காதல்போதை 07?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

Author
Author
SM Exclusive Author
Joined
Aug 26, 2020
Messages
547
Reaction score
1,384
Points
93
Age
21
Location
Srilanka
IMG_20210115_105557.jpg"என்னால முடியல.. இதுக்கு மேல என்னால முடியவே முடியாது.." என்று தன் முன் நின்றுக் கொண்டிருந்த நண்பர்களிடம் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் ரோஹன்..

அவனுடைய பார்வை சன்ஜய்யை சுட்டெரிக்க அவனோ ரோஹனை பார்க்காது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான். ரோஹனோ அவன் எதிரே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு கூர்மையான பார்வையுடன் 'உன் பேச்ச கேட்டு தான் இந்த நிலைமையில நா இருக்கேன்..' என்று குற்றம் சுமத்தும் பார்வையோடு முறைத்துக் கொண்டு நிற்க பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ரோஹனை பார்த்த சன்ஜய்க்கு அன்று இவர்கள் கலந்து கொண்ட டான்ஸ் காம்படீஷனில் நடந்த நிகழ்வுகளே கண்முன் வந்து போனது.

அன்று,

அடுத்த இரண்டு குழுவின் நடனத்திற்கு பிறகு இவர்களுடைய நடனம் என அறிவிக்கப்பட்டிருக்க தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர் ரோஹனின் குழு. திடீரென இவர்கள் நடனம் ஆட என தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் ஒலிக்க அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியே வந்து மேடையை பார்த்தவர்களுக்கோ பெரிய அதிர்ச்சி.. காரணம் இவர்கள் பயிற்சி செய்த நடனம் தான் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.

அறையில் வந்து ரோஹனின் நண்பர்களோ தலையில் கை வைத்து என்ன செய்வது என்று புரியாது குழம்பிப் போயிருக்க இவர்களுடன் இருந்த சன்ஜய்க்கும் இவர்களுடைய நிலையை நினைத்து பதட்டம் தொற்றிக் கொண்டது.

அதே பதட்டத்தோடு ரோஹனின் தோளை சன்ஜய் தொட ஆனால் அவனின் முகத்திலோ குழப்பமோ பதட்டமோ கொஞ்சமும் இல்லை. அவன் முகமோ இதை செய்தவன் மேல் கோபம் ஆத்திரத்தில் சிவந்து போயிருந்தது.

சன்ஜய்யின் தொடுதலில் கோபத்தை கை முஷ்டியை முறிக்கி கட்டுப்படுத்தியவன், தன் நண்பர்களிடம்,
"காய்ஸ் ஒரு டீம் டான்ஸ்க்கு ரொம்பவே முக்கியம் அந்த டீம்ல இருக்குறவங்ககுள்ள இருக்க அன்டர்ஸ்டேன்டிங்.. அது நமக்குள்ள இருக்கு.. அப்போ எதுக்கு டென்ஷன் பதட்டம் எல்லாம்.. நாம ஜெயிக்கலன்னாலும் பரவாயில்லை.. ஓடி ஒழிஞ்சிற கூடாது.." என்று ரோஹன் சொல்ல,

"ஐ க்னோ ரோக்கி பட் இப்போ என்ன பன்ன போறொம்.. கொஞ்ச நேரத்தில புதுசா ரெடி பன்னி பெஃபோர்ம் பன்ன இது ஒன்னும் சினிமா இல்லையே.." என்று அவன் குழுவில் ஒருவன் கேட்க,

"எதுக்கு புதுசா ரெடி பன்னனும்.. காய்ஸ் உங்களுக்கு நியாபகம் இருக்கா.. கொலேஜ்ல ஒரு ஃபங்ஷன்க்காக நாம பன்ன பெஃபோர்மன்ஸ் அது எந்தளவு ரீச் ஆகிச்சுன்னு உங்களுக்கே தெரியும்.. அதுக்கப்றம் தான் இந்த காம்படீஷன்ஸ் எல்லாம்.. இப்போ அதை தான் பன்ன போறோம்.. நேரம் இல்லை சீக்கிரம் ரெடி ஆகுங்க.." என்று ரோஹன் சொல்லவுமே புது தெம்பு வந்தது போலிருந்தது அவனை சுற்றி இருந்தவர்களுக்கு..

"வாவ்வ் சூப்பர்டா ரோக்கி.. ஜெயிக்குறோமோ இல்லையோ.. உங்க திறமைய ஃப்ரூவ் பன்னுங்க.." என்று சன்ஜய் சொல்ல அவனை கட்டிக்கொண்டான் ரோஹன்..

இவர்களுக்கான நேரம் வர இதற்கு முன் இதற்காகவே இவர்கள் தயார் செய்த நடனத்தின் அளவுக்கு இல்லையென்றாலும் எப்போதோ தமது கல்லூரியில் ஆடிய அந்த நடனம் எல்லாரையும் கவரத்தான் செய்தது. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்த அந்த தருணத்திலும் பதட்டப்படாமல் பிரச்சினைக்கு தீர்வு சொன்னதில் தான் ஒரு நல்ல குழு தலைவன் என்று உணர்த்தினான் ரோஹன். அவனுடைய நண்பர்களுக்கே அவனுடைய பதட்டமில்லாத நிதானத்தில் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

போட்டி முடிய தங்கள் நடனத்தை ஆடிய அந்த எதிர் குழுவை ஒருவழி செய்துவிட்டனர் ரோஹனும் சன்ஜய்யும். அவர்களின் அடியிலே அந்த எதிர் அணி இதற்கு காரணம் யார் என்ற உண்மையை உளறிவிட ரோஹனுக்கோ கொலைவெறியே வந்தது.

அதன் விளைவு தான் அடுத்தநாள் கொலேஜில் இவர்களின் குழுவுக்கும் பாபியின் குழுவுக்கும் இடையில் நடந்த களவரம். ரோஹனின் மேலிருந்ந கோபத்தில் அவனை பழிவாங்கவென அவர்களின் நடனத்தை இவர்களின் எதிரணியிடம் விற்றதே பாபி தானே.. ரோஹன் தன் மொத்த கோபத்தையும் அவன் முகத்தில் காட்ட சன்ஜய்க்கே ரோஹனின் கோபத்தில் பயம் தொற்றிக்கொண்டது. கஷ்டப்பட்டு ரோஹனை பாபியிடமிருந்து பிரிப்பதற்குள் ஒருவழி ஆகிவிட்டான் சன்ஜய்.

பாஸ்கெட்போல் கோர்ட்டில் சண்டை நடக்க மொத்த கொலேஜூமே இவர்களின் சண்டையை தான் வேடிக்கை பார்த்தது.

"என்னை விடுடா.. இவன இன்னைக்கு ஒருவழிப்பன்னாம நா விட மாட்டேன்.. ச்சே.. எப்படிடா உன்னால இப்படி பன்ன முடிஞ்சது.. நீயும் இதே கொலேஜ் தானேடா.. துரோகி.." ரோஹன் ஆவேசத்தில் கத்த,

"ஆமாடா துரோகி தான்.. எனக்கு இந்த கொலேஜ் மேல என்னடா கோபம்.. நீ அவமானப்படனும் நீ அசிங்கப்பட்டு நிக்கனும்.. அது தான் எனக்கு வேணும்.. அது நடக்க என்ன வேணும்னாலும் நா பன்னுவேன்.. இதுக்கப்றமும் தான்.." என்று பாபி தன் உதட்டிலிருந்த வழிந்த இரத்தத்தை துடைத்தவாறு சொல்ல,

அவன் பேச்சில் ரோஹனுக்கு ஆத்திரம் அதிகரிக்க,
"என்னடா சொன்ன யூ ப்ளடி ******.." என திட்டியவாறு பாபியின் மேல் பாய மீண்டும் இரண்டு குழுவுக்கும் சண்டை பெரிதானது.

அவர்களை கஷ்டப்பட்டு பிரித்த சன்ஜய் பாபியிடம்,
"ஏன்டா இப்படி பன்ன பாபி.. நாம எல்லாம் ஒரே கொலேஜ்டா.. ரோஹன் மட்டும் அப்போ டவுன் ஆகியிருந்தா இது எங்களுக்கு மட்டும் அவமானமா போயிருக்காது உனக்கும் தான்.." என்று புரிய வைக்க,

பாபியோ ஏளன சிரிப்போடு முகத்தை திருப்பிக் கொள்ள ரோஹனோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு கோபத்தில் பாபியை முறைத்துக் கொண்டு நின்றான். இருவரையும் மாறிமாறி பார்த்து பெருமூச்சுவிட்ட சன்ஜய் 'இதற்குமேல் இதை இப்படியே விடக்கூடாது..' என்று நினைத்தவாறு அடுத்து அவன் செய்த காரியத்திலே ரோஹனின் வாழ்க்கையில் மாயா என்ட்ரி ஆவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

"சரிடா இப்போ இந்த பிரச்சினை எல்லாம் விட்டுறலாம்.. நாம வேணா ஒரு பாஸ்கெட்போல் மேட்ச் வச்சிக்கலாம்.. இதுல எந்த டீம் வின் பன்றாங்களோ லூசர் டீம் வின் பன்ன டீம் என்ன சொன்னாலும் கேக்கனும்.. இது உங்களுக்கு ஓகேயா.. நம்ம இரண்டு டீம்மோட மொத்த ப்ரொப்ளமையும் சோல்வ் பன்ன சூப்பர் ஐடியா.." என்று சொல்ல ரோஹனும் பாபியும் கூட சற்று நேரம் யோசித்து மண்டையை பூம்பூம் மாடு மாதிரி ஆட்டி வைத்தனர். சன்ஜய்க்கோ 'ஹப்பாடா..' என்றிருக்க அடுத்தநாளே பாஸ்கெட்போல் மேட்ச் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதில் பாபி குழு ஜெயித்துவிட ரோஹன் சன்ஜய்யை முறைத்த முறைப்பில் அவனுக்கு தான் தூக்கிவாரிப் போட்டது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு விளையாடியதில் வியர்வை வழிய தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹனின் அருகில் மாயாவை விஷமமாக பார்த்தவாறு பாபி வரவும் கீர்த்தி மாயாவை இழுத்துக் கொண்டு செல்லவும் சரியாக இருந்தது.

பாஸ்கெட்போல் கோர்ட்டை சுற்றி யாருமே இல்லாமல் பாபியின் குழுவும் ரோஹனின் குழு மட்டுமே எதிரெதிர் துருவங்களாக விட்டால் முட்டி மோதிக் கொள்வோம் என்ற ரீதியில் நின்றுக் கொண்டிருந்தனர்.

"என்ன சன்ஜய் நீ சொன்ன மாதிரி மேட்ச் நடந்தாச்சு.. அதுல இந்த பாபியும் ஜெயிச்சாச்சு.. சோ, நா என்ன சொன்னாலும் உங்க லீடர் கேட்டு தான் ஆகனும்.." என்று ஏளனமாக சொல்ல,

ரோஹனோ எதுவும் பேசாது சன்ஜய்யை பார்க்க சன்ஜய் தான்,
"உனக்கே தெரியும்.. ரோக்கி கொடுத்த வாக்கை எப்போவுமே மீற மாட்டான்.. என்ன பன்னனும்னு மட்டும் சொல்லு.." என்று சரியாக ரோஹனுக்கு ஆப்பு வைக்க,

"ஐ க்னோ.. உன் ரோஹன் ஜீ என்ன பன்னனும்னா பெருசா எதுவும் இல்ல ஒரு பொண்ணுக்கு ப்ரோபோஸ் பன்னனும்.." என்று பாபி சொல்லவும் ரோஹனோ "வாட்.." என்று அந்த பாஸ்கெட்போல் கோர்ட்டே அதிரும் வண்ணம் கத்தினான் என்றால் சன்ஜய்யோ பாபியை "ஙே" என ஒரு பார்வை பார்த்து வைத்தான்..

"என்ன விளையாடுறியா நம்ம ப்ரோப்ளம்க்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தம்.. தேவையில்லாம ஒரு பொண்ணோட வாழ்க்கைய இதுக்குள்ள கொண்டு வராத அவ்வளவுதான் நீனு.." என்று ஒற்றை விரலைநீட்டி ஆவேசமாக ரோஹன் கத்த,

"என்ன ஜீ மறந்துட்டீங்களா.. ரோஹன் எப்போவுமே கொடுத்த வாக்கை தான் மீற மாட்டானே.. இதுல நாங்க ஜெயிச்சா என்ன சொன்னாலும் கேக்குறேன்னு வாக்கு கொடுத்திருக்க.. கொடுத்த வாக்கை மீற கூடாது.." என்று கடைசி வசனத்தை அழுத்தி சொன்ன பாபி 'உன்னை நான் அறிவேன்' என்ற ரீதியில் ரோஹனை ஒரு பார்வை பார்த்தான்.

காரணம் ரோஹனின் பலம் பலவீனம் இரண்டுமே அது தானே.. 'கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்குற பழக்கமே என் பரம்பரைக்கு கிடையாதுடா' என்ற ரீதியில் கொடுத்த வாக்கை எப்போதுமே மீற மாட்டான் அவன். ஆனால் இதன்பிறகு அடுத்தடுத்தென்று மாயாவினால் மாயாவுக்காக கொடுத்த வாக்கை மீற போகிறோம் என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

ரோஹனோ பாபியை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் அவனையே பார்த்துக்கொண்டு,
"யாரு அந்த பொண்ணு.." என்று இறுகிய குரலில் கேட்க,

அவன் கேட்டதும் தான் தாமதம் பாபியோ ஒரு நமட்டு சிரிப்போடு தன் ஃபோனில் மாயாவின் புகைப்படத்தை காட்டி,
"தர்ட் இயர்.. பெயர் மாயா.." என்று சொல்ல ரோஹனோ அவள் புகைப்படத்தை குழப்பமாக பார்த்தான் என்றால் சன்ஜய்யோ 'இந்த பொண்ணுக்கும் இவனுக்கும் என்ன பிரச்சினை..' என்ற ரீதியில் பாபியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மாயா பாபியை அடித்ததிலும் அவள் பேசிய பேச்சிலும் அவள் மேல் கொலைவெறியில் இருந்தவன் அவளை பழிவாங்கவென ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்திருக்க சரியாக கீர்த்தியிடம் மாயா ரோஹனை பற்றி உருகி உருகி பேசியதை வைத்தே அவள் ரோஹனை காதலிக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் ரோஹனை வைத்தே அவளிடம் ஒரு ஆட்டத்தை ஆட முடிவு செய்தான். அதுவும் சன்ஜய்யின் புண்ணியத்தில் அவனுக்கு வசமாக மாட்டியது.

"ஆமா நா ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்காத.. இந்த பொண்ணுகிட்ட செருப்படி ஏதாச்சும் வாங்கினியோ.. ஜஸ்ட் ஒரு க்ளெரிஃபிகேஷன்க்கு(clarification) தான் கேக்குறேன்.." என்று சன்ஜய் நக்கலாக கேட்க,

அதில் ஒருநிமிடம் மாயா அவனை அடித்தது பேசியது நியாபகத்திற்கு வர கோபத்தை கட்டுப்படுத்த கண்களை அழுந்த மூடி திறந்தவன்,
" லுக் ரோக்கி.. இதை நீ பன்னி தான் ஆகனும் அதுவும் வெலன்டைன் டேய் பார்ட்டில.. நீ ப்ரோபோஸ் பன்னா போதும்.. இல்லன்னா நேத்து நடந்த மாதிரி தான் இனி வர்ற ஒவ்வொரு கம்படீஷன்லயும் நடக்கும்.. நா சொன்னதை நீ பன்னாலே போதும் நானும் எல்லாத்தையும் விட்டுட்டு சமத்தா இருக்கேன்.." என்று பாபி சொல்ல,

ரோஹனோ 'ச்சே' என்று சலித்தவாறு அங்கிருந்து வெளியேற,
"இதை நீ பன்னியே ஆகனும்..கொடுத்த வாக்கை மீற கூடாது ரோஹன் ஜீ.." என்று பாபி கத்தி சொல்ல ரோஹனுக்கு தான் பிபி எகிறியது.

இதை அனைத்தையும் நினைத்து பார்த்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த சன்ஜய்யின் கோலரை ரோஹன் பிடித்து ஒரு ஆட்டு ஆட்ட அதில் சன்ஜய்யோ ஆடிப்போய்விட்டான்.

"உன்னாலதான்.. உன்னாலதான் டா காட்டெருமை எனக்கு இந்த நிலைமை.. எல்லாதையும் பன்னிட்டு பெக்கபெக்கன்னு முழிச்சிகிட்டா இருக்க இடியட்.." என்று ரோஹன் கத்திய கத்தலில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவன் கைகளை தட்டிவிட்டவன்,

"சும்மா சும்மா என்னையே குத்தம் சொல்லாத.. அவன் சொன்னா உனக்கெங்க போச்சு புத்தி.. நீதான் சூதானமா அவன்கிட்ட பொண்ணுங்க சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒத்து வராது நா வேணா உனக்கு குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கி தரேன்னு எடுத்து சொல்லி அவனுக்கு புரிய வச்சிருக்கனும்.. அதை விட்டுட்டு என் சட்டைய கசக்கிக்கிட்டு.. நோன்ஸன்ஸ் பீபல்.." என்று சன்ஜய் எகத்தாளமாக சொல்லி தன் கசங்கிய சட்டையை சரி செய்ய ரோஹனோ 'அடப்பாவி' என்று வாயிலே கை வைத்துவிட்டான்.. அவனுடைய நினைவுகளோ அன்று பாபியுடன் பேசிவிட்டு பாஸ்கெட் போல் கோர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நடந்த நிகழ்வுகளுக்கு சென்றது.

'ச்சே' என்று சலித்துக்கொண்டு பாபி பேசியதையும் காதில் வாங்காது வெளியே வந்தவன் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாது குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் வந்த சன்ஜய்,
"டேய்ய் இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்.. எல்லாமே ரொம்ப நிதானமா யோசிக்கிற நீ இப்போ ஏன் இப்படி நடந்துக்குற.. பேசாம அவன் சொன்னதை பன்னிரலாம்டா.." என்று சொன்னவனை மூக்கு விடைக்க முறைத்தான் ரோஹன்.

"அறிவு கெட்டவனே.. அந்த பொண்ணு என்ன பாவம்டா பன்னிச்சு.. என்னால ஒரு பொண்ண ஹர்ட் பன்ன முடியாது.. அவன் சில்லி தனமா சொல்றதை கேட்டு என்னால ஆட முடியாது.. இதுக்கு வேற வழியில நா முடிவு கட்டுறேன்.." என்று ரோஹன் தீவிரமாக சொல்ல,

"இல்லடா இதை தவிர வேற எந்த வழியில போனாலும் பாபி பன்றதை நம்மளால நிறுத்த முடியாது உனக்கு தெரியாதா அவன பத்தி.. அவன் அப்பாவும் இந்த கொலேஜோட ட்ரஸ்டி.. அவன் என்ன பன்னாலும் அவனுக்கு எதிரா இந்த கொலேஜ் எதுவுமே பன்னாது.. நா சொல்றதை நல்லா யோசி அந்த பொண்ணுகிட்ட ப்ரோபோஸ் மட்டும் பன்னிரு.. ஒருவேள அவ ஏத்துக்கலன்னா அது நம்ம பிரச்சினை கிடையாது.. ஒருவேள ஏத்துகிட்டா அதுக்கப்றம் அந்த பொண்ணுகிட்ட இதை பத்தி சொல்லி புரிய வச்சிக்கலாம்.. படிச்ச பொண்ணு தானே புரிஞ்சிப்பாடா..

உனக்கு உன் ட்ரீம் ரொம்பவே முக்கியம்.. நேத்து ஏதோ லாஸ்ட் ரேன்க்லயாச்சும் நெக்ஸ் லெவல்க்கு செலக்ட் ஆகிட்டோம்.. ஆனா இதுக்கப்றமும் இப்படி நடக்கும்னு சொல்ல முடியாது.. உன் ப்ரொஃபெஷினல்க்காக யோசி இதை விட்டா வேற வழி இல்ல.. என்ட் நீ இதுவரைக்கும் சொன்னதை செய்யாம இருந்தது இல்ல.. கண்டிப்பா அந்த பொண்ணுகிட்ட சொல்லி புரிய வச்சிக்கலாம்.. ட்ரஸ்ட் மீ மேன்.."

என்று சன்ஜய் சொல்ல சற்று நேரம் யோசித்த ரோஹனோ "ஆமா அவ பெயர் என்ன.." என்று கேட்டு வைத்தான். அதன்பிறகே அவன் மாயாவை பார்த்தது ப்ரோபோஸ் செய்தது எல்லாமே..

பேசியே தன் மூளையை சலவை செய்து இன்று எதுவுமே நடக்காதது போல் மொத்த பழியையும் தன் மேல் போட்டு அசால்ட்டாக இருக்கும் தன் உயிர் நண்பனை எதுவும் செய்ய முடியாது அவனை முறைக்க மட்டுமே முடிந்தது ரோஹனால்.

சன்ஜய்யை அவன் கொலைவெறியில் முறைத்துக் கொண்டு நிற்க அவன் பார்வையில் ஜெர்க்காகினாலும் அவன் பக்கத்தில் நெருங்கி,
"என்னாச்சுடா.. அந்த பொண்ணு ஏதும்.." என்று சந்தேகமாக இழுக்க,

அவன் கேட்டதும் தான் தாமதம் மாயாவை நினைத்த ரோஹன், "அவ.. அவள..." என்று ஆவேசமாக கத்தியவன், "டெவில்.." என்று தன் தலைமுடியை தானே பிய்த்துக்கொண்டு கத்த, அவன் செய்கையில் சன்ஜய் தான் விக்கித்துப்போய் நின்றுவிட்டான்.


காதல்போதை?
-------------------------------------------------------------

பார்த்தீங்களா சகோஸ் இதுங்க பன்ன கூத்த.. ஆனா நம்ம மாயாவுக்கு தெரிஞ்சா என்னாகுமோ.. இப்போவே அவ ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா போலயே..
??

-ZAKI?
 
Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
5,535
Reaction score
16,319
Points
113
Location
Madurai
பாபி நல்ல து நினச்சு செஞ்சான. பார்போம் என்ன நடக்குது nu
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top