• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 37(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
ரமீஸ் ஹம்ஸா – மிஸ்பா பேகம் திருமணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட, ஆண்கள் அனைவரும் மணமகனை ஆர தழுவி தங்கள் வாழ்த்தை கூறிச் சென்றனர்.

பெண்கள் மணப்பெணுக்கு கல்கண்டு ஊட்டி வாழ்த்தினர். அதன் பின் ரமீஸ் மணமகள் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். சுற்றியிருந்த இளைஞர் படை அவனை கிண்டல் செய்தே ஒரு வழியாக்கினர். பெரியவர்கள் கண்டும் காணாமல் சிரிப்புடனே உடன் வந்தனர்.

மிஸ்பா அருகில் ஒரு இருக்கை அமைத்து அதில் ரமீஸ் அமர, பெண்ணவளின் மன தாளங்கள் எக்குதப்பாய் எகிறியது. மிஸ்பாவின் தந்தையான ஹூசைன் தன் மகளின் வலது மென்கரத்தை ரமீஸின் தன்கரத்தில் சேர்த்து வைத்தார். அவர்களின் முதல் தொடுகைக்கு தனிமை கொடுக்கும் பொருட்டும், மற்றவர்களின் கண்ணேறுகள் பட்டுவிடா பொருட்டும் சேர்ந்த கரங்களை வெள்ளை கைக்குட்டையால் மூடிய ஹூசைன் மணமக்களின் நல்வாழ்வுகாக பிராத்தனை செய்தார்.

அதன் பின் தடல்புடலாக விருந்து உபசரிப்பு தொடங்க பட, கூட்டம் சற்று கலைந்தது. பெரியவர்கள் வந்தவர்களை உபசரிக்க நகர்ந்து விட, இளையவர்களின் அமர்களம் ஆரம்பமானது. வெகு நெருங்கிய உறவுகள் மட்டுமே மேடையில் நின்றிருந்தனர்.

மணமக்களுக்கு முதலில் பால், பழம் கொடுத்தனர். பின் மாலையை மாற்றி கொள்ளும் படி கூறியதும், அவரவர்கள் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி கையில் ஏந்திக் கொண்டனர்.

“ மிஸ்பா.... மாலைய சட்டு னு போட விட்டுடாதே....” என சனோபர் உஷார் படுத்த,

“ ஏன் சாச்சி இப்படி?” என கெஞ்சலாக கேட்டான் ரமீஸ்.

“ அப்புறம் எங்க கெத்து என்னாகுறது?” என சிரித்தாள் ரிதா.

“ மச்சான்.... மாலைய ஒழுங்கா போட்டு மானத்த காப்பாற்றுங்க...” என ரிஸ்வி கோரிக்கை வைத்தான்.

“ அடேய் நீங்க பண்ற அளப்பறையில கையெல்லாம் நடுங்குது டா” என கிசுகிசுத்தான் மாப்பிள்ளை.

சிவப்பு நிற குர்தாவில் அம்சமாய் நின்றிருந்த ரிஸ்வியை கண்டதும் காலையில் பேசியது மைசராவுக்கு நினைவு வந்தது.

“ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ? ஆனா அவன் ஏன் திருப்பி எதுவுமே பேசல? ஒரு ஸாரி கேட்டுடலாமா?” யோசனையாய் அவனை பார்த்தாள். அவளை சற்றும் லட்சியம் செய்யாமல் ஏதோ பேசி சிரித்து கொண்டிருந்தான்.

“ இருக்கட்டும்.... இப்படி பேசினா தான் அவனுக்கு கொஞ்சம் புத்தி வரும்” என மறுநொடியே மனதை மாற்றி கொண்டு திரும்ப,” அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மன்சூர்.

“ ப்ச்....” என சலித்துக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

ரமீஸ் மாலை போட வரவும் மிஸ்பாவை பின்னால் இழுத்தார் சனோபர்.

“ மச்சான் விட்டுடாதீங்க...” என அயான் கத்த, இரண்டாவது முயற்சியில் சரியாக போட்டுவிட்டான். “ ஹோ....” வென இளைஞர் பட்டாளம் ஆரவாரம் புரிந்தனர்.

இப்போது மிஸ்பாவின் முறை. ரிஸ்வி ரமீஸை தூக்க,” இது போங்காட்டம்” என மூக்கை சுருக்கினாள் சரா.

“ ஒழுங்கா இறக்கி விடுங்க மச்சான்” என ரிதா அன்பு கட்டளை போட்டாள்.

மூன்று முறை முயன்றும் மிஸ்பாவால் மாலையை போட முடியவில்லை. ஏற்கனவே உயரமான ரமீஸ் இன்னும் நிமிர்ந்து நகர, அவளால் முடியவேயில்லை. நான்காவது முறை அவள் அசையாமல் அப்படியே நிற்க, தன் புது மனைவியை வாடவிடாமல் தானே குனிந்து மாலையை வாங்கி கொண்டான் ரமீஸ். இப்போது “ ஹே....” என ஆர்பரிப்பது பெண்களின் முறையானது.

“ சே.... என்ன மச்சான் இப்படி பொசுக்கு னு கவுந்திட்டீங்க” என ரிஸ்வி குறைபட்டு கொண்டான்.

“ இனி இப்படி தான் அடிக்கடி கவுரனும்” என கேலி பேசினார் சனோபர். இந்த அழகிய தருணங்கள் அனைத்தும் சபூராவிற்காக மைசராவின் அலைபேசியில் காணொலியாய் சேமிக்கப்பட்டது.

அசைவம், சைவம் என இருவகை உணவும் மணப்பெண் வீட்டினர் தயார் செய்திருந்தனர். அங்கேயும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி தனி பந்தி தான்.

மணமக்களை சேர்த்து அமர வைத்து , ஒருவருக்கோருவர் ஊட்டி விட வைத்து, அவர்களை ஓயாமல் வெட்கப்பட வைத்து சாப்பிட வைத்தனர் உறவுகள்.

இப்படியாக சிரிப்பும் கேலியுமாக, ஆனந்தமும் ஆராவரமுமாக, உபசரிப்பும், விரும்தோபலுமாக ரமீஸ் - மிஸ்பா திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அந்தி சாயும் நேரம் அனைவரும் மணமகன் வீட்டுக்கு கிளம்பினர். பிறந்த வீட்டை பிரிய முடியாமல் மிஸ்பா அழ, அவள் கரத்தை ஆதரவாக பற்றிக் கொண்டான் ரமீஸ். இன்று தொடங்கும் இந்த அரவணைப்பு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்திட நாமும் வாழ்த்துவோம்.

மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார் அஸ்மா. மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சற்று ஓய்வு எடுக்குமாறு அறைக்கு அனுப்பினர். கல்யாண களிப்புகளில் களைத்து போயிருந்தவர்கள் அவரவர் அறைக்கு சென்றனர். இத்தனை கொண்டாடங்களில் தன் வீட்டினர் மட்டும் கலந்து கொள்ளவில்லையே என ஏங்கினாள் மைசரா. யாஸ்மீன் திருமணத்திற்கு பிறகு உரிமையும், உற்சாகமுமாய் கலந்து கொண்ட திருமணம் இது தான். அப்போது கூட இத்தனை மகிழ்ச்சியாக இருந்தாளா என தெரியவில்லை. எந்த வேலைகளையும் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தனியே தத்தளித்த தருணங்கள் தான் அவள் நினைவில் வந்தது.

ரிதா உடை மாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்கு செல்ல, சற்று தனிமை நாடிய மைசரா மொட்டை மாடிக்கு சென்றாள்.

கீழே பல வண்ண விளக்குகளால் வெளிச்ச வெள்ளத்தில் வீடே முழ்கியிருக்க, மொட்டை மாடியோ நிலவொளியை மட்டும் துணையாய் கொண்டு தனித்திருந்தது.

காலையிலிருந்து சத்தமும் சந்தடியுமான இடத்தில் இருந்து விட்டு இப்போது கிஞ்சித்தும் அரவமில்லாத இந்த தனிமை மைசராவின் அடி மனதில் தேக்கி வைத்த வேதனைகளை கிளறிவிட்டது.

அன்பை பொழியும் உறவுகள், அரவணைக்கும் உடன்பிறவா நட்புகள் இதையெல்லாம் விட்டு விட்டு ஏன் போனாள் என் தாய்? பேசா நிலவிடம் மௌனமாய் வினவினாள்.

" சரா...." குளிரில் காற்றில் கலந்து வந்த குரலில் சிந்தை கலைந்து திரும்பினாள். நிலவொளி பட்டு அவளது ஆடை மினுமினுத்து கொண்டிருந்தது.

அந்த இருளில் தனித்திருந்தவளை கண்டவனின் கண்களும் மின்னின.

- மழை வரும்
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
ரமீஸ் ♥மிஸ்பா திருமண வாழ்த்துக்கள் ???♥♥♥???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top