கவிதை

#1


“உன்னை

கைபிடித்த நாள்

முதலாய்

கவலைகளற்று

கிடக்கிறேன்

உன்னில்

மூழ்கி கிடக்கும்

என்னை

மீட்டெடுக்க

ஏதும் வழியின்றி

தவிக்கிறேன்

என்

கவலைகளை

உன்னில்

சொன்னேன்

என் கற்பனையும்

உன்னில்

சொன்னேன்

ஆறுதலும்

தேறுதலும்

நீ

தந்தாய்

அடுத்தகட்ட வாழ்வையும்

நீ

தந்தாய்

உன் மேல்

நான் பித்தானேனா

இல்லை

உன்னுள்

என்னை

ஒடுக்கிக்கொண்டாயா?

காரணம் அதை

கண்டறிய

விளையவில்லை

என்

கண்ணீர்

துடைக்க

கவிதை வடிவாய்

வந்தாயே

காலம்

முழுதும்

உன் கரம்

பிரியா வரம்

ஒன்று போதும்”
 

Sponsored

Advertisements

Top