• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம்- 34(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 34

அத்தியாயம் 35

தன் தந்தையின் கரங்களில் பணத்தை திணித்து கொண்டிருந்த சபூராவை காண்கையில், ரசியாவிற்கு அவர் மீதிருந்த மலிவான எண்ணங்கள் தலைதூக்கியது.

அறை வாயிலில் ரசியா நிற்பதை கவனியாத சபூரா,” முதல்ல இந்த பணத்தை கொண்டு போய் நம்ம வீட்ல வைங்க வாப்பா. கடனை எல்லாம் அடைங்க. நா இன்னொரு நாள் வந்து விவரம் சொல்றேன்.....” என தந்தையை கிளப்பினார்.

“ யார் வீட்டு பணத்த யார் எடுத்து கொடுக்குறது....ம்?” ரசியாவின் அதட்டலான குரலில் இருவரும் திடுக்கிட்டு திரும்பினர். ரசியாவை கண்டதும் தஸ்தகீரின் முகம் வெளிற, சபூராவின் முகத்தில் ஈயாடவில்லை.

சிணுங்கிய குழந்தையை கட்டிலில் விட்டவர், “ இதுக்கு தான் எல்லாரும் அவ்ளோ கூப்பிட்டும் கல்யாணத்துக்கு போகலியா?” என்றவரின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன.

“ ப்ச்..... கடையில வேலை இருந்ததால தான் நான் போகல ரசியா. தயவுசெய்து இதுக்கும் அதுக்கும் முடிச்சு போடாத” என்றார் தவிப்பாக.

“ போதும் நிறுத்து உன் பித்தலாட்டத்த..... இப்போ நா ஆடிட்டர்க்கு போன் போட்டா உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்.” எனவும் விக்கித்து போனார் சபூரா.

தஸ்தகீரின் கைகளில் இருந்த பணத்தை அற்பமாக பார்த்தவர்,” இந்த பணம் ஒன்னும் எனக்கு பெருசில்ல.... ஆனா பெரிய நேர்மை சிகாமணி மாதிரி என் வீட்டு ஆளுங்க முன்னாடி போடுற பாரு ஒரு டிராமா அத தான் என்னால சகிச்சிக்க முடியல.” எனறார் ஆத்திரமாக.

“ என் மேல உனக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு ரசியா? எதையும் நிதானமா யோசிக்க மாட்டியா? அந்த அளவுக்கா புத்தி மழுங்கி போச்சு.....” எப்போதும் தணிந்து பேசும் சபூரா வாயை விட,

“ ஆமா.... இத்தனை நாளா உன் தகிடுதத்தம் எதையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு என் புத்தி மழுங்கி தான் போச்சு.”

“ அட நிறுத்து மா.... கல்யாணம் முடிஞ்ச நாள் முதலா என மவள கரிச்சி கொட்டுறதே உனக்கு வேலையா போச்சு.....” என்ற தந்தையை கண்களாலே அடக்கினார் சபூரா.

தன் பொறுமையை மொத்தமாக இழந்த ரசியா, தடுக்கவோ அடக்கவோ ஆளில்லாமல் வார்த்தைகளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

“ ஆமா.... இவரு மவ பெரிய திஸ்பத் ராணி நாங்க பொறாமையில கரிச்சி கொட்டுறோம்.... இரண்டு நாளா உங்க மக கடைக்கு போறேன் னு சொல்லிட்டு வேற எங்கயோ போயிட்டு வர்றா தெரியுமா உங்களுக்கு?” என்றதும் ஆடி தான் போனார் அந்த முதியவர்.

காலையில் சென்ற காசிம் அப்போது தான் உள்ளே வர, ரணகளமாய் காட்சியளித்தது வீடு. பெரியவர்களின் கத்தலில் குழந்தை வீறிட்டு அழ, யாஸ்மீனும் ரிஸ்வியும் மாடி படிகளில் நின்று தேம்பிக் கொண்டிருந்தனர்.

“ என்னாச்சு?” என பதறி வந்தவரிடம் ரசியா நடந்ததை விளக்க, கூனி குறுகி போனார் சபூரா.

“ ஏதோ அவங்க வீட்ல கஷ்டம்.... பணத்தை எடுத்து கொடுத்துட்டாங்க.... பெருசுபடுத்தாதீங்க மச்சி....” என தன்மையாகவே கூறினார் காசிம்.

“ கொடுக்கட்டும் மச்சான்.... ஆனா அத ஏன் இப்படி திருடி கொடுக்கணும்? “ என ரசியா இகழ,

“ நா ஒன்னும் திருடல” என்றார் சபூரா.

“ அப்போ இந்த பணம் ஏது? ஆடிட்டர் கணக்கு வரல னு சொல்ற இரண்டு லட்சம் எங்கே?”

“ அத உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல ரசியா.... நான் மாமி கிட்ட பேசிக்கிறேன்.” என மிடுக்காக கூற,

“ ஆமா.... நீ சொல்றத எல்லாம் நம்புற ஏமாந்த சோனகிரி அவங்க தானே. நீ அவங்க கிட்ட தான் சொல்லுவ”

“ போதும் மச்சி.... பாவம் அவங்க” என காசிம் ரசியாவை சமாதானபடுத்த, சபூரா சில நிமிடங்கள் சிலையென நின்றிருந்தார்.

ரசியா தன் ஆதி கால வெறுப்புகளை எல்லாம் காசிமிடம் கூறிக்கொண்டிருக்க, அதிலும் தன் தமையனை மயக்கி விட்டதாக கூற சிலையென நின்றுவிட்டவர் நடக்கலானார்

“ வாங்க வாப்பா.... நாம கிளம்பலாம்” என்றார் சபூரா.

“ உன் மாமியார் இல்லாத நேரத்தில இப்படி சண்டை போட்டு போறது தப்பு சபூரா மா. இந்த புள்ள இன்னைக்கு நேத்தா இப்படி பேசுது..... நீ ஒன்னும் எண்ணாம உள்ளே போ ” என மகளை சமாதானபடுத்தனார்.

“ இல்ல வாப்பா. என்னால இங்கே இருக்க முடியாது. வாங்க போலாம்” என்றவர் அறைக்குள் சென்று புர்காவை அணிந்து கொண்டு அழுது அழுது உறங்கி போன மைசராவை தோளில் சுமந்தபடி வெளியே வந்தார். மாடிபடியில் நின்றிருந்த யாஸ்மீனை அழைக்க, அவளோடு சேர்ந்து ரிஸ்வியும் கீழே வந்தான்.

“ மாமி.... நானும் வறேன்...” என கால்களை கட்டிக் கொண்டவனின் சிகை வருடியவர் திரும்பி செல்ல,” இது என் பப்பிமாஸ்.... என் மெஹர்” என மைசராவின் பிஞ்சு கைகளை பற்றி இழுத்தான். அவனது கையை விலக்கிவிட்டவர் திரும்பி நடந்தார்.

அத்தனை நேரம் வசைபாடி கொண்டிருந்த ரசியா அதிர்ச்சியாக இவரை பார்த்துக் கொண்டிருந்தாலும் தடுக்க அவரது கவுரவம் இடம் கொடுக்கவில்லை.

வாசலை கடந்து செல்பவரின் பின்னோடு காசிம் சென்று அழைத்தும் நின்றாமல் வீதியில் இறங்கி போனார்...... போயேவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து நெல்லையிலிருந்து திரும்பிய கமர் மருமகளை கேட்க நடந்ததை கூறினார் ரசியா.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல கமர் கோபத்தோடு மகளை காய்ச்சி எடுக்க அப்போதும் சளைக்காமல் ஆடி தீர்த்தார் ரசியா.

“ ம்மா.....உன் மருமக லட்சணம் தெரியாம ஆடாத.... அவ எவ்ளோ பெரிய கைகாரி னு நா காட்றேன்” என குதித்தவர் அன்னையை சபூராவின் அறைக்கு அழைத்து சென்றார். அவரது அலமாரியை திறந்து காட்ட, அங்கே பணக்கற்றைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அனைவருக்குமே அதிர்ச்சி தான். “ இல்ல ரசியா.... என்னால சபூராவ சந்தேகபட முடியாது. இது... இது... வேற ஏதாவது பணமா இருக்கும்” எனறார் அமீர்.

“ அவளுக்கு இங்க என்ன குறை ரசியா.... இப்படி ரகசியமா சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் சபூராக்கு இல்லமா....” என மருகினார் ஜமீலா.

“ வேணா ரசியா.... உண்மை தெரியாம ஒருத்தர் மேல பழி போடுறது மகா பாவம்..... “ என மனைவியை கண்டித்தார் ஆசாத்.

“ இரண்டு நாளா ஆடிட்டரும் நானும் கணக்கு வழக்குகள அலசி ஆராய்ந்தோம். மொத்தம் அஞ்சு லட்சம் கையாடல் பண்ணியிருக்கா. நா சொல்றதுல நம்பிக்கை இல்லைனா நீங்க ஆடிட்டர கூப்பிட்டு விசாரிச்சிக்கோங்க” ரசியா மின்னாமல் முழங்காமல் இடியை இறக்க, குடும்பமே ஸ்தம்பித்து போனது. அவர்களது வசதிக்கு அந்த தொகை பெரிதில்லை தான் ஆனாலும் கையாடல் என்ற வார்த்தை அதிலும் சொந்த வீட்டில் சபூரா செய்திருக்கிறார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.

“ நீ ஆயிரம் ஆதாரம் காட்டினாலும் நா நம்ப மாட்டேன். முதல்ல நா போய் சபூராவ கூட்டிட்டு வாறேன். அமீர் வா பா” என கமர் கிளம்ப,

“ அவ இந்த வீட்டுக்குள்ள வர அடுத்த நொடி உன் மக இங்க இருக்க மாட்டா....” என்ற ரசியாவின் வார்த்தைகளை அலட்சியபடுத்தி சென்றார் கமர்.

ஆனால் பெருத்த ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் வீடு திரும்பிய கமர் கூறிய விஷயம் ரசியாவையே அதிர வைத்தது.

சபூரா தன் குடும்பத்தோடு எங்கோ சென்றுவிட்டார் என்றதும் அவர் மீது தான் சொன்ன அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை என பேசினார் ரசியா.

“ நா சொல்லும் போது நம்பல இப்போ பார்த்தீங்கள அவ கள்ளதனம் வெளியே தெரிஞ்ச உடனே கம்பிய நீட்டிட்டா....”

“ வாய மூடு ரசியா. ஒருத்தர் இல்லாத நேரத்தில அவங்கள பற்றி பேசுறது தப்பு. அமீர் நாம போலீஸ் ஸ்டேஷன் போலாமா?” மருமகளை கண்டுபிடித்து விடும் தீவிரத்தில் கேட்டார் கமர்.

ரசியா , “ ம்.... போங்க நம்ம குடும்ப மானம் இன்னும் கப்பல் ஏறட்டும்.... அவங்க வந்து விசாரிச்சா உன் மருமகளோட மொத்த மொள்ளமாரிதனமும் வெளியே வரும். சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய மருமகள் னு நியூஸ் பேப்பர்ல கொட்டை எழுத்துல வரட்டும். விட்டு தொலைங்க.... சனியன் போய் தொலையட்டும்.” ஆங்காரமாய் பேசியவர்,

சபூராவின் அறைக்குள் சென்று அந்த பணத்தை எடுத்து வர அதை பிடுங்கிய கமர், “இது என் மருமக பணம். அவ வந்து சொல்லட்டும் நான் தான் எடுத்தேன் னு அப்போ நம்புறேன். இன்னொரு தடவ அவளோட ரூம்புக்கு போன எனக்கு கெட்ட கோபம் வரும்” என்றவர் அந்த பணத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு சபூராவின் அறையை இழுத்து பூட்டினார்.

அவரது செய்கை ரசியாவை வெகுவாய் பாதிக்க, தன் குடும்பத்தோடு பெங்களூர் கிளம்பி விட்டார். மனைவிகாக பேசுவதா மாமியாருக்காக பேசுவதாக என தெரியாமல் ஆசாத் இருதலை கொள்ளியாய் தவித்து போனார். ஆதாரத்தோடு ரசயா பேசும் போது அவர்களது நம்பிக்கை தோற்று போனது.

“ அவ இருக்கும் போதும் சரி.... அவ போன பிறகும் சரி.... என்னை என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருக்க வைசிட்டா. அவ மட்டும் இந்த வீட்டு வாசபடில காலை வைச்சா அவ சாவு என் கையில தான்.” ரசியா போகும் முன்பு வெறி கொண்டு கத்தியதில் கமரே அரண்டு போனார். ரசியாவின் மனதில் இத்தனை வன்மம் இருக்கும் என யாருமே எண்ணவில்லை.

மறுநாள் அமீரும் கமரும் தங்கள் தேடல் வேட்டையை துவங்க, எங்கே சென்றாலும் தோல்வி தான். சபூராவை பற்றி எதுவுமே தெரியவில்லை.

“ ம்மா.... பேசாம போலீஸ்ல புகார் கொடுத்துடுவோம். இதுவே ஒரு வாரம் ஆகிடுச்சு.” என்றார் அமீர் கவலையாக.

“ போலீஸ் வந்து விசாரிச்சா சபூரா மேல தான் கெட்ட பேர் வரும் பா. அமீர்..... கணக்கு வழக்குகள நீ பார்த்தியா பா? ரசியா சொல்றதெல்லாம் உண்மை யா” தவிப்போடு கேட்டார் கமர்.

“ எனக்கே ஒன்னும் புரியல மா. எப்படி பார்த்தாலும் மோசடி நடந்திருக்கு. ஆனா சபூராக்கு தெரியாம நடக்க வாய்ப்பேயில்ல....” சடங்கடமாக கூற, அங்கே பெருத்த மௌனம் நிலவியது.

“ நாம போலீஸ்க்கு போலாமா?” தயக்கமாக அமீர் கேட்க,

“ சபூராவோட பக்கத்து வீட்டுகாரர் தஸ்தகீர் சிநேகிதர் நூர்தீன் னு ஒருத்தர் பற்றி சொன்னாங்கள. அங்கே மட்டும் போய் விசாரிச்சி பார்போமே அமீர். அதுக்கப்புறம் வேணா நீ சொல்ற மாதிரி செய்வோம்.” சிறு நம்பிக்கையாய் கமர் கூறினார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top