• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,968
Location
madurai
ஆதாரங்களுடன் அருமையான விளக்கங்களுடன் அழகான பதிவு தங்களின் சரித்திர தமிழ் மீண்டும் ஒரு முறை கச்சியபுறத்தையும், தஞ்சையையும் சென்று பார்க்க ஆவல் கொள்கிறது:love::love:(y)(y) தங்களின் இந்த பதிவு மீண்டும் பொன்னியின் செல்வனை படிக்க தோன்றுகிறது :D:D இந்த பதிவை அப்படியே ஒரு நாவலாக தொடர்ந்தால் எங்களை போன்ற சரித்திர பித்துக்களுக்கு மிகுந்த மகிழ்வு தரும்(y)(y)(y)
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஆதாரங்களுடன் அருமையான விளக்கங்களுடன் அழகான பதிவு தங்களின் சரித்திர தமிழ் மீண்டும் ஒரு முறை கச்சியபுறத்தையும், தஞ்சையையும் சென்று பார்க்க ஆவல் கொள்கிறது:love::love:(y)(y) தங்களின் இந்த பதிவு மீண்டும் பொன்னியின் செல்வனை படிக்க தோன்றுகிறது :D:D இந்த பதிவை அப்படியே ஒரு நாவலாக தொடர்ந்தால் எங்களை போன்ற சரித்திர பித்துக்களுக்கு மிகுந்த மகிழ்வு தரும்(y)(y)(y)

வாழ்த்துக்களுக்கு நன்றி ...முழு ஸ்டோரி தான் போட போகிறேன் ...கற்பனை கழுதையை சே சே குதிரையை ஓட விட்டு இருக்கேன் ...அது எங்கே எல்லாம் போகுதோ போக விட வேண்டியது ....ஜூன் மாதத்திற்கு முன் உங்களை படுத்த மீண்டும் வரவச்சிட்டாங்க சசி ஜி ...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,968
Location
madurai
வாழ்த்துக்களுக்கு நன்றி ...முழு ஸ்டோரி தான் போட போகிறேன் ...கற்பனை கழுதையை சே சே குதிரையை ஓட விட்டு இருக்கேன் ...அது எங்கே எல்லாம் போகுதோ போக விட வேண்டியது ....ஜூன் மாதத்திற்கு முன் உங்களை படுத்த மீண்டும் வரவச்சிட்டாங்க சசி ஜி ...
ஏதோ ஒண்ணு ஓடி நமக்கு கதை வந்தா சரி honey டியர்:LOL::LOL:(y)(y) சீக்கரம் வாங்க
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காஞ்சி தலைவனின் தேன் மழை --2

கண் மூடி ஆற்றின் மேல் மிதக்க ஆரம்பித்தான் .சிலென்ற காற்று ,நில ஒளி ,மலர்களின் வாசம் .சில்வண்டுகளின் ரீங்காரம் ....இது நிச்சயம் சொர்க்கபுரி தான் ...இப்போ தேவை தேவ கன்னி ஒருத்தி தான் என்று மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டான் ஆதித்யன் .

வானத்தில் தேவதைகள் சென்றார்களோ என்னவோ ,அவன் உள்ள கிடக்கு அறிந்து "ததாஸ்து "என்று வாழ்த்த ,மிதந்து கொண்டு இருந்த இளவரசனின் மேல் வந்து மோதியது ஒரு பூ ....இல்லை இல்லை பூந்தோட்டம் ....இல்லை தேவ கன்னிகை .

கண்விழித்த ஆதித்யன் ஸ்தம்பித்து போனான் .காண்பது கனவா நினைவா என்று கூட புரியவில்லை .

நமது காதல் சக்கரவர்த்தி ஜலமோகினி போல் ஆற்றில் முளைத்த,பூந்தோட்டம் போல் வந்த மங்கை பெண்ணவளை அணைத்து நிற்கட்டும் ....நாம் தனிமை இருவருக்கும் கொடுத்து ... கால சக்கரம் ஏறி ,ஆதித்யன் கால கட்டத்தில் இருந்து பின் நோக்கி செல்வோம் .

ஆண்டு -1800
இடம் -தஞ்சை -இரண்டாம் சரோபோஜி -ராஜா போன்ஸ்லே மன்னர் ஆட்சி காலம்

சோழ வம்சாவழியினர் ஆட்சி முடிவடைந்து ஆங்கிலேயர்கள் உதவியால் சரபோஜி மன்னர் தஞ்சை ஆண்டு கொண்டு இருந்தார் .மெல்ல மெல்ல பரத கண்டத்தின் மாண்பு மறைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியாக அடிமையாகி கொண்டு இருந்தது .ஒற்றுமை இல்லாத ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றாக தந்திரக்கார நரி அடித்து கொன்றதாக நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சென்ற கதையை பிரிட்டிஷ் நிறைவேற்றி காட்டி கொண்டு இருந்த நேரம் .அந்தோ பரிதாபம் ---அங்கு இருந்தது ஆடுகள் இல்லை -புலியின் வீரம் கொண்ட -ஒரு வரலாற்று உன்னதத்தை படைத்த வழித்தோன்றல்கள் தான் ....ஆனால் ஜெயித்தது என்னவோ நரி தான். பரத கண்டத்தவருக்கு பண்பாடு ,கலாச்சாரம் இல்லை ,அவர்களை முன்னேற்றுவதே கொள்கை என்ற கோட்பாட்டினை கொண்டு வணிக நோக்கத்துடன்

பிரிட்டிஷ் உதவியால் அரியணை ஏறினாலும் ,நிர்வாக பொறுப்பு முழுவதும் எடுத்து கொண்டு ,பொம்மை அரசராய் சரோபோஜி இருந்தாலும் தன்னால் முடிந்த நல திட்டங்களை அவர் நிறைவேற்ற தவறவேயில்லை .சரஸ்வதி மஹால் நூலகம் ,அதில் 4000 புத்தங்கங்கள் ,அரிய ஓலைச்சுவடிகள் ,நாணயங்கள் ,கலை பொக்கிஷங்கள் கொண்டு நிரப்பி இருந்தார் .அங்கு இல்லாத தலைப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் ,கணிதம் ,இயல் ,இசை ,நாடகம் ,வானியல் சாஸ்திரம் போன்ற எண்ணற்ற கலை பொக்கிஷங்கள் .பரத கண்டத்தின் ஈடு இணை இல்லா திறமைக்கு சான்று .

தவிர யாத்திரிகர்கள் தங்க சத்திரம் ,கல்வி வளம் பெருக "நவ வித்யா கலாவதி சாலை "அமைத்து முதல் முறையாய் பெண்களை ஆசிரியராக நியமித்தவரும் இவரே .தவிர நூல்கள் உருவாக கை ஆச்சு முறை கொண்டு வந்து எண்ணில் அடங்கா காவியங்கள் இன்றும் நிலைக்க செய்தவர் .நீர் நிலைகள் ,நிலத்தடி வடிகால் (underground drainage )அமைத்து ,மருத்துவத்தில் சித்தா ,ஆயுர்வேதம் ,யுனானி ,ஆங்கில மருத்துவம் அழிந்து போகாமல் பாதுகாத்துக்காத்தார் .

அங்கு இருந்த 200 வருட ஓலை சுவடி ஒன்றை 2003ஆம் ஆராய்ந்ததில் சரோபோஜி மன்னர் இளவரசராய் இருந்த போது கண் அறுவை சிகிக்சை, நவீன வசதி எதுவும் இல்லாத அந்த காலத்திலேயே செய்த குறிப்பு கிடைத்து உள்ளது .

தஞ்சாவூர் வரைகலை ,மட்டும் இல்லாது இசைக்கும் இவர் ஆற்றிய பங்கு மிக பெரியது என்பதால் ராஜராஜ சோழனுக்கு பிறகு "தஞ்சையின் பொற்காலம் "இவர் ஆட்சி காலமே என்று பெயர் பெற்றது .

இந்த அரசரின் அரசவை இசை மேதைகள் ,ஜாம்பவான்கள் தான் "தஞ்சாவூர் நால்வர் "/tanjore quartet " பொன்னையா ,சின்னையா ,சிவானந்தம் ,வடிவேலு போன்றவர்கள் .

இந்த புனிதர்கள் வாழும் தஞ்சையின் இரவூ வேளை ,பல சரித்திரங்களுக்கு ,பல சதிகளுக்கு ,பல உன்னதங்களுக்கு மௌன சாட்சியாய் இருந்ததை போல் அப்பொழுது நடக்க போகும் தெய்வ திருவிளையாடலுக்கும் சாட்சியாய் இருக்க ஆரம்பித்தது .

மின்சாரம் என்பது எல்லாம் இல்லாத காலம் .தெரு முழுக்க தூண்கள் நிறுவ பட்டு அதில் தூங்க விளக்குகள் ஏற்றப்படும் .அந்த வெளிச்சத்தில் இந்த இரவூ வேளையில் தஞ்சை வீதிகள் இந்திரனின் அரசவை போல் மின்னி கொண்டு இருந்தன .

தஞ்சை பெரிய கோயிலுக்கு பின் புறம் அமைந்து இருந்தது அந்த வேத பாடசாலை .காலை வேலையில் அந்தணர்களின் வேத கோசம் ,பாராயணத்தால் உடலோடு உள்ளமும் "அனைத்தும் இறைவனே "என்று சரண் அடைந்து விடும் .

நீண்ட மரக்கதவினை தாண்டி சென்றால் முதலில் நம்மை வரவேற்பது கண்ணை நிறைக்கும் பூந்தோட்டமே .இசைக்கு அடுத்தபடியாக இறைவனுக்கு பிடித்தது மலர்கள் தானே .அதுவும் தஞ்சை பெருஉடையாருக்கு என்னும் போது கேட்கவும் வேண்டுமோ பூந்தோட்டத்தின் நீளம் ,அகலம் ?
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வாயிலில் மிக பெரிய துளசி செடி ,ஒரு புறம் கோ சாலை (பசு தொழுவம் ),மறுபுறம் சிறு வாணி சிலை வீணையுடன் அல்லி குளத்தின் நடுவே .அதை கடந்து உள்ளே சென்றால் பிராத்தனை கூடம் .அதன் பின் புறம் அங்கேயே தங்கி வேதங்களை கற்கும் மாணவர்கள் சயனிக்கும் மிக பெரிய வராந்தா போன்ற அமைப்பு.

உறங்கி கொண்டு இருக்கும் நூறு மாணவர்களை கடந்து சென்றால் மிக பெரிய அறை .அந்த அரை யின் முன்பு ,தஞ்சையின் இசை சக்கரவர்த்திகள் ,ஆடல் கலையின் நாயகர்கர்களான அந்த சகோதரர்கள் நால்வரும் அந்த அறைக்கு காவல் போல் வாசலிலேயே படுத்து இருந்தனர் .அவர்கள் காவல் இருப்பது ,சேவகம் செய்ய காத்து இருப்பது அவர்களின் தெய்வத்திற்கு -ஆம் அவர்களின் குரு தான் அவர்களின் தெய்வம் .”குருசேவையே கடைந்தேற வழி” என்று எவ்வளவூ பதவி ,உயர்வூ வந்தாலும் இன்றும் மனதளவில் சிறு மணாகளாய் மாறி குருவின் சொல்லுக்காக காத்து நின்றனர்

அறைக்குளே சென்றால் தெய்வ சன்னிதானத்திற்குள் நுழைந்த ஒரு அமைதி ,நிறைவான உணர்வூ . அந்த அறையின் தரையில் நன்றாக ஆழந்த உறக்கத்தில் இருந்தார் அந்த மனிதர் .ஒரு மனையை தலைக்கு கொடுத்து ,துண்டை விரித்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் .அவர் தலை முழுவதும் சவரம் செய்ய பட்டு இருந்தது.உடல் முழுக்க ஆகம முறை படி 16 இடங்களில் அவர் திருநீறு (விபூதி )அணிந்து இருந்தார்.அவர் உடைகளை வைத்து பார்த்தால் அந்தணர் தோற்றம் .கழுத்தில் பெரிய பெரிய ருத்ராக்ஷ மாலைகள் .மேல் வஸ்திரம் சாய நிறத்திலும் ,நூல் வேட்டியும் மட்டுமே அவர் உடை .அருகே மிக பெரிய வீணை ஒன்று .

நல்ல உறக்கத்தில் இருந்த அவர் செவிகளில் குழந்தையின் அழுகை சத்தம் ஒன்று கேட்க ,திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார் .அந்த நள்ளிரவில் ,திருமணம் ஆகா பிராமணர்கள் மட்டுமே தங்கி இருக்கும் வேத பாட சாலையில் சிறு குழந்தையின் அழுகை சத்தம் எங்கிருந்து வர முடியும் ? .குழந்தையின் அழுகை சத்தம் அவரை திகைப்பில் ஆழ்த்தியது .

ஒரு வேளை மன பிரமையா என்று மீண்டும் அவர் உறங்க முற்பட ,இந்த முறை அழுகை ஒலி அதிகமானது .அந்த வேத பாடசாலையின் வாயிலில் இருந்து தான் அழுகை வருகிறது என்று உணர்ந்தவர் தான் இருந்த அறையை விட்டு வெளியே வந்தார் .அங்கு ஆழந்த உறக்கத்தில் இருந்தவர்கள் யாருக்கும் அந்த குழந்தையின் அழுகை ஒலி கேட்கவே இல்லையா ,இல்லை அனைவரும் ஆழந்த உறக்கத்தில் இருக்கிறார்களா என்று அவருக்கு புரியவில்லை .

வெளி கதவை திறந்து வர அங்கு கோ சாலையின்(பசு மாடுகள் வளர்க்கும் இடம் ) அருகே துளசி செடியின் அருகே அமர்ந்து அழுது கொண்டு இருந்தது ஒரு குழந்தை . அதன் அருகே குழந்தையின் தாய் யாருமே தென்படவில்லை .

"! "குழந்தாய் !....யாரு மா நீ ...இந்த இரவூ வேளையில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ....வழி தவறி வந்து விட்டாயா ...பயம் தேவையில்லை ... வழி காட்டு அழைத்து செல்கிறேன் "என்றார் குழந்தை அருகில் அமர்ந்து .

குழந்தை அருகில் அமர்ந்ததும் இனம் புரிய அமைதி ,தெளிவூ மனம் எங்கும் நிரம்பி வழிவதை உணர்ந்தார் .தெய்வ சன்னிதானங்களில் மட்டுமே அவர் உணர்ந்த நிறைவூ .இன்று அந்த பக்தி பேருக்கு இந்த குழந்தையின் அருகே .

நிலா வெளிச்சத்தின் ஒளியில் அந்த குழந்தையை ஊன்றி பார்க்க ,அதன் முக தேஜஸ் ,அழகு அவர் மனதை கொள்ளை இட்டது .பட்டு பாவாடை உடுத்தி ,உடல் முழுக்க தங்க ,வைர ஆபரணங்கள் பூட்ட பட்டு ஒரு தேவலோக குழந்தையை தோன்றினாள் அந்த சிறுமி .அவள் தலையில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .அப்பொழுது தான் ஆற்றில் இருந்து எழுந்து வந்தவள் போல் .அவர் கை தானாக கூப்பியது அந்த தெய்வ வடிவின் மகோனத்தை கண்டு .

" என்ன முத்துஸ்வாமி தீக்ஷதா ....என்னை பல நாளாய் தேடி இந்த தஞ்சை தரணி எங்கும் அலைந்து கொண்டு இருந்தாயே ....சரி நம் பிள்ளை வருந்துகிறானே என்று உனக்காக இருக்கும் இடத்தை விட்டு ,உனக்கு வழிகாட்ட வந்தால் ,நீ எனக்கு வழி காட்டுகிறேன் என்கிறாயே மகனே ....வா வா என்று கண்கள் கலங்கி அழைத்து விட்டு ,உன்னை தேடி நான் வந்தால் ,ஆழந்த நித்திரையில் இருக்கிறாயே ...” என்ற அந்த சிறுமியின் குரல் கேட்டு திகைத்து விழித்தார் முத்துஸ்வாமி .

ஆம் அந்த மனிதர் சங்கீத மும்மூர்த்தி ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷதர் .திருத்தணி முருகனால் நாவில் இனிப்பு ஊட்ட பட்ட, அதே தெய்வ கீர்த்தனையாளர் தான் .ராமஸ்வாமி தீக்ஷிதருக்கும் ,சுப்புலக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாய் பிறந்தவர் .இவர் தந்தை தான் "ஹம்சத்துவனி "ராகத்தை கண்டு பிடித்தவர் .

இவர் சீடர்கள் தான் தஞ்சை நால்வர் (tanjore quartet )பொன்னையா ,சின்னையா ,சிவானந்தம் ,வடிவேலு)சரபோஜி மன்னர் அரசவை இசை மேதைகள் .இவர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்கி தான் முத்துஸ்வாமி தஞ்சை வந்து தங்கி இருந்தார் .தஞ்சையின் காவல் தெய்வம் ,மன்னன் விஜயாலய சோழனால் பிரதிஷ்டை செய்ய பட்ட நிசும்பசூதினி மேல் கீர்த்தனை பாடும் படி கேட்டு கொண்டு இருந்தனர் .

பல வாரமாய் தேடியும் முத்துஸ்வாமிக்கு அந்த கோயில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை .தேவி தரிசனம் கிடைத்தால் தானே அவளை புகழ்ந்து பாமாலை இசைக்க முடியும் ?தேடி தேடி பார்த்தும் ,பல இடங்களில் விசாரித்தும் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை .

தஞ்சை காளி கோயிலில் மனம் வருந்தி ,"தாயே நின் திருவுருவத்தை காணும் பேறு எனக்கு கிடைக்கவேயில்லை ....உன்னை பாமாலைகளால் துதிக்க நினைத்தேன் ...அதற்கும் வழியில்லை ...இந்த அற்பன் உன்னை என்ன பாடுவது என்று நினைத்து விட்டாய் போல் இருக்கிறது ......எனக்கு வழி காட்டு தாயே ....உன்னை என் இசையால் அலங்கரிக்க வேண்டும் ."என்றும் அன்று மாலை தான் வழிபட்டு திரும்பி இருந்தார் .

"என்ன முத்துஸ்வாமி ...பிறவி என்னும் மாயையில் சிக்கி இன்னும் உனக்கு கலக்கம் தெளியவில்லையா ?...வருந்தி வருந்தி மகன் அழைத்தாயே என்று இருக்கும் இடத்தை விட்டு உனக்காக ஓடோடி வந்து இருக்கிறேன் ....நீ தானே சொன்னது உன் கீர்த்தனைகளால் என்னை அர்ச்சிக்க போவதை ...இப்பொழுது எதற்கு இந்த திகைப்பு .அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் பிரகாசிக்கட்டும் .சங்கீத உலகிற்கு முடிசூடா மன்னனாய் ஜொலிப்பாயாக ."என்ற பிஞ்சின் வார்த்தைகள் கேட்டு ,அதிர்ந்து ,வந்து இருப்பது தான் தேடி கொண்டு இருக்கும் தஞ்சையின் காவல் தெய்வம் என்பதை உணர்ந்து சாஷ்டாங்கமாய் பாதம் பணிந்தார் .

கண்கள் கண்ணீரை சொரிய ,கைகள் பக்தியில் தொழ ,

மகிஷாசுர மர்தினிம் நமாமி மகா நிலைய கபர்தினிலிம்
மஹிஷ மஸ்தக நா தான பேத விநோதினிம்

என்ற பாடலை நாராயணி ராகத்தில் பாடி முடிக்க ,அவர் முன் தங்க தகடு ஒன்று நிசும்பசூதனி படம் செதுக்க பட்டு ,இவர் இப்பொழுது பாடிய கீர்த்தனை செதுக்க பட்டு இருந்தது .குழந்தை இருந்த இடத்தில் அப்பொழுது ஒரு தீப ஒளி மட்டுமே தெரிந்து பின்னர் மறைந்து போனது .

(சங்கீத சக்கரவர்த்தியான இவர் நிசும்பசூதனி கோயிலை உண்மையில் கண்டு பிடித்தாரா ,அந்த அம்பிகையின் திரு உருவச்சிலையை கண் குளிர கண்டாரா என்பது பற்றிய விளக்கம் ,குறிப்பேடு எங்குமே இல்லை ...அவரின் இந்த ஒரு கீர்த்தனை பற்றி -அதாவது நிசும்பசூதனி என்ற தெய்வத்தை பற்றி மட்டும் உலகளவில் பல பல்கழை கழகங்களில் இன்றளவும் ஆராய்ச்சிகள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது . எப்படி ஆதித்ய கரிகாலனின் மரணம் ,அவன் யாரால் கொள்ள பட்டான் ,எதற்காக கொள்ள பட்டான் என்பது எப்படி தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் விடுவிக்க முடியாத புதிராய் இருக்கிறதோ அப்படியே முத்துஸ்வாமி தீக்ஷதரின் இந்த பாடலும் ,வரலாற்று பக்கங்களில் இருந்து காணாமல் போன தஞ்சையின் காவல் தெய்வத்தின் கோயிலும் ,பிரதிஷ்டை செய்ய பட்ட சிலையின் இருப்பிடமும் இன்றளவும் விடுவிக்க முடியாத புதிரே ..)

முத்துஸ்வாமி தீக்ஷதர் வாழ்ந்த காலத்தில் இருந்து விடைபெற்று ,மீண்டும் கால சக்கரம் ஏறும் நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்னும் பின் நோக்கி செல்கிறோம் .

ஆண்டு -2019 மாதம்- ஏப்ரல்

இரவூ -1.00 மணி

இடம் -காஞ்சிபுரம் .

கண்டு கொண்டு இருந்த கனவூ நின்று விட ,திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சமுத்ரா .அந்த கனவூ வந்த பிறகு மனதில் எழும் இனம் புரியாத மகிழ்ச்சி ,வழக்கம் போல் அவள் இதழில் புன்னகையை உருவாக்கியது .நினைவூ தெரிந்த நாளாய் அவள் காணும் கனவூ .....அதில் வரும் பழகிய முகம் .எங்கோ ,ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாய் அவள் அருகே கண்டு மகிழ்ந்த ,அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆணின் முகம் அது .இன்றும் வழக்கம் போல் “புன்னைகை என்னும் அன்பால்” அவள் மனதை கொய்து கொண்டு இருந்தது .

"உங்களுக்கு இதே வேலையாய் போச்சு ....தினம் தினம் கனவில் மட்டுமே வருவேன் என்று அப்படி என்ன அடம் ...நேரில் வந்தால் ஆகாதோ ....ஒரு நாள் என்றாவது என் கண்ணில் படாமலா போய் விடுவாய் ...அன்னைக்கு இருக்கு .....அன்னைக்கு இழுத்து வைத்து இந்த உதடா சிரித்து சிரித்து என்னை இம்சிக்கிறது என்று அதிலே அழுந்த முத்தம் இடுகிறேன் ...."என்று தன் மனதில் இருந்த உருவத்திடம் மல்லுக்கு நின்றாள் அந்த மோகினி .


தேன் மழை பொழியும் .....
 




Attachments

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் நட்பூஸ்

ஜென்மமாய் ஆதித்யனை மட்டுமே விரும்பும் ஒரு ஜீவனின் காதல் .யுகங்கள் பல கடந்தாலும் அவனை மட்டுமே சேரும் காதல் .( (அது நம்ம சசி ஜி யா கூட இருக்கலாம் ...சும்மா )
wooooooowwww I love it anitha ;)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,968
Location
madurai
Honey dear supera kondu poreenga present dayskku vanthuruchu kadhai ???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Honey dear supera kondu poreenga present dayskku vanthuruchu kadhai ???
thanks ma..happy that you liked it....thirupiyum reverse gear poduvom...evalavoo neram thaan prince charming water la nika vaikarathu?...jani vanthuchunaa sasiji vachi seivanga....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top