• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
take care ma. health first. next story....

adei akilu neeyaaaaaaaaaaaa
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Pallavi mela pizhaiya irukkumo 🤔 🤔 🤔

Aathi n Thaara va irukkathu nu thonuthu 🙄🙄🙄

Pallavi murder pannitu tharava jail ku anuppittu Aathi adutha vazhakkai kodukalam nu 😑😑😑😑

Pallavi ya kaappatha than thara kinfe a olichu vachrukkalo

Sari story thana namalum solli vaippom😁😁😁

Interesting ud sister 👍 👍 👍

Take good rest, kasayam n healthy foods will recover very soon sister👍👍👍

Take care of you....
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,446
Reaction score
8,836
Location
Chennai
அத்தியாயம்-10
View attachment 33842
காலை ஸ்டேஷனில் நடுவாக அமர்ந்திருந்த தாராவை பாதுகாக்கும் நோக்கில் பல்லவியும் ஆதியும் இருபுறத்திலும் அணையாக இருக்க, தாராவின் உண்மைகளைக் குறித்து பல்லவியிடத்து வாய்திறவாதிருந்தான் ஆருயிர் காதலன் ஆதி..

“லாயர் மேடம்.. உங்களை சார் கூப்பிடுறாங்க..” என்கவும் பல்லவி மெல்ல எழுந்து சென்றாள்.. மீதமிருந்த இருவரையுமே சத்யதேவ் அழைத்து சென்றார்..
விசாரணை அறையில் காத்திருந்த ஆஷிக், “மிஸ். அனுபல்லவி.. டேக் யுவர் சீட்..” என நாற்காலியை காண்பிக்க, கேள்வியாய் அமர்ந்தாள். ஃபைலை புரட்டியபடியே, “ஃபேமஸ் லாயரோட பிரீவியஸ் கேஸ் எல்லாம் ரீட் பண்ணினேன்.. ஸ்மார்ட் மூவ் அண்ட் போல்ட் அர்கியூமென்ட்.. எல்லா கேஸ்லையும் நீதி நேர்மை நியாயம்னு போராடினவங்க இந்த கேஸ்ல மட்டும் எல்லாத்தையும் தலைமுழுகிட்டீங்களா??” என கேட்டான் ஆஷிக்..

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் ஆபிசர்.. ஒரு லாயரோட எத்திக்ஸ் என்னன்னா அவங்களோட க்ளையன்ட்க்கு நியாயமா நடந்துக்குறது தான்.. மோர் ஓவர் ஷி இஸ் மை பெஸ்ட் ஃபிரெண்ட்..” என லாவகமாய் பதிலளித்த பல்லவியை பார்த்து மெலிதாய் புன்னகைத்தார் ஆஷிக்..

“ஒன்பது வயசுல ஆரம்பிச்ச ஃபிரெண்ட்ஷிப்காக இதுகூட பண்ணலைன்னா எப்படி?? அவங்களை இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் பண்ண நீங்க விருப்பப்படுற மாதிரியே எனக்கும் ஆசைதான்..” எனத் தொடங்கிய ஆஷிக், “தாரா இந்த கொலையை செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு நானும் முதல்ல நம்பினேன்.. பட் கோர்ட்ல ஹியரிங் அப்போ அவங்களோட ஃபேஸ் ரீடிங் இந்த கொலையில சம்பந்தப்பட்டிருக்குறதா காட்டுச்சு.. ஒன்னு கொலையை செஞ்சிருக்கணும்.. இல்லைன்னா நேர்ல பாத்துருக்கணும்..” என முடிக்க, “வாட் யூ மீன்?” என்பதாக புருவத்தை நெரித்து அவனை நோக்கினாள் அவள்.

சில நிமிடங்கள் யோசித்தவளாக, “நான் ஏன் உங்களை நம்பணும்??” என விளிக்க, “நீங்க ஆதியை ஒன்சைடா லவ் பண்ணின வரைக்கும் தெரிஞ்சிக்கிட்ட நான் இந்த க்ளூவை ஏன் கேஸ் ஃபைல்ல ஆட் பண்ணலைன்னு யோசிங்க மேடம்..” என்ற ஆஷிக் மூவராக எடுத்த புகைப்படம் ஒன்றை நீட்டினான்..

அதிலே பல்லவியின் பார்வை காதலோடு ஆதியின் மீது பதிந்திருக்க, நெற்றியில் வியர்வை பூத்தவளாக அவனை வெறித்தாள்.. “இந்த கேஸ்ல ஒளிஞ்சிருக்குற இன்னொரு கோணத்தை பார்க்கணும்னு நினைக்குறேன்.. சோ ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க..” என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் பல்லவி.

“ஆக்சுவலா ஆதி கொடுத்த ஸ்டேட்மென்ட்படி ஆர்யன் தாராவை கொடுமைப்படுத்தினதால தான் டிவோர்ஸ் ஆச்சுதுன்னு சொன்னாரு.. அது உண்மையா??” என வினவும் போது சிறு தலையசைப்பு பல்லவியிடத்திலிருந்து கிடைத்தது..

“பட், தாரா-ஆர்யன் கல்யாணம் ரெண்டு பேரோட சம்மதத்தோட நடந்திருக்குது.. ஈவன் அரேஞ்ட் மேரேஜ் கூட கிடையாது.. ஃபர்ஸ்ட் ஒன் இயர் ரொம்பவே ஹாப்பியான கப்பிளா இருந்திருக்குறாங்க.. சடனா ஆதி ட்ரான்ஸ்ஃபர்ல வந்ததுக்கு அப்புறம் ப்ராப்ளமேட்டிக்கா மாறியிருக்குது இல்லையா??” என கேட்ட ஆஷிக் பல்லவியை உற்று நோக்கினான்..

எச்சிலை விழுங்கிக் கொண்ட பல்லவிக்கு தோழியின் தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு இல்லையென்றாலும் மீண்டும் அவளின் வாழ்க்கை பிரச்ச்சனைக்குள்ளாக கடந்து போகிறதெனும் போது மறைப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வந்தாள்..

“ஆதி திரும்ப வர்றதுக்கு முன்னாடியே அவங்களுக்குள்ள பிரச்சனை இருந்துச்சு.. மேரேஜ் ஆகி எயிட் மன்த்ல தாராவுக்கு மிஸ்கேரேஜ் ஆகிடுச்சு.. அங்க தான் ப்ராப்ளமே ஆரம்பிச்சது.. மேரேஜ் ஆகி பைவ் மன்த் கழிச்சு ப்ரெக்னன்ட்டான தாராவை ஆர்யன் ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கிட்டான்.. இன்ஃபாக்ட் தாராவை விட ஆர்யன் குழந்தை விஷயத்துல ரொம்பவே டெஸ்பெரெட்டா இருந்தான்.. அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட்க்கு தாரா தான் காரணம்னு நினைச்ச ஆர்யன் கொஞ்ச கொஞ்சமா விலக ஆரம்பிச்சான்.. ஆதி வந்ததுக்கும் அவங்க லைஃப்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்றாள் பல்லவி..

மற்றொரு அறையில்,
அரைமணி நேரமாக சத்யதேவ் இருவரையும் உறுத்து நோக்கிக்கொண்டிருக்க, வெளிறிய முகத்துடன் ஆதியும் வேண்டா வெறுப்புடன் தாராவும் அமர்ந்திருந்தனர்..
அசால்ட்டாக அமர்ந்திருந்த தாராவோ அன்பனின் கரங்களை அசையாமல் கைது செய்திருக்க, சற்று இதமாக உணர்ந்தான் ஆதி.. நிசப்தமான அறையில் நிறுத்தாமல் உறுத்து விழிக்கும் சத்யதேவிடம், “நீங்க என்ன யோசிச்சிட்டு இருக்குறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ஆஃபீசர் சார்..” என நக்கலாக கைகட்டி, பின்னால் சாய்ந்தாள் திமிரின் மொத்த உருவமான தாரா..

உடல் முழுவதும் பாயும் நாளங்களில் நக்கலும் நையாண்டியும் நிறைந்திருக்க, இரத்தத்திலோ ரகசியமும் ரௌத்திரமும் நிறைந்திருந்த முழுசூனியக்காரியாகவே கண்டார் சத்யமூர்த்தி..

இந்த நிலையில் இவளால் மட்டும் எப்படி எகத்தாளமாய் எதிர்த்திட முடிகிறது என மெச்சுதலோடு தன் மணவாட்டியின் முகதரிசனம் கண்டான் ஆதி.. இவள் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என மனசாட்சி கேலிசெய்ய, கேளாதிருந்தான்..

அநியாயத்திற்கு சத்யதேவின் மூளை வேறு “இறந்து போன ஒருத்தரோட கேரக்டரை கன்டினியூவஸா கிரிட்டிசைஸ் பண்ணி கேஸை திசை திருப்பிட்டு... என்ன நக்கலா??” என வசனங்களை தயாரித்து கொடுக்க, ஆத்திரத்தை உதடு கடித்து மடக்கியவரின் மூளைக்குள் ஆஷிக்கின் சொற்களே ஓடிக் கொண்டிருந்தது..

“தேவ் சார்.. என்கொயரில அந்தம்மா ஏதாவது பேசுனா அவசரப்பட்டு ரியாக்ட் பண்ணிடாதீங்க.. ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும்.. ஃபேமஸ் சைக்கியார்ட்டிஸ்ட் வொய்ஃப்க்கு பாதியாவது சைக்காலஜி தெரிஞ்சிருக்கும்.. நீங்க ஷாட் டெம்பர்னு தெரிஞ்சிக்கிட்டு, ட்ரிகர் பண்றாங்க.. சொசைட்டில மதிப்பா இருக்குற தாரா கம்ப்ளைன்ட் பண்ணினா அல்ரெடி ட்ரான்ஸ்ஃபர் கொடுத்த டிப்பார்ட்மென்ட் அகைன் ட்ரான்ஃஸ்பர் பண்ண ரொம்ப டைம் எடுக்காது.. புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்..” என ஆஷிக் தனியே அழைத்து பேசிய ரகசியம் அது..

வயதிலும் பதவியிலும் சரிக்கு சமம் இல்லையென்றாலும் சரியான கருத்து என்பதால் அந்நேரத்திற்கு தன் வறட்டுகௌரவம் கெடாதபடிக்கு விறைப்பாகவே நடந்து கொண்டார்.. ஏனெனில் மாற்றலாகி வந்தபோது சந்தித்த சம்பவங்கள் அப்படி..

சளைக்காமல் சீண்டிக் கொண்டிருப்பவளை சங்கடமாக ஆதி நோக்க, அதே நேரத்தில் “சார்..” என்றவாறே உள்ளே நுழைந்த ஆஷிக், “தாரா.. என்கொயரி..” என்கவும் அசால்ட்டாய் பார்வையை நகர்த்தினாள்..

யோசிக்க முடியாத வகையில் விசாரணையில் பல திருப்பங்கள் கொடுத்து கதிகலங்க செய்வதாக நினைக்க, அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் நிறுத்தியவளுக்கு நடக்கப் போவதை குறித்து யோசிக்கவும் வேண்டியதில்லை.. கணிக்க வேண்டியதுமில்லையே..

தாமதமின்றி எழுந்து கொண்டவள் ஆஷிக்கை பின்தொடர, ஏக்கமாக அவள் சென்ற பாதையையே வெறித்த ஆதியின் முன் சொடுக்கிட்டு கவனத்தைக் கலைத்தார் முழுசர்வாதிகாரியாக மாறிப்போன சத்யதேவ்..

“அன்னைக்கு நைட் தாரா எதுக்காக ஆர்யன் வீட்டுக்கு போகணும்??” என உதட்டை அழுந்த கடித்துக்கொண்ட சத்யதேவ் சென்றவளின் மீது கொண்ட தீராத பகையை இவனின் மீது இறக்கி வைப்பதாய் தோன்றியது..

“அ..”

“அது ஒரு கேசுவல் மீட்னு கோர்ட்ல சொன்ன டீஃபால்ட் ஆன்சரை ரிப்பீட் பண்ணாதீங்க ஆதி.. நீங்க சொல்ற பொய்க்கு ஒரு எவிடென்ஸ் வச்சதும் நம்புறதுக்கு நான் ஜட்ஜ் இல்லை.. சத்யதேவ் ஐபிஎஸ்.. வித்தியாசம் தெரிஞ்சு பேசுங்க..” என்ற சத்யதேவின் தொனி எப்பொழுதோ அதட்டலுக்குள் ஐக்கியமாகியிருந்தது..

விக்கித்து அமர்ந்திருந்த ஆதியின் பக்கமாய் தண்ணீர் கிளாசை நகர்த்தி, “இந்த கேஸ்ல எனக்கு எந்த லாஜிக்குமே புரியல.. தாரா ஆர்யனோட வீட்டுக்கு போனது உங்களுக்கு தெரியும்னு சொல்றீங்க.. அதுவும் கேசுவல் மீட்!! ஒருத்தர் வேணாம்னு முடிவு பண்ணிட்ட பிறகு யாரும் அவங்ககிட்ட கேசுவலா பழகமாட்டாங்க.. எக்ஸ் லவ்வர்னு எடுத்துக்கிட்டாலும் ஓகே.. எக்ஸ் ஹஸ்பன்ட்.. அதுவும் டிவோர்ஸ் ஆகி இன்னொருத்தரோட மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் தன்னோட பார்ட்டில இருந்து கிளம்பி ஏன் எக்ஸ்ஹஸ்பன்ட் தேடிப் போகணும்?? இடிக்குதுல்ல..” என புருவம் உயர்த்தினார் சத்யதேவ்..

தெரிந்த கேள்விகளே கேட்கப்படும் தேர்வில் அமர்ந்திருக்கும் மாணவன் போல அசட்டு தைரியத்தோடே, “ஆக்சுவலி சார்.. ஆர்யன் ஆக்சிடென்ட்டலா எங்களோட பார்ட்டிக்கு வந்திருந்தாரு.. தாராவோட சில திங்க்ஸ் அவர்கிட்ட இருக்குறதா சொல்லவும்தான் தாரா கிளம்பி போனா..” என பதிலிறுக்க, சத்யதேவின் பார்வை நம்பிக்கையின்மை எனும் கோட்டிலேயே நின்றது..

“ஒ.. அப்படியா?? டிவோர்ஸ் ஆகுறதுக்கு முன்னாடியே ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்களே.. அப்புறமும் திங்க்ஸ் இருக்குதுன்னு சொல்றது சில்லி ரீசனா இருக்குது.. ஆதி எனக்கு தேவை தாரா ப்ரோக்ராம் பண்ணிவச்ச பொய்கள் இல்லை.. நடந்த உண்மை!! அன்னைக்கு பார்ட்டியில இருந்து தாரா கிளம்பி போனதுக்கு அப்புறம் நீங்க தேடிட்டு கேட்க்கு வந்தது சிசிடிவில ரிஜிஸ்டர் ஆகிருக்குது.. சோ உங்களுக்கே இந்த உண்மை புதுசு.. இல்லையா?? ஒன்பது வருஷமா காதலிச்ச ஆதியை தாரா மேரேஜ் பண்ணிக்கும் போது ஆர்யன் கிட்டருந்து எந்த அப்போசிஷனும் இல்லை.. மனசுக்குப் பிடிச்சவரோட பிடிச்ச வாழ்க்கை.. இதுக்கு மேல என்ன வேணும்?? இதை விட்டுட்டு எக்ஸை தேடி போக காரணம் ப்ரெசென்ட் லைஃப்ல ப்ராப்ளமா தானே இருக்க முடியும்..” என்றதும் தான் தாமதம் ஆதியும் தன் பொறுமையை மறந்திருந்தான்..

“வாட் டூ யூ மீன் மிஸ்டர்.சத்யதேவ்?? அப்போ நான் என் தாராவை கேர் பண்ணிக்கலைன்னு சொல்ல வர்றீங்களா?? இல்ல பாசமா பார்த்துக்கலைன்னு சொல்ல வர்றீங்களா?? இல்ல அந்த ஆர்யன் மாதிரி கொடுமைப்படுத்தினேன்னு சொல்ல வர்றீங்களா?? என்னோட தேவதை சார் அவ.. எத்தனை பேருக்கு இன்னொருத்தனோட மனைவியா மாறின முன்னாள் காதலி திரும்பவும் கிடைப்பா சொல்லுங்க?? எனக்கு என் தாரா திரும்பவும் கிடைச்சா... பொக்கிஷமா நினைச்சு பொத்தி பொத்தி பாதுகாத்தவ திரும்பவும் வாழ்க்கையில கிடைக்குறப்போ நான் எப்படி அதை மிஸ்யூஸ் பண்ண நினைப்பேன்? உள்ளங்கையிலே வச்சு தாங்குறேன் சார் அவளை.. இத்தனை நாள் அவ வாழாத ஒரு வாழ்க்கையை அவளுக்கு கொடுக்கிறதுக்கு என்னோட லெவல் பெஸ்ட் ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்... ஆர்யன் கொடுத்த காயங்களுக்கு மருந்தா இருந்துட்டு இருக்கிறேன்.. எங்களுக்குள்ள இருக்கிற அன்னியோன்யம் பத்தி பப்ளிக்கா சொல்லக் கூடாதுதான்.. இருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறதால சொல்றேன்... நான் இதுவரைக்கும் தாராவை சுடுதண்ணீர் வைக்கிறதுக்குகூட சொன்னது கிடையாது.. அவளுக்கா விருப்பமிருந்தா குக் பண்ணுவா... அவ்ளோதான்... காரமா சாப்பிடறப்போ அவ கை சிவந்துடுமேன்னு ஊட்டிவிடுவேன் நான்... இவ்ளோ ஏன்... சாரீ கட்டுறப்போ சேப்ஃடிபின் கூட கையில குத்தி ரத்தம் வந்துடக் கூடாதுன்னு...” என தன்போக்கில் உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டே போனவன், “ரத்தம்...” என உச்சரிக்கையில் தான் தாரா காட்டிய ரத்தம் தோய்ந்த துணியின் நினைவு வந்துபோனது.

“ரத்தம்... ரத்தம்...” என மூளை உள்ளுக்குள் குமைய, ஒருகணம் நிறுத்திவிட்டான். பின் சுதாரித்து மீண்டவன், “எல்லாமே ரெடிமேட் புடவையா வாங்கிக் கொடுக்கிறவன் சார்... இப்படி ஒரு எல்லாமே பார்த்து பார்த்து செய்யுறப்போ எங்களுக்குள்ள என்ன பிரச்சனை வந்துடப் போகுது சார்??” என முடித்தான்.

அவனின் சொற்களில் இருந்த தடுமாற்றத்தை கண்டுகொண்ட சத்யதேவ், வேகமாக வெளியே சென்று உள்ளே நுழைகையில் கையில் செர்ச் வாரண்டோடு வந்தார்..

மற்றொரு அறையில், “ஸீ தாரா.. மர்டர், மர்டரர், க்ரைம் சீன், விக்டிம், என்கொயரி.. இதெல்லாம் தவிர வேற ஏதாவது பேசலாமா?? லைக் உங்களோட முக்கோண வாழ்க்கை பத்தி..” என ஆஷிக் சாதுர்யமாக காயை நகர்த்த, சரித்திர புகழ் பெற்ற சதிகாரிக்கு வியூகம் தெரியாமல் இருக்குமா என்ன?

“ஏன் சார்??” ஆஷிக்கின் மீது மெலிதாய் மரியாதை முளைத்திட, “பிகாஸ்.. இந்த கேஸ் கொஞ்சம் சென்சிட்டிவ்வா இருக்குது.. இறந்து போன ஆர்யனோட மொத்த ஃபைலும் என்கிட்டே இருக்குது.. பட் ஆர்யனை பத்தி நீங்க சொன்னா இன்னும் ஈசியா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலாம் இல்லையா??” என தோள்களை குலுக்கினான் ஆஷிக்..

“சோ.. லைஃப் ஹிஸ்டரில இருந்து கேசோட மிஸ்டரியை கண்டுபிடிக்க ட்ரை பண்றிங்க.. வெல் ட்ரை..” என பாராட்டிய தாரா, ஆயாசமாய் கண்களை அலைவுற செய்து, “இங்க வேணாம்.. என்னை க்ரைம் சீன் கூட்டிட்டு போங்க.. நடந்ததை சொல்றேன்..” என்றாள்..

மலையிறங்கி வரும் மகமாயியிடம் அப்பொழுதே அருள்வாக்கு கேட்கும் பாமரனைப் போல, பட்டென ஏற்பாடுகளை செய்தான் ஆஷிக்.. சத்யதேவ் கூறும் அளவிற்கு தாரா ஆபத்தானவளாக தெரியவில்லை.. உள்ளுக்குள் பூட்டிய உண்மைகளும் ரகசியங்களும் யாரிடமும் புலப்படாத வகையில் தன்னை சுற்றி இறுமாப்பெனும் வேலி அமைத்து கொள்கிறாள் என்றே தோன்றியது ஆஷிக்கிற்கு..

“கான்ஃபிடென்ட்.. இந்த வேர்ட்டை ப்ரோனவ்ன்ஸ் பண்ணும் போது கண்டிப்பா அந்த பெஸ்ட் பெர்சன் தான் ஞாபகத்துக்கு வர்றான்.. தி ஃபேமஸ் சைக்கியார்டிஸ்ட் ஆர்யன்.. ஒரு பொண்ணு சூப்பர் வுமனா ஃபீல் பண்றதுக்கு பின்னாடி கண்டிப்பா ரெஸ்பான்சிபிள் ஆர் இர்ரெஸ்பான்சிபிள் பார்ட்னர் தான் இருக்க முடியும்.. ஆர்யனும் எனக்கு அப்படி தான்.. விஷயம் என்னன்னா அவன் பர்ஸ்ட் டைப்பா செகண்ட் டைப்பான்னு தெரிஞ்சிக்குறதுல தான் சிக்கலே இருந்துச்சு..”

-தாரா
“தாரா.. சோஷியல் மீடியால கேர்ள்ஸ் ஃபோட்டோஸ் அப்லோட் பண்றது பத்தி தீவிரமா டிபெட் போயிட்டு இருக்குது போல..” என பல்லவி செல்போனை பார்த்த வண்ணமே பேச, “என்னை கேட்டா இந்த கொஸ்டீனோட ட்ரென்ட் இன்னுமா முடியலைன்னு கேட்பேன்..” என்ற தாராவின் பதிலில் தோழிகள் இருவரும் தோள்கள் குலுங்கா வண்ணம் சிரித்துக் கொண்டனர்..

“ஹாய்.. மே ஐ..” என சடுதியாய் வருகை தந்த ஆதியை தாரா உறுத்து விழிக்க, “ஒரு கம்பெனிக்கு நான் தான் இன்வைட் பண்ணினேன்..” என பல்லவி கூறவும் சரியென்று ஒப்புக்கொண்டாள்..

ஆதியை சந்திப்பதனால் ஆர்யன் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவளின் மனநிலையை புரிந்து கொள்வான் என அறிந்திருந்தாலும், ஆதியை எதிரில் அமரச் செய்து தனித்து கொண்டாள் தாரா.. பக்கத்தில் இருப்பதை விட பாவையின் வதனம் நோக்குவது வரமல்லவா என்ற நிலை தான் அவனுக்கு..

பொதுவான உரையாடல்களுக்கு நடுவே, “தாரா, ஐவிஎஃப் பத்தி ஆர்யன்கிட்ட டிஸ்கஸ் பண்ணலையா??” என பல்லவி கேட்டிட, தாரா அவசரமாய் ஆதியின் இருப்பை விழியசைவில் உணர்த்தினாள்.. பல்லவி சட்டென வார்த்தைகளை நிறுத்திட, அவனோ எப்பொழுதோ கேட்டுவிட்டானே!!

“ஐவிஎஃப் எதுக்காக தாரா..” என அவன் படுசீரியசாக தாராவினை பார்க்க, என்ன சொல்வதென தெரியாமல் திருதிருவென விழித்தாள் அவள்.. பல்லவி பட்டும் படாமலும் விஷயத்தை எடுத்துக் கூறிட, “என்கிட்டே என்ன ஹெசிடேஷன் தாரா?? அல்ரெடி நான் சொல்லிட்டேன்.. உன்னோட லைஃப்ல எனக்கு அக்கறை இருக்குதுன்னு..” என அந்நிமிடத்தில் நண்பனின் அரவணைப்பை கொடுத்தான் ஆதி..

எதுவும் பேசாமல் முன்னிருந்த கண்ணாடி கிளாசையே வெறித்துக் கொண்டிருந்தவளின் விழிகள் பாந்தமாய் தரையை தழுவிட, வருத்தம் கொள்கிறாள் என்பதை உணரமுடிந்தது..

“ஆர்யன் பர்த்டே பார்ட்டியில நான் என் கன்ட்ரோலை இழந்திருக்கக் கூடாது.. இல்லைன்னா என்னோட குழந்தையை இழந்திருக்க மாட்டேன்..” என்ற வார்த்தைகளில் சோகம் இழையோட, “ப்ச்.. தாரா.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. நடந்ததை யோசிக்காம அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.. ஐவிஎஃப் பத்தி ஆர்யன்கிட்ட பேசு.. சப்போர்ட்டா நாங்க இருக்குறோம்..” என ஆறுதல் கூறினான் ஆதி..

ஆனால் இவர்களிடம் எப்படி கூறுவாள்? குழந்தையை தொலைத்த தவறுக்காய் பிழையை நிவர்த்தி செய்யும் வாய்ப்பை தராமலேயே தண்டிக்கிறான் என்று..

“ஓகே.. லெட்ஸ் டேக் அ செல்ஃபி.. ரியூனியன் மாதிரி இருக்குதுல்ல..” என பல்லவி கவனத்தை திசைதிருப்ப, தாரா கேலக்ஸியை உயர்த்தினாள்.. பல்லவியின் விழிகள் மெல்ல ஆதியின் புறமாய் நகர, எதேச்சையாக விழுந்த காட்சியை தாராவால் நம்ப முடியவில்லை..

அவள் கண்ட காட்சி சரியாக ஆதியையும் சேர்ந்திட, “தாரா.. ஆர்யனா??” என சந்தேகத்தில் வினவியவனின் முகம் பாராமல் ‘ஆமாம்..’ என தலையசைத்தாள் ஆர்யனின் மீதிருந்த பார்வையை விலக்காமலேயே..

“எங்க??” என பல்லவியும் எம்பிட, ஏதோ ஒரு பெண்ணின் கரத்தினை பிடித்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தான் ஆர்யன்.. “ஆர்யனோட க்ளையன்ட்டா இருக்கும்.. சம்டைம்ஸ் ஆஃபீஸ் இல்லாம க்ளையன்ட்டோட கம்ஃபர்ட்காக பப்ளிக் பிளேஸ்ல கூட செஷன் இருக்கும்..” என தன்னையும் அவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டாள்..

கேட்காத கேள்விக்கு அவளின் பதில் சமாளிப்பு என பட்டவர்த்தனமாக காண்பித்து கொண்டிருக்க, அங்கே ஆர்யனோ பெண்ணவளை தன் தோள்களில் சாய்த்திருந்தான்.. இதை கண்டதும் சட்டென முகத்தை திருப்பிக் கொண்ட தாராவால் இந்த முறை சமாளிப்பு பதிலேதும் கொடுக்க முடியவில்லை..

அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நண்பர்களும் அமைதிகாக்க, “வர்றேன்..” என அங்கிருக்க பிடிக்காமல் கிளம்பி விட்டாள் தாரா..

வரும் வழியெங்கும் மூளையை கசக்கி, “ஆர்யன் ஆதி விஷயத்தில் காட்டிய பெருந்தன்மையை உன்னால் காட்டமுடியவில்லை என்ற இயலாமை..” என்ற சமாதானத்தை கடைந்தெடுத்தாள்..

அவையெல்லாம் இரவு உணவில் ஆர்யனை காணும் வரையில் தான்.. மீண்டும் அந்த காட்சியே நினைவில் வந்து நிற்க, பல யோசனைகளுக்கு பின் ஆர்யனின் ஸ்டடி ரூம் தேடி சென்றாள்..

அவளுக்கான தண்டனை காலம் தொடங்கியதில் இருந்தே இங்கே தான் தனித்திருக்கிறான்.. “ஆர்யன்.. நாம பேசலாமா??” என அனுமதிக்காய் வேண்ட, “ஐ யாம் நாட் அவைலபிள் ரைட் நவ்...” என்ற ஆர்யனின் பார்வை மடிக்கணினியை விட்டு நகராதிருந்தது..

“ம்ம்..” என வாடிய முகத்தோடு கிளம்ப எத்தனித்த தாராவை, “நாளைக்கு மார்னிங் பேசலாமா??” என்ற ஆர்யனின் வார்த்தைகள் நிறுத்திட, “அவ்வளவு சிரமப்பட்டு பேச வேண்டாம்..” என முகத்திலடித்தாற் போல கூறிட வேண்டும் என்ற பழைய தாராவின் திமிர் உள்ளுக்குள்ளே கொதித்தது..
இருப்பினும், “நாட் இம்பார்டேன்ட் ஆர்யன்.. ஃபார்மல் டாக் தான்.. நீங்க கன்டினியு பண்ணுங்க..” என்ற தாரா, கதவை கடந்து ஜன்னலருகே செல்கையில், “தாரா கிளம்பிட்டா.. நீ சொல்லு ஹர்ஷினி..” என்ற ஆர்யனின் குரல் தெளிவாகவே இவளின் செவியை தீண்டிச் சென்றது..

படுக்கையில் சென்று வீழ்ந்தவளுக்கு இது தன்னுடைய வீழ்ச்சியா இல்லை தனக்கான விதியா என தெரியாமல் அழுது கரைந்தாள்.. அழுகையில் தீர்ந்து தெளிந்தவள் ஃபேஸ்புக்கில் ஆர்யனின் நண்பர்கள் பட்டியலில் ஹர்ஷினி என்ற பெயரைத் தேடினாள்..

அதிக நிமிடங்கள் காத்திருக்க செய்யாமல் அடுத்த வினாடியே கொடுத்து விட, திறந்து பார்த்தவளுக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி!! இந்த ஹர்ஷினி என்பவள் அன்று பார்ட்டியில் ஆர்யன் அனைவர் முன்னிலையிலும் சண்டையிட்ட அகிலின் மனைவி..


கொடூரமாய் காதலிலே தண்டிக்க வேண்டுமென்கிறாய்
நின் காதலே இவளுக்கு தண்டனை என்பதை அறியாயோ?!

கவிதை பிழையாகும்...


ஆக்சுவலா இந்த விஷயத்தை உங்க எல்லார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு தான் நெனைச்சிட்டு இருந்தேன்... சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது அப்படின்னு தான் இத்தனை நாளா மறைச்சிட்டு, என்னை நானே செல்ப் மோடிவேட் பண்ணிட்டு தன்னம்பிக்கையோட இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு இருந்தேன்... ஆனா இன்னைக்கு என்னோட ஐடியில் வந்து ஏன் யூடி தர்றேன்னு ஏமாத்திட்டே இருக்கிறீங்க அப்படின்னு ஒருத்தர் கேட்டதால எல்லார்கிட்டேயும் சொல்ல வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறேன்.

I tested COVID positive. கடந்த பதினைந்து நாட்களாக அப்டேட் டைப் பண்ண முயற்சித்தும் முடியலை.. ஹெல்த் கன்டிஷன் ரொம்பவே மோசமாக இருக்கிறது. இருந்தாலும் என்னோட லெவல் பெஸ்ட் முயற்சித்து அடுத்த அப்டேட் டைப் பண்ணி முடிச்சிட்டேன்.. தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ். சீக்கிரமே உடல்நலமும் மனநலமும் சரியாக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
Take care of your health first dear ud lan bext than🤩🤩😍😍🌹
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அட பாவி பயலே, ஆரி, ச்சைக்🤮🤮🤮🤮

இதுக்கு நீ அவளுக்கு தண்டனை தறையா பக்கி பயலே, நீ ஒரு 🤐🤐🤐🤐

ஐயோ தாரா ☹☹☹

ஆதி, இப்பவும் எப்பவும் பேஸ்ட் சப்போர்ட்டர்👍👍👍👍

ஆன இப்ப எதுக்கு டா அந்த லூசு சத்யா கிட்ட உளறி வெச்சா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பவி ஆதியா தான் லவ் பண்ணி இருக்கா, நா கெஸ் பண்ணினது கரெக்ட்🤩🤩🤩🤩

அப்ப கல்பிரிட் அகில் ஆ😳😳😳😳, அதை பார்த்தது தாரா....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
yes akka... Aathi always sweet chellooo.. Aryan very worstu behaviour ra neeyi... nerya pizhaigal irukkudhu akkaa.. konjam konjamaa solve pannuvennu ninaikkiren... unga comments paarthathil me happyo happy.... thanks for showering your abundant love and enormous support akka... thank u sooooooo much... keep supporting akkaa....
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Take care sis .Health s more important..take rest..
V will pray for you
ipa konjam konjama recover aagitte varren akka.. Thank you for your prayers...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Interesting move ..
thanks for showering your abundant love and enormous support akka... thank u sooooooo much... keep supporting akkaa....
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Take care of your health pa. Nice epi
thanks for showering your abundant love and enormous support akka... thank u sooooooo much... keep supporting akkaa....
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Take care ma nalla healthy ah sapidumga bayam vendam mind relax ah vechikomga, last year la enakum en 2sons kum corona ma veetlaye quarantine la irundom nalla sapadu sapidanum rest edukanum, kashayam and aavi pidikanum idellam pannunga ma, take care ma mudalla health sari agatum apparam updates kudukalam ma
ipathaan kashayam, aavi pidikkirathunnu ovvonnaa try panni konjam konjama recover aagittu varren akka... unga anbu and aadharavu thaan ennoda confident kku kaarnam.. thanks for showering your abundant love and enormous support akka... thank u sooooooo much... keep supporting akkaa....
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியும்....
உடலுக்கு மருந்தும்
உள்ளத்துக்கு ஊக்கமும்
எப்பொழுதும் நம்பிக்கையும் தான் நம்மை நகர்த்தி செல்லும்....
இது கடந்து போகும்
கடந்து செல்வோம்.....
உற்சாகமாய்.....
Take care of your health and be bold to face everything.....
Stay healthy and happy.....
nichayama akkaa... neenga ellaarum sonna maathiri rombave confident ah rest eduthu orlavu recover aagitten... soon muzhusa sariyaagiduvenu namburen. thanks akkaa...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top