கவிதைப் பிழை - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
அத்தியாயம்-11
1642691383650.png
“சார்.. அந்த ரூம் டோர்ல டேமேஜ் இருக்குது.. பார்த்து ஒப்பன் பண்ணுங்க..” எனவும், “சார்.. சார்.. வெளிய மேட்ல மிதிச்சு உள்ள வாங்க.. ஃப்ளோர்ல புழுதி ஏறிடும்..” எனவும் சுத்தம் கற்பித்துக் கொண்டிருந்தான் ஆதி.. யாரையும் தொடர்புகொள்ள முடியாவண்ணம் போனை பறித்து சோபாவில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவன் ஓயாது பேச்சை தொடர்ந்தான்.

ஆனால் போலீசாரோ இவனின் போதனைகளை பொருட்டாகக்கூட மதியாமல் கருமமே கண்ணாக கடமையை செய்து கொண்டிருந்தனர்.. எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது சத்யதேவ் குறிப்பிட்ட அறையின் அருகே செல்லும் வரையில்..

அந்த அறையில் தானே தாராவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை படைத்த பொருளொன்று கிடக்கிறது!! தற்போதைய நிலைக்கு வெறும் கம்பியாக தோன்றலாம்.. ஒருக்கால் சத்யதேவின் கைகளில் கிடைக்குமேயானால் அவளுக்கு எதிராக மீண்டும் ஆயுதமாக பட்டைத் தீட்டப்படுமே!!

மீண்டுமொரு முறை பொக்கிஷத்தை இழந்திட மனோதிடமில்லாத ஆதி, அருகில் நின்ற ஒருவரிடம், “எக்ஸ்கியூஸ் மீ சார்.. அங்க கேரேஜ் தான் இருக்குது.. ரொம்ப நாளாவே லாக்ல தான் இருக்குது.. அங்க எதுவும் இருக்க போறதில்லை..” என போலியான படபடப்போடு சத்யதேவிற்கு கேட்கும்படியாக சத்தமாக மறுத்தான்..

அவனுடைய குரலில் ஏற்பட்ட குழறலை உண்மையென நம்பிய சத்யதேவ் தீப்பார்வையோடு இருவரை அழைத்துக்கொண்டு பின்பக்கமாய் இருந்த கேரேஜிற்கு சென்றார்..

அந்த இடைவேளையை பயன்படுத்தி கொண்டவனாக பெட்ரூமில் நுழைந்து எவரும் வந்துவிட்டால் எச்சரிப்பதற்காக மணியாலான வால் ஹேங்கிங் ஒன்றை வாசலிலே கட்டிவிட்டு தேடுதலைத் தொடர்ந்தான்.. திட்டம் சொதப்பினால் கூட தாராவிற்கு மாற்றாக தன் கைரேகையையாவது பதித்துவிட வேண்டும் என்கிற எண்ணம்.

மேஜையின் ட்ராயரை திறந்து பார்க்க, நேற்று அடுக்கி வைத்த புத்தகங்கள் கலைந்து கிடப்பதோடு கிடந்த இரத்தம் தோய்ந்த கம்பியையும் காணவில்லை.. ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்து யோசித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் அலாரம் ஒலிக்கத் துவங்க, நாக்கை கடித்துக் கொண்டான்..
வாசலில் கேசத்தை கலைத்த பொருளை “ச்ச்சே..” என எரிச்சலோடு விலக்கிய சத்யதேவ் அறைக்குள் நுழைய, வெகுசாதாரணமாக பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தான் ஆதி..

“ரெய்டு பண்ணாத ஏரியாக்கு வர கூடாதுன்னு தெரியாதா ஆதி??” என மிரட்டலாக கேட்ட சத்யதேவிற்கு இயற்கை உபாதையை கழிக்க வந்ததாய் பவ்யமாகக் கூறினான் அவன்..

"ம்ம்.." என கேட்டுக்கொண்ட சத்யதேவின் முகத்தில் எரிச்சல் கொஞ்சமாய் ஒட்டியிருக்க, அவனை புறந்தள்ளி தேடுதலை தொடர்ந்தார்.. நேற்று இரவே இடம் மாற்றப்பட்ட பொருளானது இன்று காலை தேடுதல் வேட்டையில் எவ்வாறு கிடைக்கும்?!

“ப்ச்..” என கடுப்போடு தரையில் உதைத்துக் கொண்ட சத்யதேவின் முகம் தோல்வியினால் தோய்ந்து போக, “தேவ் சார்.. இதுல மட்டும் என்ன லாஜிக் இருக்குது?? தப்பு பண்றவன் தடயத்தை சொந்த வீட்டுலேயே வச்சுட்டு சுத்துறான்னு சொல்றது அபத்தமா இல்ல.. அடிமுட்டாள் கூட செய்ய மாட்டான்.. என்ன்ன்ன சார்..” என சலித்து கொண்டான் ஆதி..

அவனையுமறியாமல் துப்பு கொடுக்கவும் சரியாக பிடித்து கொண்ட சத்யதேவ் “காலேஜ் ஸ்டாஃப் ரூம் பாக்கி இருக்குதே.. அதையும் முடிச்சிட்டு இதே வார்த்தையை சொல்றீங்களான்னு பார்க்கலாம் ஆதி..” என தோள்களில் தட்டி, அடுத்து கல்லூரிக்கு தான் ஜீப்பை திருப்பினார்..

கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதில் சிரமங்கள் ஏதுமின்றி அடையாள அட்டையும் வந்ததிற்கான காரணமும் அறிந்ததும் ‘தாராளமாக..’ என்று ஆசிரியர்களின் அறையை தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர்.. அவர்களுக்கு கல்லூரியின் நன்மதிப்பும் மரியாதையும் முக்கியமென்றிருந்தது.

ஆதியின் அறையை ஒரு குழுவும் தாராவின் அறையை ஒரு குழுவும் சோதித்துக் கொண்டிருக்க, ஆதியை தன்பக்கத்திலே நிறுத்தி வைத்திருந்தார் சத்யதேவ்.. "ஆதி.. நீட் டூ டாக்.." என ஹெச்ஓடி கேட்கவும் அனுப்பி வைத்தார்..

“ப்ரொஃபசர் ஆதி.. உங்களுக்கே தெரியும்.. நம்ம காலேஜ்க்கு வெளியில நல்ல பெயர் இருக்குது.. அதோட நம்ம காலேஜ்க்குன்னு ரெபுடேஷன் அண்ட் ரெஸ்பெக்ட் இருக்குது.. இப்ப ரீசென்ட்டா நடக்குற தாராவோட கேஸ் அண்ட் என்கொயரி எல்லாமே காலேஜையும் ஸ்டுடென்ட்ஸயும் அஃபெக்ட் பண்றதா மேனேஜ்மென்ட் நினைக்குது...” என பேசிக் கொண்டிருக்கும் போதே, “சார்,, இது ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டிகாக தான்.. மத்தபடி ஆர்யனோட மர்டர் கேஸ் காலேஜோட ரிலேட் ஆகாது..” என உடனடி ஆறுதலை கூறினான் ஆதி.

“ஆர்யன் கேஸ்ல போலீஸ் சஸ்பெக்ட் பண்றது தாராவை.. தாரா இந்த காலேஜோட ப்ரொஃபசர் இல்லையா?? இல்லைன்னு நீங்க என்ன காரணம் சொன்னாலும் இது தான் ரியாலிட்டி ஆதி.. இந்த கேஸ் ஸ்டுடென்ட்ஸ்ல ஆரம்பிச்சு ஸ்டாஃப் வரைக்கும் பாதிக்குது.. நியூஸ் பேப்பர்ல காலேஜோட நேமை மென்ஷன் பண்ணி என்னென்னவோ எழுதுறாங்க... மேல இருக்குறவங்களுக்கு நாம தான் பதில் சொல்லணும் ஆதி...” என்றவரை வேண்டாவெறுப்புடன் ஏறிட்டான் ஆதி..

மேலிடத்தில் இது குறித்து கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்துவிட்டபின் ஏற்றுகொள்ளுமாறு வலியுறுத்துவதற்காக மட்டுமே இவர் இங்கிருக்கிறார் என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் பிடிக்க, “ஓகே.. சார்.. கமிட்டி என்ன சொல்றாங்களோ அப்படியே பண்ணிடலாம்..” என விருப்பமில்லாமல் கேட்டான் ஆதி..

“தாராவை கேஸ் முடியுற வரைக்கும் சஸ்பென்ட் பண்ண சொல்லியிருக்குறாங்க..” என்றதை கேட்கும் பொழுது உள்ளுக்குள் ஆடிப்போனான்.. அவளுடைய கொள்கைகளின்படி முக்கியமான சிலவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்துவது யாராக இருப்பினும் விடுவதில்லை.. அதிலும் தொழில் விவகாரத்தில் எப்படி எடுத்துக்கொள்வாள் என்பது ஆண்டவனுக்கு மட்டும்தான் வெளிச்சம்..

விஷயமறிந்து வீராப்பாய் சண்டையிட்டால் கூட தாங்கிடுவான்.. மனமொடிந்து வருந்தினால் என்செய்வது?? தெரியவில்லையே..
அதைவிட பல பெரிய சலுகைகள் வந்தும் விடாப்பிடியாய் இங்கு தானிருப்பேன் என்ற பிடிவாதத்தில் கல்லூரிக்காக எவ்வளவோ செய்திருப்பாள்.. ஆனால் அனைத்தும் கல்லூரியின் நற்பெயர் என்ற காரணியில் மறக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை..

“சார்.. தாராவுக்கு இந்த ப்ரோஃபெஷன் மேல எவ்ளோ இன்ட்ரெஸ்ட்னு நான் சொல்ல வேண்டியதில்லை.. இப்படி பெர்சனல் லைஃப்ல நடக்குற ப்ராப்ளத்துக்காக ப்ரோஃபெஷனை ஸ்பாயில் பண்ணினா என்ன அர்த்தம் சார்?” என வருத்தத்தின் வெளிப்பாடாய் கோபரேகை சூழ்ந்த ஆதியின் குரல் ஓங்கியது..

முகவாயை தேய்த்துக் கொண்ட ஹெச்ஓடியோ “ம்ம்.. வேணா ஒன்னு பண்ணலாம்.. கேஸ் முடியுற வரைக்கும் ப்ஃரொபசர் தாரா மெடிக்கல் லீவ்ல காலேஜ் வராம பார்த்துக்கோங்க.. முக்கியமா ப்ரெஸ், சோஷியல் மீடியான்னு காலேஜ் நேம் ஸ்ப்ரெட் ஆகுறதை ஸ்டாப் பண்ணுங்க.. எங்க பக்கத்துல இருந்து சஸ்பென்சன் ஆர்டரை வன் ஆர் டூ வீக்ஸ்க்கு ஹோல்ட் பண்ண பாக்குறோம்..” என கொஞ்சமாய் இறங்கி வந்தார்..

“ப்ரெஸ்ஸ கூட கண்ட்ரோல் பண்ணிடலாம்.. பட் சோஷியல் மீடியா கண்ட்ரோல் பண்றதெல்லாம் சுனாமி முன்னாடி நிக்குற மாதிரி சார்..” என பாவமாய் ஆதி விழிக்க, "அது உன் சாமர்த்தியம்.." என்பது போல கழன்று கொண்டார் அவர்..

சிந்தித்த வண்ணமே ஆதி திரும்புகையில், “தேவ் சார்.. இந்த லேப்டாப் டேபிள் அடியில இருந்து கிடைச்சிது..” என போலீஸ் ஒருவர் தந்திட, “மேஜைக்கு அடியில இருக்குதுன்னா ஏதோ இருக்குதுன்னு தான் அர்த்தம்.. யாரோட லேப்டாப்?? கார்னர்ல டேமேஜாகி இருக்குது.. ஒப்பன் ஆகுதா??” என விசாரித்தார் சத்யதேவ்..

“கார்னர்ல ஸ்க்ராச்சாஸ் இருந்தாலும் வொர்க்கிங் கண்டிஷன்ல தான் இருக்குது.. ஒப்பன் பண்ணி பார்த்தோம்.. பாஸ்வேர்ட்..” என இழுக்க, “ஆதி.. பாஸ்வேர்ட் தெரியுமா??” என சத்யதேவ் ஆதியின் புறம் திரும்பவும் திருதிருவென விழித்த அவன் தெரியாதென உதடு வளைத்தான்..

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற கடுப்பிலிருந்த சத்யதேவ் அவனை முறைக்க, “ஆபீசர்.. நான் சொன்ன அனானிமஸ் பேஜ் போஸ்ட்.. அந்த பொண்ணு போனை ஹாக் பண்ணிட்டதா சொல்றா..” என ஹெச்ஓடி வந்தபோது தான் போனில் குறுஞ்செய்தி அழைப்பு ஒளிர்ந்தது..

“இந்த லேப்டாப்பையும் சார் சொல்ற கம்ப்ளைன்ட்டையும் சைபர் செல்க்கு அனுப்பிடுங்க..” என அவசரமாய் கூறிவிட்டு, ஆளில்லா மரத்தடிக்கு சென்று ஃபோனை எடுக்கவும் “என்கொயரி ஸ்டார்டட்..” என்ற ஆஷிக்கின் தகவலை கண்டதும், இதழ்களில் குரூரப் புன்னகை விரிந்தது..

காம்பவுன்ட்டை ஒட்டியவாறே ஆளுயர அலங்கார செடியினை கடந்து செல்லும் தாரா திரும்புகையில் அவசரமாய் ஃபோனை பாக்கெட்டில் தள்ளிவிட்டு வேகமாய் முன்னேறினான் ஆஷிக்..
“ஆஷிக் சார்.. நீங்க ஏதாவது கேக்கணும்னு நினைச்சீங்கன்னா தாராளமா கேக்கலாம்..” என்ற சலுகையை வழங்கிய தாராவை புன்னகையாய் நோக்கிய ஆஷிக், “நார்மல் மோட்ல இருக்குறீங்களா??” என்றதும் பற்கள் தெரியா வண்ணம் மெலிதாய் சிரித்து கொண்டாள்..

“எக்ஸ் ஹஸ்பன்ட் ஆர்யன் உங்களோட ட்ரஸ்ட்டை உடைச்சிட்டாரு.. ஃபிரெண்ட் வொய்போட அஃபயர் வச்சு மறைச்சதுனால ரிலேஷன்ஷிப்ல லாயலிட்டிய இழந்துட்டாரு.. அப்படி தானே..” என ஆஷிக் விசாரணையை மறைமுகமாக தொடங்கினார்..

“ம்ஹும்.. ட்ரஸ்ட் வொர்த்தியா இருக்குறதுக்கு இது பிஸ்னஸ் பார்ட்னர்ஷிப் இல்லை.. ரிலேஷன்ஷிப்.. கான்ஃபிடன்ஸ் வேணும்.. செஞ்ச தப்பை கண்டுபிடிச்சு சண்டை போடுறது நம்மளை போலீஸ் மாதிரியும் அவங்களை திருடன் மாதிரியும் போர்ட்ரை பண்ணும் சார்.. தப்பு பண்ணியிருந்தா தானா வந்து ஒத்துக்கிட்டு திருந்தணும்..” என்றாள் பிடிகொடாமல்..

“சோ.. நீங்க ஆர்யனை எதுவுமே கேட்காம அந்த விஷயத்தை அப்படியே மூடி மறைச்சிட்டீங்க..” என ஆஷிக் ஓரடி ஆழம் பார்க்க, “இந்த மெச்சூரிட்டி அப்ப இருந்திருந்தா கண்டிப்பா செஞ்சிருப்பேன்.. பட் பேட் லக்.. அன்னைக்கு அவசரப்பட்டிருக்க கூடாது.. இல்லைன்னா டேரக்டா முகத்தை பார்த்து போடுற ஃபர்ஸ்ட் ஃபைட் ஸ்டார்ட் ஆகியிருக்காது.. நானும் ஆர்யனோட இன்னொரு முகத்தை பார்த்திருக்க மாட்டேன்‌‌.” என்றவளின் குரல் தழுதழுக்க,, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் பூந்தொட்டி கவனக்குறைவினால் கால்களில் இடறி சரிந்தது..

அவ்வாறு நடப்பது முதல்முறையன்று.. கோபத்தில் உதைத்து நொறுங்கிய பூந்தொட்டி பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது..

“ஒரு ரிலேஷன்ஷிப்போட போதையே அதுல கிடைக்குற குட்டி குட்டி ஃபீலிங்க்ஸ் தான்.. லவ், செக்கியூர்ட்நெஸ், கேர், ஆங்ரி, பெயின் எக்ஸட்ரா எக்ஸட்ரா.. அந்த ஃபீலிங்க்ஸ் தர்ற போதையில நாம எந்த பாதையை சூஸ் பண்றோமோ.. அதுக்கு ஏத்த மாதிரி ரிலேஷன்ஷிப்போட நேச்சர் மாறிடும்.. பொதுவா கேள்வியில இருக்குற எக்சைட்மெண்ட் பதில்ல இருக்குறதில்லை.. அப்படி தான் என்னோட பலநாள் கேள்விக்கு ஆர்யனோட பதில் கிடைக்கும் போது எம்ப்டியா பீல் பண்ணினேன்..”

-தாரா.

அச்சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்கள் கடந்திருக்கலாம்.. தான் கண்டதையும் கேள்வியுற்றதையும் குறித்து ஆர்யனிடம் தெரிவித்து அதற்கான விளக்கத்தினை பெறுவதில் தயக்கம் காண்பித்தாள் தாரா.. அவனிடம் தவறிருந்தால் அதனை கூறுவதற்காகவாவது தன்னிடம் வரட்டுமே என்ற அற்ப ஆசையும் அதில் அடங்கியிருந்தது.. அதன் விளைவாக அவன் காட்டும் விலகல் இவளிடத்திலும் தொற்றிக்கொண்டது...

பேச்சினை குறைத்து கொண்ட உறவில் முகம் பார்த்து கொள்ளும் சூழ்நிலையும் தவிர்க்கப்பட்டது.. இந்நிலை ஆர்யனை எவ்விதத்திலும் பாதிக்காது அவனுடைய அன்றாட பணிகள் நடைபெற்று கொண்டிருக்க, மாற்றங்களை எதிர்பார்த்திருந்த தாரா வெறுத்து, மரத்துப் போனாள்..

அவனைத் தவிர உலகம் வேறில்லை என சுழல்பவளின் கண்ணோட்டம் மெல்ல மெல்ல நட்பு வட்டத்தில் விரியத் துவங்கியது.. மாதம் ஒருமுறை நிகழும் சந்திப்புகளின் இடைவெளி நாள்கணக்காக குறைந்தது..

ஆர்யனிடத்தில் குறைவுபட்ட அன்பினை நிரப்பும் முயற்சியில், முன்னாளில் ஏமாற்றம் தந்துவிட்டு சென்ற ஆதியை “தெரிந்தவன்” என்பதில் இருந்து ‘நண்பன்’ என்ற வட்டத்திற்கு மாற்றியிருந்தாள் தாரா.. அவளிடத்தில் மதிப்பு பெற்றிட வேண்டுமென துடித்துக் கொண்டிருந்த ஆதிக்கும் அது இரண்டாவது வாய்ப்பெனப்பட்டது நலம் விரும்பியாக..

மாலின் எக்ஸ்கலேட்டரில் சிரித்தபடியே மூவரும் கீழ்த்தளம் சென்று கொண்டிருக்க, திடீரென, “பல்லவி.. ஆர்யன்..” என்று தாரா படபடக்க, “தாரா.. காம் டவுன்.. ஆபீஸ்ல அப்பாயின்ட்மென்ட் இருக்கும் போது ஆர்யன் இங்க எதுக்காக வரணும்?? ஆர்யனை பத்தியே யோசிக்குறதுனால கூட பார்த்த மாதிரி இருக்கலாம்..” என சமாதானம் செய்த பல்லவி ஆதியை நோக்கினாள் அர்த்தமாய்..

அவனும், “ஆர்யன் இங்க வர்றதுக்கு சான்சே இல்லை.. அப்படியே வந்தாலும் எங்க கூட தானே இருக்குற தாரா..” என சமாதானம் செய்ய முயல்பவனிடம் என்னவென்று கூறுவாள்? இப்பொழுதெல்லாம் எங்களுக்குள் பேச்சு வார்த்தை குறைத்து வருகிற போகிற இடத்தை கூட பகிர்ந்து கொள்வதில்லை என்றா??

அவர்களைப் பொறுத்தவரையில் ஆர்யனை மற்றொரு பெண்ணோடு காண நேர்ந்தால் தோழி துவண்டு விடுவாள் என்பதனால் இந்த சமாதான வார்த்தைகள்.. ஆனால் வீட்டின் நான்கு சுவற்றினுள் கணவனின் கடைக்கண் பார்வை கிட்டாதா என மருகியவளுக்கு வாழ்க்கை வெறுத்துப் போனதே!!
தனியுலகில் சஞ்சரிக்கும் ஆர்யனுக்கு புதிதாய் ஒரு துணையுள்ளது என்ற உண்மையை அறிந்த பின் மனம் தானாய் வெறுப்பை தருகிறதா என்ற கேள்விக்கு பதில் சந்தேகத்திலேயே நிற்கிறதே!!

ஆர்யனோ மாலின் மத்தியில் உஷ்ணமான பார்வையோடு இவர்கள் மூவரையும் முறைத்துக் கொண்டிருக்கிறான்.. பசுவைக் கண்ட கன்றென அவனின் புறம் ஓடிய தாரா வலிய புன்னகையை சிந்தினாள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியினர் என்று உலகப்பார்வைக்கு போலி பிம்பத்தினை உருவாக்கிட..

வீட்டினுள் தாராவின் மீது தெறிக்கும் ஆர்யனின் தீப்பார்வை வெளியுலகில் உணர்ச்சிகள் துடைத்த முகமாய் மாற்றம் கொள்ளும்...

அவளை பின்தொடர்ந்த இருவரையும் கொலைவெறியுடன் முறைத்தவன் பக்கம் வந்ததும் பாய, "ஆர்யன்.. பப்ளிக்.." என அடிபட்ட குரலில் நினைவுபடுத்தினாள் தாரா..
நினைத்தது நிறைவேறாத எரிச்சலில் வெப்பமான மூச்சினை சத்தமாய் இரைத்துக்கொண்ட ஆர்யன் நிகழ்வதை புரிந்து கொள்ளும் முன்னரே தரதரவென பிடித்து இழுத்து சென்றான் தாராவை..

அவனின் கண்களில் மிருகத்தனமொன்று மின்னி இழுத்த இழுப்பில் நடந்த தாராவின் முகத்தை காணும்பொழுது பாவமாகவும் தங்களால் தானோ என தோன்றிய குற்றுணர்வை மறுக்க இயலவில்லை..

எவ்விடத்திலும் கருணையே காண்பிக்காது காட்டுத்தனமாய் நடந்து கொண்ட ஆர்யன் வீட்டினுள் நுழைந்ததும் கூறவா வேண்டும்.. முரண்டு பிடித்த தாராவின் கைகளில் விழுந்து குரோட்டன்ஸ் பூந்தொட்டி நொறுங்க, கண்டுகொண்டானில்லை.. அவனுடைய நோக்கத்தில் மட்டுமே குறியாயிருக்க, கதவை திறந்து வேகமாய் உள்ளே தள்ளினான்..

நிலைதடுமாறிய தாரா சோஃபாவின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக்கொள்ள சமன் செய்ய சில நிமிடங்கள் கிட்டியது.. “ஆர்யன்.. நீங்க அந்த மால்ல.. உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தானே..” என தாரா இயல்பாக பேச முயற்சிக்க, “அங்க நீ எதுக்காக போனங்கறது தான் கேள்வியே..” என கோபத்தில் இரைந்தான் அவன்..

சடுதியான டெசிபெல்லின் அளவை ஏற்றுகொள்ள முடியாமல் கண்களையும் காதுகளையும் சுருக்கி, “எங்களோட மீட்அப் பாயின்ட் அது..”என்கவும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"வெளிய ஷாப்பிங் போறதை யார்கிட்ட சொல்லிட்டு போன தாரா? ம்ம்.. உன் இஷ்டத்துக்கு சுத்துறதுக்கு எதுக்காக வீடு? ஹஸ்பண்ட்னு நான் ஒருத்தன்?"

"இது நான் கேட்க வேண்டியது ஆர்யன்.. தனியா சாப்பிட்டு தனியா தூங்கிக்குறதுக்கு நான் எதுக்கு?? வொய்ப்ஃனு பேர்ல ஊரை நம்ப வைக்குறதுக்கா? நாம நெக்ஸ்ட் ஸ்டெப்க்கு மூவ்ஆன் ஆகணும்.. ஒரு கம்ப்ளீட் பேமிலியா ஹாப்பியா இருக்கணும்னு எனக்கும் ஆசை தான்.." எனக்கூறிக்கொண்டிருக்கும் போதே, "இதுக்கு யார் பொறுப்பு தாரா?? ஆக்சிடென்ட்ல லைஃப்பா பேமிலியான்னு வர்றப்ப செல்ஃபிஷ்ஷா தானே சூஸ் பண்ணின?? இது யார் தப்பு??" என எரிச்சலில் கத்தினான்..

"மிஸ்கேரேஜ் ஆனதுக்கு நான் தான்‌ காரணம்.. சான்ஸ் கம்மியா இருக்குற பாதையை எதுக்காக சூஸ் பண்ணணும்னு யோசிச்சேன்.. என்னோட இடத்துலே இந்த கிரேட் ஆர்யன் இருந்திருந்தாலும் அதையே தான் பண்ணியிருப்பார்.. முதல் தப்பு என்னோடதுன்னா அதுக்கு கொடுக்குற பனிஷ்மெண்ட் இரண்டாவது தப்பு.. ஐ அக்ரீ.. மிஸ்ஸாகிடுச்சு.. பட் ட்ரை பண்ற சான்ஸ் மிஸ் ஆகலியே.. அகைன் பேபி வரலாம் ஆர்யன்.." என்றிடவும், "யூ ஆர் நாட் வொர்த் ஃபார் இட்.." என மறுத்தான்..

பேசாமலேயே வாழ்க்கையை நகர்த்தியவள் பொறுமையை இழக்கும் பொழுது மொத்தமும் கொட்டப்படும் என்பது போல, "ம்ஹ்ம்.. நான் எப்படி வொர்த்தா இருப்பேன் ஆர்யன்? ஏன்னா உங்களுக்கு தான் சரியான பார்ட்னர் ஹர்ஷினி கிடைச்சிருக்குறாங்களே.. ரைட்.. உண்மை தான்.. நீங்களும் ப்ரெண்டோட வொய்ஃப்போட அஃபயர்ல இருக்குற டிபிக்கல் மெண்டாலிட்டி பெர்சன்‌தான்.. அப்புறம் நான் எதுக்கு தேவையில்லாம.. சோ டீல்ல விட்டுட்டீங்க அப்படிதானே.." என்றதும் தான் தாமதம்... ஐவிரல்களும் பட்டுக் கன்னங்களை பதம் பார்க்க, சிவந்து போனது அடுத்த நொடியே..
"ராஸ்கல் பிச்சிடுவேன்.. நீ பேசவே கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்.. சொல்லாம வெளிய போயிட்டு கண்டதையும் பேசுற.." என காந்தலாய் கூறியவனின் இயலாமை பட்டவர்த்தனமாக எட்டிப்பார்த்தது.

அன்று இரவு,
கதவு தட்டப்படும் ஓசையில் அழுது வீங்கிய கன்னங்களை தேய்த்தபடியே தாரா திறக்க, வெளியே நின்றவனின் கண்களில் காலையில் இருந்த வன்மம் நீங்கி விரக்தி தெரிந்தது..
உள்ளே நுழைந்து கவுச்சில் அமர்ந்து தலையை கவிழ்த்துக் கொண்டவன் மெல்ல சட்டை பொத்தானில் இரண்டை கழற்ற, ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது.. போதாததிற்கு மதுவின் வாசம் வேறு நெட்டித்தள்ள, அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கத் துவங்கியது..

இயற்கையோடு இயைந்த மனித உடலில் சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பும் கொடுக்கப்பட்டிருக்க, பாதுகாப்பின்மையை உணர்ந்த தாரா அவ்விடம் விட்டுத் தப்பிக்க முயன்றாள்.
இரண்டே எட்டில் பாய்ந்து தலைமுடியை கொத்தாக பிடித்து கட்டிலில் வாழைத்தாரென தூக்கிப்போட்டான்.. காத்துக் கொள்வதற்காக காரிகையவள் முயலும் முன்பே மொத்தமாய் ஆட்கொண்டு அவளின் ஆசையின்றி அரங்கேற்றத் துவங்கியவன் இடையே "இதை தானே கேட்ட.." என்கவும் உடல் மட்டுமல்ல உறவும் மனமும் கூட ரணமாய் வேதனையில் உழன்றது..

காதலில் இலக்கணம் பார்த்தது பிழையா?
உன் காதலெனும் இலக்கண பிழையை பார்த்தது பிழையா??
கவிதை பிழையாகும்...
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978

Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,626
Reaction score
9,823
Location
India
தேங்க்ஸ் அக்கா பார் பர்ஸ்ட் கமென்ட் அண்ட் எல்லாரையும் டேக் பண்ணினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...
My pleasure 😍😍Hw s ur health da ..
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
@ப்ரியசகி அடுத்த எபிசொட் போஸ்டட் அக்கா... ரொம்ப நாளா நீங்க எனக்கு கமென்ட் பண்ணவே இல்ல... நான் சோகம்... @Vijayasanthi அக்கா நீங்களும் தான்... கதை பிடிக்கலையா??
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
My pleasure 😍😍Hw s ur health da ..
நினைவு வச்சு கேட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. இப்ப பீலிங் பெட்டர்... உங்க எல்லாரோட அன்பினாலேயும் ரொம்ப தைரியமா கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துட்டு இருக்கிறேன்...
 
KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
15,180
Reaction score
37,610
Age
37
Location
Tirunelveli
@ப்ரியசகி அடுத்த எபிசொட் போஸ்டட் அக்கா... ரொம்ப நாளா நீங்க எனக்கு கமென்ட் பண்ணவே இல்ல... நான் சோகம்... @Vijayasanthi அக்கா நீங்களும் தான்... கதை பிடிக்கலையா??
Pongalukku ponavanga, pongaloda
Varuvanga sister,

Vanthu egiri kuthichu gif lam poduva🤷‍♂️🤷‍♂️🤷‍♂️..

Health issue nu sollirukangaley🙂
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top