காதல் அடைமழை காலம் - 15(2)

#1
ரியாஸ் அவனது மனைவி சனோபர், அஸ்மா மற்றும் காசிம் வந்திருந்தனர்.பல வருடங்கள் கழித்து பார்ப்பதில் படபடப்பும் பரபரப்பும் அவரை சூழ்ந்து கொண்டது.

“ சார்.... ரெண்டு ரெண்டு பேரா போய் பாருங்க.” என செவிலியர் சொல்லி செல்ல, அஸ்மாவும் காசிமும் அறைக்கு வெளியே நின்று கொண்டு மற்றவர்களை உள்ளே அனுப்பினர். பின் இருவரும் ஏதோ பேசி சிரித்த படியிருக்க, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் சரா. இவர்களை போல தானே நமது பெற்றோரும் ஒரு காலத்தில் அன்யோனியமாக இருந்திருப்பார்கள் என எண்ணிய நொடி அவளது கண்கள் ஈரம் கசிந்தன. பெற்றோர் இருவரோடும் வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கலங்கிய கண்களோடு அன்னையை பார்க்க அவரும் கண் கலங்க அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் உள்ளே சென்றவர்கள் வெளியே வர, இவர்கள் உள்ளே சென்றனர். சிறிது நேரத்தில் கமர் வெளியே வந்தார்.

“ ரமீஸ்.... நான் இவங்களோட வீட்டுக்கு என் கார்ல போறேன். நீ கொஞ்ச நேரம் கழிச்சி மாமாவையும் மாமியையும் இப்போ வந்த கார்ல அனுப்பி வைச்சிடு.” என்று விட்டு ரமீஸ் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டிற்கு கிளம்பினார்.

“ சரி ஆச்சா.... எல்லாருக்கும் சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கேன்.... கொஞ்ச நேரத்தில வந்திடும்” என்றவன் அவர்களை அனுப்பி விட்டு உள்ளே சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் காசிமும் ரமீஸும் பேசிக் கொண்டே வந்து சபூரா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சற்று தள்ளி அமர்ந்தனர். இதயம் தடதடக்க அமர்ந்திருந்தார் சபூரா.

“ டாக்டர் என்ன சொல்றாங்க ரமீஸ்?” என ரிதாவை பற்றி விசாரித்தார் காசிம்.

“ 2,3 டெஸ்ட் எடுக்கணும் னு சொல்லியிருக்காங்க. ரிபோர்ட் வந்த பிறகு தான் சொல்லுவாங்க மாமா”

“ ஓ... சரி. இந்த விஷயத்தை எல்லாம் ரசியா மச்சி கிட்ட சொல்லி கிட்டு இருக்காதே...”

“ ஏன் மாமா?”

“ நாளைக்கு ரிதா வாக்கபட போற வீடு அது... எதுக்கு இதையெல்லாம் சொல்லி கிட்டு.... அதுலயும் அந்த ரிஸ்வி ஒரு முசுடு. அப்படியே அவன் உம்மாவோட ஜெராக்ஸ்.... நாளபின்ன கல்யாண பேச்சு எடுக்கும் போது ஏதாவது பிரச்சனை பண்ணுவான் “

“ இருந்தாலும்....”

“ சொல்றத சொல்லிட்டேன். அவனுக்கு விஷயம் தெரிய வேணாம்”

“ சரி மாமா... அப்புறம் அந்த திருப்பூர் பாய் போன் பண்ணாரு மாமா. மூணு மாசமா பேமண்ட் வரலயாம்.”

“ அவன் எதுக்கு உனக்கு போன் பண்றான்? அவன் லோடு சரியா அனுப்பல னு நான் தான் பேமண்ட்ட இழுத்தடிக்கிறேன். இனிமே வியாபார விஷயமா யார் போன் பண்ணாலும் என் கிட்ட பேச சொல்லு.” என சொல்லிக் கொண்டிருக்க, அஸ்மா அழைத்தார் என உள்ளே சென்றார்.

“ ம்மா.... அவங்க என்னமா ரிதாவ பற்றி ஏதேதோ சொல்றாங்க?”

“ஆமாலா.... ரிஸ்வி பிறந்தவுடனேயே ரிதாவ பேசி வைச்சிட்டோம்....”

“ இதென்னமா ரப்பீஷா இருக்கு?அவங்க மனசுல என்ன இருக்குமோ?” என்றாள் எரிச்சலாக.

“ அதெல்லாம் அந்த காலத்தில சகஜம் சரா.” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ரமீஸ் அங்கு வந்தான்.

- மழை வரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

New threads

Top