• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அத்தியாயம்-13
1643048173334.png
“ஆமா தேவ் சார்.. தாரா என்கிட்டே எந்த விஷயத்தையும் முன்னாடியே சொல்லலை.. அதுக்காக தாரா என்னோட வொய்ப் இல்லைன்னு ஆயிடாதே சார்.. உங்களுக்கு மட்டுமில்லை.. எல்லாருக்குமே தோணும்.. தாராவுக்கு நான் ஒரு பப்பெட் மாதிரின்னு.. பாக்குறவங்க எல்லாருக்கும் எங்களோட ரிலேஷன்ஷிப் பத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்க முடியாது..” என்றான் ஆதி அழுத்த திருத்தமாய்..

முதல் வாக்கியத்தில் வாயெல்லாம் முத்துப் பற்களாய் சிரித்த சத்யதேவின் முகம் முடிவில் கறுத்துப் போனது.. “ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க சார்.. தாராவோட நேச்சர் இது கிடையாது.. பாஸ்ட்ல க்ராஸ் பண்ணி வந்த ப்ராப்ளம் அப்படி.. என்ன நடந்தாலும் எப்படி மாறினாலும் அவ என்னோட தாரா தான்.. மாற்றமில்லை.. இந்த கொலையை அவ பண்ணலைன்னு நான் நம்புறேன்.. அதுதான் உண்மை.. கூடிய சீக்கிரமே புரிஞ்சிப்பீங்க..” என்றுவிட்டு கடந்தான்..

காலையில் இருந்தே நச்நச்சென எடுத்ததிற்கெல்லாம் தாராவையே குற்றப்படுத்திய சத்யதேவின் மீது எரிச்சல் மண்டியிருந்தது.. மாலை வேளையிலே விசாரணை முடித்துக் கொண்டு கல்லூரி திரும்புகையில், வாசலில் பேக்குகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அவந்திகா..

எதிர்பாரா சமயத்தில் பக்கம் வந்த ஆதியைக் கண்ட அவந்திகா அதிர்ச்சியுற, “அவந்தி, வாட் ஹாப்பன்ட்?? வெக்கேட் பண்றியா??” என அக்கறையாய் விசாரித்தான்.. எச்சிலை விழுங்கிக் கொண்டவளோ, “ஆன்ட்டி வீட்டுக்கு போகலாம்னு..” என வார்த்தைகளை மென்று துப்ப, “பேஜ்ல போட்ட போஸ்ட் ப்ராப்ளம்னால தான் கிளம்புறியா??” எனும்போதே கண்களில் நீர் சொரியத் துவங்கியது..

“அவந்தி.. அழாத..” உரிமையாய் கண்ணீரை துடைத்துவிட்ட ஆதி, “நடந்த ப்ராப்ளமை நினைச்சு வொரி பண்ணிக்காத.. நானும் கேஸ் என்கொயரின்னு இருந்ததுனால இதை கவனிக்க நேரமே இல்லை.. எக்ஸ்ட்ரீம்லி சாரி அவந்தி.. நடக்குறதை எல்லாம் பார்க்கும் போது உன்னோட மென்டல் ஹெல்த்க்கு இந்த என்விரான்மென்ட் சரியா இருக்காதுன்னு புரியுது.. ஆர்யனோட மர்டர் வேற உன்னை பாதிச்சிருக்கும்..” என கேசத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான்..

ஆர்யனின் பெயரைக் கேட்டதும் உதடுகள் துடிக்க, அழுந்த கடித்துக் கொண்டாள் அவந்தி.. “ஆறுதல் சொல்றேன்ற பேருல ஞாபகப்படுத்திட்டு இருக்குறேன்ல..” என விரக்தியாக குலுங்கிக் கொண்ட ஆதி, “தாரா ஆன்ட்டி ஹார்ஷா பேசிட்டாங்களா??” என்கவும் அவளின் மூச்சு மேலும் கீழுமாய் இரைக்க துவங்கியது.. ‘அன்சைட்டி அட்டாக்’கில் இருந்து முழுவதுமாய் குணமாகாத அவந்திகா அவசரமாய் மாத்திரையை விழுங்கி ஆசுவாசப்படுத்தி கொள்ள, “ஒ.. ஸாரி அவந்தி.. நீ கிளம்பு.. திரும்ப வரும்போது இந்த ப்ராப்ளம் எல்லாம் கம்ப்ளீட்டா முடிஞ்சு பீஸ்ஃபுல் என்விரான்மென்ட் இருக்கும்.. ஐ ப்ராமிஸ் யூ..” என்றான்..

நிம்மதியாக விடைபெற்றுக் கொண்ட அவந்திகா இரண்டு எட்டுக்கள் கடந்த நிலையில், “ஒரு நிமிஷம்..” என அழைத்த ஆதி, “உன்னை எனக்கு பிடிக்கும் அவந்தி..” என்றான் எதையோ உணர்ந்தவனாக.. இதுவரை அதட்டுபவனாக மட்டுமே தெரிந்த ஆதியிடத்தில் அன்பை காணவும் அவளையும் அறியாது கண்கள் வரை சிரித்தாள் அவந்திகா..

கோர்ட்டில் ஏகப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு சோர்வாக வந்த பல்லவியை நெற்றியில் கையூன்றி கவலையோடு அமர்ந்திருந்த ஆதியே வரவேற்றான்.. “தாரா இல்லியா??” எனக் கேட்டவாறே பேக்கினை கழற்றி வைத்த பல்லவிக்கு, “என்கொயரி முடிஞ்சிருச்சுன்னு மெசேஜ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்..” என்றான் போனின் மீதிருந்த விழிகளை நகர்த்தாமல்..

இடையில் கரம் குத்தி முறைத்த பல்லவி ஃபோனை பறித்து, “ஆதி.. தாராவால இதையெல்லாம் மேனேஜ் பண்ண முடியும்.. டிரஸ்ட் மீ..” என பாந்தமாய் கூறிவிட்டு, “சத்யதேவ்வா என்கொயரி பண்றாரு??” என விசாரித்தாள்..

“இல்லை.. மார்னிங்ல இருந்து சத்யதேவ் என் மண்டையை சுத்தியலை வச்சு அடிக்காத குறை.. டார்ச்சர் பண்ணிட்டாரு..” என அனுபவமூச்சினை வெளியிட்டவன், “எனக்கு ஒரு விஷயம் புரியல.. சத்யதேவ் ஏன் தாராவை இந்த கேஸ்ல சிக்க வைக்கணும்னு இவ்ளோ துடிக்குறாரு..” என காதுமடல்களை தேய்த்துக் கொண்டான்..

“யா.. சத்யதேவ் பத்தி ஸ்டடி பண்ணினேன்.. அவரோட பெர்சனல் லைஃப் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருந்துருக்குது.. சடனா வொய்ஃப் காணாம போனப்போ எல்லாருமே அஃபயர் இருக்குறதுனால ஓடிபோயிட்டாங்கன்னு பேசியிருக்குறாங்க.. அதுக்கு அப்புறம் தான் சீரியல் கில்லர் கொலை பண்ணின உண்மை தெரிய வந்துருக்குது.. மனுஷன் அந்த இன்சிடென்ட்ல ஹெவியா ப்ரேக்காகி ரொம்ப ரூடா பீகேவ் பண்ணினதும் மென்டலி அன்ஸ்டேபிள்னு டிப்பார்ட்மென்ட்ல சஸ்பென்ட் பண்ணியிருக்குறாங்க.. அப்புறம் டியூட்டில ஜாயின் பண்ணிட்டாரு.. இவ்ளோ நாள் கழிச்சு அவரோட பெர்சனலை சின்க் பண்ற மாதிரி இந்த கேஸும் இருக்கிறதால ஹைப்பர் ஆகுறாரு.. தாரா தான் மர்டரர்னு ஃபிக்ஸ் பண்ணி அவளையே டார்கெட் பண்ணலாம்..” என தோள்களை குலுக்கினாள் பல்லவி..

“சோ சேட்.. கஷ்டம் தான்..” சத்யதேவிற்காக வருத்தத்தை தெரிவித்த ஆதிக்கு, “யா.. அவரோட ரிபோர்ட்ஸ் கூட படிச்சேன்.. சத்யதேவோட ட்ரான்ஸ்ஃபர்.. பியூ இயர்ஸ் பேக் ஒரு கேஸ்ல விக்டிமை காப்பாத்துறதுக்காக பொய்சாட்சி ஏற்பாடு பண்ணி மாட்டிக்கிட்டாரு.. டிப்பார்ட்மென்ட்ல வார்னிங் கொடுத்து ட்ரான்ஸ்பர் பண்ணிருக்குறாங்க..” என மேலும் அதிர்ச்சியூட்டினாள் பல்லவி..

என்ன கூறுவதென தெரியாமல் ஆதி அசையாமலிருக்க, “நான் விசாரிச்ச வரை இப்ப வரைக்கும் தாராவுக்கு அகைன்ஸ்ட்டா எவிடென்ஸ் கிடைக்கல.. சாலிட் ப்ரூஃப் இல்லாம இந்த கேஸ்ல மர்டரர் தாரான்னு கன்பார்ம் பண்ண முடியாது.. ஆதி.. சத்யதேவ் நமக்கு கிடைச்ச மிகப்பெரிய லூப்ஹோல்.. கோர்ட்ல சப்மிட் பண்ற எவிடென்ஸ் நமக்கு சாதகமில்லாம போச்சுன்னா சத்யதேவ் கேஸை பெர்சனலா எடுத்துட்டு பண்றாரு, எல்லாமே ஜோடிக்கப்பட்ட பொய்ன்னு கேஸை தள்ளுபடி பண்ணிடலாம்..” என குதுகலித்தாள் பல்லவி..

சுலபமான வழி கிட்டியும் யோசனையிலேயே உழன்ற ஆதியை விநோதமாக பல்லவி நோக்க, “பல்லவி.. எனக்கு ஒரு விஷயம் பயமா இருக்குது.. சப்போஸ் தாரா தான் செஞ்சதா கன்ஃபெஸ் பண்ணிட்டா.. ஐ மீன் இப்ப வரை என்ன நினைக்குறா?? என்ன பீல் பண்றா??ன்னு தெரியல.. இந்த கேஸ்னால எங்களோட லைஃபை இழந்துட்டு இருக்குறோம்னு தோணுது.. ஆரம்பத்துல இருந்து எவ்ளோ ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணி, இனி நார்மல் லைஃபை வாழலாம்னு நினைச்சோம்..” என வருத்தத்தோடு பேசிக்கொண்டிருக்க, காட்டமாய் முறைத்தாள் பல்லவி..

தாராவின் ஒவ்வொரு நிகழ்வுகளும் கண்முன்னே காட்சிகளாய் விரிய, கைகளிலும் கழுத்திலும் கொண்ட காயத்திற்கான சுவடுகள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மையே என நிரூபித்து கொண்டிருந்தது.. தாரா தன்னுடைய கடந்த கால காயங்களை கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு கூர்ந்திட, ஆஷிக் தனக்கு கிடைத்த ஹர்ஷினியின் எண்ணிற்கு அழைத்துக் கொண்டிருந்தார்..

மறுமுனையில் ஏற்கப்படாமல் போகவே, தகவல் கொடுத்தவரிடமே தொடர்பு கொள்ள, “ஆஷிக்.. சிக்ஸ் மன்த்ஸ் பேக்.. ஹர்ஷினி-அகிலுக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு.. அகிலோட டார்ச்சர் தாங்க முடியாம அப்ராட் கிளம்பிட்டாங்க ஹர்ஷினி.. கான்டாக்ட் நம்பர் மட்டும் தெரிஞ்சவங்க கிட்ட வாங்கி கொடுத்தேன்..” என்கவும், “ஓகே.. முடிஞ்சா ஆர்யன் கேஸ் விஷயமா நான் கால் பண்றேன்னு இன்பார்ம் பண்ணுங்க..” என்றுவிட்டு துண்டித்தான் ஆஷிக்..

நிலைக்கதவையே விரக்தியாக வெறித்துக் கொண்டிருந்த தாராவின் கண்களுக்கு நேரே சொடுக்கிட்ட ஆஷிக், “ஆர்யன்-தாரா டிவோர்ஸ்க்கு முன்னாடியே அகில்-ஹர்ஷினி டிவோர்ஸ் அப்ளை பண்ணியிருக்குறாங்க.. தென் ஹர்ஷினி ஸ்டே பண்ற அப்பார்ட்மென்ட் ஏற்பாடு பண்ணி கொடுத்தது டாக்டர் ஆர்யன்.. அது மட்டுமில்லை.. ஹர்ஷினியோட பெர்சனல் லோனுக்காக அஷூரன்ஸ் சைன் பண்ணினதும் ஆர்யன்.. இதெல்லாமே அதுக்கான ப்ரூஃப்.. ஐ ஹோப்.. இந்த பேப்பர்ஸ் உங்களுக்கு அப்பவே கிடைச்சிருக்கும்.. லாயர் ஃபிரென்ட் இருக்குறாங்க.. ஏதாவது பண்ணனும்னு தோணலையா தாரா??” என கேள்வியாய் நோக்கினான்..

விழியோரம் கசியவிருந்த உவர்நீரை ஒதுக்கிக் கொண்டவளாக, “அதெல்லாம் பண்றதுனால என்னோட ரிலேஷன்ஷிப்ப காப்பாத்திக்குறதுக்காக போராடுற மாதிரி ஆயிடாதா சார்?? வாட்ஸ் மைன்.. இட் வில் பி மைன்.. இஃப் நாட் மைன்.. இட்ஸ் நாட் மைன்... ம்ஹும்.. ஐ யம் டன் வித் தட் ரிலேஷன்ஷிப் சார்..” என்றாள் தாரா..


“ப்ரைமரி ஸ்கூல்ல டீச்சர்ஸ் நமக்கு சொல்லி கொடுப்பாங்க.. எக்ஸ் வொய் ஆக்சிஸ்.. அப்புறம் மிடில் கிளாஸ் செட்னு இன்னொரு ஆக்சிஸை சொல்லி தரும்.. நெக்ஸ்ட் லெவலா டைமன்ஷன் தியரியை எக்ஸ்ப்ளைன் பண்றதுக்கான பேசிஸ்னு புரியும்.. லைஃபும் அப்படி தான்.. மனுஷங்களை நாம எப்பவுமே ஒன் டைமென்ஷன்ல மட்டும் தான் பார்ப்போம்.. டூ டைமென்ஷன்னு பார்த்துட்டா துரோகம், ரெட்டை முகம்னு ரொம்ப சலிச்சிப்போம்.. அப்ப நமக்கு தெரியாது.. எயிட் டூ தேர்ட்டீன் டைமென்ஷன் வரைக்கும் மனுஷனுக்கு முகங்கள் உண்டுன்னு.. அதை கண்டுபிடிச்சவங்க சிலர் போதி மரத்துக்கு கீழேயும் சிலர் பேப்பரும் பென்னுமாவும் மாறிடுறாங்க..”
-தாரா..

கட்டிலில் கைகால்கள் கட்டிய நிலையிலே தாரா கிடத்தி வைக்கப்பட்டிருக்க, அவ்வவ்போது வரும் ஆர்யன் ஏதோ ஒரு மருந்தினை ஊசி வழியே செலுத்தவும் மொத்த உடலும் மரத்து போகும்.. அதன்பின்னே கட்டுகளை அவிழ்த்து அன்பு பொங்க உணவை தன்கையால் ஊட்டிவிடும் ஆர்யனுக்கு தான் எவ்வளவு அக்கறை என தோன்றும்..

ஜன்னலின் கண்ணாடி வழியே சூரியனின் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டே நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள் தாரா.. எத்தனை நாட்களாகிறது என்பது சில நேரங்களில் குழப்பவும் செய்கிறது.. ஆர்யன் ஏற்றும் மருந்தின் வீரியத்தினால் ஞாபகமறதியும் சேர்ந்து கொண்டதா என நொந்து கொள்ளத்தான் முடிந்தது..
ஓரிடத்திலேயே தொடர்ச்சியாக கிடக்க, சலித்துப் போகும் தாரா தப்பிக்க முயலும் வேளைகளிலெல்லாம் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியில் தேகம் நைந்து வலியைத் தந்தது.. அதைவிட அப்பாவி முகத்தோடு அரக்கனாய் வலம் வரும் ஆர்யனின் செய்கைகள் உயிரில் சென்று வதைத்தது..

நான்கு சுவற்றை மட்டுமே வெறித்தவளுக்கு வாழ்க்கை எப்பொழுதோ வெறுத்து விட்டது.. அந்த நாட்களில் ஏதோ ஒருநாள் வருகை தந்த அவந்திகா தாராவை காண வேண்டும் என்றிட, “வேணாம்.. அவந்தி.. தாரா ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை..” என்ற ஆர்யனையும் மீறி அறைக்குள் நுழைந்திட்டாள் அவள்..

பராமரிப்பின்றி பரட்டையாக கூந்தல் கலைந்திருக்க, சங்கிலியோடு எழுந்த தாரா பல கொடுமைகளுக்கு மத்தியில் காணும் வெளியாள் அவந்திகாவே.. ஆர்யன் வருவதற்குள்ளாக தப்பித்திட வேண்டும் என்ற தவிப்பில் சுயகட்டுப்பாட்டை இழந்து, “அவந்தி.. என்னை ரிலீஸ் பண்ணு..” என இரைந்தாள்..

“ஹாய்.. அவந்தி குட்டி..” என இனிக்க பேசும் அவளின் தாரா ஆன்ட்டி விகாரமான தோற்றத்தில் வேட்கையாக கத்திடவும் அரண்டு போனாள் அந்த சுட்டி.. அதற்குள் ஆர்யன் உள்ளே நுழைந்திட, “அங்கிள்..” என பின்னே மறைந்து கொண்ட அவந்திகாவை தீர்க்கமாய் நோக்கினாள் தாரா..

உடனடியாக மயக்க மருந்தினை உட்செலுத்திய ஆர்யன் கூறிய பொய்யின் மீது மேலும் கற்பனைகளை கட்டி அலங்கரித்து விட, ஆழமாய் பதிந்து போனது சிறுபெண்ணிற்குள்..

உலகம் நம்பும் வகையில் கர்ப்பமாயிருப்பது போல நாடகத்தை அரங்கேற்ற, எவருக்கும் சந்தேகம் வரவில்லை.. ஆதி மற்றும் பல்லவியை தவிர.. “தாரா ப்ரெக்னன்ட்டா இருக்குறதுல எனக்கு சந்தோசம் தான் ஆர்யன்.. பட் தாராவை பார்க்கவே முடியலையே.. ஒரு டெக்ஸ்ட் கூட இல்லை..” என கேள்வி எழுப்பிய பல்லவியிடத்தில், “அல்ரெடி மிஸ்கேரேஜ் ஆனதால இந்த டைம் டாக்டர் பத்திரமா பாத்துக்க சொல்லியிருக்குறாங்க.. முக்கியமா பெட் ரெஸ்ட் எடுக்கணும்.. ரொம்ப டயர்டா இருக்குறதுனால கூட டெக்ஸ்ட் பண்ண மறந்திருக்கலாம்.. கண்டிப்பா சொல்றேன்..” என சமாளித்தான் ஆர்யன்..

“எந்த டாக்டர்னு சொன்னா தாராவோட மெடிக்கல் கண்டிஷன் பத்தி தெரிஞ்சிக்கலாமே..” என்ற பல்லவி தானொரு வக்கீல் என்பதை நினைவுபடுத்த, “ஹஹஹஹா..” என சமாளிப்பிற்காக சிரித்த ஆர்யன், “பல்லவி நீ என்ன நினைக்குற??” என கேள்வியை திருப்பி விட்டான்..

“சைக்கியார்டிஸ்ட் வெர்சஸ் வக்கீல்னு டிபெட் நடத்துற ப்ளானா ஆர்யன்?” என கேட்க பல்லவி வாயெடுக்கும் முன்னரே, “தாராவோட ஹஸ்பன்ட்க்கு அஃபயர் இருக்குற உண்மை தெரிஞ்சதுனால நடக்குற டொமெஸ்டிக் வயலென்ஸ பத்தி வெளிய யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு அவளோட சைக்கியார்டிஸ்ட் ஹஸ்பன்ட் போடுற டிராமான்னு நினைக்குறோம்..” என பொரிந்து தள்ளிய ஆதியை அற்பமாய் நோக்கினான் அனைத்தையும் நடத்தும் ஆர்யன்..

“ஹஹஹாஹ்ஹா..” என பெருங்குரலாய் சிரித்த ஆர்யன், “மிஸ்டர்.ஆதி.. நீங்க மிசஸ்.ஆர்யனுக்கு வெல்விஷரா இருக்கலாம்.. அதுக்காக எல்லாம் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஆர்யனோட பெர்சனல் லைஃப்க்குள்ள கோல்டன் டிக்கெட் கொடுத்து அனுப்பிட முடியாது.. புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்..” என புன்னகையோடே மிரட்டிக் கடந்தான்..

எப்படி பார்த்தாலும் அவள் மீது முழுஉரிமை கொண்டவன் ஆர்யனே ஆவான் என்கிற பட்சத்தில் மூன்றாம் நபர்களாக அவன் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் அமைதி காத்தனர் அடுத்த நாள் வரையில்..

“ஆதி.. தாரா பத்தி ஏதாவது??” என பல்லவி விசாரிக்க, “நோ.. டெக்ஸ்ட் பண்றதா இருந்தா கூட ஃபர்ஸ்ட் உனக்கு தானே பண்ண முடியும்.. என்னோட பொசிஷன் என்னன்னு உனக்கே நல்லா தெரியும்..” என்றான் ஆதி.. அவன் கூறுவதும் சரியே.. தான் செய்யும் தவறின் பேரில் ஒருதுளி குற்றஉணர்வே இல்லாதவன் இதையும் கேவலமாக சித்தரிக்கக் கூடும் என்று அத்தோடு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அவள்..

அங்கு நிலவிய அமைதியை கலைப்பதற்காக, “வேணா ஒன்னு பண்ணலாம்.. ஸ்ட்ரெயிட்டா வீட்டுக்கே போய் பார்த்துடலாமா??” என ஆதி பேச்சுவாக்கில் கூறிட, சரியென பட்டது பல்லவிக்கும்..

அதன்படி இருவரும் ஆர்யனின் வீட்டிற்குச் செல்ல, அவர்களின் நேரத்திற்கு யாரும் வீட்டிலில்லை.. கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் அழைத்துக் கொண்டிருக்க, சோஃபாவின் பின்னிருந்து முனகல் சத்தம் பயமுறுத்திப் பார்த்தது...

பதற்றத்துடன் இருவரும் ஓசை வந்த திசையில் நகர்ந்திட, சோஃபாவிற்கும் சுவற்றிற்கும் நடுவே இருக்கும் குறுகிய பகுதியில் சுயநினைவின்றி கிடந்தாள் தாரா.. ஓரிடத்திலேயே கிடந்ததினால் படுக்கைப் புண் கண்டிட, மாற்றத்திற்காக இடம் மாற்றிய ஆர்யனின் சுக்கிர திசை சனிபெயர்ச்சிக்கு மாறியிருந்தது..

சில நிமிடங்கள் முயற்சிக்கு பின்னே வெளியில் எடுத்ததும் பல்லவி மடியில் தலையை கிடத்தி “தாரா.. தாரா.. என்னை பாரு..” என உலுக்கிக் கொண்டிருந்தாள்.. மாறாத புன்னகையுடனும் குறையாத மரியாதையுடன் வலம் வந்தவள் உடல்குன்றி, நடுக்கமுற்று அடையாளம் தெரியாது மாறிப்போனதில் இதயத்தை யாரோ இரண்டாய் பிளப்பது போன்று வலியை உணர்ந்தான் ஆதி..

“ஹாஸ்பிடல் போகலாம் பல்லவி..” என படபடத்த ஆதி, தூக்க முற்படுகையில் நிலைக்கதவோடு கோர்க்கப்பட்டிருந்த சங்கிலி தடுத்தது.. அவளின் உண்மை நிலையை காண சகியாமல் பல்லவி வேதனையோடு கண்களை மூடி வருத்தங்கொள்ள, ஆதியோ கிடைத்த ஆயுதம் கொண்டு ஆங்காரமாய் உடைந்தெறிந்தான் அவள் கொண்ட கட்டுக்களை..

அதற்கு பின் அனைத்தும் மளமளவென நடந்தேறியது.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாராவிற்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, அடித்து பிடித்து ஓடிவர வேண்டிய ஆர்யனோ அசால்ட்டாய் வந்தான்.. அவனைக் கண்டதும் அடித்து புடைக்க வேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது ஆதிக்கு..

ஏற்கனவே அவசர செய்கையினால் தான் தன்னுடைய ஆருயிர் குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கிறாள் என்ற நிதர்சனம் புரிந்ததும் கட்டுப்படுத்திய ஆதியின் ஆங்காரம் நறநறவென உராய்ந்து கொண்ட பற்களில் தொக்கி நின்றது..
“கரெக்ட் டைம்க்கு போயிட்டீங்களா பல்லவி??” என வெகுஇயல்பாய் விசாரித்த வீணாய்ப் போனவனை வெறிகொண்டு விழித்த பல்லவி, “ஹவ் சீப் யூ ஆர்.. எந்த மனுஷனும் தன்னோட வொய்ஃபை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி டார்ச்சர் பண்ண மாட்டான்.. சைக்காலஜி படிச்ச ஜீனியஸ் இப்படி தான் ஒரு பொண்ணுனு கூட பார்க்காம நாய் மாதிரி நடத்துவான் இல்ல.. ச்சீ.. ஆர்யன்.. உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஃபிசிக்கல் அபியூஸ்.. ம்ஹ்ம்.. இதை விட கேவலமா சாக்கடையில எவனாலயும் இறங்க முடியாது.. என் லைஃப்ல எவ்ளோ ஆச்சரியப்பட்டேனோ அதே அளவுக்கு அருவருப்பாவும் பாக்குறது உன்னை மட்டும் தான்.. பார்க்கலாம்.. தாரா கான்சியஸ் ஆனதும் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கட்டும்.. அப்ப காட்டுறேன்.. உன்னை மாதிரி சைக்கோக்களுக்கு என்ன நிலைமைன்னு..” என பொரிந்து தள்ளியவள் உணர்ச்சி வேகத்தில் சட்டையைப் பிடித்து உலுக்கவும் செய்தாள்..

“பல்லவிஇஇ.. சொசைட்டில நல்ல மரியாதையில இருக்குற ஒருத்தரை உங்களோட இன்ப்ளூயன்ஸ் யூஸ் பண்ணி பப்ளிக்ல அவமானப்படுத்தினதா நஷ்டஈடு கேஸ் ஃபைல் பண்ணலாம்.. யூ நோ.. என்னோட வொய்ஃப் ஸ்டேட்மென்ட் கொடுத்தா மட்டும் தான் ஃபர்தரா ப்ரோசீட் பண்ண முடியும்..” என நக்கலாக சட்டையில் இருந்த கையை விலக்கினான் ஆர்யன்..

எதுவும் செய்யஇயலா கையறு நிலையில் இருப்பதாக உணர்ந்த பல்லவி ஓரமாய் நின்று முடிந்த மட்டும் உஷ்ணமாய் முறைத்து தீர்த்தாள்.. சிகிச்சையை முடித்து வெளியில் வந்த மருத்துவர் அழைக்கவும் முதல் ஆளாய் சென்றான் ஆர்யன்..

தன்னை அசைக்க முடியாதென்ற அசட்டு கர்வத்தில் மிதப்பவன் மருத்துவ அறிக்கையை மாற்றக்கூடும் என்பதால் ஆதியும் பல்லவியுமே உடன் சென்றனர்.. மருத்துவரின் அறையில் ஏகபோக மரியாதையோடு அமர வைக்கப்பட்டிருந்த ஆர்யனிடம், “டாக்டர், உங்க வொய்ஃபா?? அட்மிட் பண்றப்போ டீடெயில்ஸ் இல்லாததுனால கவனிக்கலை.. ஸாரி டாக்டர்..” என பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார் மருத்துவர்..

“டாக்டர்.. ஐ ஆம் லாயர் அனுபல்லவி.. தாராஸ் ஃபிரெண்ட்.. சில ரிப்போர்ட்ஸ் வேணும்.. என்னோட ஃபிரெண்ட் தாரா ஃபியூ டேஸ் பேக் விருப்பமில்லாம அவளோட ஹஸ்பன்ட்னால ரேப் பண்ணப்பட்டிருக்குறாளா?? ஃபர்ஸ்ட் தாரா ப்ரெக்ன்ட்டா?? இல்லையான்னு நாங்க தெரிஞ்சிக்கணும்.. அண்ட் அந்த காயத்தோட நேச்சர் வேணும்.. உண்மையா.. யாரோட இன்வால்வ்மென்ட்டும் இல்லாம ரிப்போர்ட் ரெடி ஆகணும்.. மீறினா ஹாஸ்பிடல் கோர்ட்ல வந்து நிக்க வேண்டி வரும்..” என்ற பல்லவி ஒற்றை காலில் நின்றிட, தடுக்கும் வழியில்லாமல் போனது..

அடுத்த சில நிமிடங்களில் சோதனைகள் அனைத்தும் படுவேகமாகவும் பயங்கர பாதுகாப்புடனும் எடுக்கப்பட்டது.. “மிஸ்.பல்லவி.. தாரா இஸ் நாட் ப்ரெக்னன்ட்.. நீங்க சொன்னது உண்மை தான்.. ஃபிசிக்கல் அபியூஸ் நடந்திருக்குது..” என்ற மருத்துவர் உதட்டை அழுந்தக் கடித்து, “ஐ அம் ஸாரி டாக்டர்..” என வருத்தத்துடன் முடித்தார்..

எகத்தாளமாய் புன்னகைத்துக் கொண்ட பல்லவி, அதற்கான சான்றுகளை வாங்கியபடியே, “நீ யார் மேல கை வச்சிருக்குறன்னு கோர்ட்ல வந்து பாரு..” என வன்மமாய் கூறிவிட்டு, “தாராவை மீட் பண்ணலாமா டாக்டர்..” என வினவினாள்.. “யா.. ஷி இஸ் பெட்டர் நவ்..” என அனுமதி வழங்கவும், வீறுவீறென நடந்தவளை பொருட்படுத்தாமல் எங்கோ நடந்தான்..

ஆர்யனின் இதயம் உள்ளுக்குள் சுக்குநூறாய் நொறுங்கி விட்டதென கண்கள் காண்பித்துக் கொடுத்தாலும் எகத்தாளமான புன்னகையுடனும் இறங்கி எழும் இமைகள் கொண்டும் மறைத்து விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீராப்பு காண்பிக்கிறான்..

பெட்டில் வாடிய தளிரென கிடந்தவளிடம், “தாரா, ஆர்யன் பண்ணின எல்லா தப்புக்கும் நம்ம கிட்ட எவிடென்ஸ் இருக்குது.. உன்னை ப்ரூட்டலா மேரிட்டல் ரேப் பண்ணினது.. ஹவுஸ் அரெஸ்ட் பண்ணினது.. ப்ரெக்னன்ட்டை ஃபேக்கா ஃபிரேம் பண்ணினது.. ப்ளஸ் டொமெஸ்டிக் வயலென்ஸ்னு ஏகப்பட்ட செக்ஷன் ஃபைல் பண்ணனும்.. மெடிக்கல் ரிப்போர்ட் கூட ரெடி.. ஆர்யன் மாதிரி ஆட்களுக்கு இந்த கேஸ் பயத்தை கொடுக்கணும்..” என இரத்தம் சூடேறி தொண்டை நரம்புகள் புடைக்க கத்திக் கொண்டிருந்தாள் பல்லவி..

தோழியின் நிலையைக் கண்டதும் கொதித்த இரத்தம் அதற்கு காரணமானவனை சிறையில் அடைக்கும் வரை அடங்கப்போவதில்லை.. மூக்கு சிவந்து கண்கள் ஓரமாய் உவர்நீரை உதிர்க்க, நடந்தது அவளுக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதறிந்து மென்மையாக கண்ணீரை துடைத்து, “தாரா, நீ ஏன் அழுற?? நாங்க இருக்குறோம்..” என நம்பிக்கையளித்தான் ஆதி..

கொண்ட உணர்வுகள் மரத்து அவளை ஊமையாக்கியிருக்க, “பல்லவி..” என கரம் கொடுத்தவள், “ப்ளீஸ்..” என முகம் சுருக்கி பெட்டை விட்டு எழுந்தாள்.. பல்லவியின் தோள்களில் கையூன்றி மிதமான வேகத்தில் அடியெடுத்து வைத்த புள்ளிமான் பதுங்கும் புலியின் குகைக்கே சென்றது..

தள்ளாடியபடியே தன் முன்னால் வந்து நிற்கும் தாரத்தின் தைரிய விழிகளை எதிர்கொள்ளும் திராணியில்லாது எங்கோ வெறித்தான்.. தீர்க்கமாய் மூச்சை இழுத்துவிட்ட தாரா, “உங்களுக்கு அகைன்ஸ்ட்டா எல்லா பேப்பர்ஸும் கையில இருக்குது.. கேஸ் ஃபைல் பண்ணினா ஹியரிங்கே இல்லாம தீர்ப்பு பாதிக்கப்பட்டவங்க பக்கம் வந்துடும்.. உங்களோட சைட் பேசுறதுக்கு கூட சான்ஸ் இருக்காது..” என்றவள் இடப்பக்கமாய் தலையை சாய்த்தாள்..

மூக்கை சொரிந்து கொண்டவன் மறந்தும் அவள்புறம் திரும்பாமல், “தாராளமா செய்யலாம்.. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை..” என விட்டேத்தியாக கூறவும், “என்ன ஒரு திமிர்..” என புருவம் நெறித்தாள் தாரா..

“சோ உங்க கரியர் அண்ட் ஃபியூச்சர் பத்தி எந்த கவலையும் இல்லை..” என குரலை உயர்த்திய தாராவிற்கு இல்லையென்பதே பதிலாய் கிட்ட, “பட் நான் அந்த மாதிரி டைப் இல்லை..” என்ற தாரா சர்ரென காகிதங்களை அவ்விடத்திலேயே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டாள்..

அதிர்ச்சியுற்ற இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான பேச்சுவார்த்தை நிகழ்த்த போகிறாளோ என பலமாய் அச்சம் கொள்ள, “எனக்கு இதுல விருப்பமில்லை.. கேஸ் கோர்ட்னு போய் ஃபியூச்ச்சரை ஸ்பாயில் பண்ணிக்குறதுக்கு..” என்றதும் மணாளன் முதல்முறையாக ஏறெடுத்து பார்த்தான்..
அதற்காகவே காத்திருந்தவள் போல, “அட் தி சேம் டைம்.. இந்த டாக்சிக் ரிலேஷன்ஷிப் வேணாம்.. ஐ வான்ட் டிவோர்ஸ்..” என தடாலடியாக உரைக்கவுமே ஆர்யனின் முகத்தில் தென்பட்ட உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை..

மெலிதாய் சிரித்து கொண்டவன் “ம்ம்..” என சம்மதம் கூறவும் இத்தனை நாட்களாய் சுமந்த பாரமொன்று இறங்கியதாக அனுபவ பெருமூச்சிட்டாள் தாரா..

கலை கொண்ட வாழ்வில் பிழையாகி போன காதல்
பிழையை அழிப்பதா?? நீக்குவதா??
கவியோடு ஒன்றிய பிழையில் அழிவது வாழ்வன்றோ!!

கவிதை பிழையாகும்...

 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Aen andha psycho ku punishment vaangi tharala , atleast Avan reputation heh spoil pannirukalaam...divorce epadiyum kidaikum but he deserves heavy punishment..adhuku thaan avana koduramaa kolai pannirukaanga
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Ada naara payale unnaiyellam oil drum la ppttu varuthirukkanum, ennavellam kodooramaana punishment irukko athaiyellam unakku koduthirukanum da. Thara yen ivana easy ah vitta? Intha naayellam easy ah vittrukka kudathu thaara
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Thara avanuku dandanai vangi kudupa nu partha ippadi pannitiye divorce vamgina mattum summa irupana inda psycho, anda chinna ponnai enna pannano, nice update dear thanks.
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
கட்டியவன் என்று
கட்டுப்பட்டு போவதால்தான் காட்டுமிராண்டியாக மாறுகிறார்கள்
காமுகர்கள் ......
காதலால் கஷ்டத்தை பொறுக்க
காவலில் வைத்து கொடுமைப்படுத்த
காட்டுமிராண்டியை
காட்டிக் கொடுக்காமல்
கடந்து செல்வது.....
கடவுளுக்கே அடுக்காது.....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஆரியன் எதுவும் செய்யாம டிவோர்ஸ்க்கு ஓகே சொல்லிட்டான், அவன் பிராப்ளம் இதோட முடிந்தது தானே, இல்ல இன்னும் ஏதும் இருக்கா...

அவன் பண்ணினா கொடுமை தான் தாரா இப்படி இருக்க காரணமா, அதாவது இப்ப இருக்கற மாதிரி ரொம்ப டஃப் ஆ?????

இல்ல ரெண்டு தடவ லவ் வெச்சி ஏமார்தது தான் காரணமா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top