• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 06
2019-10-08-16-39-03-866.jpg
அத்தியாயம் 06

ஆசாத் – ரசியா திருமணம் பிரமாண்டமாக, கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின் ஆசாத்தின் சொந்த ஊரான பெங்களூரில் எளிமையாக வலிமா விருந்து நடைபெற்றது. ஆசாத்தின் மாசற்ற அன்பிலும், பெருந்தன்மையான பொறுமையிலும் ரசியா திக்குமுக்காடி போனார். மேலும் திருமணம் முடிந்த கையோடு பெங்களூரில் புது ஜவுளி கடையை திறந்தார் ஆசாத். கணவன் மனைவி இருவருமே அயராது உழைத்தனர். உழைப்பிற்கு நடுவே காதலித்த பலனாய் வந்து பிறந்தான் ஜிஷான் ரிஸ்வி. கடையில் வியாபாரமும் அமோகமாக நடந்தது. பிரசவத்திற்கு கூட ஆசாத் ரசியாவை திருச்சிக்கு அனுப்பவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அவரின் குடும்பமே ரசியாவை கவனித்து கொண்டது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார் ரசியா….

தனது மகள் வயிற்று பேரனை பார்க்க வந்த கமருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மகளின் நிறைவான வாழ்வை கண்டு பூரித்து போனார். அவரோடு சேர்ந்து மொத்த குடும்பமும் வந்திருந்தது. ரியாஸின் தலைமையில் அஸ்மா, ரமீஸ், யாஸ்மீன் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆண்கள் அனைவரும் பிள்ளையை பார்த்து விட்டு ஆசாத்தின் கடைக்கு சென்றிருந்தனர். பெண்கள் மூவரும் ரசியாவோடு இருந்தனர்.

“ புள்ளைக்கு என்ன பேரு வைச்சிருக்கீங்க ரசியா?” ஆவலாய் வினவினார் கமர். இஸ்லாத்தில் குழந்தை பிறந்த ஏழு நாட்களுக்குள் பெயர் வைத்து விட வேண்டும். அதனால் கமர் குடும்பம் வரும் முன்னரே பெயரிட்டிருந்தனர்.

“ ஜிஷான் ரிஸ்வி”

“ என்னது?”

“ ஜிஷான் ரிஸ்வி மா”

“ இதென்ன ரசியா… வாயில நுழையாத பேரா வைச்சிருக்கீங்க. எனக்கு ஒன்றும் புரியல…. போ” சலித்து கொண்டார் கமர்.

“ உம்மா… நானும் உன் மருமவனும் தேடி தேடி வைச்சிருக்கோம். நீ என்னடானா இப்படி சலிச்சிக்கிறியே …. நீ ரிஸ்வி னு கூப்பிடு மா” சின்ன முறுவலோடு கூறினார் ரசியா.

“ ம்… ரிசுவி… சரி நல்லா தான் இருக்கு” என ஒரு வழியாய் சமாதானம் ஆனவர் பேரனை தூக்கி தன் மடியில் படுக்க வைத்தார்.

“ என்ன அழகா தூங்குறான் பாரு….”மடியில் ரோஜா குவியலாய் கிடந்த ரிஸ்வியை காண காண திகட்டவில்லை கமருக்கு. தன் கழுத்தில் கிடந்த சங்கிலிகளில் ஒன்றை கழட்டியவர் பேரனின் கழுத்தில் அணிவித்தார்.

“ அட… செயின போட்டவுடனே என் பேரனுக்கு ராஜ களை வந்துடுச்சி பாரேன்…” என சிலாகித்தார். ஜமீலா தன் பங்குக்கு ஒரு செயினை கழற்றி போட, பாவம்…. சபூரா தாலி செயினை தவிர கூடுதலாக எந்த நகையும் அணிந்திருக்கவில்லை. அவருக்கு எளிமையாக இருந்தே பழகிவிட்டது.

“ அச்சோ…. மன்னிச்சிக்கடா குட்டி…. மாமி கிட்ட இப்போ கொடுக்க எதுவுமில்ல…. சீக்கிரமே உனக்கு அழகான பரிசை தாரேன்” என ரிஸ்வி நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டார். அதுவரை தூங்கி கொண்டிருந்த குழந்தை தன் கண்களை லேசாய் திறந்து பார்த்து சிரித்தது.
“ மாமியா கையில போனதும் எப்படி சிரிக்கிறான் பாரு ஜமீலா… அடேய் குட்டி பயலே…. அவ பொண்ணு பெத்து வைச்சிருக்கானு இளிக்கிறியா” என கமரு விளையாட்டாக கூற, ரசியா முகம் சுளித்தார்.


“ என் மவன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மா. அவன் ஏன் பொண்ணு கொடுங்க னு இவங்க கிட்ட வந்து இளிக்கணும்”

“ இவன் ராஜானா என் பேத்தி இளவரசி. மாமன் மவ இருக்கையில, வெளியே போய் முடிப்பானோ உன் மவன்? நல்லா இருக்குதுலா சங்கதி” தோள்பட்டையில் முகத்தை இடித்து கொண்டார் கமர். குழந்தை பிறந்தவுடனே இவனுக்கு அவள், அவளுக்கு இவன் என பேசி வைப்பது அந்த காலத்தில் சகஜம் தானே…. ஆனால் இவர் ஒரு படி மேல போய் பிறக்காத பேத்திக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

“ மாமி… என் மவ யாஸ்மீன் இந்த ரிஸ்வி குட்டிய விட பெரியவ. நீங்க கோபப்படுறதுல நியாயமேயில்லை.” என மாமியாரை கேலியாகவே கூறி சாந்தி படுத்தினார் சபூரா.

“ அதனால என்ன சபூரா…. ரெண்டாவது நீ பெற மாட்டியா என்ன?”

“ தாய் மாமன் மவள தான் முடிக்கணும் னா என் ஜமீலா மச்சி ( அண்ணி) மட்டும் ரெண்டாவது பெற மாட்டாங்களா? அவங்க மகள என் மவனுக்கு எடுப்பேன்” என வெடுக்கென கூறினார் ரசியா.

“ நல்ல விஷயம் ரசியா. நான் இல்ல னு சொல்லல. அவ புள்ளய ஏன் ஒதுக்குற? அது உன் காகாவோட புள்ளையும் தானே?”

“ அதான் என் காகாவயே வெறுக்க வைச்சிட்டாங்களே சின்ன மச்சி” முணுமுணுத்தார் ரசியா.

“இவ்வளவு நாள் தான் ஏதோ சின்ன புள்ள தெரியாம பேசுற னு அமைதியா இருந்தேன் ரசியா. கல்யாணம் முடிஞ்சி, புள்ளையும் பெத்துட்ட… இனிமேலும் சபூராவ மட்டமா பேசுனா கேட்டுட்டு இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்றார் கமர் கோபமாக.

“ அடேங்கப்பா… ஒன்னுமில்லாத வீட்டுலேந்து வந்தவங்களுக்கு இவ்ளோ வக்காலத்தா?”

“ பல்லை தட்டிடுவேன். ஒன்னுமில்லாத வீட்டுலேருந்து வந்தா என்ன? உன் மாப்பிள்ளையும் அப்படி வந்தவரு தான். என்ன கொறஞ்சி போய்டாங்க? இனிமேயாவது சபூராவ இப்படி பேசும் போது உன் மாப்பிள்ளைய மனசுல வைச்சி பேசு” என வாயை விட்டார் கமர்.

ரசியாவிற்கு கோபம் மள மளவென ஏறியது. தாய் மகள் சண்டையில் தலையிட முடியாமல் மருமகள்கள் இருவரும் கையை பிசைந்தனர்.“ உம்மா பார்த்து பேசு.என் மாப்ளையும் இவங்களும் ஒன்று கிடையாது.அவங்க பத்தர மாத்து தங்கம். அவங்க கூடெல்லாம் ஒத்து (ஒப்பிட்டு) பேசுறதுக்கு இவங்களுக்கு தகுதி கிடையாது. என் காகாவ மயக்கி வீட்டுக்குள்ள வந்தவங்க தானே இவங்க?” வார்த்தைகள் சாட்டையாய் சுழற்றி அடிக்க, துடிதுடித்து போனார் சபூரா.

“ அப்படி பேசாத ரசியா….” ஜமீலா கூட பொறுக்க முடியாமல் அதட்டிவிட்டார். கலங்கி நிற்கும் சபூராவை வாஞ்சையாய் அணைத்து கொண்டார்.

“ ஏய்…. என்ன வார்த்தைலா பேசுற? கோபம் பொத்துட்டு வந்தா என்ன வேணா பேசுவியா? தங்கம்…. தங்கம் னு நீ தூக்கி வச்சிகிட்டு ஆடுறீயே…. அந்த மனுசன உனக்கு கட்டி வைச்சதே சபூரா தான். “ என கமர் ஒரு போடு போட ஆடி போனார் ரசியா.

அவர் அமைதியான நொடியில் சுதாரித்தார் சபூரா. “ விடு ரசியா… மாமி ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க. பச்சை உடம்புகாரி நீ படுத்துக்கோ” துளிர்த்து வடிந்த கண்ணீரை மறைத்தபடி கூறினார்.

“பழி வாங்கிட்டீங்க இல்ல மச்சி…. உங்கள குத்தி காட்டி பேசினேன் னு என்னை ஒன்னுமில்லாத வீட்டுல கட்டி கொடுக்க வைச்சிட்டீங்க இல்ல” குரோதமாய் வினவினார் ரசியா.

“ அப்படியெல்லாம் இல்ல ரசியா…. ஆசாத் உனக்கு பொருத்தமா இருப்பாரு னு நெனச்சி தான்…..”

“ எனக்கு பொருத்தம் பார்க்க என் உம்மா இருக்காங்க… உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கரிசனம்?”

“ நீ இப்படியே அவள கழிச்சி பேசிட்டே இரு. உன் மவன் அவ மவள தான் கட்ட போறான் பாரு” என்ற தாயை வெறித்து பார்த்தவர் “ பெரிய காகா மவள தான் என் மவனுக்கு கட்டுவேன்” என்றார் அழுத்தமாக.

“சரி… சரி… காலம் வரும் போது நடக்குறத பார்க்கலாம். இப்போ வாயாடாம படு.” ரசியாவின் பிடிவாதம் அனைவரும் அறிந்ததே.என்ன பேசினாலும் அவரது கருத்திலிருந்து அவர் மாற போவதில்லை. மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்காமல் அத்தோடு முடித்து விட்டார் கமர்.

விஷயம் அறிந்து முபாரக் கோபப்பட்டு ரசியாவை திட்டினார், அமீர் தன்னால் முடிந்த மட்டும் தங்கைக்கு அறிவுரை கூறினார். ஆனால் ரசியாவின் மனம் துளியும் மாறவில்லை மாறாக மேலும் சபூராவின் மேல் சினம் கூடியது. தன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் குடும்பத்தையே தனக்கு எதிராக மாற்றிவிட்டதோடல்லாமல் தன் வாழ்க்கையையும் சபூராவே தீர்மானித்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த விஷயம் எதுவும் ஆசாத்திற்கு தெரியாது.

ரசியா அதற்கு பின் சபூராவை மட்டம் தட்டி பேசுவதில்லை ஆனாலும் சபூரா மேலிருந்த வெறுப்பு மட்டும் நீறு பூத்த நெருப்பாக மனதிலேயே கனன்று கொண்டு இருந்தது.

தொடரும்….

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top