காதல்போதை 08💙

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

Author
Author
Joined
Aug 26, 2020
Messages
491
Reaction score
1,150
Points
93
Age
21
Location
Srilanka
PicsArt_01-17-04.52.47.jpg

ரோஹனை நிதானப்படுத்தி உட்கார வைத்த சன்ஜய் அவன் அருகே அமர்ந்து,
"என்னடா ஆச்சு.." என்று புரியாமல் கேட்க,

அவனை திரும்பி மூக்கு விடைக்க முறைத்து பார்த்தவன்,
"அந்த பொண்ணுகிட்ட பேசிக்கலாம் அப்படி இப்படின்னு டயலாக் விட்டுட்டு ஒரு வாரம் என்னை அம்போன்னு விட்டுட்டு டூர்னமென்ட்னு போயிட்டல்லடா.. என்னால முடியலடா எப்பா.." கோபத்தில் ஆரம்பத்தவன் சோகமாக முடிக்க சன்ஜய்க்கோ ஒன்றுமே புரியவில்லை.

"டேய் இதுக்கு முன்னாடி என்னை யாரும் இப்படி டோர்ச்சர் பன்னது இல்லைடா.. முதல் மூனு நாள் நல்லா தான்டா இருந்தா அப்றம் கவிதை சொல்றேன்னு மொக்கை பன்ச்சா சொல்லி என் உயிரை வாங்குறாடா.. உதாரணத்துக்கு ஒன்னு எடுத்து விடுறேன் கேளு..
மானம் போனா சொல்வோம் பங்கம்
நீதான் என் சொக்க தங்கம்.. " என்று ஒரு மொடியூலேஷனில் ரோஹன் சொல்லிக்காட்ட சன்ஜய்யோ 'ஙே' என விழித்தான்.

"நைட் கோல் பன்னி விடிய விடிய மொக்கை போடுறாடா.. அவ பேச பேச இதுக்கெல்லாம் காரணமான உன் மேல தான் எனக்கு கொலைவெறியே வரும்.. அந்த பாபி சைக்கோவ நா வேற வழில டீல் பன்னிருப்பேன்.. தேவையில்லாம பேசி என்னை ப்ரைன் வோஷ் பன்னி இந்த நிலைமைல கொண்டு வந்து நிறுத்திட்டியேடா.. இப்போ அவக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு நிக்கிறேன்டா.. பாவி பாவி.." என்று ரோஹன் திட்ட,

சன்ஜய்யோ அதையெல்லாம் சட்டை செய்யாமல் "மேல சொல்லு.."என்று சொல்ல அதில் அவனை முறைத்துக் கொண்டே அடுத்து மாயா செய்த அலப்பறையை கூறத் தொடங்கினான்.

"அன்னைக்கு நைட் என்கிட்ட சாக்லெட் வாங்கி கேட்டு ரொம்ப அடம்பிடிச்சாளேன்னு சரின்னு நானும் சாக்லெட் வாங்கிட்டு போனேனா அன்னைக்கு என்ன பன்னா தெரியுமா.."

"என்ன ரோக்கி கையில சாக்லெட் வச்சிகிட்டு அலைஞ்சிகிட்டு இருக்க.. உன் ஆளுக்கா.." என்று ரோஹனின் நண்பர்கள் கிண்டலாக கேட்க,

அவர்களை முறைத்து பார்த்தவன் எதுவும் சொல்லாது மாயாவை தேடிச்செல்ல அவளோ பாஸ்கெட்போல் கோர்ட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

இவன் சென்று ஒரு பென்ச்சில் அமர "பேபி.." என்று கத்தியவாறு துள்ளி குதித்து வந்தவள் அவன் அருகில் அமர சற்று தள்ளி அமர்ந்தவன் சாக்லெட்டை நீட்ட மாயாவோ அதை வாங்காது அவனையே பார்த்திருந்தாள்.. ரோஹனோ அவளின் பார்வையில் ஒருதரம் குனிந்து தன்னை பார்த்தவன் ஒற்றை புருவத்த உயர்த்தி "என்ன.." என்ற ரீதியில் கேட்க,

அதில் எப்போதும் போல் அவனிடம் மயங்கியவள் அவன் கையிலிருந்த சாக்லெட்டை வாங்கி தூக்கி போட்டு அவன் சட்டை கோலரை பிடித்து இழுத்து அவன் கன்னத்தை கடித்து வைத்துவிட்டாள் அவன் டெவில்.

மாயா கடித்த தன் கன்னத்த தடவியவாறு சன்ஜய்யிடம் ரோஹன் சொல்ல சன்ஜய்க்கோ சிரிப்பு தாளவில்லை. 'அவ சாக்லெட்னு இவன்கிட்ட எதையோ எதிர்பார்த்திருக்கா.. இந்த டியூப்லைட்க்கு அது புரியல போல..' என்று நினைத்த சன்ஜய் சிரிப்பை அடக்கிக்கொண்டு 'மேல சொல்லு..' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்க்க, ரோஹனோ மீண்டும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவளின் அடுத்த அட்டூழியத்தை கூறினான்.

"அன்னைக்கு ஆடிட்டோரியம்ல டான்ஸ் ப்ராக்டிஸ் பன்னிகிட்டு இருந்தேன்டா.. கொஞ்சம் நேரம் என்னை பார்த்து அமைதியா உட்கார்ந்திருந்தவ அதுக்கப்றம் என்கிட்ட.."

"ரோஹன் சூப்பர் சீன்.. நம்ம தலையோடது வா பார்க்கலாம்.." என்று மாயா சொல்ல,

"ப்ராக்டிஸ் இருக்கு மாயா அப்றம் பார்க்கலாம்.." என்று ரோஹன் மறுத்ததையும் பொருட்படுத்தாமல் அவன் கதற கதற இழுத்துக்கொண்டு வந்தவள்,
"என்ன பேபி நீ எப்போ பாரு ப்ராக்டிஸ் தானா.. கொஞ்ச நேரம் தானே அப்றம் ப்ராக்டிஸ் பன்னிக்கலாம்..பட் நீ பார்த்தேனா போகவே மாட்ட.. நம்ம தல அப்படி பேபி.." என்று சொல்லி தன் ஃபோனில் வீடியோவை தேட,

ரோஹனும் 'இவ மொக்கைய கேக்குறதுக்கு படமாவது பார்க்கலாம்..' என்று மானசீகமாக நினைத்தவாறு அவளை விட்டு தள்ளியே அமர்ந்துக்கொள்ள அவனை நெருங்கி அவள் படத்தை ஓடவிட அதை பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

"நா கூட ஏதோ நம்ம தல படம் அதையாச்சும் பார்க்கலாமேன்னு பார்த்தா அவ தல தலன்னு சொன்னது நம்ம தல அஜித் இல்லைடா.. சின்ச்சேன.." என்று சொல்ல சன்ஜய்யோ சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

"சிரிக்கிறியாடா கிராதகா.. ஆனா ஒன்னுடா.. நம்ம தல படத்துக்கு கூட அத்தனை விசில் அடிச்சிருக்க மாட்டோம்.. சின்னபுள்ளதனமா அதை பார்த்துகிட்டு சின்ச்சேன் போடுற பன்ச்கெல்லாம் ஆனா ஊனா விசில் அடிச்சிகிட்டு பக்கத்துல இருந்த என்னையும் அடிச்சிகிட்டு கொடுமைடா.." என்று பாவமாக சொன்ன ரோஹனை பார்த்த சன்ஜய்க்கே பாவமாகித்தான் போனது.

ரோஹன் அழாத குறையாக சன்ஜய்யிடம் புலம்பிக்கொண்டிருக்க திடீரென "பேபி.." என்ற குரலில் பதறியடித்துக் கொண்டு நின்று திரும்பி பார்த்தவன் அவன் எதிரே அவனவளே "ஹாய்ய் பேபி.." என்று சொல்ல ரோஹனோ "ஹிஹிஹி ஹாய் மாயா.." என்று இழித்து வைத்தான்.

இதழுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த சன்ஜய்யை பார்த்தவள்,
"ஹாய் அண்ணாத்த.." என்று சொல்ல, அவனோ விழிவிரித்து பார்க்க
"என் ஆளோட ஃப்ரெண்டு எனக்கு அண்ணால்ல.. அதான்.." என்று மாயா சொல்லவும் சன்ஜய்யும் தலையை எல்லா பக்கமும் பூம் பூம் மாடு மாதிரி ஆட்டியவாறு "நல்லது தங்கச்சிமா.." என்று சொல்ல மாயாவுக்கோ அவன் தங்கச்சிமா என்றழைப்பில் ஒரே குஷி தான்.

திருதிருவென முழித்துக்கொண்டிருந்த ரோஹனின் புறம் திரும்பியவள்,
"பேபி க்ளாசுக்கு போகல்லையா.." என்று கேட்க,

"அது வந்து.. ஃப்ரெண்டு.. ஃப்ரெண்ட் மியூசிக் ரூம்ல இருப்பான் அதான் அவன பார்க்கலாமேன்னு போறேன்.. நீ போ மாயா லெக்ச்சர்ஸ்க்கு டைம் ஆச்சு.." என்று ரோஹன் சொல்ல,

"அப்போ நானும் உன் கூட வரேன்.. வா போகலாம்.." என்று சொல்லிவிட்டு மாயா நகர பதறிய ரோஹன்,
"நோ.. நோ மாயா அங்க போய்ஸ்(Boys) மட்டும் தான் இருப்போம்.. நீ வந்து என்ன பன்ன போற.. உனக்குதான் ஒருமாதிரி நெவர்ஸ்ஸா(nervous) இருக்கும்.." என்று ரோஹன் மறுக்க,

"அதெல்லாம் இல்லை உன்கூட நா இருக்க போறேன்.. என் பக்கத்துல நீ இருக்க போற.. தட்ஸ் ஆல் வா போகலாம்.." என்று மாயா ரோஹனை இழுக்க, என்ன சொல்வது என்று தெரியாமல்,
"அது.. அது வந்து.. மாயா.." என்று ரோஹன் தடுமாற,

மாயாவோ அவனை விட்டு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனையே குறும்பாக பார்த்தவாறு,
"அப்போ ஓகே பேபி அதை விடு.. நா உனக்காக ஒரு கவிதை வச்சிருக்கேன்.." என்று சொன்னதும் தான் தாமதம்,

கை நீட்டி தடுத்தவன்,
"இப்போ என்ன என்கூட வரனும் அதானே.. போகலாமாஆஆ.. "என்று பல்லைகடித்துக்கொண்டு கேட்டவாறு சன்ஜய்யை முறைத்துவிட்டு ரோஹன் முன்னே செல்ல மாயாவோ "யாருகிட்ட.." என்று தன் கோலரை கெத்தாக தூக்கிவிட்டவாறு அவன் பின்னே செல்ல இந்த கூத்தை பார்த்த சன்ஜய் தான் விழுந்து விழுந்து சிரித்தான்.

மியூசிக் ரூமில்,

சன்ஜய்க்கோ அழைப்பு வர அவன் அழைப்பை ஏற்றவாறு வெளியில் சென்றுவிட இப்போது அங்கு ரோஹன் மாயாவை தவிர யாருமே இல்லை.

"ஆமா உன் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் இருப்பாங்கன்னு சொன்ன.. எங்க அவங்க.." சுற்ற முற்றி பார்த்தவாறு மாயா கேட்க,

"இப்போ வந்துருவாங்க.." என்று சலிப்பாக சொல்லியவாறு அங்கிருந்த தன் நண்பனின் கிட்டாரை எடுத்து ஒரு கதிரையில் அமர்ந்த ரோஹன் அதை இசைக்க ஆரம்பித்தான்.

"வாவ்வ் உனக்கு கிட்டார் ப்ளே பன்ன தெரியுமா பேபி.." என்று மாயா ஆச்சரியமாக கேட்க,

"ஏதோ கொஞ்சம் தெரியும் ஃப்ரென்ட்ஸ்கிட்ட கத்துகிட்டது தான்.." என்று கூறியவாறு ரோஹனோ கிட்டாரை வாசித்துக் கொண்டிருக்க,

மாயாவோ 'நம்ம ஆளு மல்டி டேலன்டெட் பெர்சன் தான் போல..சூப்பரூ..' என்று நினைத்தவாறு,
"பேபி எனக்கும் கத்து தரியா.." என்று ஆர்வமாக கேட்க,

"அதான் சொன்னேனே எனக்கு அவ்வளவா தெரியாதுன்னு.. நீ வேணா மியூசிக் க்ரூப்ல சேர்ந்து கத்துக்க.. இது மட்டும் இல்லை எல்லாம் கத்துக்கலாம்.." ரோஹன் சலிப்பாக சொல்லவும்,

"நோ.. நோ.. எனக்கு நீதான் கத்து தரனும்.. உனக்கு தெரிஞ்சதை கத்து தா.. ப்ளீஸ்.." என்று கெஞ்சுதலாக மாயா முகத்தை வைக்க, ஒரு பெருமூச்சுவிட்ட ரோஹன் 'சரி..' என்று தலையாட்டி வைத்தான்.

அடுத்த கணம் அவன் கையிலிருந்த கிட்டாரை மாயா எடுக்க,
"ஹேய்ய் கத்து தர சொல்லிட்டு கிட்டாரை எடுக்குற.. மொதல்ல என் எதிர்ல உட்காரு.." ரோஹன் கடுகடுக்க,

"அய்யோ பேபி நாம என்ன சாதாரண ஆளா லவ்வர்ஸ் பேபி.. லூசுத்தனமா எதிர்ல உட்கார சொல்ற.. உனக்கு விவரமே பத்தல்ல.." என கூறியவாறு மாயா அவன் மடியில் உட்கார பதறிவிட்டான் ரோஹன்.

"ஏய் ஏய்ய் என்ன பன்ற.. எழுந்துருடி.. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க.. கொலேஜ்ல வச்சு செய்ற காரியமா இது.." பதட்டமாக ரோஹன் கத்த,

அவன் மடியில் உட்கார்ந்தபடி அவன் வாயை கையால் பொத்தியவள்,
"எதுக்கு கத்துற அதான் யாரும் இல்லைல்ல.. சோ.." என்று இழுத்தவாறு தன் மடியில் கிட்டாரை வைத்து அவன் கையை தன் கையோடு சேர்த்து கிட்டாரின் ஸ்ட்ரிங்க்ஸ்ஸின்(Strings) மேல் வைக்க அவனுக்கு தான் இவளுடைய செய்கையில் அவஸ்தையாகிப் போனது.

என்ன செய்ய ஏது செய்ய என்று தெரியாமல் அவளுடைய அருகாமையில் ஒரு ஆண்மகனாக தனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் நெளிந்துக் கொண்டிருந்தவன் சன்ஜய் வருவதை பார்த்து 'தெய்வமே..' என்று நினைத்தவாறு அவனை கும்பிடாத குறையாக நன்றியுடன் பார்த்தான்.

தன் மடியிலிருந்த மாயாவை எழுப்பி விட்டவன் கண்களால் சன்ஜய் வருவதை தீவிரமான முகபாவனையில் காட்ட அவளோ 'க்கும் இல்லைன்னா மட்டும் அப்படியே கொஞ்சிட்டாலும்..' என மனதில் நினைத்தாலும் வெளியில் "ஓகே பேபீஈஈ..." என்று இழித்து வைத்தாள் மாயா.


அடுத்த நாள்,

"என்ன பேபி ரொம்ப ஹேப்பியா இருக்க போல.." என்ற குரலில் தன் வகுப்புக்கு கீர்த்தியுடன் சென்றுக் கொண்டிருந்த மாயா சட்டென நின்று திரும்பி பார்க்க அவளெதிரே ஏளனப் புன்னகையுடன் நின்றிருந்தான் பாபி..

அவனை இரு புருவங்களையும் உயர்த்தி சலிப்பாக பார்த்தவள்,
"ஆமா ஆமா ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. இப்போ உனக்கென்னடா பிரச்சினை.." என்று கேட்க,

கீர்த்தியோ, "ஜிலேபி அவங்க கூட என்ன பேச்சு.. நீ வா போகலாம்.." என்று மாயாவை இழுக்க,

அவளை ஏற இறங்க பார்த்தவன்,
"என்ன மரியாதை ரொம்ப தேயுது.. தட்ஸ் ஓகே.. கொஞ்சநாளாச்சும் ஹேப்பியா இருந்துகோ பேபி.. அப்றம்.." என்று இழுத்தவன் இருபக்கமும் தலையாட்டி சிரிக்க, மாயாவோ புருவத்தை நெறித்து புரியாமல் பார்த்தாள்.

மாயாவையும் பக்கத்திலிருந்த கீர்த்தியையும்அ இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து திரும்பி நடந்து சென்றவனின் மேல் மாயாவுக்கு கொலைவெறியே வர,
"டேய்ய் சைக்கோ அப்றம் என்னடா அப்றம் அதுக்கப்றமும் என் ரூஹி கூட நா ஹேப்பியா இருக்க தான் போறேன்.. அதை பார்த்து பார்த்து உனக்கு தான் வயிரெரிய போகுது.." என்று போகும் அவனை பார்த்தவாறு மாயா கத்த, அவனோ அப்போதும் திரும்பி பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு செல்ல உச்சகட்ட கோபத்திற்கே சென்றுவிட்டாள் மாயா.

அன்று இரவு,
ஹோஸ்டலில்,

ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவாறு சோகமே உருவமாய் ஏதோ யோசித்துக்கொண்டு கீர்த்தி நின்றிருக்க அவசர அவசரமாக நாளை சமர்ப்பிக்க வேண்டிய அஸ்ஸைன்மென்ட்டை செய்து முடித்த மாயா 'ஸப்பாஹ்ஹ் இதை விட என் ரூஹிய சமாளிச்சிரலாம் போலயே..' என்று பொருமியவாறு நிமிர்ந்து கீர்த்தியை பார்க்க அவள் நின்றிருந்த கோலத்தை பார்த்து நேரத்தை பார்த்தவள்,
'என்ன இவ எனக்கு முன்னாடியே இதெல்லாம் கம்ப்ளீட் பன்னி பக்காவா இருப்பா.. நேரம் ஆகுது.. வந்ததிலிருந்தே எதையோ யோசிக்கிட்டு இருக்கா..' என்று யோசித்தவள் அவள் அருகில் சென்று,
"போன்டா.." என்று அவள் தோள்தொட திரும்பி பார்த்த கீர்த்தியின் கண்களோ கலங்கிப்போயிருந்தது.

அதைப்பார்த்து பதறிய மாயா,
"என்னாச்சு போன்டா.. ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு.." என்று பதட்டமாக கேட்க,

"ஒன்னுஇல்ல ஜிலேபி விடு.." என்ற கீர்த்தி மாயா முறைத்த முறைப்பில்,
"அது வந்து ஜிலேபி தங்கச்சிக்கு ஸ்கூல் ஃபீஸ் கெட்டனும்.. அப்பாகிட்ட சுத்தமா காசு இல்ல.. அதான் என்ன பன்றதுன்னு ஒன்னுமே புரியல.." திக்கித்திணறி கீர்த்தி சொல்லி முடிக்க,

மாயாவோ, "உன் அப்பா என்ன வேலை பாக்குறாரு.." என்று பட்டென்று கேட்டாள்.

"டிரைவரா இருக்காரு பாபியோட வீட்ல தான்.. ஏற்கனவே என்னோட ஸ்டடீஸ்க்கு மொத்த செலவுமே பாபியோட அப்பா தான் பாத்துக்குறாரு.. இப்போ தங்கச்சிக்காக போய் கேக்குறது எனக்கும் சரி அப்பாவுக்கும் சரி ரொம்ப சங்கடமா இருக்கு.." என்று கீர்த்தி சொல்ல,

"டோன்ட் வொர்ரி போன்டா எவ்ரிதிங் வில் பீ ஃபைன்.. இப்போ என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அதை தங்கச்சிகிட்ட கொடு.. அப்றம் என்ன பன்னலாம்னு யோசிக்கலாம்.." என்று மாமா சொல்ல,

அவளை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டவள்,
"இல்லை ஜிலேபி வேண்டாம்.. ஐ அம் சோரி மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி அதான் உன்கிட்ட சொல்லி.." என்று பேசிக் கொண்டு சென்றவளது மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்த மாயா,
"கொன்னுறுவேன் உன்ன.. நீ என் பெஸ்ட் ஃப்ரென்ட் டி.. நாம பழகி இருக்க காலம் குறைவா இருக்கலாம் ஆனா ஒரு ஃப்ரென்டா உன்கூட நா நெருங்கி பழகினதை விட யார்கூடவும் க்ளோசா இருந்தது கிடையாது.. நீ எப்போவுமே எனக்கு ஸ்பெஷல் தான்.." என்று மாயா கூற அவளை இறுக அணைத்திருந்தாள் கீர்த்தி.

"ஓவர் ஃபீலிங் உடம்புக்கு ஆகாது போன்டா.." என்று மாயா கிண்டலாக சொல்ல அவள் முதுகில் ஒரு போடு போட்டவள்,
"சரி வா ஜிலேபி சாப்பிட்டுட்டு அஸ்ஸைன்மென்ட் பன்னலாம்.. " என்று நகர போனவளின் கையை பிடித்த மாயா,
"மேடம் நாங்க எப்போவே எங்க அஸ்ஸைன்மென்ட்ட முடிச்சிட்டோம்.." என்று இல்லாத கோலரை தூக்கிவிட்ட மாயாவை விழிவிரித்து பார்த்தவள் அதே அதிர்ச்சியுடன் தன் அஸ்ஸைன்மென்ட் வேலையை ஆரம்பித்தாள்.

அறையிலிருந்து வெளியே வந்த மாயா அவசரமாக ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுக்க மறுமுனையில் ஏற்றதும் தான் தாமதம்,
"என்னாச்சு அங்கிள் ஏதாச்சும் தெரிஞ்சிச்சா.." என்று இவள் கேட்க,

மறுமுனையில், ------------------------------------

"வாட்.. " என்று கத்தியவள்,
"அதுக்கு வாய்ப்பேயில்லை.. ஹவ் இஸ் தட் பொஸிபள்.. அவங்க உடம்புல எந்த பிரச்சினையும் இல்ல.. பட் அவங்க போஸ்மாட்டம் ரிபோர்ட்ல எதையுமே கண்டுபிடிக்க முடியல.. அப்றம் எப்படி.." மாயா கத்த,

மறுமுனையில், ------------------------------------

"ச்சே நாளே நாள்ல அவங்க உயிர குடிக்கிற அளவுக்கு ஒரு நோயா.. என்னால இதை சாதாரண இழப்பா ஏத்துக்க முடியாது.. கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்.." என்றவள் அழைப்பை துண்டித்து அப்படியே கலங்கிய நிலையில் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டாள்.. ஆனால் பதட்டத்தில் தோன்றாத சில உண்மைகளை அவள் ஆழ்ந்து யோசித்திருந்தாள் அவளால் காரணத்தை தெரிந்திருக்க முடியுமோ என்னவோ..காதல்போதை💙
--------------------------------------------------------------

-ZAKI💙
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top