• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அத்தியாயம்-16
Ashwin (9).jpg
சத்யதேவ் தன் சபதத்தின்படியே தாராவை குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்க, பார்வையாளனாய் அமர்ந்திருந்த ஆதி பாவமாய் இடிந்து போயிருந்தான்.. பரபரப்பாக பேப்பர்களை புரட்டிக் கொண்டிருந்த பல்லவியை சொல்லப்படா உணர்வுடன் நோக்கி கொண்டிருந்த ஆஷிக்கை அலைப்புறும் விழிகளுக்கு நடுவே குறித்து கொண்டாள் குற்றவாளியான அவள்..

ஆஷிக்கிடம் விசாரணை முடித்துவிட்டு திரும்பும் வழியில் தாரா ரகசியமாய் கைது செய்யப்பட்டிருக்க, ‘வருவாள்’ என காத்திருந்தவர்களுக்கு கடிகார முள் நகர்ந்ததே தவிர அவள் வந்தபாடில்லை.. மொபைல் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகவில்லையெனில் எங்காவது அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாளே தவிர ஆபத்துகளில் சிக்கியிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையுடன் இருவரும் தேட, சரியான திட்டமிடலுடன் கச்சிதமாக நினைத்ததை நடத்தி முடித்திருந்தார் சத்யதேவ்..

நடுஇரவில் தேடியலைந்த பல்லவிக்கு விடியற்காலையில் செய்தி இடியென இறக்கப்பட, எந்த சாட்சியத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாள் என்பது கூட அறியாமல் தோழிக்காய் ஆஜராகியிருந்தாள்..

“யுவர் ஹானர்.. என்னோட கிளையன்ட் தாராவை அவ்ளோ அவசரமா அரெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன இருக்குது?? ப்ராப்பர் இன்டிமேஷன் இல்லாம நடுராத்தியில நடந்த இந்த அரெஸ்ட் கிட்டத்தட்ட கிட்னாப்பிங் மாதிரி இருக்குது..” என்ற பல்லவியின் கூற்றை மறுக்கும் விதமாக, “ப்ராப்பர் எவிடென்ஸ் இருக்கும் போது போலீஸ் தாராளமா அரெஸ்ட் பண்ணுறதுக்கு சட்டம் இருக்குதுன்னு கோர்ட்க்கு ஞாபகப்படுத்த வேண்டியதில்லை.. அரெஸ்ட் பண்றதுக்கு முன்னால ஹையர் அபீஷியல்ஸ்கிட்ட பெர்மிஷன் கேட்கணுமே தவிர அக்கியுஸ்ட்க்கு சம்பந்தப்பட்டவங்களை நோட்டிஃபை பண்ண தேவையில்லை..” என்றார் அரசு தரப்பு வக்கீல்..

“மை லார்ட்.. இந்த கேஸ்ல இன்வெஸ்டிகேஷன் ஆபீசரா இருக்குற மிஸ்டர்.சத்யதேவ் ஆரம்பத்துல இருந்தே தாராவை அக்கியுஸ் பண்ணுறதுக்கு ரொம்ப ட்ரை பண்றாங்க.. தன்னோட பெர்சனல் லைஃப்ல நடந்த ப்ராப்ளத்தை இந்த கேஸோட ரிலேட் பண்ணினதால வந்த பிரச்சனை.. ப்ராப்பர் எவிடென்ஸ்னு சொல்றாங்களே தவிர இன்னும் சப்மிட் பண்ணலையே.. இவங்க எவிடென்ஸ்ன்னு சொல்ற எல்லாமே சரியான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாம தாராவை சுத்தி ஜோடிக்கப்பட்ட பொய்கள்...” என்ற பல்லவி சாட்சியத்தை தெரிந்து கொள்வதற்காக சீண்டினாள்.. ..

அதற்கும், “போலீஸ் ஆபீசர் சத்யதேவ் பெர்சனல் இஸ்யூவை இங்க மென்ஷன் பண்ற லாயர் பல்லவி; தன்னோட ஃபிரெண்ட் தாராவுக்காக ஆஜராகுறது கூட பெர்சனல் ப்ராப்ளம் தானே..” என்று எதிர்பாரா வகையில் மடக்கினார் அவர்..

பல்லவி வாயடைத்து போயிருக்க, “யுவர் ஹானர்.. ஆர்யன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல என்ன சொல்லியிருக்குதுன்னா விக்டிம் ஃப்ளோர்ல படுத்திருக்குற நிலையில சர்க்கிளான ஒரு ஆப்ஜெக்ட்னால குத்தப்பட்டிருக்குறாரு.. குத்தப்பட்ட ஃபோர்ஸ் அண்ட் ஆங்கிள் வச்சு பார்க்கும் போது யார் வேணா பண்ணுறதுக்கு வாய்ப்பு இருக்குது.. சோ போன ஹியரிங்ல சொன்ன பாயின்ட் மிஸ் ஆகுது.. மிசஸ்.தாரா திரும்பவும் சஸ்பெக்ட் லிஸ்ட்ல வர்றாங்க..”

“அடுத்ததா வெப்பன் ஆஃப் மர்டர்.. டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கன்னா பென்னுக்கும் ராடுக்கும் இடைப்பட்ட டைப்.. அதாவது பென் மாதிரி எட்ஜ்.. ராட் ஸ்ட்ரக்சர்.... இந்த பாயிண்ட்ஸ் ரெஃபர் பண்ணி பார்க்கும் போது பொட்டேன்ஷியோ மீட்டர்ல யூஸ் பண்ணக்கூடிய ஜாக்கி எக்ஸாக்ட்டா மேட்ச் ஆகுது.. தாரா-பிசிக்ஸ் ப்ரொஃபசர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட நினைக்கிறேன்.. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்..” என தோள்களை குலுக்கினார் அரசு தரப்பு வக்கீல்..

“அப்ஜெக்ஷன் மை லார்ட்..” என்று பல்லவி எழ, “தாரா மட்டும்தான் ஃபிசிக்ஸ் ப்ரோஃபெசரான்ற ஒரு கொஸ்டீன் வரும்.. பட் அதுக்கான எவிடென்ஸ் கூட இருக்குது..” என்றவர் லேப் ரிஜிஸ்டரில் தாரா கையொப்பமிட்டு எடுத்து சென்றதிற்கான ஆதாரத்தினை சமர்ப்பித்தார்..

“ஆர்யன் மர்டர் நடந்த டேட்ல ஈவினிங் எடுத்துட்டு போன ஜாக்கியை தாரா இப்ப வரை ரிட்டர்ன் பண்ணலை.. அண்ட் அன்னைக்கு ஈவ்னிங் தாரா ரொம்ப பதட்டமா இருந்ததா அட்டெண்டர் வேல்முருகன் ஸ்டேட்மென்ட் கொடுத்துருக்குறாரு..” என்று ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் இந்த கோணத்தில் ஆராயவில்லையே என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பல்லவி.. இப்போது தலையே சுற்றியது பல்லவிக்கு..

இத்தனை வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் என்று ஆதியுமே எதிர்பார்த்திருக்கவில்லை..

போதாத காலத்திற்கு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிய சத்யதேவ் அவளருகே அமர்ந்து,
நியாயமா பார்த்தா நான் அந்த கூண்டுல ஏத்தியிருக்க வேண்டியது உன்னைத்தான்... பேட் கிரைம் நடந்த அன்னைக்கு வீட்ல இருந்த சிக்னலும் போட்டோஸும் ஸ்ட்ராங்கா இருக்குது... ஒரு லூப்ஹோல், ஒரு சின்ன விஷயம் கிடைச்சா போதும்... சொடக்கு போடுற டைம்ல தூக்கியிருப்பேன்.. அப்புறம் தெரியும் இந்த சத்யதேவ்கிட்டே எவ்ளோ பொலைட்டா பேசனும்ன்னு...” என பகிரங்கமாகவே மிரட்ட அரண்டே போயிருந்தாள்.

குற்றவாளி கூண்டில் நின்ற தாராவும் வாதங்களை கவனித்ததில் முகம் வெளிறிப் போயிருந்தாள்..

மேலும், “கொலை நடந்ததா சொல்லப்படுற நேரத்துல யாரும் வந்துட்டு போனதா எந்த எவிடென்ஸும் இல்லை.. ஆஃப்டர் டிவோர்ஸ்.. ஆர்யனும் தாராவும் மீட் பண்ணிக்கிறப்போ அவங்களுக்குள்ள வாக்குவாதம் நடந்ததுக்கான புட்டேஜ் கூட இருக்குது.. தாரா-ஆதியோட ரிசெப்ஷன் பார்ட்டிக்கு கோஇன்சிடென்ட்டா வந்த ஆர்யனுக்கும் தாராவுக்கும் நடுவில பேச்சுவார்த்தை நடந்திருக்கணும்.. ஆர்யனால ப்ரெசென்ட் லைஃப் ஸ்பாயில் ஆகும்னு நினைச்ச தாரா ஏற்கனவே ப்ளான் பண்ணி வச்ச மாதிரி நல்லபடியா பேசி கொலை பண்ணியிருக்கணும்..” என்று குற்றங்களை அடுக்கிக் கொண்டே சென்றார்..


எதிர்தரப்பில் எந்த வாதமும் எழாமல் போக, இடைவேளைக்கான அனுமதி வேண்டினாள் பல்லவி.. அவளின் கோரிக்கை ஏற்கப்பட்டு, கோர்ட் சில நிமிடங்களுக்கு கலைந்தது..

வெளியே வந்த பல்லவி, “ஷிட்.. இது எப்படி நடந்துச்சு?? லேப் ரெக்கார்ட்ஸ் கூட செக் பண்ணுவாங்கன்னு எப்படி யோசிக்காம போனோம்.. அவ்ளோ கேர்லஸ்ஸாவா இருந்திருக்குறோம்..” என தலையை பிடித்துக்கொள்ள, “போலீஸ் இந்த ரூட்ல போவாங்கன்னு யாருமே எக்ஸ்பெக்ட் பண்ணியிருக்க மாட்டோம்.. இன்ஃபாக்ட் டிப்பார்ட்மென்ட்ல லேப் டெஸ்ட் கண்டக்ட் பண்ணின நானே கவனிக்கலையே.. பல்லவி ப்ளீஸ்.. ரிலாக்ஸ்.. தாரா தனியா இருக்குற நேரத்துல அரெஸ்ட் பண்ணியிருக்குறாங்கன்னா என்ன அர்த்தம் .. சோ சத்யதேவ் கூலா ஸ்மார்ட் மூவ்ஸ் பண்றாரு.. நாம டென்ஷன் ஆகக்கூடாது..” என சமாதானம் செய்து கொண்டிருந்தான் ஆதி..

“ஓகே..” என மூச்சை இழுத்து தன்னை சமன்செய்து கொள்ள, தாராவோ ஆச்சரியமாய் ஆதியையே நோக்கிக் கொண்டிருந்தாள்.. “ஜஸ்ட் இந்த ப்ராப்ளம்ல இருந்து இப்ப மட்டும் எஸ்கேப் ஆனா போதும்.. தென் என்ன பண்ணலாம்னு தெளிவா யோசிக்கலாம்..” என ஆதி கூறிக்கொண்டிருக்கும் போதே, “நார்மலா இப்படி கேஸ்ல கிடைச்ச ஃபுட்டேஜ் க்ளியரா இல்லை.. மார்ஃபிங்.. அது நானே இல்லைன்னு சொல்லி டிஸ்டராக்ட் பண்ணுவாங்க.. பட் நம்ம பேட் டைம்.. கோர்ட்ல கன்ஃபெஸ் பண்ணியிருக்குறோம்...” என்ற பல்லவியின் யோசனை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முட்டிக் கொண்டு நின்றது..

தன்னவளை காக்கும் பொருட்டு எந்த எல்லைக்கும் செல்வதற்கு ஆதியின் இரத்தம் துடிக்க, “பல்லவி, ஆப்ஷன் பி..” என்றிடவும் பல்லவி கண்களில் தெளிவோடு சம்பந்தப்பட்டவளை நோக்க “நோ.. ஐ கான்ட்..” என தாரா உறுதியாகவே மறுத்தாள்..

“தாரா.. நமக்கு வேற ஆப்ஷன் இல்லை.. இருக்குற எவிடென்ஸ் ஸ்ட்ராங்காவும் அட் தி சேம் டைம் நமக்கு அகைன்ஸ்ட்டாவும் இருக்குது.. இந்த சான்ஸ் விட்டா அவ்ளோ தான்..” என்று பல்லவி எவ்வளவு எடுத்து கூறியும், “முடியாது..” என்ற முடிவில் உறுதியாய் தரித்திருந்தாள்..

“ஆதி..” என்ற பல்லவி சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைக்குமாறு கூறிவிட்டு, சத்யதேவை விடுத்து தூரமாய் நின்றிருந்த ஆஷிக்கிடம் சென்றாள்..

“ஆஷிக் சார்.. எனக்கு என்னவோ எங்க கிட்ட இருந்து இன்ஃபார்மேஷன் வாங்கி டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டு கேஸை தாரா மேல முடிச்சிடலாம்னு நீங்க ப்ளான் பண்ணின மாதிரி இருக்குது..” என்று சற்று எரிச்சலில் வினவ, “என்கிட்டே எந்த ப்ளானும் கிடையாது லாயர் மேடம்..” என்றான் ஆஷிக்..

“எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க சார்.. தாராவுக்கு அகைன்ஸ்ட்டா இப்படி ஒரு எவிடென்ஸ் இருக்கும் போது அரெஸ்ட் பண்ணின விஷயத்தை என்கிட்டே ஏன் சொல்லலை.. எதுக்காக மறைச்சீங்க??” என முகத்திற்கு நேரே கேள்வி எழுப்புபவளிடம் என்னவென்று கூறுவான்.. முக்கியமான ஒன்றை தேடிச் சென்றவனுக்கு காலையில் தான் விஷயம் தெரியும் என்றா..

“பல்லவி மேடம்.. நீங்க எவிடென்ஸ பாக்குறீங்க.. நான் அதுக்கு பின்னாடி இருக்குற உண்மையை தேடுறேன்.. சுத்தி கவனிச்சு பாருங்க.. நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிடலாம்.. அண்ட் நம்ம ப்ரொஃபஷன்ல எல்லாரையுமே சந்தேகப்படனும்.. நம்பிக்கை நேரா கேசஸ்ல தான் இருக்கும்..” என்ற ஆஷிக்கின் கூற்றின் அர்த்தம் புரியாமல் புருவம் சுருக்கினாள் பல்லவி..

மீண்டும் கூடிய கோர்ட்டில், “யுவர் ஹானர் குற்றவாளி கூண்டில் நிற்கிற இந்த தாரா தன்னோட முன்பகையை காரணமா காட்டி எக்ஸ் ஹஸ்பன்ட் ஆர்யனை கொடூரமா கொலை பண்ணினதுக்காக செக்ஷன் 307படி ஆயுள் தண்டனை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..” என்று அரசு தரப்பு வக்கீல் வாதத்தை முடித்து கொள்ள, “நீங்க என்ன சொல்றீங்க, மிசஸ்.தாரா..” என கேட்டார் நீதிபதி..

முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் விழிக்கிறாளே தவிர எந்த வார்த்தையும் மொழியவில்லை.. அவ்வப்போது ஆதியை மட்டும் பார்த்து கொள்கிறாள்.. ஒருவேளை எல்லாம் முடிந்தது என்ற முடிவிற்கு வந்து எங்கே குற்றத்தை ஏற்றுக்கொள்வாளோ மனம் பதைபதைக்கிறதே..

சூழ்நிலையை அவதானித்துக் கொண்ட பல்லவி, “அப்ஜெக்ஷன் மை லார்ட்..” என தொடங்கும் முன் ஆதி தன்னுடைய இருக்கையை விட்டு எழுவதைக் காணாமல், “க்ரைம் நடந்த அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்..” என்றாள் தாரா தன் தீர்க்கமான குரலோடு..

“நாவல்ஸ், ஸ்டோரீஸ் அண்ட் ஃபேரிடேல்ஸ்ல எப்பவும் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்தான் என்டிங்கா இருக்கும்.. பட் நிஜத்துல அது பாசிபிளே இல்லை... ப்ராப்ளம் மேக்கிங் சீன்சை விரும்பாத நாம ரியல் லைஃப் பிராப்ளத்தை ஃபேஸ் பண்ண தைரியத்தை வளர்த்துக்கிறோம்... திஸ் இஸ் தி மேஜிக் ஆஃப் ரியல் வேர்ல்ட்... யூசுவலா நாம பண்ற திங்க்ஸ் எப்பவுமே அழிக்க முடியாத மிஸ்டேக்ஸா மாறும்னு முன்னாடியே தெரிஞ்சா கேஷுவலாவாவது பயப்படுவோம்... நெக்ஸ்ட் மூவ் தெரியாத ஸ்னேக் அண்ட் லேடர்ல உருள்ற பகடைக்காய் மாதிரி தான் ஸ்டார்ட் ஆகுது இந்த கேம்...”

-தாரா

பார்ட்டியில் இருந்து பெருங்கோபத்தோடு கிளம்பி இத்தோடு அரைமணி நேரமாயிற்று.. இன்னும் கோபம் அடங்கியபாடில்லை.. ஸ்டியரிங்கோடு அடித்தால் உள்ளங்கை வலிக்கிறதே தவிர உள்ளத்திற்கு புரிந்து தொலையவில்லையே..

என்ன சொன்னாலும் கேட்பதில்லை.. இதை ‘செய்’ என்றால் செய்யாமல் போவதில் அத்தனை சந்தோசங்கள்.. ச்சே.. இப்படியே முறுமுறுத்துக் கொண்டிருப்பதில் சாலை ஓரத்தில் பார்த்தால், எங்காவது முட்டி அழுதிருந்தால் அள்ளிக் கொண்டு போய் ஹாஸ்பிடலில் போட்டு விட்டு கடமை முடிந்ததென ஒதுங்கிக் கொள்ளலாம்..

இப்படியே பலவாறாக பொரிந்து கொண்டே பக்கவாட்டில் பார்வையை செலுத்தி வந்தாள் தாரா.. பார்ட்டியில் நடந்ததிற்காக யாரேனும் ஒருவர் மன்னிப்பு கேட்டாக வேண்டுமே.. ஒவ்வொரு முறையும் இவன் செய்வதை எல்லாம் மன்னிக்க வேண்டுமா?? மனம் பற்றி எரிகிறது..

“இவன்லாம் ஒரு மனுஷனா??” என அருவருப்பில் சுளித்த முகம் சாலையின் ஓரத்தில் அனாதையாய் கிடந்த காரை கண்டதும் “இவனென்ன பைத்தியமா??” என்று கேள்வியாய் மாறிக் கொண்டது..

ஆர்வக்கோளாறில் காரை விட்டு இறங்காமல் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்த தாரா, உள்ளே அவனில்லை என்று கண்டுகொண்டதோடு இரண்டே எட்டில் தானே வீடும் இருக்கிறது என்றும் புரிந்து கொண்டாள்..

நிசப்தத்தில் நீந்திக் கொண்டிருந்த நீளபங்களாவினுள் காலெடுத்து வைத்த தாராவின் மூளைக்குள் ஆயிரமாயிரம் நினைவலைகள்.. இரவின் ராகத்தை தவிர்த்து வேறெந்த அசைவும் மீந்திருக்கவில்லை..

மெதுவாய் ஷோஃபாவில் அமர்ந்த வண்ணம், “ஆர்யன்.. ஆர்யன்..” என நான்கைந்து முறை அழைத்து பார்த்தும் பதிலின்றி போக, கிளம்புவதே உசிதமென்று எழுந்து விட்டாள்..

வாசலை அடைய எத்தனிக்கும் போது மேல்தளத்தில் ‘டமால்..’ என்ற சத்தத்தில் உந்தப்பட்டு ஆர்வத்தினால் மாடிப்படியேறினாள் தாரா.. சில மாதங்களுக்கு முன் அவளின் அறையென்னப்பட்ட பகுதியில் நின்றிருந்தவனின் கால்களுக்கு கீழே பெட் சைட் லேம்ப் சிதறிக் கிடந்தது..

தேடித்தேடி வாங்கிய பொருள் தற்பொழுது அவளுடையது இல்லை என்றாலும் ஒரு காலத்தில் தனக்கு பிடித்தம் என்பதால் கண்களை சுருக்கி முறைத்தவாறே, “இட்ஸ் ஓவர்.. பொறுமையா பேசுறது இது தான் லாஸ்ட் டைம்.. நான் அல்ரெடி சொல்லிட்டேன்.. எனக்கு ஸெல்ப் செக்கியூரிட்டி ரொம்ப முக்கியம்.. தேவையில்லாத விஷயத்துல இன்வால்வ் ஆகி என்னோட லைஃபை ரிஸ்க்ல கொண்டு விடமாட்டேன்.. இன்னொரு தடவை உங்க ப்ரோஃபெஷன்க்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்.. அகைன் அண்ட் அகைன் குழந்தைக்கு சொல்ற மாதிரி புரிய வைக்க முடியாது.. இனியும் இந்த ஆட்டிடியூடை கண்டினியூ பண்ணினா என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ எடுத்துட்டு போயிட்டே இருப்பேன்..” என்றாள்..

கிட்டத்தட்ட இதுவும் ஒருவகையான மிரட்டல் தான்.. தலையை அழுந்தப் பிடித்து கொண்டு கண்கள் துவண்டிட, “ரொம்ப ஹெட்டேக்கா இருக்குது.. காஃபி கிடைக்குமா??” என்று இறைஞ்சுதலாக அவன் கேட்கவும் ‘இத்தோடு தொலைந்து போ..’ என்ற மனநிலையில் தான் கிச்சனிற்குள் நுழைந்தாள்..
காப்பி கோப்பையை திணித்து விட்டு, “நான் சொன்னது ஞாபகத்துல இருக்கட்டும்.. ஜாக்கிரதை..” என்று ஒற்றை விரல் உயர்த்தி எச்ச்சரிக்கவும் செய்தாள்.. லிவிங் ஏரியா வரை பின்னாலேயே “ஹே.. ஹே..” என்றானே தவிர வீட்டிலிருந்து வெளியே வந்தபின் அவனை காணமுடியவில்லை..

தலைதெறிக்க மேல்தளத்திற்கு ஓடியவன் சிதறிய கண்ணாடிகளை சுத்தம் செய்வதற்காக செல்கிறான் என்று எண்ணிக் கொண்டவளாக வீடு திரும்பினாள்..


நடந்ததை கேட்டுமுடித்த அரசுதரப்பு வக்கீல், “சோ, பேஷன்ட் மூர்த்தி சூசைட் பண்ண ட்ரை பண்ணின கேஸ்ல ஆர்யன் மேல வந்த என்கொயரிக்கு நீங்க ஹெல்ப் பண்ணியிருக்கீங்க.. நீங்க போனப்போ அங்க எதுவுமே நடக்கல இல்லையா??” என்று விட்ட நூலிலிருந்து பின்னத் தொடங்கி விட்டார்..

“சிசிடிவி புட்டேஜ் ரன் பண்ணினா என்னோட சைட் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும்.. நான் இந்த கொலையை பண்ணலைன்னு ப்ரூவ் பண்ணுறதுக்கு..” என்ற தாரா பல்லவியை நோக்க, அதற்கான அனுமதியை அவள் மொழிகளில் பெற்றுத் தந்தாள்..

“கவனமா பார்த்தா உள்ள போகும் போது இருந்த அதே ஸ்பீட்ல தான் வெளியில வர்றேன்.. எந்த நெர்வஸும் இல்லை.. முக்கியமா இதெல்லாமே ட்வென்டி மினிட்ஸ்ல முடிஞ்சிருச்சு.. வெளிய வந்த டைம்ல இருந்து சரியா ஹாஃப் அன் ஹார்ல நான் வீட்டுக்கு போயிட்டேன்.. க்ராஸ் செக் பண்ணிக்கலாம்..” என்று தாரா தெளிவாக விளக்க, “உங்ககிட்ட காணாம போன ஜாக்கிக்கு என்ன பதில் சொல்றீங்க??” என கேட்டார்..

“சார்.. கொஞ்சம் லாஜிக்கலா யோசிச்சா இதுக்கும் ஆன்சர் கிடைக்கும்.. அன்னைக்கு என்னோட ரிசெப்ஷன் பார்ட்டி.. கரெக்ட் டைம்க்கு போக முடியாம லேட் ஆயிடுச்சுன்னு டென்ஷன்ல இருந்தேன்.. மோர் ஓவர்.. காலேஜ் டிப்பார்ட்மென்ட் லேப்ல இருந்து எக்கியூப்மெண்ட் எடுத்துக்குறதுக்கு ஸ்டாஃப்ஸ்க்கு பெர்மிஷன் உண்டு..
அட்டெண்டன்ஸ்ல சைன் பண்ணாம கூட எடுத்துட்டு போக முடியும்.. ப்ரீ-ப்ளான் பண்ணின நான் ஏன் சீக்ரெட்டா பண்ணாம எவிடென்ஸ் க்ரியேட் ஆகுற மாதிரி நடந்துக்க போறேன்.. மென்ஷன் பண்ற ஜாக்கி இன்னும் என்னோட ரூம் செல்ப்ல தான் இருக்குது.. எந்த ப்ளட்மார்க்ஸும் கிடையாது.. நான் இந்த கொலையை பண்ணலை..” என மீண்டுமொரு முறை அடித்து பேசினாள்..

அவள் கூறும் ஆதாரங்களும் அவளில்லை என்பதை தெளிவுப்படுத்த மொத்த கோர்ட்டும் குழம்பி போயிருந்தது.. “மோட்டிவ் இல்லைன்னா எதுக்காக அந்த ஜாக்கியை இப்ப வரைக்கும் ரிட்டர்ன் பண்ணாம வச்சுருகிறீங்க??” என்ற கேள்வியை எழுப்ப, “அப்ஜெக்ஷன் டினைட்.. மிஸ்டர்.பப்ளிக் ப்ராஸ்கியூட்டர்.. தாரா அவங்க மேல எந்த மிஸ்டேக்கும் இல்லைன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டாங்களே.. அப்புறமும் ஏன் இந்த கொஸ்டீன்ஸ்? அவங்க சொல்ற மாதிரி நீங்களும் டார்கெட் பண்றீங்களா??” என ஜட்ஜ் கேட்கவும் கப்சிப்பானார் அவரோடு சேர்ந்த சத்யதேவ்..

பின், “நீங்க இந்த கொலையை பண்ணலைன்னு சொல்றீங்க.. யார் பண்ணியிருப்பாங்கன்னு எனி ஐடியா??” என்று ஜட்ஜ் வினவ, “அதுக்கு ஆன்சர் என்கிட்டே இருக்குது யுவர் ஹானர்..” என்ற பல்லவி முன்னே வந்தாள்.. “எஸ் ப்ரோசீட்..” என்று அனுமதி வழங்கவும், “ஆர்யன் கொல்லப்பட்ட நைட் அந்த வீட்டுல தாராவோட சேர்த்து மூணு பேர் இருந்திருக்குறாங்க..” என்றாள் பல்லவி..

அதில் மொத்த கோர்ட்டும் திகிலுற, மெல்ல திரும்பிய பல்லவி ஆதிக்கு நல்லவிதமான சைகையாக கண்ணசைத்தாள்.. ஆதாரத்திற்காக பென்ட்ரைவ் ஒன்றை சமர்ப்பித்திட, ஆர்யன் வீட்டின் பின்பக்கமாய் ஒரு கருப்பு உருவம் சுவரேறி குதிப்பது தெளிவாக படம்பிடிக்கப்பட்டிருந்தது..

“யாரா இருக்கும்??” என ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொள்ள, “ஸ்க்ரீன்ல இருக்குற ஃபுட்டேஜ் தாரா ஆர்யன் வீட்டுக்கு வர்றதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி ரெக்கார்ட் ஆனது.. இதை வச்சு பார்க்கும் போது தாரா வீட்டுக்குள்ள நுழையும் போது மறைஞ்சிக்கிட்ட கில்லர் கிளம்பினதும் அட்டாக் பண்ணியிருக்கணும்.. “ என பேசிக்கொண்டிருந்தாள் தாரா..

“அப்ஜெக்ஷன் மை லார்ட்.. ஃபுட்டேஜ் கிளியரா கூட இல்லை.. ஒரு ஷேடோ தெரியுது.. அவ்ளோ தான்.. முன்னாடி ஒரு கவனத்தை வச்சுட்டு பின்னாடி மேஜிக் பண்ற வித்தையா கூட இருக்கலாம்..” என்று அரசுதரப்பு வக்கீல் மறுப்பு தெரிவிக்க, “இதே ஃபுட்டேஜை ஒரு வெல் ட்ரைன்ட் ப்ரோஃபைலர் வச்சு பாடி லாங்குவேஜ் அண்ட் ஸ்ட்ரக்சர் செக் பண்ணும் போது ஒரு விஷயம் கண்டுபிடிச்சோம்.. வந்தது அகில்.. கொஞ்ச நாளைக்கு முன்ன டொமெஸ்டிக் வயலென்ஸ்னு கம்ப்ளைன்ட் பண்ணி அகிலோட வொய்ஃப் ஹர்ஷினியை அப்ராட் அனுப்பினதுக்காக பழி வாங்குற மோட்டிவ்ல செய்யப்பட்ட கொலை.. பப்ளிக் பிளேஸ்ல ‘உன்னை அழிச்சிடுவேன்’னு ஒப்பன் த்ரெட்டன் கொடுத்த அகிலுக்கு இது சாதாரணம் தான்..” என்றாள் பல்லவி..

“அந்த வகையில தாராவுக்கும் அகிலுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மோட்டிவ் தான்.. ஒருத்தர் மிரட்டினா கண்டிப்பா கொலை பண்ணியிருப்பாருன்னு முடிவுக்கு வந்திட முடியாது.. இது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்க கூட சான்சஸ் இருக்குது..” என்கவும், நக்கலாய் புன்னகைத்த பல்லவி, “நீங்களே அக்செப்ட் பண்ணிட்டீங்களே சார்.. தாராவுக்கு மோட்டிவ் இருக்கலாம்.. பட் கொலை பண்ணலை.. டிபரென்ஸ் இருக்குது..” என்றாள்..

ஆனால் அடுத்த நிமிடமே சீரியசாக மாறி கொண்டவள், “இந்த கிளிப்ல இருக்குறது அகில்னு அவங்க வொய்ப் ஹர்ஷினியே கன்பார்ம் பண்ணியிருக்குறாங்க.. அண்ட் ஆர்யன் வீட்ல இருந்து பைவ் கிலோமீட்டர் சரௌண்டிங்ல இருக்குற ஏடிஎம் செண்டர்ல ஒன் ஹார்க்கு முன்ன கார்ட் யூஸ் ஆகியிருக்குது.. இன்னொரு ஊர்ல ஹாஸ்பிடல் ஆப்போசிட்ல ஹோட்டல் நடத்துற அகில் ஏன் இங்க வந்து பணம் எடுக்கணும்??” என்று புட்டுபுட்டு வைத்தவள் அனைத்திற்கும் சாட்சியத்தையும் சமர்ப்பித்தாள்..

அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து விட்டு, “எனவே இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தாரா ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியல்ல என்று நிருப்பிக்கப்பட்டதால் இந்த கோர்ட் அவரை விடுதலை செய்கிறது..” என்ற வார்த்தைகள் கேட்டப்பின்னே உயிர் திரும்பி வந்தது போலிருந்தது..
விடுதலையான மகிழ்ச்சியில் ஓடிவந்து தாராவை கட்டிக்கொண்ட பல்லவி, “எங்க கேஸ் கைய விட்டு போயிடுமோன்னு பயந்துட்டேன்.. கடைசியா வேற ஆப்ஷனே இல்லை.. பார்ஷியலி அம்னீஷியா இருக்குறதுனால ஸெல்ப் டிபென்ஸ்க்காக கொலை பண்ணினது ஞாபகம் இல்லைன்னு பிளேட்டை மாத்தி போடணும்னு வந்தேன்.. தேங் காட்.. நீயே சமாளிச்சிட்ட..” என மகிழ்ச்சியில் பரபரத்தாள்..

“தாரா..” என்ற ஆதி அரண்டு நிற்க, “ஆதி.. ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஓவர்..” என கைகோர்க்க, வியர்த்து சில்லிட்டிருந்தது.. “ஆதி.. ஆர் யு ஓகே..” அவனின் மாற்றத்தில் பதறியவளாக தாரா வினவ, “யா.. ஐ யம் ஓகே..” என்றவன் கோர்ட் என பாராது கட்டிக்கொண்டான்..

கழுத்து பகுதியில் ஈரப்பதத்தை உணர்ந்தவளாக, “ஆதி..” என்று பிரிக்க, “ஆனந்த கண்ணீர் கொஞ்சம் ஓவரா இருக்குது..” என்று பல்லவி கலாய்த்து கொண்டிருக்கும் போதே ஆஷிக் வந்துவிட்டான்..
“கங்க்ராட்ஸ்..” என்று உயிர்ப்பேயின்றி வாழ்த்தி விட்டு, “ஐ அம் திஸ்அப்பாய்ன்ட்ட்ட் தாரா.. உங்களோட எத்திக்ஸ்ல இருந்து மாறாம இருப்பீங்கன்னு நம்பினேன்.. உண்மையை மறைச்சு பேசுற நீங்க கோர்ட் கிட்ட பொய்யை கொஞ்சம் அவாய்ட் பண்ணியிருக்கலாம்..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறிவிட்டு நகர்ந்தார்..

“எக்ஸ்கியூஸ்மீ..” என்று விடைபெற்று கொண்ட தாரா, “ஆஷிக்..” என சென்றவனின் முன்னே வந்து நின்றாள்.. “என்னோட எத்திக்ஸ்ல இருந்து நான் எப்பவும் மாறமாட்டேன் ஆஷிக்.. கோர்ட்ல மாத்தி பேசின உண்மை உங்க கண்ணுக்கு பொய்யா தெரியுது போல.. நெக்ஸ்ட் கேஸ்ல இருந்து ஒன்வேல போகாம பைபாஸ் ட்ரை பண்ணி பாருங்க.. ஈசியா இருக்கும்..” என்று இதழோரமாய் புன்னகைத்தாள் தாரா..

அன்று மாலை மாடியில் மூவரும் அமர்ந்திருக்க, “இன்னைக்கு கோர்ட்ல சத்யதேவ்வோட ரியாக்ஷன் கவனிச்சீங்களா??” என்று பல்லவி நக்கலாய் சிரிக்க, “ம்ம்..” என ஆமோதித்தாள் தாராவும்..

“பல்லவி.. உன்னோட எவிடென்ஸ் க்ளியரா இருக்குதுல்ல.. ஒழுங்கா சப்மிட் பண்ணாம விட்டதுக்கு எங்களுக்கெல்லாம் மாஸ்டர் ஸ்ட்ரோக்கே வந்திருக்கும்.. அப்புறம் அதே கோர்ட்ல உன்மேல கேஸ் போட்ருப்போம்..” என ஆதி கூறவும், “அந்த க்ளூ மட்டும் கிடைக்கலைன்னா நானே அங்க ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருப்பேன்.. தேங் காட்.. கரெக்டான டைம்க்கு யாரோ சென்ட் பண்ணியிருக்குறாங்க..” என நிம்மதி பெருமூச்சிட்டாள் பல்லவி..

“வாட்?? அப்போ அது உன்னோட கேஸ் ஸ்டடி இல்லையா??” என்ற ஆதி முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு, “கரெக்ட்டான எவிடென்ஸ் கரெக்ட்டான டைமுக்கு எப்படி கிடைக்கும்.. அதுவும் அந்த சத்யதேவை மீறி.. இதுல எதோ ப்ராப்ளம் இருக்குது??” என்று சந்தேகிக்க, “ட்ரப்பா இருக்குமோ??” என விழிகளை அகல விரித்தாள் பல்லவி..

“கைஸ்.. கைஸ்.. ரிலாக்ஸ்.. யாரும் நமக்கு எவிடென்ஸ் கொடுக்கலை..” என சமாதானப்படுத்தியவளை இருவரும் புரியாத பார்வையில் விழிக்க, “ம்ம்..” என்று வாயசைத்து கொண்ட தாரா, “சென்ட் பண்ணினது நான் தான்..” என்றாள் ஆர்ப்பாட்டமின்றி..

“வாட்??” என்று இருவரும் அதிர, “யா.. பிகாஸ், போலீஸ் காலேஜ் திரும்பவும் என்கொயரிக்காக போயிருக்குறப்போ நம்ம சைட் எந்த லூப்ஹோலும் இருக்க கூடாதுன்னு நினைச்சேன்.. இவ்ளோ பெர்பெக்ட்டா தப்பிக்குறதுக்கு எபோர்ட் போடலைன்னா எதுவும் முடியாது.. சோ எல்லாத்தையும் பிக்ஸ் பண்ணிட்டேன்..” என்று சாவகாசமாய் தோள்களை குலுக்கினாள் அவள்..

“தாரா எவிடென்ஸ கிளியர் பண்ணிட்ட தானே..” என்ற ஆதியின் கூற்றில், “வெயிட்.. எந்த எவிடென்ஸ்?? நீங்க எதை பத்தி பேசுறீங்க??” என்று கோபம் மேலிட கேட்டாள் பல்லவி..

கூந்தலை காதோரமாய் ஒதுக்கிய தாரா, “ஆக்சுவலி, க்ரைம் சீன்ல நான் இருந்தேன்..” என்றவளின் கண்களில் மின்னிய இந்த வெறி கொண்டு குத்தியிருந்தால் நிச்சயம் அப்படி தான் கொலை நிகழ்ந்திருக்கும் என்பதை யூகித்து கொண்டாள் பல்லவி.. ஏன்?? என்ற கேள்வி இவ்விடத்திற்கு அபத்தமாய் தோன்ற, “வெப்பன் எங்க??” என்று சன்னகுரலில் கேட்கவும், “டேபிள் லேம்ப் செண்டர் ராட்.. அப்பவே டிஸ்போஸ் பண்ணிட்டேன்..” என்றாள் தாரா சாதாரணமாக..

தலையில் கைவைத்தபடி பல்லவி சிலையாகிட, அன்று மேல்தளத்தில் ஆத்திரம் தீர அவனை குத்தி முடித்த தாரா, நேரே போலீசிடம் சரண்டராகிட முடிவு செய்து வாசலை நோக்கி நடக்கும் பொழுது திடீரென்று ஒரு யோசனை.. கைகளில் வழிந்த குருதியை குரூர பார்வையோடு நோக்க, அந்த காட்சியில் கிடைந்த உணர்வுகளை இன்றளவும் தேக்கி வைத்திருக்கிறாள் தீராத வெறி கொண்ட தாரகை..


வாட்டி எடுக்கும் துன்பம்தனை வதம் செய்திட
ஆட்டிப்படைப்பது காதலெனும் கவியின் எதிர்பதமோ??

கவிதை பிழையாகும்...

பெரிய பெரிய சாரி கவிக்குட்டீஸ்.... லேப்டாப் திடீர்னு ஹேக் ஆகிடுச்சு.. மொத்தமா ரீசெட் கொடுத்துட்டு அகைன் ஓபன் செஞ்சா எந்த பைலும் இல்ல... இப்பதான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு சுதாரிச்சிட்டு ரெகவர் பண்ணிட்டு இருக்கிறேன். அதனால்தான் இத்தனை தாமதம். சாரி. நிச்சயமாக கதையை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துவிடுவேன். கதையின் முக்கிய திருப்பமாக தாரா அங்கே சென்றதை ஒப்புக் கொண்டாள். சோ இனி வேகமா க்ளைமாக்ஸ் நோக்கி பயணிக்கும்... யார் கொலை பண்ணினது என தெரிஞ்சிக்க காத்திருங்கள்.
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்ப கொலை பண்ணினது அகில் தானா, எனக்கு என்னவோ ஆதினு தோணுது🤔🤔🤔🤔

அந்த பார்ட்டிலா இருந்து பாதியில் வந்துட்டா தாரா, சோ அங்க ஆதி இருந்தனா இல்லையானு தெரியாது, ஆதி பண்ணி இருக்க சான்ஸ் இருக்கு,அன்னைக்கு அவ டராவில் இருந்த வேபொன் பார்த்து ஆதி ஷாக் ஆனான் இல்ல, அது ஏன் இவளுக்கு எப்படி இது கிடைச்சதுனு கூட ஷாக் ஆகி இருக்கலாம்🧐🧐🧐

ஆரி லாஸ்ட்ல ஏன் அப்படி ஓடனும்??????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Yaar da kolai pannathu akil ah irukathu oru velai aadhi ah irukumo, sathyadev en ivalai mativida thudukiran ivanuku thara mela edavathu personal ah edavathu iruka, thara en aryan veetuku pona ivlo suspence iruku nice update dear thanks.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
sathyadev ku enna prachanai nu sathiyama purila?

yen thaarava kuri vachu avala ulla thalla pakkuranga?????

aadhi or akil?????

yamma author eh, pottiye mudiya poguthu innum suspense ah ve kondu pona yepdi maaaaa
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top