கவியின் கனவில்

#1
"கவிதை
எழுதிட
கடலோரம் அமர்ந்தேன்"


"கரம் பிடித்தாய்
என்னை
கண்களில் மின்னிடும்
காதலோடு"


"என்
கொலுசொலிதான்
கடல் அலையோடு
கொஞ்சி விளையாட
வஞ்சி இவளை
வாகாய் பொருத்தினாய்
உன் நெஞ்சோடு"


"நீல வானம்
அதில் நிறைந்திருக்கும்
மேகக்கூட்டம்
அடுக்கடுக்காய் அலைகள்
தொலைதூர வானில்
தூரிகையாடும்
விடிவெள்ளி
வெட்கம் கொண்ட
கன்னி இவள்
உன் கைகளுக்குள்ளே"


"உதயசூரியன்
பொன்னொளி வீசிட
பெண்ணவள் கழுத்தில்
பொன் தாலி நீ சூட்ட
நடுவர் தான் இல்லை
தீர்பு சொல்லிட்
செக்கச்சிவந்தது
செவ்வானமா?
இல்லை
பொன்வண்ணம்
கொண்ட
மங்கையிவள்
கண்ணமா? என"


"உன் கரம்
கோர்த்தேன்
கடல் அன்னை
சாட்சியாக"


"சயனம் கொண்டிருந்தவளை
சடுதியில்
கலைப்பது போல்
பக்கத்தில் எங்கோ
படகின் ஒலி
பதறி முழித்தேன்
திணறி விழித்தேன்
கவி எழுத அமர்ந்த போது
கண்ட கனவிது என
அறிந்த போது
மலர்ந்து சிரித்தேன்"


"கவியின்
கனவிலும்
காதல் தானா?"
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top