• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை – 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
கவிதைப் பிழை – 7
zero_tamil_movie_stills_ashwin_kakumanu_shivada_nair_5e888d5.jpg
Kalaiarasan.jpg
இதுவரை...
பார்ட்டிக்கு வந்த தாராவை அங்கேயே விட்டுவிட்டு சென்றான் ஆர்யன்.
இனி...

பல்லவி விசாரணை அறையில் காத்திருக்க, தாரா அனுப்பி வைக்கப்பட்டாள்.. “ஹாய்.. ஆர் யூ ஓகே..” என பல்லவி கேட்க வேண்டிய கேள்விகளை புன்னகை மாறாது தாரா கேட்க, “ஆர் யூ மேட் தாரா?? இதோட எஃபெக்ட் இப்படி இருக்கும்னு தெரிஞ்சே கூலா சிரிக்குற!! ஆதி..” என கூற வந்து, அடுத்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் பல்லவி..
“ஒய் டிட் யூ ஸ்டாப்ட்? கமான்... முழுசா சொல்லிடு.. ஆதி வெளியில வெயிட் பண்றான்.. காலேஜ்ல ப்ராப்ளம் ஆகிடுச்சு.. அதானே..” அருகே இருந்து பார்த்தவள் போல கேட்டாள்.. “எனாஃப் தாரா..” என பல்லவி கூறிக் கொண்டிருக்கும் போதே, “வெல்கம் மேடம்.. தாரா மேடமோட லாயருக்கு மரியாதை குடுங்க.. இல்லைன்னா நாமலாம் அவ்ளோ தான்..” என்ற சத்யதேவின் கூற்றில் இருந்து தாராவின் தகிடத்தத்தம் கண்டு கொண்டாள் பல்லவி.. “இது உன் வேலை தானா??” என கண்களாலேயே வினவ, தாராளமாய் இதழ் விரித்தாள் ‘ஆமெ’ன..

“என்கொயரி ஸ்டார்ட் பண்ணலாமா??” என சத்யதேவ் அமர, “ஆபீசர்.. என்னோட க்ளையன்ட் க்ரைமை கன்ஃபெஸ் பண்ணாம, ப்ராப்பர் எவிடென்ஸ் கூட இல்லாம எப்படி அரெஸ்ட் பண்ணுவீங்க??” என கேள்விக்கணைகளை தொடுத்தாள் பல்லவி. “வக்கீல் மேடம்.. இது ஒன்னும் கோர்ட் இல்லை.. கணம் நீதிபதி அவர்களேன்னு ஸ்டார்ட் பண்றதுக்கு.. என்கொயரி ரூம்.. இன்னொரு விஷயமும் சொல்றேன்.. உங்க க்ளையன்ட் நீங்க இல்லாம கன்ஃபெஸ் பண்ண மாட்டேன்னு சொல்றாங்க.. உங்களுக்கு ஏதாவது பங்கு இருக்குதா??” என அவரின் பாங்கில் கேட்கவும், “மைன்ட் யுவர் வேர்ட்ஸ்..” எரிச்சலை உமிழ்ந்த குரலை அடக்கியபடி, “பெயில் பெட்டிஷன்..” என சில காகிதங்களை நீட்டினாள்..

கைகளில் பெற்று கொண்ட சத்யதேவ் அலட்சிய பார்வையுடன், “செக்ஷன் 436ஆ?? மேடம்.. இதெல்லாம் அர்ரெஸ்ட் வாரென்ட் வாங்காதவங்களுக்கு... நீங்க ஏன் 437 இல்லைன்னா 439 ட்ரை பண்ண கூடாது.. முயற்சி பண்ணி பாருங்க.. நிச்சயமா ஜெயிக்க முடியாது..” என்றவர் சிரிக்கவும், “தாரா நீ என்ன சொல்ற?? இவங்க ரிலீஸ் பண்ணின வீடியோ பத்தி..” என தாராவின் பக்கம் திரும்பினாள் பல்லவி.

“ஜஸ்ட் அது கேஷுவல் விசிட் தான்...” என உதடு வளைத்து, “நான் கொலை பண்ணல..” என தாரா தட்டிய மேஜையின் அதிர்வு எதிரே அமர்ந்திருந்த சத்யதேவிடம் சென்று காட்டியது தன்னுடைய திறனை.. “ம்ம்.. இது உங்களுக்கு போதும் தானே ஆபீசர் சார்.. இந்த கேஸை உடைச்சு எப்படி தாராவை வெளிய கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்.. கோர்ட்ல மீட் பண்ணலாம்..” என சவாலாக கூறிவிட்டு கடந்தாள்..

கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அன்று முழுவதும் ஸ்டேஷனிலேயே தாரா அடைத்து வைக்கப்பட்டிருக்க, வட்ட சம்மணமிட்டு நிமிர்வாக அமர்ந்திருந்தாள் எமகாதகி.. அவளின் அமைதிக்குப் பின்னும் ஏதோவொரு மர்மம் இருக்குமென சத்யதேவ் கூறினாலும் ஆஷிக்கிற்கு அதில் நம்பிக்கையில்லை.. சாதாரணமான பெண்களைப் போலத் தான் இருக்கிறாள்.. என்ன... சிறிது தன்மானத்தையும் சுயமரியாதையையும் எதிர்பார்க்கிறாள் என்பது ஆஷிக்கின் பார்வை..

“சார்.. தாராவை மீட் பண்ணனும்..” என கவலையோடு உள்ளே நுழைந்த ஆதியை, சத்யதேவின் அறிவிற்கு எட்டாமலேயே ஆருயிர் இல்லாளைக் காண அனுமதி வழங்கினான் ஆஷிக். கூண்டினுள் அடைபட்ட சிங்கமென தாரா உறுமிக் கொண்டிருந்ததாய் நினைக்க, பெண்ணின் உருவில் நரியொன்று நடைபயில்கிறது.. கம்பிகளுக்கு பின்னால் கட்டியவளை காணும் திறனில்லாத ஆதியின் கண்கள் வேதனையை வெளியிட்டுக் கொண்டிருக்க, “இங்க எதுக்காக வந்த??” என்பது போல பார்வையில் கூர்மையை கூட்டினாள்..

“பட்டு.. என்னால முடியல..” என்றவனின் வார்த்தைகள் வலியில் மட்டுப்பட, “இப்படி ஜெயிலுக்கு வந்து பார்க்குறது முடியலையா?? இல்லை காலேஜ் நடந்த ப்ராப்ளம்னால முடியலையா??” என கம்பிகளில் கன்னம் வைத்தாள்.. “நோ.. நோ.. தாரா.. இப்படி ஒரு சிச்சுவேஷன்ல பார்க்க முடியலை.. எந்த தப்பும் பண்ணாம பனிஷ்மென்ட் வாங்கணும்னு எந்த அவசியமும் இல்லை..” என ஆதங்கத்தை வெளிப்படுத்த, “நான் தப்பு பண்ணலைன்னு யார் சொன்னா ஆதி?? இந்த திரும்ப வரமுடியாத ஒன் வே பாத்ல ஒரு முடிவெடுத்து தப்பு பண்ணியிருக்குறேன்.. அதுக்கு தண்டனையை நான் தான் அனுபவிக்கணும்..” என்றவளிடம் மறுத்து பேசும் திண்மம் அவனுக்கு இல்லை..

“என்னோட எந்த கொஸ்டீனுக்கும் இப்போ ஆன்சர் கிடைக்காதுன்னு தெரியும்.. இன் ஃ பாக்ட் வரக்கூடாதுன்னு நீ அனுப்பின மெசேஜ் கிடைச்சும் என்னால அமைதியா வீட்டுல உக்காந்திருக்க முடியல.. பல்லவி பெயில் வாங்கிடுவா தானே..” என அவளை புரிந்தவனாக கேட்க, “ஹண்ட்ரட் பெர்சென்ட் ஷ்யூர்..” என்றாள் அர்த்தப் புன்னகையுடன்..

“இந்த உலகத்துல ஒவ்வொரு பிறப்புக்கும் பின்னாடி ஒவ்வொரு காரணம் இருக்கும்.. வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல குறிப்பிட்ட காரணியால இரண்டா பாதை பிரியும்.. அது ஒரு நிகழ்வா இருக்கலாம்.. நிஜ மனிதனா இருக்கலாம்.. ஏன் வாழுறோம்ன்ற கேள்வி நமக்குள்ள உதிக்கும் போது தான் அந்த காரணிக்கு சக்தி கிடைக்கும்.. என்னோட உலகம் ரெண்டா பிரிஞ்சதுக்கு காரணம் ஆதியா கூட இருக்கலாம்.. ஆமான்னு சொல்ல ஆசை தான்.. ஆனா நம்பிக்கை எங்க முழுமை அடையுதோ அங்க மனசு உடைக்கப்படும்.. ஆதி என் வாழ்க்கையோட உண்மை..”

-தாரா.

விரல்கள் அணைத்திருந்த பேனாவை ஆத்மார்த்தமாய் காதலுற செய்து கொண்டிருக்க, வராண்டாவில் ஒய்யாரமாய் நடந்து கொண்டிருந்தாள்.. நேற்றைய தினம் ஆர்யன் விட்டு சென்றதெல்லாம் இப்பொழுது ஒன்றுமே இல்லை என்று தோன்றிற்று.. அவன் தான் முன்னமே தெளிவாய் கூறியிருந்தானே.. அதையும் மீறி “ஃ பேமிலி வரலியா??” என எவரும் கேட்டு மனதை நோகடித்து விட கூடாது என்று துடித்து கொண்டு ஓடியது இவள் தவறு தானே.. என்ற கற்பனையான சமாதானத்தை தாராவின் மனம் தனக்கு தானே போதித்துக் கொண்டது.. காதலில் பைத்தியக்காரத்தனம் உண்டு தான்.. ஆனால் இது முட்டாள்தனமானது..

வகுப்பில் பாடவேளைக்கான நேரமாதலால் மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, அவர்களின் மத்தியில் காற்றில் நீச்சலடித்து ஆபீசை அடையும் போது, “குட் மார்னிங்..” என உற்சாகமான குரல் கம்மியது எதிரில் நின்றிருந்தவனைக் கண்டதும்.. கல்லூரி மாணவனில் இருந்து பேராசிரியராக உயர்வு பெற்றதிற்கான பக்குவம் அரும்பு மீசையிலும் குறும்பு தாடியிலும் மட்டுமல்ல பார்வையிலும் கூட கலந்திருந்தது..

வாழ்நாளில் எவரின் முகத்தில் விழித்துவிட கூடாது என்று தீர்மானித்திருந்தாளோ அவன் கண்முன்னே சகபேராசிரியராக வந்து நிற்கிறான்.. அதுவும் நிலைமை சரியில்லாத சமயத்தில்.. விதியும் நேரமும் ஒருசேர அடித்து துவைக்கிறது.. முதல் பார்வையில் ஸ்தம்பித்து, அடுத்த நொடியே விழிகளை நகர்த்தி, அந்த சூழ்நிலையை கடந்திட அவ்விடம் ஒரு உருவம் நிற்கவே இல்லை என்பது போல நடந்து கொள்கிறாள்.

தவிர்க்க வேண்டுமென்கிற அவசியம் அவளுக்குத் தானே தவிர ஆதிக்கு இல்லையே!! “தாரா.. தாரா..” என்றபடியே பின்னால் ஓடிவந்தவனை அசால்ட்டாக திரும்பிப் பார்த்தவள், “சொல்லுங்க ப்ரொபசர் ஆதி..” வேண்டுமென்றே ‘ங்க’வில் அழுத்தம் கொடுத்தாள். அந்த அலைபாயும் கண்களும் துடுக்கென பேசும் இதழ்களும் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.. ஆனால் அவள்??

“ஹவ் யூ தாரா?? ஆ ஃ ப்டர் அ லாங் டைம்.. இப்படி ஒரு இடத்துல மீட் பண்ணுவோம்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை.. நேத்து தான் டாக்டரேட் கான்வகேஷன் முடிச்ச மாதிரி இருக்குது..” என ஆதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொறுமையாக குறுக்கே கைகட்டி அனைத்தையும் கவனித்து விட்டு, “ஆஹான்.. நேத்து தான் என்னை நடுரோட்டுல விட்டுப் போனியா??” என்றவளின் இதழ்களில் அழுத்தம் கூடியது.. “தாரா..” என்றவனின் பொங்கி நின்ற உற்சாகம் வடியத் துவங்க, “இன்னைக்கு என்னோட கோபத்தை கன்ட்ரோல் பண்றது உன்னோட அதிர்ஷ்டம்னு நினைக்குறேன்.. சோ..” என முற்றுப்புள்ளி வைத்தாள் உரையாடலுக்கு..

அவளின் வார்த்தைகளில் துவண்டு போன ஆதி தலையை கவிழ்த்துக் கொள்ள, “மேடம்.. டாக்டர் வந்துருக்குறாங்க..” என வேல்முருகன் தெரிவித்து விட்டுச் செல்ல, “ம்ம்..” என கேட்டுக்கொண்டாள்.. வாசலில் காத்திருந்த ஆர்யனைக் காணச் சென்ற தாரா, உணர்சிகள் துடைக்கப்பட்ட முகமாய் நின்றாள்.. “ஆக்சுவலா தாரா.. ஐ யம் சாரி.. பார்ட்டியில நான் அப்படி பிஹேவ் பண்ணியிருக்க கூடாது.. கொஞ்சம் கன்ட்ரோல இழந்துட்டேன்.. அதுக்காக நான் வருத்தப்படுறேன்..” என மன்னிப்பை வேண்டுபவனை மேலும் காண சகியாது, “ப்ச்.. இட்ஸ் ஓகே ஆர்யன்.. நான் ஹர்ட் ஆகலை.. டோன்ட் வொரி..” என சமாதானம் செய்தவளுக்கு சங்கடமாய் போனது..

“அப்படின்னா டின்னர் இன்னைக்கு சேர்ந்து சாப்பிடலாமா??” என அனுமதிக்காய் அவளை ஏறிட்டுப் பார்க்க, கொஞ்சமும் தாமதியாது “ஷ்யூர்..” என சம்மதித்தாள். “ஷார்ப் எயிட் ஒ’ கிளாக்..” என்ற ஆர்யன் அங்கிருந்து கிளம்ப, பெருமூச்சொன்றை இழுத்து, உதடு குவித்து வெளியிட்டாள். மலையை கல்லைக் கட்டி புரட்டியது போன்றதொரு சோர்வு!!

காலச்சக்கரம் கருணையின்றி நகர்ந்து கொண்டிருக்க இடைவேளையின் போது கேன்டீனில் காபி குடித்துக் கொண்டிருந்தவளின் முன்பு தானாய் சென்று அமர்ந்தான் ஆதி.. அவனைக் கண்டதும் எழுந்து செல்ல முற்பட, “தாரா.. ப்ளீஸ் ஒரு ஃ பைவ் மினிட்ஸ்.. ப்ளீஸ்..” என இறைஞ்சியவனுக்கு பாவம் பார்த்து சரியென்றாள்.

“நான் செஞ்சதுக்கு எந்த எக்ஸ்கியூசும் சொல்ல முடியாது தாரா.. ஐ அக்ரீ.. பட் நான் இன்னும் உனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவனா நடந்து காட்ட முடியும்.. பிலீவ் மீ தாரா.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. ப்ரெசென்ட்ல கூட உன்னை டிஸ்டர்ப் பண்ணனும்னு நினைக்கல.. ஜஸ்ட் ஒரு தேர்ட் பெர்சனா ஆப்போசிட்ல வரும்போது ஸ்மைல் பண்ணிக்கலாமே.. ஸாரி கேக்குறதை தவிர பெரிய ஆப்ஷன் எதுவும் என் முன்னாடி இல்லை..” என்றான்..

“லுக் ஆதி.. நம்ம ரிலேஷன்ஷிப்போட பேசிக்கே ஹானஸ்ட் அண்ட் லாயல் தான்.. பட் நீ அதை மீறிட்ட.. நம்பிக்கை தூள் தூளா ஆயிடுச்சு.. திரும்பவும் நம்பிக்கையை சம்பாதிக்குறதுக்கு நிறைய உழைக்கணும்.. கைன்ட் ஹார்டட்டா இருப்பேன்னு சாதாரணமா எடை போட்டுடாதே.. நம்பிக்கை துரோகம் பார்த்த மனசு சூடு கண்ட பூனை மாதிரி.. சோ யோசிச்சிக்கோ..” என்று எச்சரிக்கவும் செய்தாள்..

அன்று இரவு, மெழுகுவர்த்திகள் ஏற்றி அவர்களின் வாழ்வில் சிறப்பான நாட்களை ஆக்கிரமித்திருந்த உணவுகளை பார்த்து பார்த்து சமைத்து மேஜையை நிறைத்தாள்.. வியர்வையை சுடுநீரில் களைந்து அவனுக்கு பிடித்தமான கடல்நிறத்தின் ஆடையை அணிந்து கண்ணாளனுக்காய் காத்திருந்தாள்.. நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, நேரப்போக்கிற்காக பல்லவிக்கு அழைத்தாள்.

ஆதியின் திடீர் வருகையைப் பற்றி கூறவும், “அவன் இங்க எதுக்கு வந்தான்?? திரும்பவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணி லை ஃ பை ஸ்பாயில் பண்ணவா?? உனக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்னு தெரியுமா??” என பொரியத் துவங்கிவிட்டாள் பல்லவி..

“பல்லவி ரிலாக்ஸ்.. திரும்ப வந்துருக்குறான்னு தான் சொன்னேன்.. இதுக்கே டென்ஷனானா எப்படி??” என்க, “தாரா.. அவன் வந்ததே தப்புன்னு சொல்றேன்.. நைன் இயர்ஸ் ரிலேஷன்ஷிப்ல இருந்தீங்க.. விட்டா வேற உலகமே இல்லைன்னு சீரியசான ரிலேஷன்ஷிப் அது.. வீட்ல உங்களை பத்தி பேசுறேன்னு சொன்னவன் அப்படியே போயிட்டான்.. நடுரோட்டுல உன்னை விட்டுட்டு.. அந்த சிச்சுவேஷன்ல இருந்து வெளிய வர்றதுக்கு நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப.. யோசிச்சு பாரு.. திரும்பவும் வந்து நின்னா கோபம் வருமா இல்லையா?! கேக்குற எனக்கே ரத்தம் கொதிக்குது.. நீ எப்படி சும்மா விட்ட?!” என படுஜோராக கத்தினாள் பல்லவி..

“யா.. நீ சொல்றதும் உண்மை தான்.. பட் இந்த டைம் செகண்ட் சான்ஸ் குடுக்கலாம்னு தோணுது.. திரும்பவும் என்னோட லை ஃ ப்க்குள்ள வர்றேன்னு கேக்கல.. லை ஃ ப்ல ஜஸ்ட் ஒரு கேரக்டரா வர்றேன்னு சொல்றான்.. அவனோட தப்புக்காக பீல் பண்ணுறான்.. எனக்கு தப்பா தோணலை பல்லவி..” என்ற தாரா மனம் திறந்து பேசிக் கொண்டிருக்க, “ஆதி வந்த விஷயம் ஆர்யனுக்கு தெரியுமா??” எனக் கேட்டாள் பல்லவி..

அதே சமயத்தில் ஆர்யனும் வந்துநிற்க, “கால் யூ லேட்டர்..” என கைபேசிக்கு விடைகொடுத்தவள், “ஆர்யன்..” என்றிட இல்லாத திருநாளாய் அவனே அணைத்தான் மொத்தமாய்.. சடுதியாய் அவனுடைய செய்கை பெண்ணவளை உலுக்கிப் பார்க்க, “ஆர்யன்..” என்றவளின் வார்த்தைகள் குரல்வளைக்குள்ளேயே கைதாகியது.. “லவ் யூ..” என்றவன் நெற்றியில் ஆதுரமாய் இதழ் பதிக்க, ஆன்மாவில் சென்று இனித்தது அந்த முத்தத்தின் ஆரம்பம்..

உயிரில் கடைந்தெடுத்த உணர்வுகள் எழும்பி நிற்க, உதடுவிரித்து சிரித்தவளின் கண்கள் கூட புன்னகைத்தது.. “சாப்பிடலாமா?? பசிக்குது..” என ஆர்யன் கண்களை சிமிட்ட, “உக்காருங்க.. நான் எடுத்து வைக்குறேன்..” என்றவளின் இடைவளைத்து தன்பக்கம் இழுத்தவன் “சேர்ந்து சாப்பிடலாம் ஒண்ணா..” என்றான்.. வியப்பில் விரிந்த விழிகளை குறும்பாய் நோக்கியவன், “ரொம்ப நாள் கழிச்சு..” என்றான்.. ஆம் ஒரே தட்டில் உணவு என்பது மட்டுமல்ல.. இந்த இனிப்பான ஆர்யன் கூட பல நாள் கழித்து கிடைக்கிறான்..

ஒவ்வொரு கவளமும் அமிர்தமாய் இறங்க, ஆதியின் நினைவு குறுக்கிட்டுச் சென்றது.. அவனின் வருகையை பற்றி கூறினால் இப்பொழுதிருக்கும் ஆர்யன் தூரம் சென்றுவிடுவானோ என்ற ஐயத்திலேயே அவனின் நினைவு அமிழ்ந்து போனது..


நிழலில் நிஜமும் உயிரில் மெய்யும்
நிறைந்து போனால் நீடிக்குமோ
Kavithai pizhaiyaagum...
 




Attachments

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
வந்துட்டோம்..
வாவ்வ்வ்.... நீங்க செம பாஸ்ட் அக்கா... வாங்க... வாங்க.. ஒன்ஸ் அகைன் வெல்கம் டூ கவி சோன்..
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
வந்துடேன்✨
சூப்பர் பதிவு....present தாரா மைண்ட் செட் என்னனே புரிஞ்சுக்க முடில
ஆதி வந்த நாள தான் ஆரியன் இப்படி இருக்கானா🤔
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் 😍✨
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka

Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
ஆதி நடுரோட்ல விட்டுட்டு போய்ட்டானா..
அப்படினா ஆர்யன் மேலயும் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கா.. ஆர்யன் ஏன் இப்படி இருக்கான்..ஆதிய பத்தி முன்னாடியே சொல்லியிருக்காளோ..
 




sujasenthil

நாட்டாமை
Joined
Nov 9, 2021
Messages
90
Reaction score
137
Location
Dharmapuri
ஆர்யன் character எப்படி என்று இன்னும் புரியவில்லை. ஆத்தரே அடுத்த epi யிலாவது சொல்லுவிங்களா ☺☺☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top