• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 23

அத்தியாயம் – 24


குளித்து முடித்து காய வைத்த கூந்தலை ஒற்றை க்ளிப்பில் அடக்கியவள் கண்ணாடி முன் நின்று பார்க்க, அவள் உடுத்தியிருந்த சாம்பல் நிற ஹாப் காலர் சுடிதாரும், தோளில் தவழ்ந்த இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் கலந்த துப்பட்டாவும், அதற்கு தோதாக அணிந்திருந்த நீள காதணியும் அவளுக்கு வெகு அழகாய் பொருந்தி இருந்தது.

“ அழகு தான்டி நீ சரா....” என தன்னை தானே கொஞ்சி கொண்டவள் தலைக்கு முக்காடிட்டு கொண்டாள்.

ரிஸ்வியிடம் படிப்பு குறித்து பேசி விட்டு வந்து ரிதா குளித்து கொண்டிருந்தாள். அவளின் வருகைகாக காத்திருந்த மைசரா, கட்டிலில் அமர்ந்து ரிஸ்வி பரிந்துரைத்த படிப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்க அறை கதவு லேசாக தட்டப்பட்டது.

மைசரா வந்து திறக்க, அங்கே ரிஸ்வி நின்றுக் கொண்டிருந்தான்.

“ ரிதா எங்க?”

“ அடச்சே.... இவனுக்கு வேற வேலையே இல்லையா? “ மனதிற்குள் நிந்தித்து கொண்டு, “ அவ குளிச்சிட்டு இருக்கா...” என்றவள்

அவன் “ உங்க பேக்” என ஏதோ சொல்ல வர, சட்டென கதவை மூடினாள். கதவை மூடி விட்டு திரும்பவும் தான் அவன் சொல்ல வந்தது மூளையில் உரைத்தது. அவளது கைபையை அவனது அறையில் அல்லவா வைத்தாள். விடியலில் நடந்த களேபரத்தில் அவள் எங்கே பையை எடுத்து வந்தாள்?

“ அச்சச்சோ....” என பதறியவள் அவசரமாக கதவை திறந்தாள். முகத்தில் கோபம் கொப்பளித்தபடி திரும்பியவனை ,” ஹலோ....” என அழைத்தான்.

அவள் அழைத்ததில் திரும்பியவன், அவளை உறுத்து விழித்தான். அவனது முறைப்பில் நடுங்கியவள் கையை நீட்டி,” என் பேக்” என்றாள் மிக மெல்லிய குரலில்.

அவன் பேசாமல் திரும்பி போக எப்படி அழைப்பது என குழம்பி பின் ,” ஹலோ... ஹலோ... என் பேக்கை தாங்க.... ப்ளீஸ்... ப்ளீஸ்...” என்றபடி அவன் பின்னால் சென்றாள்.

“ ரமீஸ்.... இந்த பேக் என் ரூம்ல இருந்தது. இவங்க நைட் என் ரூம்ல படுத்த போது விட்டுட்டு போயிட்டாங்க” என கூறியபடியே ரமீஸின் அறை கதவை திறக்க, மைசராவிற்கு ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது.

“ போச்சு..... போச்சு..... .நம்ம மானம் கப்பல் ஏற போகுது...” என பயம் கவ்வ, நல்லவேளையாக ரமீஸ் அறையில் இல்லை. பயத்தில் இழுத்த மூச்சை அப்போது தான் விட்டாள்.

ரிஸ்வி அவனை சுற்றும் முற்றும் தேட, “ என் பேக்கை கொடுங்க” என்றாள் மைசரா கெஞ்சலாக.

ஒரு நொடி அவளை ஆழ பார்த்தவன், “ எதையும் செய்றதுக்கு முன்னாடி ஒரு முறை யோசி” என்று விட்டு அவளது கைபையை அவள் நீட்டிய கையில் கொடுக்காமல் கட்டில் மீது விசிறி விட்டு விறு விறு வென வெளியே சென்றான்.

அவன் செய்கையில் மைசராவிற்கு கோபம் வந்தது.

“ பக்கி.... எப்படி வீசிட்டு போறான் பாரு ... இவன் அப்படியே எல்லாத்தையும் யோசிச்சி தான் செய்றான் சரி தான் போடா “

அவன் வீசி விட்டு போன அந்த பையை எடுக்க அவளுக்கு பிடிக்கவேயில்லை. அதையே வெறித்தபடி நிற்க, அதனுள்ளிருந்த கைபேசி ஒலித்தது. ஓடி போய் எடுத்து பார்க்க, அவள் நினைத்தது போலவே சபூரா தான் அழைத்திருந்தார்.

ரிதாவின் அறைக்குள் சென்று இணைப்பை பொருத்தி வணக்கத்தை பரிமாறி கொண்டதும்,” என்ன சரா.... போய்ட்டு போனே போடல” என்றார் சபூரா

“ இல்லமா..... அது...”

“ பக்கத்துல எல்லாரும் இருந்தாங்களா?”

“ ம்.... ஆமாமா.”

“ நினைச்சேன். அதனால தான் நானும் போன் பண்ணல. இவ்வளவு நேரமாகியும் நீ போன் பண்ணலயா? அதான் பயந்துட்டேன். இனிமே சூழ்நிலைய பார்த்துட்டு நீயே போன் போடு என்ன?”

“ சரி மா.”

“ அங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்றார் ஆர்வமாக.

“ நல்லாயிருக்காங்கமா”

“ சரா.... அது... அது...”

“ சொல்லு மா....”

“ அது.... வீ....வீடு எப்படி இருக்கு? பார்த்தியா?” என்றார் ஆவலாக.அந்த வீட்டின் மீது அவர் கொண்ட நேசம் அவர் குரலில் தெரிந்தது.

“ நல்லாயிருக்கு மா” என்றாள் வெற்று குரலில். தன் அன்னை வாழ்த்திருக்க வேண்டிய வீடல்லவா?

“ சரா....”

“ சொல்லு மா....”

“ அது .... அங்க யாருக்கும் நீ யாரு னு தெரியலல?”

“ இல்லமா.”

“ சரி டா. நீ பத்திரமா இருந்துக்கோ. அப்படியே இஷ்ரத்தையும் நல்லா பார்த்துக்கோ” என்ற போது தான் தான் இன்னும் இஷ்ரத் கூட வராததை சொல்லவேயில்லை என நினைவு வந்தது. அவள் சொல்வதற்குள் போனை பிடுங்கிய ரிதா சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.

“ நான் இஷ்ரத் வராததை சொல்ல மறந்துட்டேன் லா.”

“ நானும் மறந்துட்டேன் பாரேன்”

“ மறுபடியும் உம்மாக்கு போன் போடு”

“ ப்ச்... விடு சரா. சாச்சியே இப்போ தான் கொஞ்சம் சந்தோஷமா பேசுறாங்க. எதுக்கு இப்போ அவங்க மூட கெடுக்கணும். விடு சொல்லிக்கலாம்” என்றவள் அவளை அழைத்து கொண்டு கீழே சென்றாள்.

ஹாலின் இறுதியில் உள்ளே நீண்ட வராந்தாவில் நுழைய, ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வராந்தாவில் இடபுறம் சாப்பிடும் அறையும், அதை அடுத்து சமையலறையும், வலது பக்கம் ஸ்டோர் ரூமும் முடிவில் கொல்லை புறமும் இருந்தது.

“ என்ன மா நினைச்சிட்டு இருக்கான் உன் பேரன். என்னவோ இந்த ஜில்லாக்கே இவன் தான் ராஜா மாதிரி அதிகாரம் பண்றான்? அவன் அடாவடித்தனத்தை எல்லாம் என் மவன் மேல காட்ட வேண்டாம் னு சொல்லு.” எட்டு கட்டையில் அவர் கத்த, ரிதா அந்த அறைக்குள் நுழையாமல் அதை தாண்டி சமையலறைக்குள் நுழைந்தாள் சராவையும் இழுத்து கொண்டு.

சமையலறையில் தில்லு மட்டும் இருந்தாள். அடுப்படிக்கும் சாப்பாட்டு அறைக்கும் நடுவில் இருந்த சதுர வடிவ துளை (kitchen hatch) வழியே ரிதா எட்டி பார்க்க அவளை தொடர்ந்து சராவும் பார்த்தாள். நேராக ரிஸ்வி இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்க, அருகில் கமர் யாருக்காக பேசுவது என தெரியாமல் குழப்பத்தை தாங்கி அமர்ந்திருந்தார். எதிரில் மன்சூர் தலையில் சிறு கட்டுடன் நின்றிருக்க, பக்கத்தில் நின்று என் மவன்.... என் மவன் என கத்துவதிலிருந்தே தெரிந்தது அது அஸ்மா என்று. அவரை அமைதி படுத்த எடுத்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிய, வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சனோபர்.

“ தில்லு..... காகா எங்க?” – ரிதா.

“ பிள்ளைகள ஸ்கூல்ல விட போயிருக்காங்க”

“ பாரு.... பாரு.... இங்க ஒருத்தி கரடியா கத்திட்டு இருக்கேன். ஏதாவது பதில் சொல்றானா பார்த்தியா? எல்லாம் நீ கொடுக்குற செல்லம். இவனும் உன் பேரன் தானே? ஆனா இவனை ஒரு தடவையாவது தூக்கி வைச்சி பேசியிருக்கியா? அவன் பணக்கார வீட்டு பையன்றதுனால தானே அவன் என்ன செய்தாலும் அமைதியாக இருக்கே?” படபடவென பொரிந்தார் அந்த பெண்.

“ என்ன பிரச்சனை தில்லு?”

“ ரிஸ்வி மன்சூர் மண்டைய உடைச்சிட்டாராம்.”

“ என்னது?” எண்ணெயிலிட்ட அப்பளமாய் விரிந்தது ரிதாவின் விழிகள்

“ ஏன் அவங்க சொன்னது புரியலயா? உன் மச்சான் மன்சூர் மண்டைய உடைச்சிட்டாராமா” என நீட்டி முழக்கினாள் மைசரா.

“ உன் மச்சானா? நம்ம மச்சான் னு சொல்லு”

“ உவ்வே..... எனக்கு இந்த மச்சான் வேண்டாம் பா” என முகத்தை சுளித்தாள் சரா.

“ ஏன்டி.... என் மச்சானுக்கு என்னடி குறைச்சல்?”

“ குறைச்சலா? எல்லாமே நிறைச்சல் தான். கோபம், முரட்டு தனம், முசுட்டு தனம், போதை....”

“ என்னலா.... வாய்க்குள்ளயே முணங்குற?”

“ இல்ல.... இந்த ரவுடி மச்சான் எனக்கு வேண்டாம் னு சொன்னேன்”

“ அடிங்க.... யாரை பார்த்து ரவுடி னு சொன்னே... “ என ரிதா எகிற, ஹை டெசிபலில் அங்கே ஒரு சண்டை நடந்துக் கொண்டிருக்க, லோ டெசிபலில் இங்கே ஒன்று ஆரம்பித்தது.

“ ஆமா..... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்ட போட்டுக்கிறீங்க?” என புரியாமல் கேட்டாள் தில்லு.

சுற்றம் புரிந்து அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டு, “ ok Mrs. மண்டை lets v watch the சண்டை” என திரும்பினாள் ரிதா.

“ என்னம்மா.... நான் பேசிட்டே இருக்கேன். நீ ஒன்னும் சொல்லாம உட்கார்ந்துட்டிருக்கே”

“ நீ எங்க என்னை பேச விட்டே....”

“ சரி.... இப்போ பேசேன் பாப்போம்.... உன் பேரன் எதுக்கு என் மவன் மண்டைய உடைச்சான்?”

“ ரிஸ்வி.... என்னப்பா இது? என்ன தான் கோபமா இருந்தாலும் தம்பிய இப்படி அடிக்கலாமா?”

“ அப்படி என்னப்பா என் புள்ள தப்பு செஞ்சான்? உன் உம்மா திமிர இங்க காட்றியா?”

“ அப்படி கேளுங்க மாமி.... நல்லா நாக்கை புடுங்குற மாதிரி கேளுங்க....” – யாரு நம் சராவின் மைண்ட் வாய்ஸ் தான்.

“ அதான் நான் விசாரிச்சிட்டு இருக்கேன்ல அஸ்மா... பொறு...”

“ ஆமா. இதுக்கு பேர் தான் விசாரிக்குறதா... அப்படியே தாடைய புடிச்சு கொஞ்சுற கணக்கா பேசுறே? எதுக்கு அடிச்சான் னு கேளு.”

கமருக்கு பேரனை பற்றி நன்கு தெரியும். தட்டி கொடுத்தாலாவது கொஞ்சம் தணிந்து போவானே தவிர கோபம் எல்லாம் வேலைக்கே ஆகாது. அவர் பேச தொடங்கும் முன்,

“ எதுக்கு அடிச்சேன் னு அடி வாங்குன உங்க மவனுக்கு தெரியாதா? அவனையே கேட்க வேண்டியது தானே” தெனாவட்டாய் பதில் வந்தது ரிஸ்வியிடமிருந்து.

“ என்ன ரிஸ்வி திமிரா? அடிச்சது நீ.... காரணத்தை நீ சொல்ல மாட்டியா?”

“ என்ன மன்சூர் சொல்ல வேண்டியது தானே” சாப்பிட தட்டை எடுத்து வைத்தபடி கூறினான்.

“ அது... அது...” என திணறியவன்,” நான் சிக்ரெட் பிடிக்குறத கா...காகா பார்த்துட்டாங்க” என்றான் தலைகுனிந்து. ரிஸ்வி ஏதும் பேசாமல் ஹாட்பாக்ஸில் இருந்து தோசையை எடுத்து தட்டில் வைத்தான்.

“ பார்த்தயில்ல.... இவன் ஸ்மோக் பண்ணதுக்கு தான் மச்சான் அடிச்சிருக்காங்க” என ரிஸ்விக்கு நியாயம் படித்தாள் ரிதா.

“ வெவ்வெ....” என அவளுக்கு பழிப்பு காட்டினாள் சரா.

“ அப்படி சொல்லு.... பின்னே சிக்ரெட் குடிக்குறத பார்த்தா அவனுக்கு கோபம் வராதா. இதென்னலே விளங்காத பழக்கம்” என மன்சூரை சாடினார் கமர்.

“ அவாவாவா” என மானசீகமாக வாயில் அடித்துக் கொண்ட சரா, “ டேய்.... டேய்.... நீ மூக்கு முட்ட சரக்கடிச்சிட்டு அந்த பையனை ஒரு தம்மடிச்சதுக்கு போட்டு அடிச்சிருக்கியே இதெல்லாம் ரொம்ப ஓவர் டா” என புகைந்தாள்.

மகன் புகைபிடிக்கிறான் என அறிந்ததும் சற்று வேகம் குறைந்த அஸ்மா, அப்போதும் மகனை விட்டு கொடுக்காமல், “ சரி..... தப்பு தான். அதுக்காக இப்படியா அடிக்குறது? எங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே. நாங்க கண்டிச்சிருப்போம்ல” என்றார் .

“ இனிமே கண்டிங்க சாச்சி(சித்தி)” என்றவன் தொட்டு கொள்ள கறிக்குழம்பு ஊற்றும் படி கமருக்கு சைகை செய்தான்.

அஸ்மாவுக்கு புஸ்ஸென்று ஆகிவிட்டது. இவ்வளவு சண்டை போட்டும் ரிஸ்வி மன்னிப்பும் கேட்கவில்லை குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தன் சகோதரியின் மகன் தான் என்றாலும் சமீப காலமாக ரிஸ்வி நடந்து கொள்ளும் விதம் அவரை வெகுவாய் கோபப்படுத்தியிருந்தது.


- மழை வரும்....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
பர்வீன் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பர்வீன்.மை டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top