• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
முகநூலில் என் கவிதை புத்தகத்திற்கு வந்த ரிவ்யூ..

கிண்டில் வாசிப்பு போட்டி எண் - 8

நூல் : காதலில் கலந்த இதயத்தின் மொழிகள்

ஆசிரியர் : சந்தியா ஸ்ரீ

இந்நூலாசிரியையின் நாவல்கள் இரண்டு வாசித்திருக்கிறேன். அழகாக எழுதக்கூடியவர். எனக்கு கதை மட்டுமல்ல கவிதையும் அருமையாக எழுத வரும் என இந்நூலில் தன் கவிதைகளால் நிரூபித்திருக்கிறார் சந்தியா ஸ்ரீ.

எளிமையான வார்த்தைகளால் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மொழியை கையாண்டிருக்கிறார். கவிதை புரிந்து கொள்வதில் நானும் ஒரு பாமரன் என்பதால் இயல்பாகவே இத்தொகுப்பு எனக்குப் பிடித்துப்போனது.

கதைகள், நாவல்கள், வரலாற்று நூல்கள், புதினங்கள் வாசிக்கும் அளவுக்கு கவிதைகள் படிக்க எனக்கு பொறுமை இருப்பதில்லை.

ஆனாலும் இக்கவிதை தொகுப்பு எனை விடாது ரசிக்க வைத்தது.

நூலில் உள்ள இக்கவிதை வரிகளைப் பாருங்கள் எத்தனை எதார்த்தம் இவை,

"மலர்களும் மனங்களும் ஒன்றுதான்! நாம் விரும்புகின்ற நேரம் மலர்கள் மொட்டாக இருக்கின்றன! மனங்கள் மௌனமாக இருக்கின்றன!"

"தேடிப்பார்க்கிறேன்"

கவிதை தொலைத்த இயற்கை அழகை எண்ணி ஒருவித ஏக்கத்தைக்கொடுத்தது.

"இணையதள நட்பு.."

இக்கவிதை இன்றைய இணைய நட்பின் அழகை அன்பை அதன் ஆழத்தை எடுத்தியம்புகிறது.

முகநூல் நட்புகளுக்கென்று சில பக்கங்களையே ஒதுக்கியிருக்கிறார் ஆசிரியை. முகநூல் நட்பு வெறும் கானல் நீரல்ல என்பதை தன் எழுத்தின் மூலம் நிறுவியிருக்கிறார்.

முகநூலில் பழகி முகநூலை விட்டுப்போன பின்பும் கூட இன்னும் சில நண்பர்கள் எனது தொடர்பில் இருக்கிறார்கள். ஆக இக்கவிதைகள் இன்னும் அதிகமாய் எனக்கு பிடித்தது போனதில் வியப்பில்லை அல்லவா!

"விடியல்" கவிதையில்
விடியலில்லா ஒளிரும் கம்பத்தை பற்றிச் சொன்னது அருமை.

"நீ சிரிக்கும் இந்த நிமிடம் நான் உன்னிடம் சொல்லிய சில பொய்கள் தான் காரணமென்றால் இன்னும் பலமுறை சொல்வேன்.. நீ மனம்விட்டு சிரிக்க வேண்டும் என்பதற்காக.."

இவ்வரிகள் வாசித்தபோது பொய் கூட நன்மையைத் தருமென்றால் அப்பொய்யும் வாய்மை என்றே கருதப்படும் என்ற வள்ளுவர் வாக்கு தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

"கனவும் காதலும் ஒன்றுதான் இரண்டுமே குறிப்பிட்ட நேரம்தான் கனவுகள் கலைந்தால் மறந்துவிடும் காதல் பிரிந்தால் மறந்துவிடும்.."

இக்கவிதையில் மட்டும் பொருட்பிழை இருக்கிதோ என்றொரு ஐயம்.

ஐயகோ! என் கவிதையில் என்ன பிழை கண்டீர் என நீங்க நெற்றிக்கண் திறந்திடாதீங்க மீ பாவம் சந்தியா
?


ரசித்துப்படித்தேன் அற்புதமாக எழுதி இருக்கிறீங்க தொடர்ந்து எழுதுங்க நல்வாழ்த்துகள்
?


அன்புடன்,

கொல்லால் எச். ஜோஸ்
View attachment 27633
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top