• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலின் விதியம்மா 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை என்று பெயர் வைத்ததால் வயல்கள் மிகுதியாக இருக்கிறதா இல்ல வயல்கள் அதிகம் இருப்பதால் தஞ்சை என்று பெயர் வைக்கப்பட்டதா யாருக்கு தெரியும். விவசாயம் தான் இங்கு பிரதான தொழில்.

களப்பிரர்களில் ஆரம்பித்து சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர பேரரசுகள் மராத்தியர்கள் என பலரும் ஆண்டாலும் தஞ்சை என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சோழர்கள் தான்.

மக்களாட்சி நடைமுறையில் இருந்ததாலும் அரச பரம்பரை வாரிசுகள் இன்றும் இந்த நவீன உலகில் வாழ்கிறார்கள்.

சூரிய கதிர்கள் பூமியை ஆக்கிரமித்து தன் ஆளுமைக்கு கொண்டு வர,
நந்தவனம் போல் பூச்செடிகள் பூத்து குலுங்கும் மரங்கள் என அந்த வீடே பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது. அளவான வீடு அன்பான குடும்பம் என சந்தோசமாக வாழ்ந்து வரும் பாசப் பறவைகள்.

ரகுபதி "பொன்னி தேஜு எங்க" என்றார். "ஏங்க அவ எதோ மனசு சரியில்லாத மாதிரி இருக்குனு பக்கத்தில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு போயிருக்கா" என

"என்ன ஆச்சு டி மறுபடியும் அதே கனவா" என கவலையாக கேட்க

"தெரியலைங்க ஆனா அது மாதிரி தான் போல .... இந்த நேரத்தில் நீங்க வேற அவ கேட்கிறானு வேலைக்கு வேற போக சொல்லிட்டீங்க அதுவும் சென்னையில் ஏன் இங்க உங்க பொண்ணு வேலை செய்ய மாட்டாலா" என்று தன் கவலையை ஆதங்கமாக கொட்ட,

"அம்மாாாா... என்னோட செல்ல தங்கச்சி எல்லாத்திலும் முதல ம்மா. அவ வாங்கிய மார்க்கை பார்த்து அவங்களே வேலை தருவது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா அது எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா" என்று தங்கைக்கு ஆதரவாக பேசிக்கொண்டே வந்தான் தேவேஷ்.

"அவ எல்லாத்திலும் முதல தான் பயத்திலும் கூட. கனவில வருவதுக்கு கூட பயந்து எழுந்ததும் கோவிலுக்கு போயிருக்கா அவளை தனியா எப்படி டா அவ்வளவு தூரம் தனியா விடுறது" என

"அம்மா அவ கொஞ்ச நாள் தனியா இருந்தா தான் அவளோட பயந்த சுபாவம் மாறும் கவலைப்படாத..... அப்பா அம்மா கிட்ட சொல்லி வைங்க அவ கிட்ட தைரியமா பேசலைனா கூட பரவாலை ஆனா இப்படி பேசி பயப்பட வைக்காமல் இருக்க சொல்லுங்க" என்று தாயிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடித்து அவனது அறைக்கு சென்றான்.

ரகுபதி வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவரின் தர்ம பத்தினி பொன்னி பொறுப்பான குடும்ப தலைவி. இவர்களின் வாரிசு தேவேஷ் மற்றும் தேஜஸ்வினி.

தேவேஷ், இருபது ஏழு வயதாகும் அன்பான தமையன் மற்றும் பொறுப்பான மகன். பிறரிடம் வேலை பார்க்க பிடிக்காமல் சொந்தமாக தன் நண்பன் ஆரியாவுடன் சேர்ந்து வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை நடத்துகிறான். தன் ஆருயிர் நண்பனான ஆரியாவிற்கு தன் தங்கையை மணமுடிக்க எண்ணியுள்ளான்.

தேஜஸ்வினி, இருபதிமூன்று வயதாகும் தேவதை. அனைவரும் விழுந்த அதே பொறியியலில் சிக்கி தற்போது அதிலும் தேறி யாராலும் எளிதில் நுழைய முடியாத வா்மா குருப் ஆப் கம்பெனியில் சேர போகிறாள்.

சூரியனின் தேஜஸ்கள் இருளை போக்குவது போல் அவள் செல்லும் இடம் எல்லாம் அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆர்ப்பாட்டம் இல்லாத அசர அடிக்கும் அழகு.

கோவிலில்,

"பூசாரி தேஜூ வந்தால" என்று பூசாரியிடம் கேட்டாள் தேஜூவின் தோழி ரம்யா.

"என்ன குழந்த புதுசா கேட்கிறா மாதிரி கேட்கிற அவ எப்பவும் இருக்கிற துர்க்கையம்மன் சன்னதியில் தான் இருப்பா அங்க போய் பாரு" என 'ச்சை.. எல்லா இடத்திலும் தேடிய நாம அவளுக்கு உயிரான இடத்தை மறந்துட்டோம் பாரு அங்க தானே முதல போய் இருக்கனும்' என தலையில் அடித்து கொண்டு அங்கே சென்றாள்.


https://static-assets.*********.com/*********/content/image?pratilipiId=6755373524739996&name=96aa41d7-4189-45c2-9779-c48c9dc01066&width=429&type=jpg

அங்கே இருக்கும் தன் தோழியின் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்து பின் தன்னை தனியே விட்டு வந்த கோபத்துடன் "ஏய் புள்ள இது உனக்கே நியாயமா தெரியுதா.... நான் தான் வரேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள என்ன அவரசம் மேடமுக்கு ம்ம்ம்... ஏய் புள்ள இப்படி திரும்பு..... என்னடி கண்ணெல்லாம் கலங்கி இருக்கு என்ன ஆச்சு" என கோபம் மறைந்து வேதனையாக கேட்க

"ரம்யா கணவு வந்துச்சு டி பயமா இருந்துச்சு அதான் சீக்கிரமா வந்துட்டேன்" என கலங்கிய குரலில் சொல்ல,

"அதே கணவா டி" என "இல்ல ரம்யா இந்த முறை யாரோ மலையில் இருந்து விழுகிற மாதிரி வந்துச்சு ஆனா யார் அதுனு தெரியலை மனசு ஒரு மாதிரி இருக்கு" என

"சரி ஒன்னும் இல்ல அது வெறும் கனவு தான்...... சரி நைட் நீ கிளம்பிடுவ அதுக்கு அப்புறம் நாம பார்த்துக்கவே முடியாத" என்ற ரம்யாவை பார்த்து,

"லீவு வந்தவுடனே இங்க ஓடி வந்துடுவேன். என்னால அம்மா அப்பாவை பார்க்காமல் எல்லாம் இருக்க முடியாது" என்று பேசிக்கொண்டே கோவிலை விட்டு வெளியேறி சாலையில் நடந்து வந்தனர்.

காலை நேரத்திலே இருளால் நிரம்பி மரங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து சூரிய கதிர் புகாமல் இருட்டாக இருந்து அந்த இடம். பிரதான சாலையில் தான் இருக்கிறது இந்த மண்டபம். ஆனால் யாரும் அந்த இடத்திற்கு வரவே மாட்டார்கள். பல பேய் கதைகள் மற்றும் மர்மமான சம்பவங்கள் என அந்த இடத்தை பற்றிய வதந்திகள் அதிகம்.

அந்த இடத்தை கடக்கும் போது எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு தேஜூவை தாக்க ரம்யாவை பார்த்து "ரம்யா நா எனக்கு.... எண்ணமோ பண்ணுது நான் அங்க போறேன்" என அவளிடம் அவசரமாக சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

அதே நேரத்தில் உலகின் மறு முனையில் ஓர் உயிர் மலையின் இடுக்கில் தன் உயிக்காக போராடிக் கொண்டு இருந்தது.

????????????????


இது ஒரு வித்தியாசமான கதை, மாறப்பட்ட கதை அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். என்ன கதைனு நீங்களே பாருங்கள் என்னோட புதிய முயற்சி. உங்கள் கருத்தையும் ஆதரவையும் ஆவலோடு எதிர் நோக்கி,


அன்புடன்
நிலா
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Fantasy ahh?????

Something new really very excited come soon author akka?????

Ivaluku vara kanavulam palikumaaa????but yaatuko nadakuradhu ean ivaluku varanum?????

Waiting
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Nice start da....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top