• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் உள்ளங்கள் கரைந்ததே - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nalini sri. p

புதிய முகம்
Joined
Jan 1, 2019
Messages
6
Reaction score
36
Location
Salem
உள்ளம் – 1

விடிந்தும் விடியாத காலை பொழுதில் சோனா மற்றும் கரண் தங்களது MDயின் வருகைக்காக டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் காத்துகொண்டிருந்தனர் அப்பொழுது லண்டனில் இருந்து வரும் விமானம் இன்னும் பத்து நிமிடங்களில் தரையிறங்க போவதாக அறிவிப்பு வர MD வருகைக்கு தங்களை தயார் படுத்தி கொண்டனர்

லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்க அடுத்த அரைமணி நேரத்தில் தன்னுடைய உடமைகளை சேகரித்து கொண்டு நடையில் கம்பீரமும், கண்களில் கூர்மையும் கொண்டு இக்காலத்திற்கேற்ப உடையணிந்து பாரதி கண்ட புதுமை பெண்ணின் மொத்த குணங்களையும் தன்னுள் பெற்று தனது high ஹில்ஸ் சத்தம் கொண்டு ஒரு யுவதி நடந்து வர அவளது நிமிர்வு தைரியம் கண்டு எப்பொழுதும் வியந்தது பார்க்கும் சோனா “இவங்கலால் எப்படித்தான் தன்னுடைய அம்மா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது கூட இவ்வளவு தைரியமாகவும் நிமிர்வுடனும் இருக்க முடிகிறது” வியந்து நிற்க சோனா அசையாமல் நிற்பதை கண்டு கரண் அவளின் முகத்தின் முன்னே கைகளை ஆட்டி “என்ன சிலை மாதிரி நிற்கிற மேடம் வராங்க பாரு”

எப்படி கரண் இவங்களால் மட்டும் எந்த நிலை வந்தாலும் ஒரே மாதிரி இருக்க முடிகிறது இதே நான் எல்லாம் என் அம்மாவிற்கு ஒன்று என்றால் எந்நேரம் ஊரையே கூட்டி அழுதிருப்பேன் எப்படித்தான் ஒன்றுமே நடக்காதது போல் இருக்க முடிகிறதோ அவங்க முகம் மட்டும் கொஞ்சம் இறுகி இருக்கு மற்றபடி ஒரு மாற்றமும் இல்லை

இப்படி இருப்பதால் தான் அவங்க நமக்கு MDயா இருக்காங்க நாம அவங்களுக்கு கீழே வேலை செய்கிறோம் என இருவரும் பேசி கொண்டிருக்க அவர்களை அந்த யுவதி நெருங்க தங்களது பேச்சை நிறுத்திவிட்டு அவளை பார்த்து வெல்கம் மேம் என்றனர் அதற்கு ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு கார் பார்க்கிங் நோக்கி விரைய அவளின் பின்னே விரைந்தனர் இருவரும்

காரை அடைந்து டிரைவரை நோக்கி hospital போங்க என கட்டளை இட்டு பின் சீட்டில் கண் மூடிய படி அமர்ந்து கொள்ள அவளின் பின்னே வந்த சோனா யுவதின் அருகில் அமர கரணோ முன்னே டிரைவர் இருக்கையின் அருகே அமர்ந்து கொள்ள கார் மருத்துவமனை நோக்கி பயணமானது

கார் நகர சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்தவள் கண் திறந்து அம்மாவிற்கு இப்பொழுது எப்படி உள்ளது இன்றைய நிலை என்ன வினவ “மேம் இப்பொழுது ICUவில் இருக்காங்க அர்ஜுன் சாரும் நைட்தான் அமெரிக்காவில் இருந்து வந்தாரு இப்ப அவர் மேடக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறார்” என தகவலை வழங்கினான் கரண்

ம் என்று கேட்டு கொண்டவள் மீண்டும் கண்மூடி கொண்டாள் மனம் மட்டும் அம்மாவிற்கு ஒன்றும் ஆக கூடாது என தவிப்புடன் இருந்தது எப்பொழுதும் போல் தன்னுடைய உணர்வுகளை வெளிகாட்டமால் இருந்தாள். இது அவளுடைய அம்மா அவளுக்கு சொல்லி கொடுத்தது அடுத்தவரிடம் உன்னுடைய உணர்வுகளை வெளி காட்டதே அதுவும் தொழில் முறை பேச்சின் போது எதிரில் இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் தெரிந்தால் எளிதில் விழ்த்தி விடுவர் அதனால் நம்மின் உணர்வுகளை அவர்களுக்கு காண்பிக்க கூடாது அவர்களின் உணர்வுகளை துல்லியமாக கணக்கிடவேண்டும் அது நம்மை மேம்படுத்தும் என கூறிவுள்ளதால் அவள் தன்னை வெளிபடுத்துவது தனது தாய்,அத்தை மற்றும் அர்ஜுனிடம் மட்டுமே

கார் மருத்துவமனையை அடையவும் கரண்,சோனாவிடம் “என்னுடைய லக்கேஜ்களை வீட்டில் வைத்து விடுங்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கு உள்ள மீட்டிங்களை எல்லாம் ரத்து செய்துவிடுங்கள் ஏதேனும் அவசரம் என்றாலும் முடிந்த அளவு சமாளிக்க பாருங்க நான் பிறகு கால் செய்கிறேன்” உத்தரவுகளை பிரபித்து தனது அன்னையை காண விரைந்தாள்

வெளியே அவளின் அத்தை சுபத்திரா அமர்ந்திருக்க அவரிடம் விரைந்து அத்தை அம்மாவிற்கு என்ன ஆனது குரல் தழுதழுக்க கேட்க அவரோ “அம்மு கொஞ்சம் அமைதியாக இரு மா அர்ஜுன் உள்ள இருக்கான் வந்ததும் கேட்கலாம்” அவர் கூற அர்ஜுன் அவளின் அம்மா நந்தினி அறையில் இருந்து வெளியே வர அவனிடம் சென்றாள்

அச்சு அம்மாவிற்கு ஒன்றும் இல்லை தானே அவங்க நன்றாக உள்ளார்கள் என சொல்லு கண்களில் கண்ணீருடன் வினவ

அம்மு அத்தை நிலைமை கொஞ்சம் சிக்கல்தான் என்றுவிட்டு தனது அம்மாவிடம் “மா அத்தைக்கு இருதயம் பலவினமாக இருக்கு என உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கு இருந்தும் என்னிடமோ அம்முவிடமோ நீங்க இதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை முறையிட”

அம்மு என்கிற அபிதா நந்தினியும் அத்தையிடம் “உங்களுக்கு முன்பே தெரியுமா ஏன் என்னிடம் சொல்லவில்லை”

நான் எவ்வளவோ சொல்லியும் நந்தினி இதற்கு சிகிச்சை எடுத்து கொள்ள சம்மதிக்கவில்லை அதோடு உன்னிடமும் அம்முவிடமும் இதை பற்றி சொல்லகூடாது என்று என்னிடம் உங்கள் மேல் சத்தியம் வாங்கிவிட்டாள் அவளுக்கு இந்த உலகில் வாழவே விருப்பம் இல்லை தனது காதலில் அனுபவித்த வலியையும் உன்னுடைய அப்பாவை பிரிந்து வந்ததையும் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை அது அவளை கொஞ்சம் கொஞ்சமாக வதைக்கிறது இருந்தும் உன்னுடைய ஒருத்திக்காக மட்டுமே வாழ்ந்தாள் இப்பொழுது உன்னையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்து விட்டதால் தனது உள்ளம் காதலில் கரைந்து தோற்ற உலகில் வாழ விருப்பம் இல்லாமல் இருக்கிறாள் என அம்முவிடம் கூறினார்

அப்பொழுது செவிலியர் வந்து டாக்டர் மேடம் இருதய துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது கூற அர்ஜுன் உடனே சிகிச்சையை ஆரம்பித்தான்

சிறிது நேரம் சென்று வெளியே வந்த அர்ஜுன் அம்முவிடம் “அத்தை உன்னிடம் பேச விரும்புகிறார்கள் நீ வந்து பேசு”

இல்லை நான் வரமாட்டேன் எதுவாக இருந்தாலும் குணமாகி வீட்டிற்கு வந்து பேச சொல் என்று கதறி துடிக்க

அர்ஜுன் “அம்மு please கண்ட்ரோல் யுவர் செல்ப்” நான் என்னால் முடிந்த அளவு எல்லா செய்ய முயல்கிறேன் ஆனால் அத்தை உடல் ஏற்று கொள்ள மறுக்கிறது மனதளவில் அத்தை வாழ்ந்தது போது என்கிற நிலமைக்கு வந்து விட்டதாக தோன்றுகிறது தனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம் என மருந்து அளிக்கும் போது தட்டிவிடுகிறார்கள் என்னதான் ஒரு மருத்துவராக சிறந்த மருந்து கொடுத்தாலும் சிகிச்சை பெறவங்க ஒத்துழைப்பு வேண்டும் அதை அத்தை தர மாறுகிறார்கள்

நீ பேசி சிகிச்சைக்கு ஒத்து கொள்ள செய் அம்மு வா வந்து பேசு அழைக்க அம்மு தன் அன்னையை காண சென்றாள்

மருந்து குழாய்களுக்கு நடுவே அன்னை இருப்பதை பார்த்ததும் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளும் அவளது மனம் ஏற்க்க மறுத்தது கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது நந்தினியின் அருகே சென்று அம்மா என அழைக்க மூடி இருந்த கண்கள் திறந்து தனது மகளை கண்களில் நிறைத்தார்

மகள் கண்ணீர் விடுவதை கண்ட தாயின் மனம் அவளை அருகே அழைத்து குழாய்கள் பொறுத்தபட்ட கைகளை மெல்ல அசைத்து மகளின் கைகளை பற்றி கொண்டு மகளை பார்த்து “என்னுடைய பெண் எப்பொழுதும் கண்ணீர் சிந்தகூடாது எந்த நிலை வாழ்வில் வந்தாலும் அதை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். என் மகளை நான் அப்படி வளர்த்தாகவே எண்ணுகிறேன் என்றார்”

அவர் சொன்னதை கேட்ட அம்மு “நான் அழவில்லை மா நீங்க மட்டும் என்னுடனே இருங்கள் நீங்க உடனிருந்தால் உங்க அம்மு எப்பொழுதுமே அழ மாட்டாள்”

இதையும் நீ ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் அம்மு வாழ்வில் எல்லோரும் எப்பொழுதும் உடன் வர முடியாது நான் இல்லை என்றாலும் நீ வாழ பழகி கொள்ள வேண்டும் அதோடு உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் என நினைக்கிறேன்

அம்மா அப்படி சொல்லாதீங்க நீங்க எப்பொழுதும் எனக்கு வேண்டும் please மா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கெஞ்ச

என்னுடைய மகள் யாரிடமும் கெஞ்ச கூடாது அது நான் என்றாலும் சரி என்றுவிட்டு முதலில் நான் சொல்லவதை கேள் மற்றதை பிறகு பார்க்கலாம்

அம்மு “சொல்லு மா”

நான் இதுவரை உனது தந்தையை பற்றி எதுவும் உன்னிடம் கூறியது இல்லை நீயும் அவரை பற்றி இப்பொழுது வரை கேட்டது இல்லை அவரை பற்றி கூறவே உன்னை அழைத்தேன் என்னுடைய கடைசி மூச்சி நிற்பதற்குள் உன்னிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன் அதற்கு இப்போ நேரம் வந்துள்ளது

மா அவரை பற்றி எனக்கு தெரியவே வேண்டாம் நீ மட்டும் என்னுடன் இருந்தால் போதும் நான் வேறெதுவும் கேட்டமாட்டன்

அவசரபடதே முதலில் நான் சொல்லி முடிக்கிறேன் பின் நீ பேசு

அம்மு ம் என்றாள்

உன்னுடைய தந்தையின் பெயர் ரவீந்தர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என அவரை பற்றி கூற தொடங்கினார்

(அவளது அப்பா பற்றி அறிந்து அபிதா (அம்மு) என்ன செய்ய காத்திருகாளோ அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)

கரையும்.........................


Hai friends
முதல் அத்தியாயத்தை பதித்துவிட்டேன் படித்து எப்படி உள்ளது என கூறுங்கள் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் nalini sri
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
நளினி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "காதலில்
உள்ளங்கள் கரைந்ததே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நளினி ஸ்ரீ. p டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Good Start ma..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top