காஞ்சி தலைவனின் தேன் மழை --மூன்றாம் அத்தியாயம்

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஆண்டு -2019

இடம் -கச்சியம்பதி எனப்படும் காஞ்சிபுரம்.

கண்டு கொண்டு இருந்த கனவூ நின்று விட ,திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சமுத்ரா .அந்த கனவூ வந்த பிறகு மனதில் எழும் இனம் புரியாத மகிழ்ச்சி ,வழக்கம் போல் அவள் இதழில் புன்னகையை உருவாக்கியது .நினைவூ தெரிந்த நாளாய் அவள் காணும் கனவூ .....அதில் வரும் பழகிய முகம் .எங்கோ ,ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாய் அவள் அருகே கண்டு மகிழ்ந்த ,அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆணின் முகம் அது .இன்றும் வழக்கம் போல் “புன்னைகை என்னும் அன்பால்” அவள் மனதை கொய்து கொண்டு இருந்தது .

"உங்களுக்கு இதே வேலையாய் போச்சு ....தினம் தினம் கனவில் மட்டுமே வருவேன் என்று அப்படி என்ன அடம் ...நேரில் வந்தால் ஆகாதோ ....ஒரு நாள் என்றாவது என் கண்ணில் படாமலா போய் விடுவாய் ...அன்னைக்கு இருக்கு .....அன்னைக்கு இழுத்து வைத்து இந்த உதடா சிரித்து சிரித்து என்னை இம்சிக்கிறது என்று அதிலே அழுந்த முத்தம் இடுகிறேன் ...."என்று தன் மனதில் இருந்த உருவத்திடம் மல்லுக்கு நின்றவள் ,உறக்கம் களைந்து விட ,தன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ,மேஜை மேல் இருந்த வெள்ளை தாள்களில் தன் கை திறமையை காட்ட ஆரம்பித்தாள் .

சமுத்திரா உயிரோட்டமாய் வரைவதில் expert .நுண்கலை மாணவி .25 வயது பூம்பாவை .5அடி 10 அங்குலம் .62 kg .34-28-34.ரோஜா நிறம் .மொத்தத்தில் ரவி வர்மன் ஓவியம் .கம்பன் வடித்த காவியம் . மொத்தத்தில் பார்க்க நம்ம அனுஷ்காவின் நகல்.

எவ்வளவூ நேரம் வரைந்து கொண்டு இருந்தாளோ ,இருமல் சத்தம் ஹாலில் இருந்து கேட்க , வரைந்த தாள்களுடன் ஹாலுக்கு கதவை திறந்து சென்றாள் ..அங்கே அவள் தந்தை “தேவராஜன்”( (இந்த பெயரை எங்கேயோ கேட்டார் போல் இருக்கிறதே ) புத்தக கடலில், ஓலை சுவடியென்னும் வெள்ளத்தில் தலை மூழ்கி ஏதோ குறிப்புகளை எழுதி கொண்டு இருந்தார் .

வீட்டிற்குள் புத்தகம் இருந்து பார்த்து இருக்கிறோம் ...ஆனால் புத்தக கடல் ...தேவராஜன் வீட்டில் பார்க்கலாம் .இந்திய முன்னால் ஜனாதிபதி ஒருவர் ,ராஷ்டிர பதி பவன் விட்டு செல்லும் போது ஒரு முழு ரயில் முழுக்க சென்றதாம் அவர் வாங்கி படித்த புத்தகங்கள் .....அதுவே மிக குறைவூ என்று சொல்லும் விதமாக மூன்று மாடி கட்டி வீட்டையே நூலகமாக மாற்றி இருந்தனர் அவரும் ,அவர் மகளும் .

இதை எல்லாம் படித்தார்களா என்று வியந்தால் ,அங்கு உள்ள எந்த புத்தகத்தில் இருந்து எந்த பக்கம் எடுத்து கேள்வி கேட்டாலும் பதில் ஒரே நொடியில் வரும் அளவுக்கு இருவருக்கும் போட்டோ கிராபிக் மெமரி .இந்திரன் 'சிட்டி' ரோபோ சலூன் கடையில் செய்யும் வேலை மனிதர்களாய் இவர்கள் செய்து கொண்டு இருந்தனர் .

அவர் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஆக இருந்து ஓய்வூ பெற்றவர் .சிற்பக்கலை ,வானியல் சாஸ்திரம் ,மனையடி சாஸ்திரம் ,மொழி மாற்றம் என்று பல்வேறு துறைகளில் ph .d பட்டங்களாக வாங்கி குவித்தவர் . (சரித்திரம் திரும்புகிறதோ ).வேலையில் இருந்து ஓய்வூ பெற்ற பிறகும் அமைதியாய் இராமல் எதையாது சொந்த செலவில் ஆராய்ந்து கொண்டு இருப்பவர் .

"டாட் ....மிட்னயிட் 1 ஆகுது ....தூங்காம இன்னும் என்ன செய்துட்டு இருக்கீங்க ....கம் ஆன் ....கோ டு பெட் ...டேக் ரெஸ்ட் ...."என்றாள் சமுத்திரா .

"ஓஹ் டியர் ...நீயா ....சாரி டா டிஸ்டர்ப் செய்துட்டேனா .....அது ஒன்றும் இல்லை டியர் ...நேத்து என் மாணவன் ஒருவனை சந்தித்தேன் ....ஹி இஸ் ஒர்கிங் ஆஸ் என்ஜினீயர் இன் highways டிபார்ட்மென்ட் ...ரோடு எஸ்ட்டெண்ட் செய்வதற்காக வேகவதி ஆற்றங்கரையில் மண் பரிசோதனை செய்து இருக்காங்க ...அப்போ ஹி காட் திஸ் ....என்ன ஏது என்று யாருக்கும் புரியலை ...எல்லாம் அந்த கால எழுத்துக்கள் ...என்னை பார்க்க சொன்னான் ..."சீ திஸ் ."என்றவர் அவள் கையில் தங்க தகடு ஒன்றை கொடுக்க அதில் நிசும்பசூதனி படம் செதுக்க பட்டு ,கீழ் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் தென்பட்டன .முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை பாடிய உடன் அவர் முன் வந்து விழுந்த அதே தங்க பட்டயமோ ?-

"என்ன கடவுள் இது டாட் ...."என்றாள் அம்பிகையின் உருவ அமைப்பில் கவரப்பட்டவளாய் , தான் அதுவரை வரைந்து கொண்டு இருந்த ஓவியமும் அதே தேவியின் திருவுருவ சிலை என்பதை உணராதவளாய்.

"இது தஞ்சை காவல் தெய்வம் நிசும்பசூதனி ....பாரு எட்டு கை ,ஒவ்வொரு கையில் விதவிதமான ஆயுதம் .காலின் கீழ் அரக்கன் .வலது காலை பாதியாக மடித்து ,இடது காலை நீட்டி ,இதே வடிவத்தை “philadelphia அருங்காட்சியகத்தில்” உள்ள “சவுத் இந்தியன் டிஸ்பிலே” கேலரியில் பார்த்து இருக்கேன் .க்ரானைட் சுதை சிற்பம் அது .”மதுரை மதன கோபால ஸ்வாமி கோயில்” சிதிலங்களில் இருந்து “adeline கிப்சன்” என்ற பணக்காரர் கண்காட்சிக்கு வைத்து இருந்தார் .அங்கு விசிட்டிங் ப்ரோபஸ்ஸோர் ஆக போன போது பார்த்து இருக்கிறேன் ..."என்றார் தேவராஜன் .

"இப்படி ஒரு கடவுளா ...கேள்வி பட்டது இல்லையே டாட் ...."என்றாள் சமுத்திரா யோசனையுடன் .

"இது தஞ்சை காவல் தெய்வம் ...சோழ அரசர்களின் உயிர் .விஜயாலய சோழன் ஸ்தாபித்த கோயில் ...வைரத்தால் செய்த ஒரு அடி சிலை என்று வாய் மொழி கேள்வி .... வைர சிலை என்பது உண்மையா ,பொய்யா என்பது தெரியவில்லை ..ஆனால் விஜயாலய சோழன் கோயில் கட்டியது உண்மை ...வழிபட்டது உண்மை என்று திருஆலங்காடு copper plate சொல்லுது .ராஜராஜ சோழன் அரசனாய் பட்டம் சூட்ட படுவதற்கு முன்பே அந்த சிற்பம் காணாமல் போய் இருக்கிறது .கோயிலும் இருந்த இடம் தெரியவில்லை .பலர் இன்று வரை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள் ."என்றார் தேவராஜன்.

"ஆனா தஞ்சை காவல் தெய்வம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆற்றங்கரையில் என்ன டாட் செய்யுது ?இங்கே இது எப்படி கிடைச்சது ?"என்றாள் சமுத்ரா .

"நோ ஐடியா ....இந்த கீர்த்தனை 1800களில் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் ஆன முத்துஸ்வாமி தீக்ஷதர் கீர்த்தனை என்று சொல்ராங்க ....அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் ,அவர் 4ஸ்டுடென்ட்ஸ் request செய்ததால் ,அங்கே கோயிலை தேடியதாக சொல்றாங்க ...அதன் பிறகு அவர் பாடிய கீர்த்தனை தான் இது ......நேரில் கோயிலை கண்டாரா என்பது எல்லாம் எங்குமே குறிப்பு இல்லை ....இப்போ அந்த கீர்த்தனை தங்க தகட்டில் பொறிக்க பட்டு இருக்கிறது ....அம்பிகையின் திரு உருவ படத்தோடு ...."என்றார் தேவராஜன் .

"ரொம்ப வேதனையா இருக்கு இல்லை டாடி இது எல்லாம் கேட்க ?"என்றாள் சமுத்திரா .

"எதை சொல்றே சமி ?"என்றார் தேவராஜன் .

"ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்த மன்னன் அமைத்த கோயில் ....அந்த வம்சாவளி வழி பட்ட விக்ரஹம் .இன்று மண்ணோடு மண்ணாய் ....மதுரை மதன கோபால சுவாமி கோயில் சிதிலம் ஏதோ ஒரு கோடீஸ்வரனின் பொழுதுபோக்கு exhibition டிஸ்பிலே .....மதுரைக்கும் பிலடெலிபியாவிற்கும் என்ன டாட் சம்பந்தம் ?இங்கு கோயில்களில் வைத்து வழிபட வேண்டிய விக்ரகங்கள் எல்லாம் எவனோ ஒருவனின் காசுக்கு கடத்தப்படுவதும் ,இன்றைய தலைமுறை "வாட் இஸ் god ...prove இட் "என்று சொல்வதையும் பேஷன் என்று நினைப்பதும்...எத்தனையோ வழி பாட்டு தளங்கள் கேட்பார் அற்று சிதிலமாகி கொண்டு இருக்கிறது ...ஏன் தஞ்சை பெரிய கோயில் கட்டின ராஜராஜனின் உடல் தெருவில் தானே இருக்கிறது ...கையில் இருப்பது அரிய வைரம் என்று புரியாத மூடர் கூடம் ....."என்றாள் சமுத்திரா கண்கள் கலங்க .

"உண்மை தான் ......”உள் கடந்து நமக்குள் சென்று அறிய வேண்டியது கடவுள்” ...அது சயின்ஸ் மூலம் நிரூபித்தால் தான் ஏற்று கொள்வேன் என்று சொல்வது “விண்டவர் கண்டிலர் ,கண்டவர் விண்டிலர்” என்பது தான் ...indus valley civilisation /சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி வழிபாடு உள்ளது .மதர் goddess /தாய் வழிபாடு முறை இருந்து இருக்கிறது .5000 ஆண்டுகள் பழமையான மதுரைக்கு கிடைக்காத அங்கீகாரம் அகமதாபாத்க்கு தானே உலக அரங்கில் கிடைத்து இருக்கிறது ....நான் டைரக்டர் ஆக இருந்த வரை வெளிநாடுகளில் காட்சி பொருளாய் இருந்த பல பஞ்சலோக சிலைகளை மீண்டும் அந்த அந்த கோயில்களுக்கே திருப்பி கொண்டு வந்து பூஜைகள் செய்ய வைத்து இருக்கிறேன் ...எத்தனையோ தெருவோர கோயில்கள் கேட்பார் அற்று ஒருவேளை தீபம் கூட காட்டப்படாமல் தான் இருக்கிறது .”என்றார் தேவராஜன் வேதனையுடன் .

"டாட் ....ஒரு குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அங்கே கடவுள் வழி பாடு அவசியம் .முன்னோரை வணங்குதல் ,முன்னோர் வழிபாடு அவசியம் .முன்னோர் வழிபாட்டின் படி நாம் ஏழு தலைமுறையின் வாழ்த்தை பெறுகிறோம் ...அதே போல் ஒரு ஊர் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள அனைத்து கோயிலிகளிலும் ஒரு வேளை விளக்காவது எரிய வேண்டும் ...கோயிலுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கமாய் இருந்தால் தான் நம்மை சுற்றி நல்லது நடக்கும் ....நாம இதை சொன்னால் லூசுங்க என்று சொல்வாங்க ..இதையே பூசி முழுகி சங்கர் இயந்திரன் 2.0 வில் "aura " ன்னு இங்கிலிஷ்ல பீலா சொன்னா ,ஒஹ்ஹ இஸ் இட் ?என்று வாய் பிளப்பாங்க ...இதையே தானே அப்போவே "ஆலயம் தொழுதல் சாலவும் நன்று "என்று சொல்லி வைத்தார்கள் ."என்றாள் சமுத்திரா .
 

Attachments

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
"யெஸ் டியர் ....கரெக்ட் ...நமக்கு சினிமா ,ஷாப்பிங் ,வாட்ஸாப்ப் ,facebook இருந்தால் போதும் .நேர ஒருவரிடம் முகம் கொடுத்து பேச மாட்டோம் ...ஆனால் முகநூலில் உலகத்திற்கே கலங்கரை விளக்கம் போலே வழி காட்டிட்டு இருப்போம் ...மணி கணக்கில் மால்களில் அலைய முடியும் ...ஆனால் நம் முன்னோர்களின் சிறப்பை விளக்கும் கோயில்களுக்கு ஏதாவது பெஸ்டிவல் டைம் மட்டும் தான் போவோம் ... இது மாதிரி போனால் அடுத்த தலைமுறை ,"who needs god ?"என்று கேட்க தான் செய்வார்கள் ...எவனாவது கோயில் இடித்தா ,பாலிடிக்ஸ் காக திருவிழாக்களை "disturbance "என்று சொல்லி ஸ்டே வாங்கினா எதிர்த்து குரல் கொடுக்க கூட செய்ய மாட்டாங்க .பண்பாடு காக்க இதே நாட்டில் அந்த அரசர்கள் ரத்த ஆறே ஓட விட்டனர் ...இப்போ சாமியும் ஒரு hobby ."என்றார் தேவராஜன் .

"ஒகே டாட் ...டைம் ரொம்ப ஆச்சு ....வாங்க வந்து படுங்க ....உங்களுக்கு யாரும் சிலை எல்லாம் வைக்க போவதில்லை .... இப்படி மனசு குமுறி பேசிட்டே இருந்தா வருஷம் முழுக்க கூட பேசிட்டே தான் இருக்கலாம் ....அந்த அளவிற்கு "highly controversial "மக்கள் நாம் .......கடாரம் /மலேஷியா ,இலங்கை ,தாய்லாந்து ,தும்சக் (சிங்கப்பூர் )எல்லாம் வென்று சீனத்திற்கு முதல் வர்த்தககதிர்காக diplomats அனுப்பிய அரசனையே யாரும் கண்டுகொள்வதில்லை ...நீங்க ,நான் எல்லாம் ஜூஜிபி ...கத்தி கத்தி பேசி நம்ம தொண்டை தண்ணி தான் வத்தி போகும் .மீதி ஒர்க் காலை பார்த்துகோங்கோ ...சொல்ல மறந்துட்டேன் ...நாளை காலை நான் போலீஸ் superintendent /கண்காணிப்பாளர் அலுவலகம் போறேன் .....வர சொல்லி இருக்காங்க ..."என்றாள் சமுத்திரா .

"ஓஹ் உன் காலேஜ் பிரின்ட் .....யாரு கவி ..அவ தானே மிஸ்ஸிங் ....."என்றார் தேவராஜன் .

"yes dad.காலெஜ்ஜ்க்கு சொந்தமான orphange வளர்ந்தவ ....ஒரு வாரமாய் காலெஜ்க்கே வரலை .அதான் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தேன் ...இப்போ என்னவோ ACP பார்க்கணும் என்று கூப்பிட்டு இருக்கார் .போய்ட்டு வரேன்.” என்றவளின் பேச்சை தலை அசைத்து அங்கீகரித்தவர் ,

"ஒண்ணு நோட் செய்தாயா சமி ?...மழை காலத்திலேயே இந்த அளவுக்கு மழை கொட்டி தீர்க்காது ....இப்போ ஏப்ரல் மாதத்தில் இப்படி மழை கொட்டிட்டு இருக்கு ....காஞ்சிபுரத்தில் உள்ள ஆறு ,குளம் எல்லாம் நிரம்பிட்டு இருக்கு .....இன்னும் heavy ரெயின் எதிர்பாக்கலாம் என்று வேற சொல்லறாங்க ....உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரிலை ....10 வருடம் முன்பே இங்கே ஆற்றின் மதகு உடைந்து கலெக்டர் ஆபீஸ் பக்கம் எல்லாம் வீடுகள் முழுகி போனது ...இப்போ என்ன நிலைமையோ ...." என்றார் தேவராஜன்

"ஆமா டாட் பருவ நிலை மாற்றம் இந்த வருடம் தன் வேலையை காட்டுது ...அதான் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்வீட் செய்தார் இல்லையா ,புவி வெப்பமாவதற்கும் ,பருவ நிலை மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை ,அது புருடா ,சாட்சி காட்டுங்க என்று ...அமெரிக்கா பாரிஸ் பருவ நிலையில் இருந்து அமெரிக்கா விலகுதுன்னு …… அதான் இயற்கையே அவர் கேட்ட சாட்சி கொடுத்துட்டு இருக்கு .....என்ன அமெரிக்காவில் காட்ட வேண்டிய சாட்சியை இயற்கை அன்னை தமிழ்நாட்டில் காட்டிட்டு இருக்காங்க ....உத்தரகாண்ட் மாதிரி கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டால் காஞ்சிபுரம் என்ன ஆகும் ...."என்றாள் சமுத்திரா

"அந்த அளவிற்கு எல்லாம் ஏற்படும் இயற்கை சூழ்நிலை நம் நகரத்தில் இல்லை ...அது மலை பிரதேசம் ,ஆறுகள் உற்பத்தி ஆகும் இடம் ....ஒரு நாலு நாள் மழை வெளுத்து வாங்கும் ...ஐந்தாம் நாள் தெருவே வறண்டு இருக்கும் ..."என்றார் தேவராஜன்.

”.மழை அதிகமா இருக்கும் என்று வார்னிங் கொடுத்து இருக்காங்க ...நீங்க பாட்டுக்கு இதை நோண்டறேன் ,அதை கண்டுபிடிக்கறேன் என்று எந்த குழியிலாவது விழுந்து வைக்க போறீங்க ... அப்புறம் கவுண்ட மணி கதை ஆகிட போகுது ....எந்த ட்ரைனேஜ்ஜில் இருந்து உங்களை கண்டுபிடிக்க முடியும் ? “என்றவள் தலையில் நோகாமல் குட்டினார் தேவராஜன்

அந்த குடும்பத்தில் அவர்கள் இருவர் மட்டுமே .தேவராஜன் மனைவி முன்பே இறைவனடி சேர்ந்து இருந்தார்.தந்தைக்கும் ,மகளுக்கும் பாச பிணைப்பு மிக அதிகம் .

"வாய் ...வாய் ...இந்த வாய் இருக்கே ....உன்னை எவன் கட்ட போறானோ அவன் பாடு திண்டாட்டம் தான் ...யம்மா சாமி ஆளை விடுன்னு கஷாயம் கட்டிட்டு காசிக்கு ஓட போறான் ...."என்றார் தேவராஜன் .

'கட்டிக்க போறவன் 'என்று அவர் சொன்னதும் ,மனதில் மீண்டும் வந்து சென்றது அந்த முகம் .தானாய் புன்னகை இதழில் மலர ,"ஐயம் வைட்டிங் டாட் ...காத்திட்டு தான் இருக்கேன் என் மன்னவன் வருகைக்காக ....வந்ததும் 'மன்னவன் வந்தானடி தோழி ....மஞ்சத்திலே இருந்து ,நெஞ்சத்திலே அமர்ந்த என் மன்னவன் வந்தானடி என்று பாடறேன் ..."என்றாள் சமுத்திரா .

"இப்போ இதை கேட்டு நான் ஓடறேன் ..."என்று தன் அறைக்கு சென்று விட்டார் தேவ ராஜன் .

இவர்கள் உறக்கத்தை தழுவ ,தேவபுரி ,கா -என்றால் பிரம்மா ,அஞ்சி -என்றால் வழிபடுதல் .சிவபெருமானை பிரம்மா வணங்கிய தளம் என்பதால் காஞ்சிபுரம் என்று பெயர் வந்ததாக சொல்வார்கள் அந்த நகரமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது

கம்பம் நதிகரையில் ,ஏகம்பத்தின் கீழ் நான்கு வேதங்கள் நான்கு மாமர கிளையாய் அமைந்து இருக்க 3500 ஆண்டுகள் பழமையான அதன் அடியில் மண் லிங்கமாய் பார்வதி அணைப்பில் கொலு வீற்று இருந்தார் சிவ பெருமான் .பார்வதி அணைப்பில் “தழுவ குழைந்தவர் “என்ற திருப்பெயரோடு.

காசியில் இறந்தால் முக்தி ,திருவண்ணாமலையை வழி பட்டால் முக்தி .ஆனால் காஞ்சிபுரத்திற்கு வராமல் ஒரு கணம் நினைத்தாலே முக்தி .தசரதனுக்கு ஸ்ரீராமன் மகனாய் பிறக்க வரம் அளித்த காமாக்ஷி அம்பிகை திருத்தலம் .நித்திய கன்னியாய் இருந்து ,சுமங்கலிகளின் திருமாங்கல்யத்தை காப்பவள் அரசாளும் ஊர் என்பதாலா இல்லை ,"ஆண்களின் மிகவும் அழகன் "புருஷேஷு விஷுணு "என்ற பதத்திற்கு ஏற்ப தேவராஜா சுவாமி அருளும் திருத்தலம் என்பதாலா ,இல்லை கந்தபுராணம் அரங்கேற கந்தனே நேரில் வந்த இடம் என்பதாலா ,இல்லை தலைவிதியை எழுதும் சித்திரகுப்தனுக்கு கோயில் இருப்பதாலா ,இல்லை 1008 லிங்க மூர்த்தங்கள் ஒரே கோயிலில் இருப்பதால ....ஏதோ ஒன்று காஞ்சியின் மற்ற எல்லா ஊர்களையும் விட மிக சிறப்பு பெற்றது இந்த திருத்தலம் .

ஒரு பக்கம் சைவம் ,ஒரு பக்கம் வைணவம் ,ஒரு பக்கம் பௌத்தம் ,ஜைனம் ,சாக்தம் ,என்று எல்லா வகையான ஹிந்து சமய கொள்கைகளை உள் அடக்கி ,"எல்லா ஆறுகளும் கலப்பது கடலில் "என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி கொண்டு இருக்கிறது .
சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர்,மாணிக்க வாசகர் என்ற சைவ குரவர்களால் தேவாரத்தில் பாடல் பெற்ற திருத்தலம் .ரெண்டாம் நூற்றிண்டில் காமக்கோட்டம் /குமரக்கோட்டம் என்று சங்க பாடல்கள் போற்றிய திருத்தலம் .

திரு கச்சி ஏகம்பம் -ஏகாம்பரநாதர் திருக்கோயில் -மணிமேகலை ,பெரும்பாணாற்று படை -300கி .மு அளவில் குறிக்க பட்ட கோயில் .23 ஏக்கர் பரப்பளவூ.ஆயிரம் கால் மண்டபம் ,வாகன மண்டபம் ,சரபேச மண்டபம் கடந்து சென்றால் ,முதல் பிரதிட்சண மண்டபத்தில் 63 நாயனமார்கள் திருவுற சிலைகள் அலங்கரித்தன .அதை தாண்டி சென்றால் கர்ப்ப கிரகத்தில் மண் லிங்கம் .அதை சுற்றி 1008 லிங்க மூர்த்தங்கள் .அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்த சஹஸ்ரலிங்கம் .

அகண்டு ,நீண்டு அந்த இரவில் முடிவே இல்லாமல் நீண்ட அந்த பிரகாரத்தில் நள்ளிரவில் ஒவ்வொரு சிவலிங்கமாய் பூஜை செய்து கொண்டு இருந்தார் அந்த மனிதர் அதுவும் பூட்டிய கோயிலுக்குள் .
 

Attachments

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
காலம் -965 A .D

வேகவதி ஆற்றின் ஒரு கிளை ஆற்றில் ,நள்ளிரவில் தன் மார்பில் பூமாலை போல் சாய்ந்து நின்ற பெண் மாலையை கண்டு,'யார் இந்த தேவகன்னிகை ....அப்ஸரஸ்சா .....மோஹினியா ........ தடம் மாறி வந்து விட்ட தேவலோக ரம்பையா ...இல்லை இல்லை ....ஊர்வசி .....இல்லை மேனகை .....'இத்தனை அழகு ,யவனம் ,ஆகர்சனம் இது வரை எந்த பெண்ணிடமும் நான் கண்டதில்லையே .'கைவளவில் நின்ற ஜலமோகினியை கண்டு அந்த இளவரசன் சித்தம் தடுமாறி போனான் .

மெல்லிய பாலின் மேலாடை போல் இருந்த அவள் மேலாடை ,நீரில் நனைந்து நிலவொளியில் அவள் அழகின் ரகசியங்களை அந்த கள்ளனின் கண்களுக்கு விருந்து படைத்தது கொண்டு இருந்தது .கைகளில் இருந்த இடை இருக்கிறதா இல்லை மேக கூட்டத்தின் கலவையா என்று தடுமாறி போனான்.

'பூந்தோட்டத்தின் ஒட்டுமொத்த மேல் அழகினை தாங்க முடியாத கொடி தள்ளாடுவது போல் இவள் இடை வளைந்து நெளிந்து துவண்டு விடாதா ?'என்ற ஆராய்ச்சியில் அவன் மூளை இறங்கியது .

.பெண்ணவளின் தோள்களோ சேர அரசனின் நாட்டில் இருக்கும் களிறுகளின் தந்தத்தின் மென்மைக்கே சவால் விட்டு கொண்டு இருந்தன.குறிஞ்சி நிலத்தின் செழுமை ,பூந்தோட்டத்தின் வளமை வளமை ,தஞ்சை தரணியின் நெற்கதிர் கர்வம் அவளின் யவனங்களில் மிளிர்ந்தது .

அதை கண்டு அந்த ஆணழகனின் மனம் சோமபானம்,திராட்சை ரசம்,சிவ மோகி எனப்படும் செந்தட்டி( கஞ்சா )ரசம் பருகாமல் வானில் பறக்க ஆரம்பித்தது .உடல் முழுதும் அந்த நீரிலும் உஷ்னம் ஏற தலை கிறுகிறுக்க நின்றான் அந்த மோகத்தாரி.

வாய் விட்டு க்ளுக் என்று சிரித்த அவள் சிரிப்பொலி ,பாண்டிய முத்து பரல்கள் சிதறிய ஓசையை விட மேலானது ,இணை கூட்டவே முடியாது என்று தோன்றியது அந்த இளவரசனுக்கு .

சித்தம் கலங்கினாலும் ,அவனுள் இருந்த ராஜ வம்ச ரத்தம் ,வளர்ப்பு முறை ,நாட்டின் சக்ரவர்த்தி ஆக போகும் கடமை மனதில் வளம் வர சட்டென்று பேயாட்டம் ஆடிய இளமை உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் ,அவளை விட்டு விலகி நின்று ,

"மன்னிக்க வேண்டும் பெண்ணே ...இது பெண்கள் நீராடும் இடம் என்று தெரியாது ...தெரியாமல் இங்கு வந்து விட்டேன் ....இது என்னை மீறி நடந்த தவறு ...மன்னிக்கவும் ...."என்றவன் ரெண்டு எட்டு எடுத்து வைக்க ,மீண்டும் அவளின் நகையொலி அவன் விலகலை நிறுத்தியது ..

" இளவரசருக்கு சேவூர் (புதுக்கோட்டை )செருக்களத்தில் கைகளில் மட்டுமே தானே காயம் ஏற்பட்டதாய் தகவல் வந்தது .....ஒரு வேளை சிரசில் (தலையில் )அடிபட்டதை யாரும் கவனிக்கவில்லையோ ....சித்தம் கலங்கி நள்ளிரவில் இப்படி வாய் வார்த்தைகள் வருவது தான் விந்தையாக இருக்கிறது ..."என்றாள் அந்த ஜல மோகினி .

அவள் பகடி (வேடிக்கை )உரையை கேட்ட காவலனின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது .தஞ்சை பெண்களுக்கே உண்டான பகடி பேச்சு பற்றி சொல்லவா வேண்டும் ?கவி சக்ரவர்த்திகளையே தலை சுத்த வைத்தவர்கள் அல்லவா ?

பாடி பரிசில் பெற ,"தங்கள் வதனம் அந்த அந்த திங்கள் ,அம்புலி (நிலாவிற்கு உள்ள வேறு பெயர்கள் )என்று வர்ணித்தால் ,புலவரே நீங்கள் அந்த அம்புலிக்கு சென்ற புஸ்பக விமானம் எங்கே ?"என்று கேட்டாளாம் ஒருத்தி .

இன்னொருத்தி ,"தஞ்சை பதுமைகளை நாங்கள் , எங்கள் அரசர் ஆட்சியின் கீழ் வளர்வோமே தவிர ,அந்த திங்கள் போல் குறைந்து மறைய மாட்டோம் "என்று அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்த கன்னியர்கள் ஆயிற்றே .


ஆனாலும் அந்த நாட்டிற்கே இளரவசன் ,இதற்கு எல்லாம் பதில் பகரவில்லை என்றால் ,"பெண்ணே ...அறியாமையில் வார்த்தைகள் விடுகிறாய் ...இந்த ஆதித்யனின் சிரசில் கை வைப்பவன் இனி மேல் தான் பிறந்து வர கூட தயங்குவான் ...அப்படி இருக்கும் போது அதில் காயம் ஏற்படும் என்ற உந்தன் கூற்று எவ்வகை ?"என்றான் இளவரசன் திரும்பி நின்ற நிலையில் இருந்து விலகாமல் .

"ஓஹ் ........"அவள் உதடு குவித்து சொன்ன அந்த சொல் அவன் மனதில் அம்பாய் தைத்தது ."தாங்கள் உரைத்தது உண்மை எனில் ,இது காட்டு பூக்கள் வசிக்கும் கானகம் ....நாட்டு பூக்கள் நீராடும் படித்துறை இல்லை என்பது எப்படி நினைவூ பெட்டகத்தில் கவனத்திற்கு வராமல் போனது ...?"என்று அவள் கேட்ட பிறகு தான் தான் இருக்கும் இடம் அடர்ந்த காடு என்பதும் ,அங்கே பெண்கள் நீராடும் துறை ,ஆண்கள் நீராடும் துறை என்று எப்படி இருக்க முடியும் .அதை உணர்த்தவே இந்த பைங்கிளி குறிப்பால் உணர்த்துகிறாள் என்று விளங்க ,அவளை நோக்கி திரும்பினான் .

அவளை கண்ட பிறகு பேச்சிற்கு தான் என்ன பயன் அங்கே ...

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார், குறுந்தொகை - 40

உன் தாயும் என் தாயும் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழி உறவூ
நானும் நீயும் ஒருவரை ஒருவர் பற்றி எதுவும் அறிந்தது இல்லை .
ஆயினும் சிவந்த பூமியில் சேரும் மழை நீர்
போல் நம் இதயங்கள் காதலில் கலந்தனவே

என்ற பாடல் இளவரசன் வாய் மொழியாய் கூற ,அவளின் சிவந்த செங்காந்தள் வதனம் மேலே சிவந்து ,கண்கள் நாணத்தால்ஜலமகளை தழுவி கொண்டது .

எழுந்த புன்னகையை மறைக்க அவள் பற்கள் அவளின் பற்கள் ஆதரத்தை (கீழ் இதழ் ) மெல்ல கடிக்க,மலரின் மது உண்ட வண்டாய் சித்தம் கலங்க நின்றான் .போராடி அவன் அனைத்த காதல் தீ அவனுள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது .

"நெற்களஞ்சிய காவலருக்கு ,சோற்று கவளம் அதிகமாகி ,மதர்ப்பில் சித்தம் கலங்கி விட்டதா இல்லை கண்ணில் ஏதும் பழுதா ?"என்றாள் பகடியாக .

"சோழ வள நாடு சோற்றுடைத்து "என்று சொல்வார்கள் .நெற்களஞ்சியமாய் இருந்த தஞ்சை ,களிறுகளை வைத்து நெற்கதிர்களை போர் அடித்ததாக வரலாறு சொல்லும் .அதனால் தஞ்சை பூமி செல்வ செழிப்பில் இருந்தது .எந்த அளவிற்கு என்றால் காக்கை கூட்டத்தை விரட்ட மகளிர் தங்கள் வைர காதணிகளை தூக்கி வீசுசும் அளவிற்கு ...அந்த காதணிகள் நகர தெருக்களில் கேட்பார் அற்று கிடக்குமாம் ....கீழே விழுந்த அந்த கம்மலை மீண்டும் எடுத்து போட கூட மாட்டார்களாம் .

பசும் நெய்யும் ,சோறும் வருவோர் போவோருக்கு எல்லாம் மிக பெரிய அண்டாக்களில் தான் ஒவ்வொரு வீட்டிலும் சமைக்க அதன் வாசம் குமரி முனை வரை வீசுமாம் .அதை சொல்லி காட்டி அந்த நாட்டிற்கு காவலன் நீ ,உனக்கும் நெய் சோறு உண்டதால் மயக்கமா என்று பகடி பேசி கொண்டு இருந்தாள் அந்த வேல் விழியால் .இதை சங்க இலக்கியம் வஞ்ச புகழ்ச்சி அணி என்று சொல்கிறது .அதாவது இகழ்வது போல் சொல்லி தஞ்சையின் பெருமைகளை கூறி அதன் காவலனே என்று புகழ்வது .

தஞ்சைக்காரிக்கு இத்தனை சொல்வளம் இருக்கும் போது அதை ஆள போகும் எதிர்கால மன்னனுக்கு இருக்காதா ?

"என்ன செய்வது பெண்ணே ...எங்கள் தஞ்சை நிலம் காவிரி தாயின் வளமையால் நெற்களஞ்சியமாய் மட்டுமே இருக்கிறது என்று நினைத்தேன் ..ஆனால் இப்பொழுது அல்லவா தெரிகிறது ....அது அழகிற்கே களஞ்சியமாய் பெண்களை மாற்றி கொண்டு இருக்கிறது என்னும் விந்தை ."என்றான் ஆதித்யன் சொல்வளத்திற்கு அவனும் சளைத்தவன் இல்லை என்பதை பேச்சில் காட்டி .

“உங்கள் செவிகளுக்கு இன்னும் தகவல் வந்து சேரவில்லைவில்லையோ இளவரசே .....இந்த நீர்மகளின் மேல் தங்கள் திருப்பாதம் பட்ட உடன் ,வெட்கம் என்ற சிவந்த வதனம் கொண்டு விட்டாள் ...அதில் இறங்கி நீராடும் மூதாட்டிகள் கூட குமரிகளாய் மாறும் விந்தை உங்களால் தான் நடக்கிறது ... "என்றாள் அவள் கலகலவென சிரித்து ,இளவரசனின் நெஞ்சத்தை கொய்தவாரு .

"இந்த குமரியின் சிரிப்பின் முன் தென்னம்பாண்டி முத்துக்கள் கூட இணையாக முடியாது தான் ."என்றான் ஆதித்யன் .

அதுவரை சிரித்த அவள் முகம் சட்டென்று சீற்றத்தை காட்டியது ."இளவரசே !இது வைரி (பகைவன் ) முடிக்கு சொந்தமான முத்துக்கள் இல்லை ...தஞ்சை பெருவள நாட்டின் நெல்மணிகள் ....சோழ நாட்டின் சிறு பாத துகள் என்ற பெருமையே எனக்கு பெருமை ."என்றவள் விழிகளை வாட்களாகி அவன் மேல் வீசி விட்டு ,ஆற்று நீரின் உள் முழுகி வாலை மீனுக்கு சளைத்தவள் தான் அல்ல என்று வெகு தூரம் நீந்தி கரை ஏறி இருட்டில் மறைந்தாள் .

இளரவசன் அவளின் நாட்டு பற்று கண்டு ,பெருமை மேலிட்டவனாக இதழில் முழு புன்னைகையுடன் அவளை பின் தொடர்ந்து சென்று படித்துறைகளில் ஏறினான் .

தேன் மழை பொழியும் .....
 

Attachments

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
எப்படிஎல்லாம் ஆராய்ச்சி செஞ்சு எழுதியிருக்கிங்க😱😱 இவ்வளவு விசயத்தையும் ஒண்ணா சேர்த்து கலந்து கட்டி அடிக்கிற உங்க எழுத்து 🤩🤩🤩எங்கேயோ கொண்டு போறீங்க எங்களை எல்லாம். 👌👌👌💞💞💞💞 Time மெசின் ஏறி அந்தந்த காலத்துக்கு போயிட்டு வந்த feel enakku ,👍👍👍😍😍 நிகழ் காலத்தில் உள்ள ஆதங்கம் தேவராஜன் பேசுற பேச்சில் அப்படியே தெறிக்குது 🙂🙂🤩🤩👍👍
 

Advertisements

Top