• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 24(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
“ ப்ச்.... கல்யாணம் முடிஞ்ச கையோட நீ வெளிநாடு கிளம்பிடுவே ரமீஸ்.... நானும் சென்னை கடைய திறந்துடுவேன்.... அதுக்குள்ள இந்த கணக்கு வழக்கெல்லாம் சரி பார்த்து முடிச்சிடணும் னு நினைக்கிறேன்.” என தன் மனதை விளக்கினான் ரிஸ்வி.

“ சரி ரிஸ்வி.... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பாரு.... நாளைக்கு வேற லேபர்ஸ் க்கு கூலி கொடுக்கணுமில்லயா?”

“ கொடுக்கணும் தான் ஆனா அக்கவுண்ட்ஸ் டேலி ஆகாம பண்ட் ரிஸிஸ் பண்ண மாட்டேன் ரமீஸ். அதனால நாளைக்கு கூலி கொடுக்க முடியாது”

“ தப்பு பா.... உனக்கு கணக்கு வரலறதுக்காக கூலி கொடுக்காம இருக்குறது ரொம்ப தப்பு. நம்ம இஸ்லாம் சட்டப்படி நமக்காக வேலை செய்த கூலிக்காரனோட வியர்வை துளி காயறதுக்கு முன்னாடி அவனுக்கான கூலியை கொடுத்திடணும். இது உனக்கு தெரியாதா ரிஸ்வி?” என கடுமையாக ஆட்சேபித்தார் கமர்.

“ இல்ல கன்மா.... அது....”

“ உனக்கு கொடுக்க முடியாது னா சொல்லு ரிஸ்வி... நான் என் சேமிப்பிலிருந்து எடுத்து தாரேன். கணக்கு சரி பண்ண பின்னாடி எனக்கு கொடு”

“ வேண்டாம் கன்மா.... என் காசிலேருந்தே நாளைக்கு கூலி கொடுத்திடுறேன்..... ஓ.கே வா?” என பிரச்சனையை முடித்தவன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.

கலகலவென சிரிப்பொலியோடு கீழிறங்கி வந்தனர். மைசரா, ரிதா மற்றும் மன்சூர். வழக்கம் போல ரிஸ்வியை கண்டதும் ரிதா முன்னே ஓட சராவிடம் ஏதோ கேட்டபடி அவளோடு இணைந்து வந்தான் மன்சூர்.

அவனுக்கு பதிலளித்து விட்டு சரா திரும்ப, இருவரையும் ரிஸ்வி முறைத்து கொண்டிருந்தான்.

“ போடா.... நீ ஒரு தடவை முறைச்சா தான் பயப்படவேன் ஓயாம முறைச்சாலாம் பயப்பட முடியாது.... போர் அடிக்குது...” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ நீ இங்க வந்துட்டியே மன்சூர்.... அங்க கெஸ்ட் ஹவுஸ்ல உன் ப்ரெண்ட்ஸ் லோன்லியா பீல் பண்ண மாட்டாங்களா? எங்கையாவது கூட்டிட்டு போகலாமில்ல?” என வினவினான் ரிஸ்வி.

“ நேத்து தான் கல்லணை டேம் போயிட்டு வந்தோம் காகா.... ரொம்ப டயர்டா இருக்கு னு எல்லாரும் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க” என கூற அதற்கு பின் ரிஸ்வியால் ஏதும் கூற முடியவில்லை.

இரவு உணவு முடித்து மன்சூர் கிளம்பி விட, ரமீஸும் ரிஸ்வியும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

கல்யாண வேலைகள் குறித்து இருவரும் பேசிக் கொள்ள, “ பாத்தியா அன்னைக்கு 50 பேருக்கு துணிகள கொடுக்கணுமில்லயா... அதனால முன்னாடி இடத்தில பந்தல் போடணும் ரிஸ்வி என்றார் கமர்.

ரமீஸ் சென்னையில் இருப்பதால் வீட்டு பொறுப்புகளை ரிஸ்வி தான் கவனித்து கொள்வான்.இப்போது திருமண வேலைகளை கூட அவன் தான் கவனித்து கொள்கிறான்.

“ அதுக்கென்ன கன்மா.... சிறப்பா போட்டுடுலாம். இன்னும் நாலு நாளு இருக்கில்ல.....” அவன் பாத்தியா பற்றி பேசும் போதே பரிமாறிக் கொண்டிருந்த ரிதா முகம் வாடினாள். அதை சமையலறை துளை வழியே கவனித்த மைசராவும் வாடினாள்.

“ சரா.... அந்த இடியாப்பத்தை எடுத்துட்டு வா...” கமர் குரல் கொடுக்க அதை துளை வழியே கொடுத்தவள் ரமீஸின் முகத்தை பார்த்தாள். ரிஸ்வியோடு பேசிக் கொண்டிருந்தாலும் தங்கையின் முகம் அவன் கவனத்தில் விழுந்தது.

“ ஏதாவது சொல்லணுமா சரா?” என்றான் ரமீஸ்.

அவள் ரிஸ்வியை பார்க்க,” சும்மா சொல்லு....” என ஊக்கினான் ரமீஸ்.

“ பாத்தியாவ ஏன் கல்யாணத்துக்கு கிட்ட வைக்கணும். ரிதாவோட மனநிலை எப்படி இருக்கும் னு தெரியல.... சோ நாம பாத்தியாவ நாளைக்கே வைச்சிடலாமா? ரிதாவும் கொஞ்சம் நார்மல் ஆகுறதுக்கு டைம் கிடைக்கும்” என்றதும் எல்லாருமே சம்மதமாக பார்த்தனர்.

“ அவங்க சொல்றது கரெக்ட் தான் ரமீஸ்.... நாம நாளைக்கே வைச்சிடலாம். எல்லாம் தயாரா தானே இருக்கு” என ரிஸ்வி ஆமோதிக்க மைசராவுக்கு ஆச்சரியம் தான்.

“ அப்போ எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு தூங்குங்க.... காலையில வேலை கிடக்கு” என கமர் இரவே பரபரப்பானார்.

ரிதா சராவை கட்டிக் கொள்ள, சராவின் தலையை செல்லமாக வருடினான் ரமீஸ்.

- மழை வரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன் – மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top