கவியரசர் கண்ணதாசன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,744
Reaction score
42,084
Points
113
Location
madurai
அன்னைதமிழின் பெருமையை காலம் என்றும் செழித்து ஓங்கி நிற்கும் வகையில் கனிவாய் எடுத்துரைத்து, தமிழர்களின் இதயங்களில் தனது எழுத்துக்களால் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன்!

கற்பனை என்னும் கானல் நீருக்கு அணை அமைத்து அழகு பார்த்த கவிஞர்!

இயற்கையாக தோன்றிய பசிக்கும் செயற்கையாக தோன்றிய பணத்திற்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் உலகிற்கு பறைசாற்றிய சிறந்த கலைஞன் கவியரசர் கண்ணதாசன்.

அறிவியல் அறிஞர்கள் இந்த உலகத்தை உற்றுப் பார்த்து தேடிக் கொண்டிருந்தபோது, இந்த உலகத்திற்குள் ஊடுருவி பார்த்து, தனது எழுத்துகளின் வாயிலாக பாடல்களை காற்றில் கரையவிட்டார் கண்ணதாசன்.

அக்காலக்கட்டத்தில் பந்துலு, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பாலச்சந்தர் போன்ற இயக்குநர்கள் படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் கதைகளுக்கு நடுவே எங்கு பாடல்களை வைக்கலாம் என்று எண்ணிக்கொண்டு கண்ணதாசனிடம் சென்றால், நான்கு நிமிட பாட்டிற்குள் கதை முழுவதையும் வைத்து அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்து விடுவார் கவியரசர்!

இதனாலேயே என்னவோ கவியரசருக்கு முன்பு வந்த பாடல்களும் சரி, பின்பு வந்த பாடல்களும் சரி, அவர் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை போன்று ஏற்படுத்தவில்லை. மகத்துவம் நிறைந்த வாழ்க்கையையும், பிரமாண்டம் நிறைந்த வாழ்வியலையும் அறிய நினைப்பவன் புராணங்களையும் இதிகாசங்களையும் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை, கண்ணதாசனின் பாடலின் நான்கு வரிகள் அதை உணர்த்திவிடும்.
அதற்கு,

"கடவுள் ஒருநாள் உலகை காண
தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்...
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்...
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்.

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்"

என்ற ஒரு பாடல் உதாரணம்.

இந்த பாடலில் படைத்தவனின் அந்த கடைசி ஒற்றை சிரிப்பு தான் வாழ்வியலின் தத்துவம். இதனை கடைக்கோடியில் இருக்கும் பாமரனின் செவிகளுக்கு, அவனுக்கு புரியும் வண்ணம் கண்ணதாசன் கொண்டு சேர்த்தார்!


வாழ்க்கையை வெறுத்து, விரக்தியின் உச்சநிலையில் நின்று கொண்டிருக்கும் ஒருவன்,

"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா...!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சிக் கிடைக்கும்!

காட்சிக் கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்"

என்ற 'பலே பாண்டியா' படத்தின் பாடலைக் கேட்டால் போதும் அவன் மனதிற்குள் நம்பிக்கை நிறைந்த ஆனந்த காற்று வீசும்.


இதே போல் தான், தன் குடும்பம் என்று மட்டும் ஒரு கூட்டிற்குள் அடைபட்டு வாழும் மனிதன்..

"வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழைபோல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகியோடும் மெழுகுபோல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்"


என்ற" சுமை தாங்கி "படத்தின் பாடலை கேட்டால் போதும் அவன் மனதில் சுயநலம் நீங்கி பொதுநலம் பிறக்கும்.


பின்னர் 'இதய கமலம்' படத்தில் "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல" என்ற பாடல் நம் கண்களில் கண்ணீரை தளும்பச் செய்யும். சுசீலா அம்மாவின் மிக இனிமையான குரலில் அற்புதம்!


இவ்வாறு தாயின் தாலாட்டு முதல் தாரத்தின் மறைவின் சோககீதம் வரை, வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கண்ணதாசனின் எழுத்துக்கள், மனித உணர்வுகளோடு இரண்டறக் கலந்து, எக்காலத்திலும் ் வினாக்குறி போல் வளையாமல்... வியப்புக்குறி போல் அழியாமல் நிமிர்ந்தே நிற்கிறது!

படித்ததில் பிடித்தது 😍😍
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top