• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் நான் காத்தாடி ஆனேன்- 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ambika Ram

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2022
Messages
161
Reaction score
165
Location
Singapore
காதலில் நான் காத்தாடி ஆனேன் - 3

"யரோ தன் மீது மோதுகிறார்கள்! என்று உணர்ந்து சமாளிப்பதற்குள், கீழே விழுந்திருந்தான் சித்!"

ஐயோ! யார் மேலயோ மோதிட்டோம், அவர்களோடு சேர்ந்து கீழே விழப்போறோம் என்று தெரிந்தது ஸ்வாதிக்கு .

அனிச்சையாக கண் மூடினாலும் அந்த நேரத்திலும் "அய்யோ, அவங்க தலையிலே அடி படக்கூடாதே!" என்று கையை அவன் தலையின் பின்புறம் வைத்து பிடித்து கொள்ள முயன்றாள்.

தலையை பிடிக்கிறேன் என்று எண்ணத்திலேயே , வேறு எதையும் உணராமல், அவனை இன்னும் தன்னுடன் சேர்த்து இறுக்கினாள்!!

எழுந்து கொள்ள முயற்சி செய்யும் போது தான் , தன்னை இறுக்கி அணைத்திருப்பது ஒரு பெண் என்று உணர்ந்தான் சித்! அவன் முகத்தை, அவள் நெஞ்சுக்குள் பொதிந்திருந்தாள்!!!

"ஏய் !! இடியட், சே!! என் மேலே இருந்து எழுந்திரு முதல்ல.... என்று கத்தினான் சித்!"

" நமக்கு ஒண்ணும் ஆகலை"! அப்பாடா என்றவாறே எழ முயற்சி செய்தாள். ஆனால் அவள் கை , அவனுக்கு அடியில்
மாட்டிக்கொண்டிருந்தது.

அவள் அதை உருவி எழ முயற்சி செய்யும் போதே, பொறுமை இழந்த சித், அவளை தன் மேலிருந்து ஒரே தள்ளாக கீழே தள்ளிவிட்டான்!!

எழுந்து நின்றவனுக்கு, கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது.

"அறிவில்லை உனக்கு ? இப்படி வந்து இடிக்கிற!!" என்று கீழே கிடந்தவளை பார்த்து எகிறினான்! கீழே விழுந்து கிடந்ததை நினைத்தால் அவமானமாக இருந்தது அவனுக்கு.

தட்டு தடுமாறி எழுந்த ஸ்வாதி , அவன் கோபத்தை புரியாமல் பார்த்தாள்.

ஏனென்றால் , அவள் இதை ஒரு பெரிய விஷயமாகவே பார்க்கவில்லை, தெரியாமல் இடித்து விட்டாள், இருவருக்கும் பெரிய அடி எதுவும் படவில்லை என்பதிலேயே , பிராப்ளம் சால்வ்டு என்ற மனநிலையில் இருந்தாள்.

அவளுக்கு வேறு கவிதா பற்றி கவலை , அவள் போய் விட்டாளா என்று சித்தை தாண்டி அவன் பின்னால் எட்டி பார்த்தாள்.

தான் கேட்பதை பொருட்படுத்தாமல், பின்னாடி பார்த்த ஸ்வாதியை கண்டவனுக்கு அடங்காத ஆத்திரம் வந்தது! அவள் ஏதாவது பேசியிருந்தால் கூட அவன் கோவம் தணிந்திருக்கும், ஆனால் அவள் தான் புரியாமல் நிற்கிறாளே!!!

ஆத்திரத்தில், அவள் குரல்வளையை அழுத்தினான் சித்!! "ஏய் ! என்ன பிரெண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினியா ? எத்தனை பேர் எங்கிருந்து பார்கிறாங்க?? மரியாதையா உண்மையை சொல்லிரு, இல்லை என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது!!!!"

அவன் அழுத்தியதில் அவளுக்கு இருமல் வரவே, கையை எடுத்தான் சித்.

"அய்யோ ஸார்! அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல சார், நான் ஒருத்தரை தேடி ஓடும் போது தெரியாம உங்க மேல மோதிட்டேன்!!"

"ரொம்ப சாரி சார் ! நான் வரேன்!" என்றவாறு கிளம்பினாள். அவள் அவசரம் அவளுக்கு!

மன்னிப்பு கேட்டவுடன் , இவளை நம்பலாமா என்று கொஞ்சம் யோசித்த சித்தை, அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் ஸ்வாதி கிளம்பவும், மறுபடியும் பல்லை கடிக்க வைத்தாள்.

"நான் உன்னை போக சொல்லவே இல்லையே, அவ்ளோ ஈசியா போயிருவியா நீ?" உன்னை...... என்றவன், பிரபவிற்கு கால் பண்ணலாம் என்று போனை தேட, அப்போது தான் விழும் முன் போன் பார்த்துக்கொண்டு வந்தது ஞாபகம் வந்தது.

"ஏய் !!! உன்னால இப்போ என் போனை காணும், ஒழுங்கா என் போனை தேடி எடுத்து கொடுத்திட்டு போ!" என்று அவனும் தேட ஆரம்பித்தான்.

இப்பொழுது தான் நிஜமாக பயம் வந்தது அவளுக்கு..... இந்த பத்து நிமிடத்தில் அந்த பக்கம் யாருமே வரவில்லை. அவளுக்கு தெரியவில்லை, வீக்கெண்ட் , நிறைய பேர் மெஸ்ஸிற்கு சாப்பிட வரமாட்டார்கள் என்று......

சித்திற்கு , போன் கிடைத்தாலும் வேலை செய்ய வேண்டும் என்று கவலையாக இருந்தது.. அதில் அவன் பல முக்கியமான விஷயங்கள் சேகரித்து வைத்திருந்தான். காப்புப்பிரதி கூட எடுத்து வைக்கவில்லை..

இப்படி மோதி கீழே தள்ளிவிட்டு மிகவும் சாதாரணமாக பேசியதுதான் சித்க்கு செம கோவம், கொஞ்ச நேரம் அலைக்கழித்து பின் அனுப்புவோம் என்று நினைத்தான்.

"சார் சார் பிளீஸ், நான் ஹாஸ்டலுக்கு போகணும் சார்!!"

"நானும் தான் போகணும் !!"

"ஆனா எனக்கு வழி தெரியாது ஸார்!! என்றவளை , இது என்ன புதுக்கதை? என்பது போல பார்த்தவன், " ஏன்! உனக்கு செலக்டிவ் அம்னீஷியா வா?!!" என்றான் நக்கலாக!

"அய்யோ !! நிஜமா சார், நான் இங்கே கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பர்ஸ்ட் இயர் சேர்ந்து இருக்கேன். இன்னிக்கே ஹாஸ்டலுக்கு வந்துட்டேன் சார்."

"ஓ ! பர்ஸ்ட் இயர் , கம்ப்யூட்டர் சயின்ஸ் டெபார்ட்மெண்டா !!!! ம்கூஹம்..... என்றவன், அப்பறம்?" என்று கதைப் போல கேட்டான்!

"என்னை மெஸ்ஸிலிருந்து கூட்டிட்டு போறேன் சொன்ன சீனியர் விட்டுட்டு போய்ட்டாங்க!"என்றாள் முகம் கன்ற.

ஏற்ற இறக்கத்துடன் பேசியவளைப் பார்த்த போது கோவம் கொஞ்சம் குறைந்து சிரிப்பு கூட வந்தது அவனுக்கு!

"சார் , அவங்க எங்க போனாங்கனே தெரியலை? அதனால நீங்க என்னை கொண்டு போய் விடமுடியுமா சார் !" என்று இப்போதைக்கு தெரிந்தவனான சித்திடம் கேட்டாள் ஸ்வாதி.

"என்னை பார்த்தா உனக்கு செக்யூரிட்டி வேலை பார்க்கிறவன் மாதிரி இருக்கா? என்னை இடிச்சு தள்ளிட்டு, என் போனையும் தொலைக்க வைச்சிட்டுஇப்போ என்கிட்டயே உதவி கேக்குற? ம்ம்.... என்று அவளை வம்பு இழுத்தான்!"

பர்ஸ்ட் இயர் எனவும் உண்மையில் பாவமாக போய் விட்டது அவனுக்கு...

ஆனால் , அவன் அவளை வம்பு இழுக்கிறான் என்று அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, பின் அவ்ளோ நேரம் கோவப்பட்டவன் உடனே சரியாகி இருப்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்?

இவரும் உதவி செய்ய மாட்டேங்கிறார், போகவும் விட மாட்டேங்கிறார் என்று குழம்பியவள்,

முகம் சுருங்க , சாரி சார் ! என்றாள். மண்ணில் விழுந்த சாக்லேட்டை எடுப்போமா வேண்டாமா என்று குழம்பும் குழந்தை போல் தெரிந்தாள் அவனுக்கு!
 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
சட்டென்று முடிந்தது எபி. கொஞ்சம் அதிகமாக கொடுங்கள் சிஸ்டர். பட் நைஸ் எபி.
 




Ambika Ram

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2022
Messages
161
Reaction score
165
Location
Singapore
சட்டென்று முடிந்தது எபி. கொஞ்சம் அதிகமாக கொடுங்கள் சிஸ்டர். பட் நைஸ் எபி.
Thanks. Sure ji😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top