• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை – 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
கவிதைப் பிழை – 6
shivada-nair.png

இதுவரை...
கைது செய்யப்பட்டாள் தாரா.

இனி...

கைகளில் விலங்கு பூட்டியும் இம்மியளவும் கலக்கமின்றி சாவகாசமாய் சாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளை, முன் கண்ணாடி வழியே அவதானித்துக் கொண்டிருந்தார் சத்யதேவ்.. ஸ்டேஷன் செல்லில் அடைப்பதற்காக கதவைத் திறக்க, கையை உயர்த்திக் காண்பித்து, “லாக்அப்ல தான் அடைக்குறீங்க.. லாக்கை கூட கழட்ட மாட்டீங்களா??” என நக்கலாக கேட்டாள்..

அருகில் இருந்த பெண்போலீஸ் தன் பக்கம் திருப்புவதற்காக புஜத்தினை தொடவும் சட்டென தட்டிவிட்டவள், “டோன்ட் டச் மீ..” என்றாள் பற்களை கடித்தபடி..

ஒரே நேரத்தில் ‘உர்’ரென்றும் உற்சாகமாகவும் எப்படிதான் இவளால் மட்டும் மாற முடிகிறதோ அதுவும் இந்த நிலையில் என்ற யோசனையோடு நின்றான் ஆஷிக்.. “அடிங்.. என்ன திமிரா?? பாடம் சொல்லி குடுக்குறவன்னு மரியாதை குடுத்தா ஓவரா தான் எகிறுற..” என உள்ளே நுழைந்த சாந்தியக்கா பிடரியை பிடித்து பின்னங்கழுத்தோடு வளைக்க, “ஹஹஹஹஹாஹ்...” என சம்பந்தமில்லாமல் சிரித்தாள்..

பைத்தியமா என யோசிக்கும் கணப்பொழுதில் நெற்றி கொண்டு ஓங்கி மூக்கிலேயே மோதியவள், தடுமாறவும் தாமதியாமல் கால் முட்டியில் உதைத்து கலங்கடித்தாள் அவளில் அதிகமான சாந்தியக்காவை..

ஸ்டேஷனே ஒருநிமிடம் அதிர்ந்து நிற்க, மூக்கில் வழிந்த ரத்தத்தை முழங்கையில் துடைத்தபடியே, “எனக்கு மிரட்டுனா பிடிக்காது..” என இதழோரம் நக்கலாய் சிரித்தபடியே செல்லுக்குள் சென்றாள்.. அவளே தாழிட்டு “மரியாதையில்லாம பேசுனா கூட..” என சாந்தியை நோக்கி ஒற்றை விரல் கொண்டு எச்சரித்தாள்..

கோபத்தோடு அடிக்க ஓங்கிய சாந்தியை மறித்த சத்யதேவ் “வேண்டாம்..” என தலையசைத்து அடக்க, “தேவ் சார்.. ஹாண்டில் பண்ணுறதுக்கு ரொம்ப டஃப்பா இருப்பாங்க போல..” என கேட்டான் ஆஷிக்..

தாராவிடம் தன் துரும்பான தோல்வியைக் கூட ஏற்றுகொள்ள முடியாத இயலாமையில் இருந்த சத்யதேவ், “ஆஷிக்.. கம் டூ மை ரூம்..” என்றார் கடுகடுத்தபடி.. “திஸ் இஸ் நாட் ஃபேர் சார்.. ஒரே ஒரு எவிடென்ஸ் வச்சுட்டு ப்ரெஸ்கிட்ட இவங்க தான் கில்லர்ன்னு கன்ஃபெஸ் பண்ணுறது, காலேஜ்ல அரெஸ்ட் பண்ணுறது... சிசிடிவி புட்டேஜ்ல தாரா அங்க வந்ததுக்கான ப்ரூஃப் இருக்குதே தவிர கொலை பண்ணினது அவங்க தான்னு சொல்ற மாதிரி எந்த க்ளூவும் இல்லை.. ஐவிட்னஸ் கூட இல்லை.. இப்படி இருக்கும் போது இந்த அரெஸ்ட் சரி கிடையாது..” என படபடத்தபடியே உள்ளே நுழைந்தான் ஆஷிக்..

“ஒ.. அப்படியா.. நல்ல விஷயம்.. அப்போ நெக்ஸ்ட் ப்ரூஃப் ரெடி பண்ணிடுவோம்.. ஐவிட்னஸ் தேவையோ.. ம்ம்..” என்ற சத்யதேவின் தொனியே ஆஷிக்கிற்கு சரியாக படவில்லை.. “என்ன ஆஷிக்.. அப்படியே முறைச்சு பாக்குறீங்க.. நான் கேஷுவலா தான் சொன்னேன்.. வாங்க.. நம்மளை ப்ரெஷர் ஏத்துன ப்ரொஃபசருக்கு ஃப்ரெஷ்ஷா என்கொயரி ஒன்னு வச்சிடுவோம்..” என கைகளை மடக்கி சொடுக்கிட்டபடியே நடந்தார்..

வந்த நேரத்தில் இருந்தே கண்களில் வெண்மைப்படலத்தை அதிகமாக்கி ஸ்டேஷனில் இருக்கும் ஒவ்வொருவரையும் பொறிகலங்க முறைத்து கொண்டிருந்த தாராவின் செல்லைத் திறந்தார் சத்யதேவ்.. மானுடவுடலில் காணவேண்டிய மீன்விழிகளுக்கு பதிலாக நரியின் நரம்புகளை கொண்டு கழுகு பார்வை பார்த்தவளை கண்டால் உடல் உதறத் தான் செய்கிறது.. “வேண்டாத வேலை பார்க்குமாம் வீணா போன ஓணான்..” என முறுமுறுத்தபடியே ஆஷிக் ஒதுங்கி கொள்ள, அருகில் சென்ற சத்யதேவ், “பேசலாமா தாரா மேடம்..” என வெளியில் புன்னகையும் உள்ளே புகையும் எரிச்சலையும் கொண்டு வினவினார்..

ஒரு நொடி ஏறெடுத்துப்பார்த்த விழிகள், “என்னோட வக்கீல் வராம நான் எதையும் பேச மாட்டேன்..” என்றவளின் விழிகளில் இரும்புப் பிடியாக பிடிவாதம் மின்னியது..
“யுவர் விஷ்..” என தோள்களை குலுக்கிக் கொண்ட சத்யதேவ், “ம்ம்..” என அனுமதி வழங்கினார்.. மணிநேரம் கழித்து அவசரமாக வந்த பல்லவி ஸ்டேஷன் வாசலில் காத்திருந்த ஆதியை, “தாரா கிட்ட பேச விடலியா??” எனக் கேட்டாள் அக்கறையாக..

இடம் வலமாக தலையசைத்தவனின் முகம் சோர்வை போர்த்தியிருக்க, “ஐ நோ.. தாரா எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்குறது உன்கிட்ட தான்.. பல்லவி அவளோட லாயர் மட்டுமில்லை.. பெஸ்ட் பிரெண்ட்.. தாரா கில்லர் இல்லை தானே..” என்றவனின் கண்களில் ‘இல்லை’ என கூறிவிட மாட்டாளா என்ற ஏக்கம்..

“ஆதி.. ட்ரஸ்ட் மீ.. தாராவை நான் கை விட்டுட மாட்டேன்.. நிச்சயமா இந்த கேஸ்ல இருந்து வெளிய வந்துடலாம்..” என நம்பிக்கையாக கூற, “ம்ம்.. ஐ அண்டர்ஸ்டான்ட்.. இருந்தாலும் நடக்குற எல்லாத்தையும் பாக்குறப்போ பயமா இருக்குது.. தாரா பார்க்க கூடாததை எல்லாம் பார்த்து ஸ்ட்ரக்கிள்ஸ் அண்ட் ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணி வந்துருக்குறா.. திரும்பவும் அவளுக்கு ஞாபகப்படுத்துற மாதிரி இருக்குது..” என வருந்தினான்.. “ஆதி எனிதிங் சீரியஸ்?” என்று பல்லவி விளிக்க, நடந்ததை விவரிக்கத் தொடங்கினான்..

.....மொபைலில் பார்த்த பதிவு துறைத்தலைவரை முதற்கொண்டு விழி பிதுங்கச் செய்தது.. ஆதிக்கும் ஆர்யனுக்கும் நடுவில் தாராவின் அரை ஆபாசமான புகைப்படம் ஒட்டப்பட்டு ‘டார்க் சைட் ஆப் தி பிட்ச்..’ என்ற தலைப்புடன் திறந்து கொண்ட திரியில் வசனங்கள் அடங்கிய அத்தியாயங்கள் அடுக்கப்பட்டிருந்தது.. இறுதி அத்தியாயத்திற்கு ‘ரிவெஞ்’ என்ற தலைப்பின் கீழ் எதுவுமே எழுதப்படாமல் பாதியிலேயே நின்றது..

ஆசிரியர்கள் அனைவரும் அவசரமாக அலுவலகத்தில் குழும, “இது யார் செஞ்ச வேலை??” என அவர்களுக்குள்ளாகவே பேசத் தொடங்கி விட்டனர்.. தாராவின் கைது அன்பன் ஆதிக்கு தாங்கிக்கொள்ள இயலாத திருப்பமாக இருக்க, விடாது பல்லவிக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.. அதே பதற்றத்தோடு அலுவலகம் விரைந்தவனுக்கு ஏகபோக மரியாதையாக முகசுளிப்புகளும் அருவருப்புகளுமே கிடைத்தது.. எச்சிலை தொண்டைக்குள் விழுங்கி தாராவின் தாரக மந்திரமான, “உன் பாடு உனக்கு.. அவங்க பாடு அவங்களுக்கு.. இதுக்கு நடுவுல அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்கக் கூடாது..” நாவில் ஜெபித்து கொண்டே கூட்டத்தின் நடுவில் வந்தான்..

ஹெச்ஒடியோ, “இந்த போஸ்டை எரேஸ் பண்ணு.. ஃபாஸ்ட்..” என வேல்முருகனை கடிந்து கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ்மீ சார்.. யார் பண்ணுனாங்கன்னு தெரிஞ்சிக்கணும்..” என இடைநுழைந்தான் ஆதி.. விருட்டென திரும்பியவரின் முகத்தில் தெளிந்தது எரிச்சலா பச்சாதாபமா என ஆராய்வதற்கெல்லாம் நேரமில்லாத ஆதி கருப்பு ஆட்டை கண்டுபிடிப்பதில் கவனத்தை செலுத்தினான்.. “அனானிமஸா போஸ்ட் ஆனதால ஆக்ஷன் எடுக்க முடியாதுன்னு நினைக்குறேன்..” என வேல்முருகன் கையை விரிக்க, “அல்மோஸ்ட் எல்லா ஸ்டுடென்ட்டும் பார்த்துருப்பாங்க.. இதுவரை கமெண்ட் பண்ணாம ரியாக்ட் பண்ணாம இருக்குறவங்களா தான் இருக்கும்..” தன்னால் முடிந்தவரை யூகித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, “இட்ஸ் அனாயிங் சார்.. காலேஜ் கேம்பஸ்ல ரெண்டு ப்ரொஃபசர்ஸ் காதல் ஜோடியா கையை பிடிச்சிட்டு சுத்துனா ஸ்டூடெண்ட்ஸோட ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும்.. இது ஜஸ்ட் அனானிமஸ் போஸ்ட் தானே.. இக்னோர் இட்..” என்ற பேராசிரியர் ஒருவரை ஆதி மறுத்து பேச வாயெடுப்பதற்குள், “ஆர் யூ லாஸ்ட் யுவர் மைன்ட் ப்ரொபசர்?? இந்த கேஸ்ல அவங்களோட நேம் மட்டுமில்லை ஹோல் காலேஜோட ஃபேமும் அடங்கியிருக்குது.. இன் கேஸ் இந்த போஸ்ட் அதர் க்ரூப்க்கு ஷேர் ஆச்சுன்னா காலேஜோட நேம் கெட்டுப்போகாதா??” என அதட்டினார் துறைத்தலைவர்..

“வி ஃபைன்ட் இட் சார்.. ஐடி நேம்.. அவந்திகா.. பர்ஸ்ட் இயர்..” என போட்டுடைக்க, மறுநிமிடமே அவந்திகா செனட் ஹாலில் ஆஜர்படுத்தப்பட்டாள்.. “அவந்திகா.. நீ போட்ட போஸ்ட் எவ்ளோ சென்சிட்டிவ்னு தெரியுமா??” எனத் தொடங்க, “சார்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் எதுவுமே பண்ணலை..” என அரற்றத் தொடங்கி விட்டாள் சிறுபிள்ளையாய்..

“லாஸ்ட் டைம் ப்ரொஃபசர் தாராவோட கிளாஷ் ஆன பொண்ணு தானே..” என அடையாளம் கண்டுகொள்ள, ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.. வெறுத்துப் போன ஆதி “சார்.. லீவ் ஹெர்.. இது அன்மெச்சூர்ட் ரிவெஞ்சா இருக்குது.. விட்டுடலாம் சார்..” என அவளுக்காக பரிந்து பேச,

“ஓகே.. பட் அப்படியே விட்டுட முடியாது.. பனிஷ்மென்ட் எதுவும் கொடுக்காம விட்டா வேற யாராவது ரிப்பீட் பண்ணுவாங்க.. யூ ஆர் சஸ்பென்டட் ஃபார் ஒன் வீக்..” என கடிதத்தை நீட்டினார்..

“வாட்?? அந்த பிக்ஸ் எல்லாம் எப்படி ரிலீஸ் ஆச்சுது?? அவந்திகான்னா.. ஆர்யனோட மீட் பண்ணினோமே அந்த பொண்ணா??” என பல்லவி படபடக்க, “யா.. பட் பிக்ஸ் ரிலீஸ் ஆனது எனக்கே ஷாக்கா தான் இருக்குது.. நெட்ல இருந்து எரேஸ் பண்ணிட்டோம்.. பேக்அப் இருக்கலாம்.. விசாரிக்கணும்..” என்றான் சோகம் கலந்த குரலுடன்.. “வேணாம் ஆதி.. எதுவும் பண்ண வேணாம்.. இந்த டைம்ல நீயோ தாராவோ என்ன செஞ்சாலும் சென்சேஷனலா ஆயிடும்.. அவந்திகாவை நான் பார்த்துக்குறேன்.. தாராக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.. சப்போஸ் ஹைப்பர் ஆயிட்டா விஷயம் மொத்தமும் கொலாப்ஸ் ஆயிடும்.. எல்லாமே அவளுக்கு எதிரா திரும்பும்..” என அறிவுறுத்த, “தட்ஸ் ரைட்.. இந்த நிலைமையில தாராவை என்னால பார்க்க முடியாது.. பொய் சொல்லவும் முடியாது.. நான் வெயிட் பண்றேன்..” என வெளியிலேயே நின்று கொண்டான் ஆதி கனத்த இதயத்துடன்..

“வெறுமைக்கும் விரக்திக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குது.. லைக் விரக்தியில வாழ்க்கையா இது??ன்னு தோணும்.. அதுவே வெறுமைன்னு எடுத்துக்கிட்டா என்னடா வாழ்க்கைன்னு தோணும்.. விரக்தியில அடுத்தவங்க லைபை டிஸ்டர்ப் பண்ண தோணும்.. வெறுமையில நாமளே நம்ம லைபை டிஸ்டர்ப் பண்ணிப்போம்.. எக்சாம்பிள் சொல்றேன்.. சூசைட் பண்ணுவோம்.. சாகணும்னு இல்லை.. எத்தனை பேரு நமக்காக துடிக்குறாங்கன்னு பாக்குறதுக்கு.. சப்போஸ் ரெண்டுமே லைப்ல இருந்தா?? ரெண்டையும் சேர்த்து கொடுக்க அவனால மட்டும் தான் முடியும்.. தட் க்ரூயல் கிரியேசர்.. பேமஸ் சைக்கியாட்ரிஸ்ட் ஆர்யன்.."

-தாரா
ஆர்யனின் நண்பன் ஒருவனது மருத்துவமனை விஸ்தரிக்கப்பட்டதற்காக வெற்றி விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்க, இரவில் நண்பர்களுக்கான பார்ட்டி ஒன்றும் நிகழவிருந்தது.. “ஆர்யன்.. ஏன் வரக்கூடாதுன்னு சொல்றீங்க.. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஃபேமிலியோட வந்து நிற்கும் போது நீங்க சிங்கிளா நிக்க போறீங்களா??” எனக் கேட்ட தாராவை ஒரு பொருட்டாய்கூட மதியாமல் அடர்த்தியான கேசத்திற்கு ஜெல் தடவி வாரிவிட்டுக் கொண்டிருந்தான் அவன். கதவின் ஓரமாய் அவனுடைய அலங்காரங்களை அழகாய் ரசித்தபடியே, காரணம் வேண்டிக் கொண்டிருந்தாள்.. கட்டாயம் காரணம் வேண்டியதில்லை.. ஆனால் சில நிமிடங்களுக்கு உரையாடலாமே அவன் கிளம்பும் வரை.. இது அற்பத்தனம் தான்.. ஆனாலும் அழகாய் இம்சிக்கிறதே என்ற அசட்டுத்தனமான உணர்வுக்கு அடிமையாகி கிடந்தாள்..

கைகளின் ஈரத்தோடு தளர்ந்த டையினை சரிசெய்ய முடியாமல் ஆர்யன் தவிக்க, சரிசெய்ய சட்டென தாவினாள் தன்னவனின் தோள்களுக்கு.. “இப்பவும் நான் வரவேணாமா??” என மெலிதாய் சிணுங்க, “வேணாம்..” என்றான் அழுத்தமாய்.. பட்டென சுனங்கிய முகத்தை மறுநொடி மாற்றிக் கொண்டு, “ஓகே.. டேக் கேர்..” என்றவளை கடந்து கப்பிள்ஸ் பெர்பியூமை தெளித்துக் கொண்டான்..

அவன் சென்றபின்னே அவ்வீட்டின் பொருட்கள் கரைந்து காலியாகவேத் தோன்ற, இதுவரை இருந்த புன்னகை மறைந்து, வாயைப் பொத்தி அழுதபடியே பெட்டில் விழுந்தாள்..
“ஹே.. ஆர்யா..” என நண்பன் ஒருவன் அணைக்க, “வந்ததும் ஆரம்பிச்சிட்டியா??” என கைகளில் இருந்த கோப்பையை ஆர்யன் சுட்டிட, “இது ஒரு துளி தான்.. பின்னாடி கடலே இருக்குது..” என கார்டன் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றான்.. சிறுசிறு விளக்குகளுக்கு நடுவே பெரும் முக்கியப்புள்ளிகள் கைகளில் கோப்பைகளுடன் வெகு சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தனர்.. கூட்டத்தினூடே ஆர்யனும் கலந்து கொள்ள, மரியாதைக்காக ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான்..

“ஆர்யன்.. வெல்கம்..” என நண்பனின் மனைவி வரவேற்க, “ஹாய்..” என கைகுலுக்கியவனிடம், “தாரா வரலியா??” எனக் கேட்டாள்.. “ம்ம்.. யா.. அவங்களுக்கு வொர்க்..” என முயன்று எதையோ சமாளித்து கொண்டிருக்கும் போதே, “வொர்க் இருந்துச்சு.. பட் ஐ யம் ஹியர்..” என வந்து சேர்ந்தாள் தாரா கருப்பு நிற தேவதையாக.. “வாவ்.. தாரா.. யூ லுக்ஸ் லைக் எ டார்க் ஏஞ்சல்.. பிரிட்டி..” என மெச்ச, “யா.. தேங்கியு.. சின்ட்ரெல்லா..” என்கவும் பெண்கள் ஒப்பனை கலையாமல் ஒட்டி பிரிந்தனர்..

அடுத்த நொடியே ஆர்யன் இளையவளின் இடைவளைத்து தன் பக்கம் இழுத்திட, இறுக்கமான பிடி என்பது வளைவில் இருப்பவளுக்கு மட்டும் தானே தெரியும்!! “கைஸ்.. யூ போத் ஆர் சச் எ யூனிக் கப்பிள்.. லாஸ்ட் இயர் பார்த்த மாதிரியே இருக்கீங்க.. ஸ்டில்..” என கேலி பேச, சிறுபுன்னகையுடன், “ஃபேமிலி ஆயிட்டோமே..” என்றாள் தாரா..

“ஓ..” என கோரஸ் பாட, பிடியை இறுக்கி, “நாம ஃபேமிலி இல்லை..” என திருத்தினான் ஆர்யன்.. “ஆர்யன்.. யூ ஹர்ட் மீ.. ஃபிசிக்கலி அண்ட் மெண்டலி..” என்ற தாராவின் கண்கள் கலங்கினாலும் இதழில் புன்னகைக்கு பஞ்சமில்லை..

“ஆரம்பிச்சிட்டீங்களா?? இந்த ரொமான்ஸ் எல்லாம் வீட்டுல இப்போ லேடீஸ் கார்னர்..” என வலுவான பிடியில் இருந்து விடுவிக்கவும் “ஹப்பாடா..” என நிம்மதி பெருமூச்சிட்டாள் எவரும் அறியாவண்ணம்.. பார்ட்டியின் சாராம்சமான ஸ்டேஜ் டான்ஸ் துவங்கப்பட்டது.. இருளில் வரிசையில்லாமல் கலந்து நிற்க இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டே தங்களின் துணைகளை அடைந்து விடவேண்டும் விளக்குகள் ஒளிவதற்குள்.. சுற்றியுள்ளோர்களின் வற்புறுத்தலின் காரணமாக தாரா மேடையேற அவளை காரணம் காட்டி நண்பர்கள் ஆர்யனையும் தள்ளி விட்டனர்..

முறைப்பிலேயே எரிப்பவனை விளக்கு வெளிச்சத்தில் சென்றடைவதே கடினம்.. இதில் இருளிலா?? என பெருங்குழப்பத்தின் நடுவே பங்கேற்றாள்.. இசையின் வேகத்தில் ஆடையில் மிதித்து சற்று தடுமாறிய தாரா கீழே விழப் போகும் சமயத்தில் ஒருவர் உதவ, அதனை ஆர்யன் தட்டிப் பறிக்க என்று சனிபகவான் அவளின் தலையில் ஜல்சா ஆடிக்கொண்டிருந்தார்..

அவ்வளவு தான்!! ஆர்யன் ஆத்திரத்தில் அசுரனாக மாறாத குறையொன்று தான்.. முகம் தீப்பிழம்பாய் தகிக்க, “உன்னோட டிராமா முடிஞ்சிதா??” என ஆக்ரோஷமாக கேட்டான்.. சப்தங்களுக்கு நடுவே சண்டையிடுகிறார்கள் என்பதை முகபாவங்களில் புரிந்து கொண்ட நண்பர்கள் இருவருக்கும் தனியறை கொடுக்க, “நாங்க கிளம்புறோம்..” என்றான் வீம்பாய்..

மற்றவர்களுக்கு முன்னே அவனுக்கான மதிப்பை கெடுக்க விரும்பாத தாரா முந்திக் கொண்டு, “கிளம்புறோம்..” என விடைபெற்றுகொண்டாள்.. பார்க்கிங் ஏரியா சென்ற பின்னும் ஆத்திரம் தீராமல் காரின் டயரை உதைத்துக் கொண்டிருந்தவன் வருபவளை கண்டதும், “உன்னை வராதன்னு தானே சொன்னேன்.. அவ்ளோ அவசரமா கிளம்பி வர ஃபேஷன் ஷோவா நடக்குது.. ஃப்ரெண்ட்ஸ் அண்ட் கொலிக்ஸ் முன்னாடி என் மானத்தை வாங்கிட்டல்ல.. உன்னோட ஸ்டான்டர்ட்க்கு என்னையும் கீழே இறக்குற..” என பழியை போட்டு, பலியாய் அங்கேயே விட்டும் சென்றான்..

பெயர் பெற்ற கவியில் இலக்கண போலியாய்
காதல் கொண்ட இவளில் இல்லாத பொய்யாய்..
கவிதை பிழையாகும்...
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
தாரா- wowwwww wat a performance in station!!! Police ah ethirkkurathay கெத்து தான்!!!!
ஆர்யன் 😡🤬🤬
உயிர் காப்பான் தோழி!!!!
Superrrr
இந்த சூர்ய தேவ்க்கு என்னா கோவம் தாரா மேல??? பெண்கள் attittude காட்டுனா சில ஆண்கள்க்கு பிடிப்பதில்லை
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
பாவம் தாரா😔😔😔, ஆன தாரா ஓட கெத்து☺☺☺

அவந்திகா, இவளுக்கு என்ன பிராப்ளம் ஏன் இப்படி இவளோ கேவலமா நடக்கரா 🤮🤮🤮🤮

இந்த ஆர்யன் எல்லாம் எதுக்கு சைக்கரிஸ்ட் ஆ இருக்கான் சைகோ 😤😤😤😤

இந்த தேவ் என்ன பண்ணினாலும் செம்ம டவுட் அவன் மேல இருந்துட்டே இருக்கு🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top