• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை – 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
கவிதைப் பிழை – 2
maxresdefault.jpg
இதுவரை...
தாராவின் அறிமுகம்... தன் முன்னாள் கணவன் இறந்த செய்தியை அறியாதவளை குற்றவாளியாக சந்தேகித்தார் காவல் அதிகாரி.

இனி...

ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களை வரவேற்பிற்காகக் கொண்ட பங்களா ஒன்றினுள் நுழைந்த ஜீப்பில் இருந்து இறங்கினர் சத்யதேவும் ஆஷிக்கும்.. தடைக்காக சுற்றப்பட்டிருந்த மஞ்சள் நிற கயிற்றை எல்லையாகக் கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்தனர் சில ஊடக நண்பர்கள்..

“பாடிய எடுத்தாச்சா??” என சத்யதேவ் வினவ, “விஷயம் தெரிஞ்ச ஒன் ஹவர்ல ஆம்புலன்ஸ் வந்துடுச்சு.. பட் பாரன்சிக் ஆளுங்க வர்றதுக்கு டைம் ஆனதுனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..” என்றான் ஆஷிக்..

“ம்ம்..” என கேட்டுக்கொண்டபடியே உள்ளே நுழைய, வெள்ளை நிற பளிங்கு தரையில் சிவப்பு நிற ரத்தத் திவலைகள் சிதறிக் கிடந்தது.. கவனமாக கால்களை எடுத்து வைத்து நடந்த சத்யதேவ் கைகளில் பிளாஸ்திரி உறையை மாட்டிக்கொண்டு படிக்கட்டில் ஏறினார்..

பெட்ரூமில் ஆர்யன் இறந்து கிடந்த தடயத்தைக் குறிக்கும் விதமாக வெள்ளை கோடிட்டு, சுற்றி இருந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர் தடவியல் நிபுணர்கள்.. “இன்னும் முடியலையா??” எனக் கேட்ட ஆஷிக்கிற்கு, “ரூம்ல எந்த சேஞ்சஸும் இல்லை.. ஃபூட்பிரிண்ட் ஆர் ஃபிங்கர் பிரிண்ட் கிடைக்குமான்னு செக் பண்ணிட்டு இருக்குறோம்..” என பதில் தந்தான் ஒருவன்..

அறையை சுற்றிலும் நோட்டமிட்டவாறு இருந்த சத்யதேவ், கீழே ஹாலில் சோர்வாக அமர்ந்தபடியே உறைகளைக் கழற்றினார்.. “போட்டோஸ் இருக்குதா??” என கேட்டு வாங்கி மேஜையின் மீது பரப்பி விட்டு நாடியில் கைகுத்தி பார்வையை சுழலவிட்டார்..

“பாடியோட நெஞ்சுல பதிமூணு தடவை குத்தியிருக்குறாங்க சார்.. மே பி இறந்ததுக்கு அப்புறமா இருக்கலாம்.. அண்ட் இறந்தவர் எந்த எதிர்ப்பும் காட்டல.. ரூம்ல இருந்த திங்க்ஸ்ல எந்த மாற்றமும் இல்லை..” என ஆஷிக் கூறிக் கொண்டிருக்க, “இறந்ததுக்கு அப்புறமா குத்துறதா இருந்தா நிச்சயம் வெறியில இருந்துருக்கணும்.. கொலை பண்ண யூஸ் பண்ணின ஆயுதம் பத்தி ஏதாவது..” என ஏறிட்டுப் பார்த்தார் சத்யதேவ்..

“நோ சார்.. அந்த மாதிரி எந்த விஷயமும் கிடைக்கல.. பட் கொன்னுட்டு ஸ்டெப்ஸ் வழியா இறங்கி ஹால் வழியா வாசலுக்கு போயிருக்குறாங்க.. ஐ திங் எதுக்காகவோ ஹால்ல ஸ்டாப் ஆகி நின்னுருக்குறாங்க.. பாருங்க சார்.. எல்லா இடத்துலேயும் டாட் டாட்டா இருக்குற ப்ளட் ஹால் ஏரியால மட்டும் டார்க்கா இருக்குது..” என ஆஷிக் சுட்டிக்காட்டினான்..

“கில்லர் போலீஸை கன்பியூஸ் பண்ணுறதுக்காக கூட பண்ணலாம்.. அவ்ளோ சீக்கிரத்துல ஒரு முடிவுக்கு வந்துட கூடாது.. முக்கியமா கில்லர் அவனா அவளான்னு கண்டுபிடிக்கணும்..” என தீர்மானமாக கூறிய சத்யதேவ், “ஓகே ஆஷிக்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் கிடைச்சதும் என்னோட டேபிள்ல சப்மிட் பண்ணிடுங்க.. சுத்தி இருக்குறவங்களையும் என்கொயரி பண்ணிடுங்க.. சந்தேகப்படுற மாதிரி ஆள்நடமாட்டம் இருந்துச்சுன்னா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க..” என்றுவிட்டு கடந்தார்..

அதே நேரத்தில்..
“தாரா.. வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்..” என உற்சாகமாக வரவேற்ற அனுபல்லவியை பட்டும் படாமல் மென்மையாகக் கட்டியணைத்த தாரா, “விஷயம் கேள்விப்பட்டியா??” என கேட்டாள்.. “எஸ்.. நானும் நியூஸ் பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. நீ அப்செட் ஆவன்னு தான் இன்ஃபார்ம் பண்ணலை..” என்ற பல்லவி கண்களில் மன்னிப்பை வேண்ட, “இட்ஸ் ஓகே பல்லவி.. இருக்கட்டும்..” என சோஃபாவில் கால்மேலிட்டு அமர்ந்தாள் தாரா அவளுக்கே உரிய ஆளுமையோடு..

“ட்ரிங்க்ஸ்..” என கண்ணாடி குவளையை பல்லவி நீட்ட, “நோ தேங்க்ஸ்.. மூட் இல்லை..” என்றவளின் கண்கள் எதையோ உணர்த்த முயன்றது.. “ஆர்யன் போனது எனக்கும் வருத்தமாதான் இருக்குது.. பெர்சனல் லைஃப்ல எப்படிபட்டவனா இருந்தாலும் சோஷியல் லைஃப்ல ரொம்பவே நல்ல மனுஷன்.. அவனோட கவுன்சிலிங்ல நிறைய பேருக்கு வாழ்க்கை கிடைச்சிருக்குது.. இந்த உலகம் திறமையான சைக்கியாட்ரிஸ்ட்டை இழந்துடுச்சு..” என வருத்தமாக கூறினாள் பல்லவி..

அவள் கூறும் வரை எங்கோ வெறித்துக் கொண்டிருந்த தாரா, திடீரென்று விரக்தியான புன்னகையோடு பாட்டிலை எடுத்து ஒரு குவளையில் தனக்கும் ஊற்றினாள்.. “ஆர்யனுக்காக..” என இருவரும் குவளையை இடித்து கொள்ள, “வாட் யூ திங் அபௌட் ஆர்யன் மர்டர்??” எனக் கேட்டாள் தாரா..

அந்த மெல்லிய ஒளியில் கண்ணில் தேங்கியிருக்கும் ஒருபகுதி உவர்நீர் பளபளக்க, “அன்எக்ஸ்பெக்டட் தான்.. பட் எனக்கு நியூஸ் பார்க்கும் போது அவனோட சோஷியல் லைஃப்க்காக பீல் பண்ண தோணிச்சு.. அட் தி சேம் டைம் பெர்சனல் லைஃப்ல என்னோட பிரெண்டுக்கு அவன் செஞ்சதுக்கான தண்டனைன்னு சந்தோஷப்பட்டுக்க தோணுது..” என தோள்களைக் குலுக்கினாள்..

“ம்ம்..” என கேட்டுக்கொண்ட தாரா, ஒரு மிடறு முழுதாக அருந்தி தீர்ந்தபின், “ஹவ் யூ ஃபீல் நவ்??” என கேட்டாள் பல்லவி.. நிதானமாக அடுத்த மிடறினை பருகியவள் “பீலிங் எம்ப்டி..” என இளநகை வீசி “பல்லவி.. சப்போஸ் ஆர்யன் கேஸ் உன்கிட்ட இருந்தா பர்ஸ்ட் சஸ்பெக்ட் யாரா இருக்கும்..” என கேட்டாள்..

“வேற யாரு.. ஆர்யன் வைஃப் மிசஸ் தாரா ஆர்யன் தான்..” என யதார்த்தமாக கூறியவள் திடுக்கிட்டு, “ஹோ நோ.. தாரா ஆர் யூ ஓகே??” என தாராவை நோக்க, முட்டியில் கரம் உயர்த்தி முன்னே வந்தவளின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை..

“ஒ.. நோ.. இந்த பாயிண்ட்டை நான் எப்படி மறந்தேன்..” என பதற்றமாக தன்னையே திட்டிக் கொண்டவள், “தாரா போலீஸ் வர்றதுக்கு முன்ன நான் ஏதாவது பண்ணனும்.. அவங்களோட ஃபர்ஸ்ட் டார்கெட்டா நீ தான் இருப்ப.. ஏதாவது பண்ணனும்..” என நிலையில்லாமல் அங்கும் இங்கும் நடைபயின்றாள் தலையை தேய்த்துக் கொண்டே..

“அல்மோஸ்ட் லேட் பல்லவி.. போலீஸ் வந்துட்டு போயிட்டாங்க.. என்னோட ரூமுக்கே..” என்றவளிடத்தில் பயமோ பதற்றமோ சிறிதும் இல்லை.. “ஓகே.. காம்டவுன் பல்லவி.. ஜஸ்ட் ரிலாக்ஸ்..” என தனக்குத் தானே சமாதானம் பேசிக் கொண்டவள் நிதானமாக சாய்ந்தாள்..

“லுக் தாரா.. இது ஜஸ்ட் பேசிக் என்கொயரியா தான் இருக்கும்.. ஃபர்தரா எவிடென்ஸ் கிடைக்குற வரைக்கும் போலீஸ் இன்ஸ்டின்ட்க்ல தான் மூவ் பண்ணுவாங்க.. சோ டோன்ட் வொரி..” என பல்லவி சமாதானப்படுத்த முயல, “பல்லவி.. இங்க நீ தான் ரொம்ப வொரி பண்ணிக்குற..” என்றாள் சிறுபுன்னகையுடன்..

பெருமூச்சிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பல்லவி, “லெட் மீ எக்ஸ்ப்ளைன்.. போலீசோட என்கொயரி த்ரீ ஸ்டெப்ஸ் பேஸ் பண்ணிதான் இருக்கும்.. ஒரு மர்டர் நடந்தா பர்ஸ்ட் லேயர்ல லவ் ஆர் ரிலேஷன்ஷிப் ப்ராப்ளம்ஸ தான் ச்சூஸ் பண்ணுவாங்க.. இந்தியால 53% க்ரைம் இந்த கேட்டகிரிக்கு கீழ தான் நடக்குது.. நெக்ஸ்ட் அவங்களோட ப்ராபெர்ட்டி அண்ட் ஜுவல்ஸ்.. 37% கொள்ளைக்காக நடக்குறது.. வறட்டு கௌரவம், ஆணவக்கொலை இதெல்லாம் ரிமெய்னிங் 10%ல நடக்குறது.. சோ பர்ஸ்ட் ஸ்டெப்ல தான் நீ இருக்குற.. அவங்களோட சர்க்கிள்ல இருந்து வெளிய வர்றது அவ்ளோ ஈசி இல்லை..” என விளக்கினாள்.

“ஓகே.. நான் பார்த்துக்குறேன்..” என உறுதியாக எழுந்தவளை, “தாரா,” என நிறுத்தி, “உன்னோட லைஃப்ல நடந்த எல்லா ப்ராப்ளம்லயும் நான் துணையா இருந்த மாதிரி இப்பவும் என்னோட சப்போர்ட் உனக்கு தான்.. எந்த ஹெல்ப்பா இருந்தாலும் தயங்காம கேளு..” என்றாள் பல்லவி..

“தேங்க்ஸ் சொல்லணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுறியா??” என அர்த்தமாய் புன்னகைத்திட, “உன்கிட்ட தேங்க்ஸ், சாரியை பைத்தியக்காரன் கூட எதிர்பார்க்க மாட்டான்..” என தோள்களை உயர்த்தினாள் பல்லவி.

வீட்டிற்கு செல்வதற்கு முன்னே பத்து தடவை அழைத்து விட்ட ஆதியை, “கால் அட்டென்ட் பண்ணலைன்னா நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்குறேன்னு அர்த்தம் ஆதி.. ட்ரைவ் பண்ணும் போது கால் பண்ணாதன்னு சொல்லியிருக்குறேன்ல..” என உரிமையாக கடிந்து கொண்டே வந்தவள், ஹாலில் திருமண புகைப்படத்தை பார்த்தபடி நின்ற சத்யதேவ்வைக் கண்டதும் அப்படியே நின்று விட்டாள்..

“வாங்க மேடம்..” என அவளின் வீட்டிற்கு அவளையே வரவேற்றிட, ஆதியை முறைத்தாள் தாரா.. “சாரை ஏன் முறைக்குறீங்க மேடம்?? நான் தான் மேடம் வர டைம் ஆகுதேன்னு கால் பண்ண சொன்னேன்..” என்ற சத்யதேவை முறைத்துக் கொண்டே சுவரில் தொங்கிய ஆளுயர கடிகாரத்தை நோக்கினாள்.

ஒன்பது மணிக்கான பறைசாற்றல் மணியை வீடெங்கும் ஓங்கி அடித்திட, புருவத்தை உயர்த்தி, “இது அன்டைம் ஆஃபீசர்.. சோ ப்ளீஸ்..” என வாசலை சுட்டினாள் தாரா.. “மேடம்க்கு ஒரு விஷயம் புரியலைன்னு நினைக்குறேன்.. நான் டைம்க்கு வந்து வெயிட் பண்ணினா மேடம் தான் அவசரமா வக்கீலை பார்த்துட்டு லேட்டா வந்தாங்க.. இதுல யார்மேல தப்பு சொல்றது..” என்றார் எள்ளலாக..

“தட்ஸ் மை ஃபிரெண்ட் ஆபீசர்.. அண்ட் யார் லேட்டா வந்திருந்தாலும் இது அன்டைம் தான்.. எனக்கு பேச விருப்பமில்லை.. நாளைக்கு கூட பேசலாம்.. எங்கேயும் போயிட மாட்டோம்னு நினைக்குறேன்..” என உதட்டை வளைத்தாள் காட்டமாக.. அதற்குள் நடுவே புகுந்த ஆதி, “சார்.. நாளைக்கு காலேஜ்ல பெர்மிஷன் வாங்கிட்டு ஸ்டேஷன் வர்றோம்.. இப்போ கிளம்புங்க.. ப்ளீஸ்..” என்றிட, தாராவை வெறித்தபடியே வெளியேறினார் சத்யதேவ்..

“ஸ்ட்ராங் எவிடென்ஸ் மட்டும் கிடைக்கட்டும்.. அப்போ காட்டுறேன் நான் யாருன்னு..” என கருவிய சத்யதேவ் அங்கிருந்து நகர, “ஆதி.. வாட்ஸ் ராங் வித் யூ?? நான் இல்லைன்னா போக சொல்ல வேண்டியது தான்.. ஏன் வெயிட் பண்ண வைக்குற..” என்றவளின் மூக்கு சிவந்தது..
அதற்குள் எட்டி வந்தவன் அவளின் தோள்களில் கைவைத்து, “வெயிட்.. எதுவும் பேசாத தாரா..” என இருகண்களையும் மாறி மாறி ஆராய்ந்து விட்டு, “உன்னோட லிப்ஸ் ட்ரையா இருக்குது.. ஷோல்டர் வீக்கா இருக்குது.. ஐ திங் உனக்கு இப்போ சரியான கேர் தேவை.. அதுக்கு இந்த கேரிங் ஹஸ்பன்ட் தேவை..” என சுட்டுவிரலால் மூக்கில் மெல்லமாய் அழுத்தினான்..

கன்னங்களில் சிவப்பு அதிகமாகிக் கொண்டே செல்ல, கடுப்பில் வளைந்த இதழ்கள் இப்பொழுது காதலால் விரிந்தது.. “நாட் கேரிங் ஹஸ்பன்ட்.. கேரிங் லவ்வர்..” என கண்ணை சிமிட்டியவளை குறும்பாக பார்த்த ஆதி, “ஒய் நாட்டி சீட்டிங்.. அப்போ நீ ஒத்துக்கோ..” என்றான்..
“என்ன??” என புரியாமல் திருதிருவென விழித்தவள், “லவ்வர் பாய் ஆதியால மட்டும் தான் இந்த தாராவோட போல்ட் ஃபேஸ்ல ப்ளஷிங் கொண்டு வரமுடியும்னு..” என கன்னங்களில் கோலம் வரைந்தான்.. அதிலே நங்கையவள் நாணம் கொண்டு நயனங்கள் நாட்டியமாடியது நாயகனவனின் தீண்டலில்..

உயிர்மூச்சில் சுவாசம் பொய்யென்றால்
கவிதையில் காதல் பிழையாகுமோ??
கவிதை பிழையாகும்...

அடுத்த எபிசொட் புதன் கிழமை... இனி வாரம் மூன்று எபிசொட் (திங்கள், புதன் வெள்ளி) போஸ்ட் பண்ணலாம் என நினைக்கிறேன்... கமென்ட் செஞ்சு சப்போர்ட் பண்ணுங்க கவிக்குட்டீஸ்...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Present ma. Ana Konjam epi complete ana அப்பறம் தான் start pannuven
ஓகே சிஸ்டர்... உங்க வரவுக்கு வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்... உங்கள் அன்பான சேவை இவ்விடம் தேவை..
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
வீக்லி மூனு நாள் அப்டின்றதை ஐந்துநாள் னு மாத்துனா கூட ஹேப்பி தான் ஆத்தரே....
Three days nu sonna pavam avangaluku kashtama irukum dear athanala weekly 5 days mattum solluvom🤭🤭
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top