• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் ஆறு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"என்னை கொல்ல இனி ஒருவன் பிறந்து தான் வர வேண்டும் வீர பாண்டியா ..."என்றான் ஆதித்யயன் .

"வந்து விட்டார்கள் ஆதித்யா ....உன்னை சுற்றியே இருக்கிறார்கள் ....பல வருடமாய் உன்னை பலி வாங்க பலர் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா ...இந்த முடி உனக்கா சேர வேண்டியது ..யோசித்து சொல் ....சேவூர் செருக்களத்திலேயே உன்னை கொல்ல தான் முயன்றார்கள் பல முறை ...தப்பி விட்டாய் ஆதித்யா .....எதற்காக உன் நாட்டின் எல்லைகளை சூறையாடினோம் என்று நினைக்கிறாய் ?எதற்காக உங்கள் குலதெய்வத்தை கடத்த முயன்றோம் என்று நினைக்கிறாய் ...இது எல்லாம் யார் போட்டு கொடுத்த திட்டம் என்று அறிவாயா நீ ?....உன்னை சுற்றி சூழ்ச்சி வலை விரித்து விட்டோம் ஆதித்யா ...இந்த தரணி ஆள போவது நீ இல்லை ....இந்த பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம் உனது இல்லை ..."என்றான் வீரபாண்டியன் .

"யார் திட்டம் இது ...சொல் வீரபாண்டியா ...சொல் ...."என்றான் ஆதித்யன் வெறியுடன் .

"அதை சொல்ல எனக்கு என்ன சித்தம் கலங்கி இருக்கிறதா என்ன ..இன்று என் உயிர் பிரியலாம் ...இன்று நீ என்னை வெல்லலாம் ...ஆனால் நாளை உன்னை பற்றிய தகவல்கள் சரித்திரத்திலே இருக்க போவதில்லை ....அவர்கள் வெல்ல போவது உறுதி ஆதித்யா ...."என்ற வீர பாண்டியன் வெறி கொண்டவனாய் வாளினை சுழற்ற,பல முறை ஆதித்யன் கண்களை ,கழுத்தை அந்த வாள் குறி வைத்தது .

நீண்ட நேரம் நடந்து கொண்டு இருந்தது அங்கு வாள் சண்டை .உயிர் போகும் நிலை என்ற இறுதி கட்டத்தில் இருந்ததால் ,வீரபாண்டியன் காவல் படை ஆக்ரோஷத்துடன் தான் போரிட்டது .

ஆதித்யனை கொல்ல ஒரே வழி அவனை நெருங்குவது தான் என்பதை உணர்ந்த வீரபாண்டியன் விபரீத முடிவூ எடுத்தான் .வாளை சுழற்றியவாறு ஆதித்யன் மார்பினில் ஆழமாக கீறி விட்டான் வீரபாண்டியன் .அடுத்த நொடி ஆதித்யன் வாள் வீரபாண்டியன் மார்பினில் அவன் கேடயத்தை துளைத்து ,இதயத்தை குத்தி கிழித்தது .

வாயில் ,மூக்கில் ரத்தம் ஒழுக ,மண்ணில் சரிந்தான் வீரபாண்டியன் .விழுந்த அந்த நிலையிலும் அவன் கடைதழில் புன்னகை அரும்பியது .

"என் உயிர் போவதற்கு நான் கவலை படவில்லை ...என் ஒரே கவலை போக போகும் உன் உயிரை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடவில்லையே என்பது மட்டும் தான் .என்ன பார்க்கிறாய் ....என் வாளில் கருநாகத்தின் காளகூடத்தை தீட்டி எடுத்து இருக்கிறேன் .உன் மார்பில் அந்த வாள் கொண்டு தான் கீறி இருக்கிறேன் ..உன் உயிர் இனி மெல்ல போகும் ...ஹா ஹா ஹா ..."என்றவனின் தலையை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினான் ஆதித்யன் .

தலை இல்லாத அந்த உடல் துடித்து தன் துடிப்பை நிறுத்தி கொண்டது .வீரபாண்டியன் இறப்பை கண்ட அவன் படை சிதறி போக ,ஆதித்யன் படையினர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள் .

வீரபாண்டியனின் விஷம் தோய்த்த வாள் ஏற்படுத்திய காயம் தன் வேலையை காட்ட ஆரம்பிக்க ,ஆதித்யன் தள்ளாட தொடங்க ,அவனை தாங்கி கொண்டாள் நித்திலவல்லி .

இளவரசனின் நிலையின் மேல் அனைவரின் கவனம் திரும்ப ,அங்கு சிறிதளவில் மட்டுமே காயம் அடைந்து இருந்த ஒருவன் தப்பி சென்றதை அங்கு யாருமே கவனிக்கவில்லை ...ஆதித்யனை கொல்ல துடித்து கொண்டு இருக்கும் சதி கூட்டத்திற்கு இவன் மூலம் தகவல் வெகு வேகமாய் சென்று அடைந்தது .

"அன்பரே ...அன்பரே ...ஒன்றும் இல்லை ...கண்ணை திறந்து பாருங்கள் ..கண்ணை மூட வேண்டாம் ..."என்ற நித்திலவல்லி ஆதித்யன் கண்கள் சொருக ஆரம்பித்தது .

தன் கையில் இருந்த குறுவாள் கொண்டு ஆதித்யன் மேல் ஆடையை கிழித்து எறிந்த நித்திலவல்லி ,அவன் மார்பு காயத்தை வெகு ஆழமாக கீறி விட ,செங்குருதி பெருக்கெடுத்தது .தன் கைகளை வைத்து மார்பினை அழுத்தி விட ,குருதியின் அளவு அதிகமாகியது .சிறிது நேரம் அப்படியே விட்டவள் ,பின் காயத்தில் தன் வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சி கீழே துப்ப ஆரம்பித்தாள் .

ஐந்து ஆறு முறை அது போல் செய்தவள் ,பின் அழகன் கொண்டு வந்த பச்சிலை ஒன்றின் சாறை காயத்தின் மேல் பிழிய ரத்த பெருக்கம் நின்றது .ஆதித்யனின் ஆடையை ரெண்டாய் கிழித்தவள் அதை கட்டு போல் மேல் கரத்தில் அழுத்தமாய் கட்டி விட ,ரத்த போக்கு இதயத்திற்கு செல்வது குறைய ஆரம்பித்தது .

"அண்ணலே !...காளகூடம் ஆழமாய் பரவி இருக்கிறது என்று நினைக்கிறன் ...இதற்க்கு இவர் கண் விழித்து இருக்க வேண்டும் ...ரத்தத்தில் இதன் மேலும் கலக்க விடுவது ஆபத்து ...இவரை கச்சியம்பதி அருகே இருக்கும் மலை குடிகளிடம் கொண்டு செல்வோம் ..அவர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்கள் .எந்தவித சர்ப்ப (நாக )காளகூடத்திற்கும் அவர்களிடம் சல்லியக்காரணி உண்டு ....இவரை என் புரவியில் ஏற்றுங்கள் ..."என்றாள் நித்திலவல்லி .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஆதித்யனை நித்திலவல்லியின் புரவியில் குறுக்காக படுக்க வைக்க ,அதில் மிக வேகமாய் ஏறிய அவள் ,ஒரு கையால் ஆதித்யனை பிடித்து கொண்டு மறுகையால் குதிரையின் சேனத்தை இயக்க அந்த காட்டுக்குள் மிக வேகமாய் பறந்தது அந்த புரவி .

(சேவூர் போர்க்களத்தில் இருந்து தப்பி வீரபாண்டியன் சயாத்ரி மலை காட்டிற்குள்(இருக்கலாம் என்ற தகவல் மட்டுமே ...உண்மையா என்று அறிய முடியவில்லை ) ஒளிந்து இருந்ததாகவும்(கதைக்காக காஞ்சிபுரம் அருகே உள்ள காடுகள் என்று கொடுத்து இருக்கிறேன்) .காட்டிற்குள் சென்று ஆதித்யன் அவன் தலை கொய்ததாகவும் ,அதனால் "வீரபாண்டியன் தலை கொய்த பரகேசரி "என்ற பட்டம் ஆதித்யனுக்கு வந்ததாகவும்,யுவராஜா என்ற பட்டம் கொடுக்க பட்டதாகவும் -திருஅலங்காடு செப்பு தகடுகள் எண் 68,சரித்திர ஆய்வாளர் நீல கண்ட சாஸ்திரி ஆராய்ச்சி குறிப்புக்கள் சொல்கிறது .சோழ நாட்டை துண்டம் போட பல குறுநில மன்னர்கள் வீரபாண்டியனுக்கு உதவியதாகவும் ,சோழ எல்லைகளை கொளுத்துவதும் ,பயணிகளை ,வியாபாரிகளை கொன்றதாகவும் ,குழந்தைகளின் முடமாக்கியதாகவும் தகவல் இருக்கிறது .இளவரசன் தனியாக சென்றாரா ,இல்லை படையோடு சென்று வீரபாண்டியனை கொன்றாரா என்பது பற்றிய தகவல் இல்லை ...ஆதித்யன் காயம் அடைந்ததாக எந்த குறிப்பும் இல்லை ...ஆனால் வீரபாண்டியன் தலை கொய்தது பிற்காலத்தில் ஆதித்யன் உயிர் போக காரணமாய் இதுவும் காரணமாய் இருந்து இருக்கலாம் என்று பல ஆராய்ச்சி குறிப்புக்கள் சொல்கிறது ....)


ஆதித்யனின் வீரர்களில் ஒருவன் வீரபாண்டியனின் தலையை எடுத்து கொண்டு தஞ்சைக்கு செல்ல ,ஐந்து பேர் அங்கு மீதம் யாராவது இருக்கிறார்களா என்று தேட சென்று விட ,மீதம் உள்ள நல்லவரோடு நித்திலவல்லியை வல்லியை பின் தொடர்ந்து சென்றான் முத்தழகன் .

சில காத தூரத்தில் தெரிந்தது மலைவாழ் குடிகளின் வாழ்விடம் .அங்கு இருந்தவர்களுக்கு நித்திலவல்லியை நன்கு தெரிந்து இருந்தது ,இவர்கள் தான் கச்சியம்பதிக்கு பண்ட மாற்றம் செய்ய வரும் மலை குடிகள் .

"பிடகர் எங்கே ..."என்ற நித்திலவல்லியின் குரல் கேட்டு அந்த மலைகுடிகளின் மருத்துவர் வெளியே வந்தார் .அதற்குள் மலைக்குடிகள் சேர்ந்து ஆதித்யனை தூக்கி சென்று பெரிய குடில் ஒன்றில் படுக்க வைத்து இருந்தனர் .

பிடகர் ஆதித்யனை பரிசோதித்து ,நான்கு வகை சல்லியக்காரணி (மருந்து-அத்திரம் /ஆயுதம் உருவாக்கிய காயத்திற்கு கொடுக்கப்படும் மருந்து ) )-சமணியகரணி ,மிருதசஞ்சீவனி போன்ற மருந்துகளை ,குளிகைகளை கொடுத்து ,காயத்திற்கு பச்சிலை வைத்து கட்டினார் .

"பிடகரே !....இளவரசரின் சீவனுக்கு(உயிர்க்கு ) ஏதும் இல்லை தானே ..."என்றாள் நித்திலவல்லி தன் உயிரை கையில் பிடித்து கொண்டு .

"இல்லை தாயே ..தங்கள் முன்னேற்பாடாக காளம் கலந்த குருதியினை வெளியேற்றி இருந்தது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை ....இந்த குளிகை 1 நாழிகைக்கு (1 நாழிகை -2 1/2 மணி நேரம்.))ஒருமுறை அளியுங்கள் .....இது காள முறிக்கவும் ,புது குருதி உற்பத்தியாகவும் உதவும் ....உடலின் வெப்பம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள் தாயே ...."என்றவர் விடைபெற நித்திலவல்லி கண் மூடி உணராமை (மயக்கத்தில் )இருக்கும் ஆதித்யனின் அருகில் அமர்ந்து கொண்டாள் .

நிம்மதி பெருமூச்சு விட்ட அழகன் ,அந்த மலை குடிகளின் பூகம் (ஊர் ) முழுவதும் தன் வீரர்களை அனுப்பி நான்கு திசைகளிலும் நிற்க செய்தான் .அவர்களுக்கு உதவியாய் அந்த மலைவாழ் மக்களில் திடமாய் இருந்த இருபது வாலிபர்களும் காவலுக்கு எட்டு திக்கும் நின்றார்கள் அங்கு இருப்பது நாளை அந்த நாட்டின் சக்ரவர்த்தி ஆயிற்றே .

சூரியன் மீண்டும் எழுந்து ,மறைந்து இருள் பரவ ஆரம்பித்தது .ஏறக்குறைய 12 மணி நேரத்திற்கு மேல் ஆதித்யன் விஷத்தின் வீரியம் காரணமாய் மயக்கத்தில் தான் இருந்தான் .பல முறை உடல் தூக்கி போட ,உடல் வெப்பம் வெகுவாக உயர்ந்து ,பிடகரின் மருந்துக்கு கட்டுப்பட்டது .

அவர் கொடுத்த மருந்துகளை வேளை தவறாமல் நித்திலவல்லி கொடுத்து கொண்டே இருந்தாள் .

"உங்களுக்கு ஒன்றும் இல்லை பார்த்திபரே !....கண் விழியுங்கள் ...இப்படி நீங்கள் இருப்பது என் மனதை வாள் கொண்டு அருகிறது ...இதை கண் கொண்டு பார்பதற்கா இந்த பாவி இன்னும் உயிரோடு இருக்கிறேன் ...அன்பரே ...வாக்கு கொடுத்து இருக்கிறீர்கள் ....கண் விழியுங்கள் ...."என்று அவன் மேல் சாய்ந்து கதறி கொண்டு இருந்தாள் அவன் துணைவி
 




Attachments

Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"பின்னையே ...மன்னித்து விடு ...."என்றான் அழகன் அவள் வருத்தம் ,இளவரசன் கண் விழிக்காமல் இருக்கும் நிலை கண்டு .

"உங்களுக்கு என்ன சைகை காட்டினேன் அண்ணலே ...போர் நாம் இருவரும் மற்றவர்களுடன் புரிந்து கொண்டு இருந்தாலும் ,நம் கண் இளவரசரின் மேல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன் தானே ....எதற்காக இவரை அந்த குள்ளநரி வீரபாண்டியன் அருகே செல்ல விட்டிர்கள் ....நான் தான் வெகு தூரத்தில் இருந்தேன் ..நீங்கள் இவர் அருகே அல்லவா போரிட்டு கொண்டு இருந்தீர்கள் ...உங்கள் கவனம் எப்படி பிசகியது அண்ணலே ....நான் அருகே வந்தால் இவர் என்னை காக்க தான் முயலவார்,தனக்கு வரும் ஆபத்தின் மேல் கவனம் செலுத்த மாட்டார் என்று தானே உங்களை இவர் அருகே விட்டு நான் தொலைவில் நின்று போரிட்டேன் ...இப்படி என்று தெரிந்து இருந்தால் ......"என்றாள் நித்திலா வேதனையுடன் .

"மன்னித்து விடு பின்னையே ....மன்னித்து விடு ..........."என்றான் அழகன் .

"வீரபாண்டியன் ஆட்கள் மீதம் இங்கே காட்டில் இருக்கலாம்...அவர்கள் தலைவன் இறந்த கோபத்தில் மீண்டும் தாக்க முயலலாம் ....நம் வீரர்கள் விழிப்புடன் இருக்கட்டும் ...இங்கு உள்ளவர்களும் போர்க்கலையில் வல்லவர்கள் தான் ...ஆட்களை மாற்றி கொண்டே இருங்கள் ...இல்லை என்றால் சோர்ந்து விடுவார்கள் ...கச்சியம்பதிக்கும் தகவல் அனுப்பி விட்டேன் ....அங்கு இருந்து சோழ படை வந்து விடும் ...காவல் பலமாய் இருக்கட்டும் ..."என்றவளின் கட்டளை ஏற்று அழகன் வெளியேறினான் .

அழகன் வெளியேறிய உடன் ,அந்த குடிலின் கதவை அடைத்து சாத்திய நித்திலவல்லி ,ஆதித்யன் கைகளை பிடித்து கொண்டு அவன் அருகே அமர்ந்து விட்டாள் .பிடகர் கொடுத்த குளிகை அவனுக்கு கொடுத்து அவன் அருகே அமர்ந்து இருந்தவள் அவளே அறியாமல் உறங்கி இருந்தாள் .

சற்று நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க கண் விழித்த நித்திலா ,ஆதித்யன் தான் அந்த இரவூ குளிரில் நடுங்கி கொண்டு இருப்பதையும் ,அவன் உடல் வெப்பம் வெகுவாக குறைந்து விட்டதையும் கண்டு பிடகரை அழைக்க கதவின் அருகே சென்றவளுக்கு முன்னர் வைத்தியம் பற்றி கற்பிக்கும் போது பிடகர் கூறியவை நினைவுக்கு வர ஆதித்யன் அருகே சென்றவள் ,தன் ஆடைகளை களைந்து அவனை அணைத்து கொண்டாள் .அவள் ஆகாதின் வெப்பம் (உடல் வெப்பம் )ஆதித்யனின் உடல் குளிரை போக்கி கொண்டு இருந்தது .

மறுநாள் காலை புள்ளினங்கால் ஒலியில் கண் விழித்தான் ஆதித்யன் .நடந்தவை ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர ,அவன் கலக்கம் ,தவிப்பு நித்திலவல்லி அந்த சண்டையில் என்ன ஆனாள் என்பதாய் தான் இருந்தது .பதறி எழ போனவன் ,எழ முடியாமல் மீண்டும் மஞ்சத்தில் விழுந்தான் .அவன் மார்பில் தலை வைத்து உறங்கி கொண்டு இருந்தாள் அவன் தேவதை .அவனையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளி வந்தது .

'என் கை அணைப்பில் தன்னவள் ...எவ்வளவூ நெருக்கம் ...இதை விட சுவர்க்கம் பெரியதா என்ன ?இதற்காக எத்தனை காயம் வேண்டும் என்றாலும் ஏற்கலாம் போலெ இருக்கிறதே ..' என்று அவளை நெருங்கி மேலும் அணைத்து அவள் உச்சியில் தன் இதழை பதித்தான் ஆதித்யன் .

புன்னைகையுடன் அவள் மதிமுகத்தை பார்த்து கொண்டு இருந்தவனின் புன்னகை உறைய ஆரம்பித்தது .அவர்கள் இருக்கும் நிலை மெல்ல விளங்க ,ஸ்தம்பித்து போனான் அந்த காவலன் .

'தானா ...இப்படி....அதுவும் என்னை நம்பி தன் அன்பை பொழிந்த பேதையவளின் அன்பை அல்லவா அழித்து இருக்கிறேன் ...'என்று வெகுவாய் கலங்கி போனவன் ,தன் மார்பினில் உறங்கி கொண்டு இருந்த நிதிலாவல்லியை அசைத்து எழுப்பினான்.

"தேவி !....அன்பே .....கண் விழித்து பார் ..."என்ற அவன் குரலில் கண் விழித்த பெண்ணவளின் கண்கள் அவன் கண்களோடு கலந்து ,அவள் இதழில் புன்னகை உருவானது .

"இறைவா ...உனக்கு நன்றி ............நல்லவேளை உங்களுக்கு எதுவும் இல்லை ....."என்றவள் அவன் முகம் முழுவதும் தன் முத்தத்தால் அவனை மூழ்கடித்தாள் .

அதற்குள் வெளியே இருந்து கதவூ தட்ட படும் சப்தம் கேட்கவே ,அவனை விட்டு நாணத்தோடு எழுந்தவள் தன் ஆடைகளை உடுத்தி கொண்டு ,கதவினை திறந்தாள் .

அழகனோடு ,பிடகரும் ஆதித்யனை பரிசோதிக்க வந்து இருந்தனர் .அவன் கண் விழித்து எழுந்து இருப்பதை கண்டு அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கியது .அவர்கள் உண்ண பால் ,பழம் ,கிழங்கு ,காய் வகைகள் கொண்டு வந்து குவித்தனர் அந்த மக்கள் .

நள்ளிரவில் கச்சியம்பதி படைகளும் வந்து சேர்ந்து இருக்க அங்கு காவல் மிக அதிகமாய் இருந்தது.அந்த மலை குடிகளின் உள்ளே வீரபாண்டியன் ஆட்கள் யாரும் இல்லை என்பதை பல முறை உறுதி படுத்தி கொண்ட பின்னர் ,காலாட்படையை அந்த ஊரை சுற்றி அரனாய் நிற்க வைத்தான் அழகன் .இவர்களை மீறி ஒரு ஈ ,காக்கை கூட உள்ளே செல்லவோ ,வெளியே வரவோ முடியாது என்ற நிலை .

காவலில் முழுமையான திருப்தி வந்த பிறகே நான்கு நாட்களுக்கு பின் ,அரை மணி நேரம் கண் அயர்ந்தான் அழகன் .அந்த உறக்கமே அவனுக்கு மீண்டும் போதுமானதாய் இருக்க ,கண் விழித்த உடன் பிடகரோடு ஆதித்யனை பரிசோதிக்க வந்து விட்டான் .

"அழகா ..."இளவரசன் அன்பான குரலில் அவன் கால் அருகே மண்டியிட்ட அழகன் ,"மன்னிக்க வேண்டும் இளவரசே ....சிறிது கவனம் சிதறி விட்டது ....உங்கள் உயிர் காக்க வேண்டிய நான் அதில் தோற்று விட்டேன் ..இதோ எனது வாள் ...என் சிரம் கொய்து விடுங்கள் ..."என்றான் .


"அழகா ....உயிர் போக வேண்டும் என்பது அந்த இறைவன் ஆணை என்றால் அது யார் தடுத்தாலும் நிற்க போவதில்லை ....வீரபாண்டியன் வழக்கம் போல் யுத்த தர்மத்தை மீறுவான் என்று யார் தான் எதிர்பார்த்தது ....போரிடும் வாள் தன்னில் ஆலகாலம் கலக்க கூடாது என்பது யுத்த தர்மம் ...அவனுக்கு எங்கே அது எல்லாம் தெரிய போகிறது .இதில் உன் பிழை எதுவும் இல்லை .....இங்கே நீ ஏற்படுத்தி இருக்கும் காவல் பற்றி தேவி சொன்னதை கேட்டோம் ...உன்னை போல் திறமைசாலி வேறு எவரும் இல்லை ...எனக்கு குணமாகி விட்டது ...உன் வேலையை சென்று கவனி ..."என்ற ஆதித்யன் மெல்ல எழுந்து ,யாரின் உதவியும் இல்லாமல் குடிலை விட்டு வெளியே வந்தான் .

அந்த குடில் அந்த கூட்டத்தின் தலைவருக்கு சொந்தம் போல் இருந்தது .சற்று பெரியதாக ,ஒரு தோட்டத்தின் பின்புறம் ,ஆற்றின் ஒரு கிளைக்கு அருகே இருந்தது .மற்ற குடில்கள் எல்லாம் சற்று தொலைவில் இருந்தன .சுற்றிலும் காடு ,கண்ணுக்கு எட்டியவரை பசுமை பசேல் என்ற காட்சிகள் ,மான் மேய்ந்து கொண்டு இருக்க ,மயில்கள் தோகை விரித்து ஆடி கொண்டு இருந்தன .குயில்கள் எங்கள் குரல் வளத்தை மீறுபவன் யாரும் இல்லை என்று பாடி கொண்டு இருந்தன .அந்த தோட்டத்தில் வித விதமாய் ,ரக ரகமாய் பூக்கள் ,மரங்கள் நிறைந்து காணப்பட்டது .

குடிலின் வாயிலில் அமைக்க பட்டு இருந்த மேடையின் மீதே அமர்ந்து இயற்கை அன்னையின் கலை பொக்கிஷத்தை கண் குளிர பார்த்து கொண்டு இருந்தான் அந்த கோமகன் (அரசன் ).அவன் கருத்தை பெரிதும் கவர்ந்தது ஆற்றில் நீராடி முடித்து ,மலை பெண்கள் கொடுத்த ஆடையில் தானே ஒரு பூவாய் ,மற்ற பெண்களுடன் தோட்டத்தில் பூ பறித்து ,அதை கோர்த்து மாலையாக்கி அந்த குடில்களின் அருகே இருந்த அவர்கள் குலதெய்வத்திற்கு மாலை இட்டு ,வணங்கி வரும் நித்திலவல்லி .நொடியும் அவன் பார்வை அவளை விட்டு நீங்கவில்லை .

இமை தட்டி விழிப்பதும் தவறு என்று சீலை மூட முடியாமல் திணறும் அவள் அழகை பருகி கொண்டு இருந்தான் அவன் .அவளை போல் ஒரு பெண்ணை இனி காண முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு .அவள் பேரழகு ,அவள் புத்தி கூர்மை ,அவள் வீரம் ,அவள் குறும்பினை மட்டும் அதுவரை கண்டவன் அவள் காருணியத்தையும் (கருணை )அன்று கண்டு இருந்தான் .

தேன் மழை பொழியும் ...
 




Attachments

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நெஞ்சை பூ போல் கொய்து விட்டாள் நித்தில வல்லி ?????? அருமையான தமிழ் ஹனி dear ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top