, “இது அதிரா.. தாரா ஆண்ட்டி பொண்ணு..” என அறிமுகமும் செய்தாள்..

“தாரா இங்கேயா இருக்குறா??” திகைத்த சத்யதேவ், “ஆஷிக்கும் பல்லவியும்.. ஹோ ஷிட்..” என அலறிக்கொண்டு உள்ளே ஓடினார்.. “ப்பா..” என அவந்திகாவும் பின்னாலேயே ஓடிவர, ஒரு அறையில் எப்பொழுதோ ஆர்யனையும் தாராவையும் கண்டுபிடித்து குற்றவாளி போல நிறுத்தியிருந்தனர் போலீஸ் புருஷனும் வக்கீல் பொண்டாட்டியும்..
இறந்து போனதாய் நம்பிய ஆர்யன் உயிரோடு முழுஉருவமாய் அங்கு நிற்க, சத்யதேவிற்கு நெஞ்சுவலி வராத குறை தான்.. “தாரா.. வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்??” என அதட்டலோடு பல்லவி வினவ, “ஆர்யனோட கவுன்சலிங்..” என்ற தாராவை அப்படியே ஒரு அறை விடலாம் போலிருந்தது..

“அதுக்காக தான் நீ எங்க போறன்னு கூட டீட்டெயில்ஸ் சொல்லாம அவ்ளோ அவசரமா கிளம்பி போனியா?? இதெல்லாம் என்ன தாரா?? நேம் சொல்லாம அவன் ஸ்க்ரீன்க்கு பின்னாடியும் நீ ஸ்க்ரீன்க்கு முன்னாடி அவனுக்கு கவர்அப் ஸ்டோரி நீ எழுதுற.. நீ இன்னும் ஒப்பன்அப் ஆகலை தாரா??” ஒரு தோழியாக பல்லவி படபடத்துக் கொண்டிருக்க, “வெல், ஆர்யன் இன்னும் சாகலை.. ரைட்.. பட் ஆதி ஆர்யனை கொலை பண்ணிட்டதா சொல்லி ஆதியை தாரா கொலை பண்ணிட்டாங்க.. இது என்ன லாஜிக்??” என சரியான கேள்வியை எழுப்பினான் ஆஷிக்..

“நோ.. நோ.. ஆர்யன் உயிரோட இருக்குற விஷயம் எனக்கு ஹாஸ்பிடல்ல வச்சு தான் தெரியும்.. எனக்கே இது ஷாக் தான்?? எல்லாமே அன்எக்ஸ்பெக்டட்டா நடந்தது தான்..” என்று தாரா முன்வர, “இல்லை.. இந்த எக்ச்கியூசஸ்க்கு முன்னால எனக்கு வேண்டியது எல்லாம் ஆர்யன் உயிரோட இருக்குறது.. இது எப்படி பாசிபிள்?? ஆர்யன் நீங்களே சொல்லிட்டா நல்லா இருக்கும்.. ப்ளீஸ்..” என கறாராகக் கேட்டான் ஆஷிக்..

ஆர்யனோ கதவருகே நின்றிருந்த அவந்திகாவை, “பாப்பாவை நர்சரிக்கு கூட்டிட்டு போ அவந்தி..” என அனுப்பிவிட்டு, தொடர்ந்தான்..

“ஆக்சுவலா அன்னைக்கு பார்ட்டியில இருந்து கிளம்பின நான் வீட்டுக்கு போகும் போது பேக்சைட்ல இருந்து அகில் குதிக்குறதை பார்த்தேன்.. சோ காரை பாதியிலேயே நிறுத்திட்டு வேகமா போய் பார்க்கும் போது எங்களுக்குள்ள நடந்த ஆர்கியூமென்ட்ல அகிலை அட்டாக் பண்ணிட்டேன்.. சண்டை போடும் போது அகிலோட தலை லேம்ப்ல மோதிடுச்சு.. அந்த டைம் என்னை கன்வின்ஸ் பண்றதுக்காக தாரா வரவும் என்ன பண்றதுன்னு தெரியாம அகிலை கபோர்ட்ல வச்சு லாக் பண்ணிட்டு வெளிய வரும்போது நெர்வஸா இருந்தேன்.. தாரா கொஞ்ச நேரத்துலேயே கிளம்பிடவும் அவசரமா மேல வரும்போது அகில் பின்னாடி இருந்து என்னை அடிச்சு அதே கபோர்ட்ல லாக் பண்ணிட்டான்..”

“தாராவை பாலோ பண்ணிட்டு வந்த ஆதி உள்ளே நுழையும் போது சடனா பவர் கட் ஆகிடுச்சு.. சேம் ஹைட் அண்ட் வெயிட்ல இருக்குற அகிலை நான்னு நினைச்சு கொலை பண்ணிட்டான்.. ஆதி பண்ணின அதே தப்பை தாராவும் ரிப்பீட் பண்ணினா.. ஏற்கனவே இரத்தவெள்ளத்துல மிதந்துக்கிட்டு இருந்த அகிலை ஆத்திரமா குத்திட்டு வேகமா கிளம்பி போயிட்டா.. அடுத்ததா வந்த சத்யதேவ் சார் கூட பிங்கர்பிரிண்ட்க்கு பயந்து அந்த இருட்டுல குப்புற கிடந்த அகிலை திருப்பி பார்க்கவே இல்லை.. மார்னிங் போலீஸ் வர்றதுக்குள்ள அகிலை மாத்திட்டு செத்தவன் போல செட்அப் பண்ணிட்டு அந்த இடத்துல நான் இருந்தேன்.. தென் மார்ச்சுவரில மிக பெரிய போர்ஜரி வேலையே செஞ்சு அகிலோட பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி ரிப்போர்ட் சென்ட் பண்ணினோம்.. பியூனரல்ல நான் இறந்துட்ட மாதிரி ட்ரக்ஸ் செட் பண்ணினாங்க.. எல்லாரும் கலைஞ்சதுக்கு அப்புறமா அகிலை அடக்கம் செஞ்சோம்...” என நடந்த அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தான்..

“வெயிட், ஒரு நிமிஷம்.. சட்டத்தை ஏமாத்தி ஆள்மாறாட்டம் பண்ணியிருக்குறீங்க.. அண்ட் அகிலோட பிளைட் டிக்கெட் புக் பண்ணினது கூட நீங்க தான் இல்லையா??” என ஆஷிக் சந்தேகமாய் வினவ, “அப்படியும் சொல்லலாம்.. பிகாஸ் ஆதியோட இருக்குறது தான் தாராவுக்கு பெர்பெக்ட்னு நான்நினைச்சேன்.. அன்னைக்கு நைட் ஆதி என்னை மர்டர் பண்ண வரலைன்னா கூட நானே கிளம்பியிருப்பேன்.. நான் இல்லைன்னு தெரிஞ்சா தாரா எதார்த்தத்தை புரிஞ்சிப்பான்னு நினைச்சோம்.. எங்களோட ஸ்டோரியை எடுத்து சொன்னதும் என்னோட பிரெண்ட்ஸ் டாக்டரா இருக்குறவங்க எனக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்டாங்க.. பியூச்சர்ல எந்த ப்ராப்ளம் வந்தாலும் அதுக்கு நானே ரெஸ்பான்சிபிள்னும் கடைசி வரை என்னோட ஐடன்ட்டிட்டியை யாருக்கும் காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன்..” என விளக்கினான் ஆர்யன்..

“ஆர்யனுக்கு சில விஷயங்கள் புரியவே இல்லை.. திரும்பி வந்த ஆதிக்கு என்மேல லவ் இருந்த மாதிரி எல்லாம் தெரியலை.. அவனை பொறுத்தவரை நான் அவனில்லாம வாழமுடியாது.. அவன் கோபப்பட்டாலும் நான் கோபப்பட்டாலும் நான் ஹர்ட் ஆகிடுவேன்.. அவனை தவிர வேற உலகமே இல்லைன்ற பழைய கான்செப்ட்லையே நான் இருப்பேன்னு யோசிச்சான்.. பட் தலைகீழா திரும்பவும் அகைன் என்னை அவன் கண்ட்ரோலுக்கு கீழே கொண்டு வரணும்னு யோசிச்சானே தவிர என்னோட கான்சென்ரேஷன் எப்படி இருக்குதுன்னு யோசிக்கவே இல்லை.. ஆக்சுவலா நான் ஆதிக்கிட்ட பொறுமையா எடுத்து சொல்லி புரியவைக்கலாம்னு தான் யோசிச்சேன்.. பட் எப்ப அவன் என்கிட்டே நல்லபடியாவும் ஆர்யன் விஷயத்துல வன்மத்தையும் காட்ட ஆரம்பிச்சானோ அப்பவே எனக்கு நம்பிக்கை விட்டு போச்சு.. எங்களுக்குள்ள நடந்த கன்பியூஷன்ஸ்ல அவன் ஒரு கேரக்டரே கிடையாது.. ஆர்யனை கொன்னுட்டு என்னோட அட்ட்டேன்ஷனை வாங்க நினைச்ச்சப்போவே முடிவு பண்ணிட்டேன்.. மே பி அவன் ஆர்யன் மேல கைவைக்காம இருந்திருந்தா நானும் அப்படி ஒரு விஷயத்தை பண்ணியிருக்க மாட்டேன்..” என தாரா முழுநீள விளக்கத்தைக் கொடுக்க, “உங்களோட நியாயத்தை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த முடியாது தாரா..” என திருத்தினான் ஆஷிக்..

“எஸ் ஆஷிக்.. முடியாது தான்.. பட் பிரச்சனையில சம்பந்தமில்லாத அகிலை கொலை பண்ணின ஆதி அவனோட முடிவை அவனா தான் தேடிக்கிட்டான்.. அன்னைக்கு அவன் நினைச்சிருந்தா அந்த பிளாஸ்ட்டை ஸ்டாப் பண்ணியிருக்கலாம்.. பட் இல்லை.. சோ இதுல நான் கொலைகாரின்னு அவளோ ஈசியா சொல்லிட முடியாது.. கோர்ட், கேஸ்னு போனா எங்க பிரச்சனையில உங்களோட வாழ்க்கையும் கெட்டுப்போகும்..” என்ற தாரா கிட்டத்தட்ட மறைமுகமாக எச்சரிக்கவே செய்தாள்..

“அதிரா??” என மிதமுக்கியமான ஒரு கேள்வியை பல்லவி எழுப்ப, “என்னோட குழந்தை பல்லவி..” என ஆர்யன் கையுயர்த்தவும் அடுத்தடுத்து தரும் அதிர்ச்சிகளை தாங்க முடியாமல் தடுமாறி உட்கார்ந்து விட்டாள் பல்லவி.. “தாரா.. வாட் இஸ் திஸ்??” என கேட்ட பல்லவி இவ்வளவு நாட்களாய் ஆதியின் குழந்தை என்றே நினைத்திருந்தாள்..

“பல்லவி, ப்ளீஸ்.. அப்படி பார்க்காத.. தாரா இஸ் நாட் சீட்டிங் டைப்.. யூ நோ??” என அவளுக்காக ஆர்யன் துடிக்க, “ஆர்யன்.. ப்ளீஸ்..” என நகர்த்திய தாரா அவளின் முன்னே முட்டிமடித்து, “பல்லவி, உனக்கே தெரியும்.. ஹவ் மச் ஐ லவ் ஆர்யன்னு.. நீங்க ரெடி பண்ணின மேரேஜ் ப்ளான், டிவோர்ஸ் பேப்பர்ஸ் எதுவுமே என்னை தடுக்கலை.. நான் திரும்பவும் ஆர்யனை தேடி போகும் போது.. நான் அப்பவும் இப்பவும் மிசஸ்.தாரா ஆர்யனா தான் இருக்குறேன்.. முழுசா அப்படியே தான் சொந்தமானேன்.. தட் கல்சுரல்ஸ் ட்ரிப்..” என நிறுத்திவிட்டு, “ஆர்யன் இறந்ததுல எனக்கு எந்த வருத்தமும் இல்லைன்னு காட்டிக்குறதுக்காக ஜஸ்ட் நடிச்சேன்.. ஆதி அண்ட் எனக்குள்ள எந்த இன்டிமசியும் இருந்ததில்லை.. அவன் என்னை நெருங்கி வந்திருக்கலாம்.. பட் நான் இல்லை.. ஆப்டர் மேரேஜ், ஆதியோட நான் என்னோட லைபை ஸ்டார்ட் பண்ணலை..” என்றாள்..

இதுகுறித்து யார் என்ன பேசினாலும் அவள் கவலையுறப் போவதில்லை.. அவளுடைய கணவனோடும் குழந்தையோடும் அவள் வாழப்போகிறாளே தவிர ஊராரின் முன் உருவபொம்மையாய் அல்ல என்பதும் பல்லவிக்கு நன்கு புரியும்.. இவ்வளவு தூரம் விளக்குகிறாள் என்றால் தான் வேண்டபட்டவளாய் அதே நேரம் விலகி இருக்க நினைப்பவளாயும் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டாள் பல்லவி..

“எப்படி முடியும் தாரா?? அன்னைக்கு நைட்டே கொலைகாரனா வந்து நின்னானே..” என சத்யதேவ் உணர்ச்சி பெருக்குடன் பேச, “பட் நான் திரும்பவும் இதை பத்தி பேச விரும்பலை.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணின ஒரு அமைதியான வாழ்க்கையும் அழகான குடும்பமும் எல்லாருக்கும் கிடைச்சிருக்குது.. இதை இழக்க விரும்பல.. அப்புறம் ஆஷிக் சார்.. நீங்க கேஸ் ரீஓப்பன் பண்ணினாலும் ஐ டோன்ட் கேர்.. இந்த வாழ்க்கைக்காக இவ்ளோ போராட தெரிஞ்ச எனக்கு இதை காப்பாத்திக்க எந்த எல்லைக்கும் போக முடியும்..” என படபடவென பொரிந்து தள்ளிய தாரா வேகமாக அங்கிருந்து ஓடினாள்..

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. இதுல இருந்து மூவ்ஆன் ஆகுறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்.. பட் கண்டிப்பா மூவ்ஆன் ஆகிடுவோம்.. அட்லீஸ்ட் நம்ம எல்லாருக்கும் ஹாப்பி எண்டிங் கிடைச்சுதே..” என வெற்றாய் பெருமூச்சிட்ட பல்லவி, “ஐ வில் ஜஸ்ட் டேக் எ வாக்..” என கிளம்பி விட்டாள்..

“நான் தாராகிட்ட பேசிட்டு வர்றேன்..” என ஆர்யனும் நழுவிக் கொள்ள, சத்யதேவும் ஆஷிக்கும் தனித்து விடப்பட்டனர்.. “ஆர்யன் ஸ்டில் அலைவ்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா??” என ஆஷிக் மெல்ல பேச்சைத் துவங்க, “நோ ஆஷிக்.. அவந்திகா ஆர்யன் கிட்ட இருக்குறான்னு கூட தெரியாது.. அவங்களோட வாழ்க்கையை எந்த தொந்தரவும் இல்லாம வாழணும்னு ப்ளான் பண்ணியிருக்குறாங்க..” என தோள்களை குலுக்கிக் கொண்டார் சத்யதேவ்..

“ஆர்யன் இறந்துட்டதா சொல்லி ஆதியை பழி வாங்கின தாரா சரின்னு சொல்ல வர்றீங்களா??” என ஆஷிக் சத்யதேவை நோக்க, “எனக்கு சொல்ல தெரியலை.. தாரா மே ரைட் ஆர் ராங்... பட் ஒரு விஷயம் உண்மை.. ஒரு டெஷிஷனோட எபெக்ட்ஸ பேஸ் பண்ற தைரியம் இருந்தா யார் வேணா என்ன முடிவை வேணா எடுக்கலாம்.. ஆர்யன் தாராவோட டிஷிஷன்..” என்றார்..

“ம்ம்..” என தலையசைத்துக் கொண்ட ஆஷிக், “நான் ஒரு உண்மையை சொல்லவா தேவ் சார்.. சம்டைம்ஸ் உங்களோட மூவ்ஸ் பார்த்து இம்ப்ரெஸ் ஆகியிருக்குறேன்.. பட் ஆர்யன் கேஸ்ல நான் ஸ்பீச்லெஸ்.. குட் ப்ளான்.. பட் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா எக்ஸ்கியூட் பண்ணியிருக்கலாம்.. இப்ப நடந்த மாதிரி.. நான் இன்னும் உங்ககிட்ட இருந்து அந்த பேஷன்ஸ் கத்துக்கணும்.. ஆல்வேஸ் யூ ஆர் மை இன்ஸ்பிரேஷன்..” என புன்னகைத்து கடந்தான்..

இந்த வழக்கு இத்துடன் முடிவடைந்தது என்ற நிம்மதியோடு வெளியே வந்த சத்யதேவ் தோட்டத்தில் “இங்க பாரு.. இங்க பாரு.. அதிரா குட்டி. அண்ணி.. சொல்லு அவந்தி அண்ணி..” என ஆர்யனின் மகளோடு கொஞ்சி விளையாடும் தன் மகளை கண்களில் ஆனந்தம் பொங்க வேடிக்கை பார்க்கத் துவங்கினார்..

மேல்மாடியில் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த தாராவின் தோள்களைத் தொட்டு திருப்பிய ஆர்யன், “ரிலாக்ஸ்..” என்றிட, “எனக்கு தெரியலை ஆர்யன்.. கீழே நானா அவ்ளோ தூரம் பேசினேன்னு.. நீ எப்படி ஆர்யன் அவ்ளோ ஈசியா என்னோட லைபை கண்ட்ரோல் பண்ற?? சேர்ந்து பிரிஞ்சு அப்புறம் சேர்ந்து பிரிஞ்சு ரிப்பீட் ஆகிட்டே இருக்குது.. பட் நான் எந்த இடத்துலேயும் உன்னை விட்டு தூரமா போனதா பீல் பண்ணவே இல்லை.. இன்பாக்ட் நாம பிரிஞ்சிட்டோம்னு கூட நினைக்கலை.. ஆல்வேஸ் நீ இருக்குற.. என்கூடவே. என்னோட லைப்ல ஒவ்வொரு பார்ட்லேயும்..” என ஆச்சரியமாய் கேட்டாள்..

“கடலோட கலக்குற நதியை தனியா பிரிக்க முடியுமா என்ன?? ஒருத்தரோட மனசுல இன்னொருத்தர் ஆழமா மாறினதுக்கு அப்புறம் அங்க நீ நான்னு எந்த வித்தியாசமும் கிடையாது.. நான் ஜஸ்ட் என்னோட லைபை தான் கண்ட்ரோல் பண்றேன்.. அண்ட் கேஸ்ல கூட என்னோட வேர்ட்ஸ நீ யூஸ் பண்ணின.. நீயில்லாம நானும் நானில்லாம நீயும் பெர்பெக்ட்டாக முடியாது..” என்ற ஆர்யன் காதலாய் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்..

“லைப் இஸ் எ சர்க்கிள்.. நாம ஒரு பாயிண்ட்ல தொலைச்ச விஷயம் நெக்ஸ்ட் பாயிண்ட்ல இல்லாம போகும்.. தென் அடுத்த ரவுன்ட்ல கிடைக்கும்.. சிம்பிள் ஃபார்முலா அவ்ளோ தான்.. பட் இந்த காதல் இருக்குதே.. மொத்த சிஸ்டத்தையும் கொலாப்ஸ் பண்ணும்.. பட் அது கொடுக்குற ஃபீலிங்க்ஸ் ரொம்ப ஸ்வீட்டா எக்சைட்டடா இருக்கும்.. அது ஹாப்பியா இருந்தாலும் சரி.. பெயினா இருந்தாலும் சரி.. எல்லாமே அழகு தான்.. என்னோட ‘செல்ஃப்’ன்ற வேர்ட்ல ஆர்யனும் அடங்கும் போது ‘செல்ஃபிஷ்னஸ்’ இங்கே கியூட்டாகும்.. அண்ட் ஆதிக்கு விட்டுத் தர மனசில்லாம கல்சுரல்ஸ்க்கு மீட் பண்ணின ஆர்யனுக்குள்ள ரொம்ப டேஞ்சரஸான பொசசிவ்னஸ் ஒளிஞ்சிருக்குது.. இப்படி இருக்குறதும் தப்பில்லை.. என்னோட தியரிபடி செல்ஃபிஷ்னஸ் அண்ட் பொசசிவ்னஸ் ரெண்டும் சேர்ந்த ஆல்பன்லிபே கேண்டி மாதிரி இந்த லவ்.. ட்ரை பண்ணினவங்களால மட்டும் தான் டேஸ்ட்டை பீல் பண்ணமுடியும்..”

-தாரா..
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே இருக்கும் லிங்கில் சென்று புரியாத கவிதையில் பிழையா என்னும் கதைக்கு வாக்களிக்க வேண்டிக்கொள்கிறேன்..
(2) Anti Hero/ Heroine Competition Voting | Tamil Novels (smtamilnovels.com)
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
எல்லாமே பிளான் ஆஹ்.... 😱

Twist....

இதை நான் எதிர்பார்க்கல... 😮

பட் அப்டி பண்ண முடியுமா....
இறந்து அப்போ funeral அஹ் face பாத்துருக்க மாட்டாங்களா.... 🤔

எப்படியோ எல்லாரும் ஹாப்பி நாங்களும் ஹாப்பி.... 🥰😍

ஹாப்பி எண்டிங்.... 😍😍

செம்ம ஸ்டோரி....🤩

@Anamika 49 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dear.... 🤝🥰
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
எல்லாமே பிளான் ஆஹ்.... 😱

Twist....

இதை நான் எதிர்பார்க்கல... 😮

பட் அப்டி பண்ண முடியுமா....
இறந்து அப்போ funeral அஹ் face பாத்துருக்க மாட்டாங்களா.... 🤔

எப்படியோ எல்லாரும் ஹாப்பி நாங்களும் ஹாப்பி.... 🥰😍

ஹாப்பி எண்டிங்.... 😍😍

செம்ம ஸ்டோரி....🤩

@Anamika 49 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dear.... 🤝🥰
Funeralல இருந்தது ஆர்யன் தான் டியர்... போஸ்ட் மார்ட்டம்தான் அகில்... ஆர்யன் டயலாக்கை தெளிவா மாத்துறேன்.. தேங்க்ஸ் பார் மென்ஷனிங்...
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Funeralல இருந்தது ஆர்யன் தான் டியர்... போஸ்ட் மார்ட்டம்தான் அகில்... ஆர்யன் டயலாக்கை தெளிவா மாத்துறேன்.. தேங்க்ஸ் பார் மென்ஷனிங்...
ஓ... ஓகே டியர்....👍
அத்தனையும் நடிப்பா கோபால் ஆஹ்.... 😅
நைஸ் எபி டியர்.... ❤
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
ஓ... ஓகே டியர்....👍
அத்தனையும் நடிப்பா கோபால் ஆஹ்.... 😅
நைஸ் எபி டியர்.... ❤
இப்ப எக்ஸ்ட்ரா சேர்த்திருக்கிறேன் மா.. இது ஓகே யா சொல்லுங்க.. இல்லைன்னா இன்னும் ஏதாவது சேர்க்க பார்க்குறேன்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
இப்ப எக்ஸ்ட்ரா சேர்த்திருக்கிறேன் மா.. இது ஓகே யா சொல்லுங்க.. இல்லைன்னா இன்னும் ஏதாவது சேர்க்க பார்க்குறேன்..
இப்போ ஓகே புரியுது dr....👍🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top