• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
ஹாய் ப்ரெண்ட்ஸ்.....

எதிர்பாராத விதமாக வெளியூர் சென்று விட்டதால் எபி கொடுக்க முடியவில்லை.( இல்லாட்டி மட்டும் நீ ஒழுங்கா எபி கொடுத்திடுவே பாரு னு நீங்க முணுமுணுக்குறது கேட்குது.... ஸாரி....) இருந்தாலும் முயன்று ஒரு எபி கொடுத்திருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.....


காதல் அடைமழை காலம் – 21

அத்தியாயம் 22


இளந்தென்றல் தவழ்ந்து வரும் தோட்டத்தில் அமர்ந்திருந்த மைசராவின் நீர் நிறைந்த கண்களை இரு கரங்கள் வந்து மூட, ‘திக்’கென திடுக்கிட்டவள் அந்த மென் கரங்களை தொட்டதுமே அது யாரென கண்டுபிடித்துவிட்டாள்.

“ ரிதா..... “ என உற்சாகமாக திரும்பினாள்.

“ சரா.... அழறியா” நாடி பிடித்து கேட்டாள் ரிதா.

“ இல்ல... அது.... அது....” அதுவரை அவள் பிடித்து வைத்த அழுகை சட்டென உடைந்தது.

“ என்னாச்சு சரா. ஏன் அழற? என் கிட்ட சொல்ல மாட்டியா?” கலவரமாய் கேட்டாள் ரிதா. அவள் அப்படி கேட்டதும் ரிஸ்வி யாரிடமும் சொல்ல கூடாது என கூறியது நினைவு வந்தது.

“ அவன் சொல்ல கூடாது னு சொன்னதுக்காகவே ரிதா கிட்ட சொல்லிவிடலாமா?” என ஒரு கணம் தோன்றினாலும் ரிதா இப்போது இருக்கும் மனநிலையில் சொல்வது சரியில்லை என நினைத்தாள்.

தோழியிடம் கூற ஒரு காரணம் தேடிக் கொண்டிருக்க,” உன் உம்மாவ பற்றி நினைச்சிட்டு இருந்தியா?” எனவும், ஆமாம் என்பது போல் தலையசைத்தாள். தன் தோழியின் துயர் கண்டு ரிதாவின் முகம் வாடிவிட்டது.

அவளை திண்ணையில் அமர வைத்து தானும் அருகே அமர்ந்தவள்,“ கவலைபடாத சரா. நான் எப்படியாவது சாச்சிய இங்க கூட்டிட்டு வந்துடுவேன். ப்ளீஸ் அழாதே...” என ஆறுதல் கூறினாள்.

“ அவங்க வர மாட்டாங்க ரிதா”

“ ஏன் அப்படி சொல்ற”

“ இங்க இவ்வளவு வசதி இருக்கும் போது எதுக்காக அங்க அவ்வளவு கஷ்டபடனும்? எத்தனை நெருகடிகள கடந்து வந்திருப்பாங்க? ஒரு தடவை கூட உங்கள பற்றியோ.... இந்த வீட்டை பற்றியோ அவங்க பேசியதேயில்லயே.. அந்த ரசியா அவ்வளவு பாடு படுத்தியிருக்கா....ங்க” அவள் ஆற்றாமையோடு பேச ரிதா தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் மௌனம் மட்டுமே அங்கே நிலவியது.

“ சாச்சி கண்டிப்பாக வருவாங்க சரா” ரிதா கூறியதும் சரா அவளை கேள்வியாய் பார்த்தாள்.

“ சாச்சி உன்னை அனுப்பவே மாட்டேன் னு சொன்னாங்க. ஆனா உன்னை வர வைச்சிட்டேன் பாத்தியா? அதே மாதிரி சந்தர்ப்பம் அமையும் போது சாச்சியையும் வர வைப்பேன். சும்மா அதையே நினைச்சிட்டு இருக்காதா.... எல்லாம் மாறும்” என திடமாய் கூறியவள்,” வா.... இப்போ செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தலாம்” என அழைத்தாள்.

அவளின் நம்பிக்கையான பேச்சில் சராவும் சற்று தெளிந்தாள். இருவரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க,” லாத்தா( அக்கா)” என்ற கூவலோடு ஓடி வந்தனர் ஜசிஸா மற்றும் மாஹிர். ரியாஸின் பிள்ளைகள்.

“ ஹாய் பசங்களா.... நீங்க தானே ஜஸிரா..... மாஹிர்?” என மைசரா கேட்க, தங்கள் பெயர் எப்படி அவருக்கு தெரியும் என இருவரும் விழித்தனர் .

“ ஜஸிரா ப்பித் படிக்குறா.... மாஹிர் செகண்ட் படிக்குறான்..... ரைட்டா?” என கேட்டதும் ஆச்சரியமாய் தலையாட்டினர்.

“ லாத்தா.... இவங்க தான் புதுசா வந்தவங்களா? எங்க ஐ.டி கார்ட்டை எல்லாம் எடுத்து பார்த்துட்டாங்களா?” பெரியவள் ரிதா காதை கடித்தாள்.

“ ஆமா அது பெரிய சி.ஐ.டி கார்டு..... இவ எடுத்து பார்த்துட்டா..... இவங்க என்னோட ப்ரெண்ட் லா.... நான் தான் சொன்னேன்”

“ உன்னோட ப்ரெண்டுனா அப்போ அவங்களும் உன்னை மாதிரியே என் கிட்டயிருந்து சாக்லேட்ட புடிங்கி சாப்பிடுவாங்களா?” கண்ணில் பயத்தோடு வினவினான் சிறுவன்.

“ போட்டு கொடுத்துட்டியா?” தலை மீது கை வைத்து கொண்டாள் ரிதா.

அவன் கூறியதில் கலகலவென சிரித்தவள், “ என்னலா ரிதா..... சே.... புள்ள கையில இருந்து புடிங்கி சாப்ட்ருக?” என கேலி செய்தாள் மைசரா.

“ ஆண்டவா..... ஒரு நாள் நாலு சாக்லேட் சாப்பிட்டானே னு அஞ்சாவது சாக்லேட்ட நான் வாங்கி சாப்பிட்டேன்லா.... அதிலிருந்து இப்படி தான் மானத்த வாங்குறான்.” என புலம்பினாள் அவள்.

மைசரா அவளை விடாமல் கேலி செய்ய பிள்ளைகளும் அவளோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் அங்கே சிரித்து விளையாடி கொண்டிருக்க, கேட் திறக்கும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தனர்.ரமீஸும் ரிஸ்வியும் தொழுகையை முடித்து விட்டு வந்தனர்.

“ மச்சான்....”

“ காகா....” என பிள்ளைகள் முன்னே ஓட,

“ மச்சான்...” என கூவியபடி பின்னே ஓடினாள் ரிதா. மைசரா அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். ரமீஸை பார்த்து மட்டும் புன்னகைத்தாள்.

“ ஹே.....கம்...கம்.... ரிதா டியர்..... ஹவ் ஆர் யூ டா?” என அவன் உரக்க அழைத்ததும் சலேரென திரும்பி பார்த்தாள் மைசரா.

“ இவன் என்ன ரிதாவ டியர் னு கூப்பிடுறான்?”

பிள்ளைகளிடம் இரண்டொரு வார்த்தை பேசியவன் ரிதாவிடம் பேச தொடங்கினான்.

அவனிடம் நலம் விசாரித்து விட்டு,” சரா.... இங்க வாயேன்” என அழைத்தாள்.

“ இவ எதுக்கு என்னை கூப்பிடுறா?” என யோசித்த படி அருகே சென்றவள் ரிஸ்வியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“ மச்சான்.... இவ என் வெரி க்ளோஸ் ப்ரெண்ட் மைசரா மெஹர்” என அறிமுகபடுத்த,

“ லூசு.... அவங்க தான் நேற்றே அறிமுகம் ஆகிட்டாங்களே” என்றான் ரமீஸ்.

அப்போது தான் நினைவு வந்தவளாக,” ஆமாயில்ல..... நான் மறந்தே போயிட்டேன்.” என சிரித்தாள்.

“ ஆமா.... ஆமா.... ரொம்ப நல்லா அறிமுகமானோம்” என ரிஸ்வி சலிப்பாக கூற, மைசராவின் மனதிலும் அதே சலிப்பு மேலிட்டது. அவளுக்கு ரிஸ்வியை பார்க்கவே எரிச்சலாக வந்தது.

“ ரிதா..... நீ பேசிட்டு வா.... நான் தண்ணி ஊத்திட்டு இருக்கேன்” என்று விட்டு சென்றாள்.

“ பசங்களா... உங்களுக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகலையா? வாங்க... வாங்க.... நாம உள்ளே போகலாம்” என்றபடி அவர்களுக்கு தனிமை கொடுத்து உள்ளே சென்றான் ரமீஸ்.

ரமீஸ் உள்ளே சென்றதும் அவர்களை திரும்பி பார்த்தாள் மைசரா. அவர்கள் பேசுவது காதில் விழவில்லை என்றாலும் அவள் பார்த்த காட்சியில் காதில் புகை வந்தது. இரு கரங்களையும் தன் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து தோரணையாக நின்றிருந்தவன், கொஞ்சி கொஞ்சி ஏதோ பேச, தலைகுனிந்து நின்றிருந்தவளின் பூ முகம் அந்தி வானமாய் சிவந்திருந்தது.

“ என்னடா நடக்குது இங்க? இவங்க நிற்குற போஸ பார்த்தா கல்யாண விஷயத்த ஓபன் பண்ணிட்டாங்க போலயே.....? இந்த லூசும் அந்த குடிகாரனுக்கு வாக்கபட ஓ.கே சொல்லிட்டா போலயே? இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆக கூடாது னு எவ்ளோ துவா ( பிராத்தனை) செஞ்சேன்....” இதயம் சுக்கு நூறாக உடைய திரும்பி கொண்டாள் மைசரா.
மலரினும் மெல்லிய தன் தோழிக்கு முரட்டு குடிகாரன் புருஷனா? என அவள் மனம் துடித்தது. மீண்டும் அவர்களை திரும்பி பார்த்தவளின் மனம்,” குரங்கு கையில பூ மாலையா?...... கிளிய வளர்ந்து பூனை கையில கொடுக்க போறாங்களா?” என சோகமாக பழமொழி வாசித்தது.

இதுவரை ரிதா ரிஸ்வி யை பற்றி எதுவுமே கூறியதில்லை. அவள் மனதில் ரிஸ்வி மீது எந்த அபிப்பிராயமும் இல்லை, ரமீஸ் கேட்கும் போது மறுத்துவிடுவாள் என எண்ணியிருந்த மைசராவுக்கு மனம் வலித்தது. குடிக்காரன் என தெரிந்தும் ரமீஸ் எப்படி ரிஸ்விக்கு தங்கையை மணம் முடிக்க விழைகிறான் என புரியவில்லை. ஒருவேளை ரிதாவின் உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பானோ என நினைத்து மருகினாள். ரிதாவுக்கு ரிஸ்வியை பற்றி தெரிந்தே சம்மதித்தாளா இல்லை தெரியாமல் சம்மதித்தாளா ஒன்றும் புரியவில்லை. என்னவானாலும் சரி.... ரிதாவிடம் ரிஸ்வியை பற்றி எடுத்து சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும் என நினைத்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் வருவதை பார்த்தவள் திரும்பி கொண்டாள். பேசியபடியே நடந்து வந்தவர்கள்,” நீ ஓ.கே சொல்லிட்ட னு ரமீஸ் கிட்ட சொல்லிடுறேன்” என்றான் ரிஸ்வி.

“ ம்....” என வெட்கத்தோடு தலையசைத்தவள் மைசராவை நோக்கி நடக்க, அவளின் பின்னே வந்தவன்,” ரிதா.... உனக்கெதும் வருத்தம் இல்லையே? நான் இப்போ தான் சென்னையில ஷோரூம் திறந்திருக்கேன். அது நல்லா டெவலப் ஆகுற வரைக்கும் என்னால கல்யாணத்த பற்றி யோசிக்க முடியாது” என தயங்கிய படி கூற,

“ மச்சான்..... எனக்கு உங்க நிலைமை நல்லா புரியுது. நீங்க எதை பற்றியும் யோசிக்காம கடை வேலய பாருங்க. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” என தெளிவாக கூறியதும் தான் ரிஸ்வியின் முகத்தில் திருப்தி தெரிந்தது.

அவன் மகிழ்ச்சியாக உள்ளே சென்று விட தாங்கள் பேசியது மைசராவுக்கு கேட்டிருக்குமோ என கலங்கிய படி ரிதா வந்தாள். இந்த இரண்டு வருடங்களில் அவள் ஒரு முறை கூட தன் காதலை பற்றி மைசராவிடம் பேசியதில்லை. ரசியா என்னும் போதே வெறுப்பை வெளிபடையாக காட்டுபவளிடம் ரசியாவின் மகனை தான் காதலிக்கிறேன் என எப்படி கூறுவது என தயங்குவாள். எங்கே தன் காதலை பற்றி கூறினால் என்னிடமிருந்து விலகிவிடுவாளோ என அஞ்சுவாள். ஆனால் இன்று அவள் பேசியது கட்டாயம் அவளுக்கு கேட்டிருக்கும் எனும் போது இனியும் அவளால் மறைக்க முடியவில்லை.

தயங்கிய படி மைசராவின் அருகே வந்தவள், “ சரா..... உன் கிட்ட ஒன்னு சொ.... சொல்லணும்” என மென்று முழுங்க,

“ அதான் அந்த கருமத்தை எல்லாம் கேட்டேனே...” என நினைத்து கொண்டவள் அவள் கூறியதை கவனியாதவள் போல,” ரிதா..... ரொம்ப கச கச னு வருதுலா..... குளிக்கணும்..... உள்ளே போலாமா?” என்றாள்.

இப்போது தான் சந்தோஷமாக பேசி விட்டு வருபவளிடம் அவள் மனநிலை கெடும் வண்ணம் பேசுவதை சரா விரும்பவில்லை. இங்கே இருந்தால் ஏதாவது கேட்டு விடுவோமோ என பயந்தே உள்ளே செல்லலாம் என்றாள்.

“ அப்பாடா.... நாங்க பேசுனத அவ கவனிக்கல போல.... இன்னொரு நாள் பொறுமையா சொல்லிக்கலாம்” என நிம்மதி அடைந்தாள் ரிதா

“ வா.... சரா போகலாம்” என அழைத்து சென்றாள்.
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
19 20 update missing..plz update
அத தான் மா நானும் தேடுறேன். கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன். இல்லனா நான் மறுபடியும் update பண்றேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top