• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 38(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
அஸ்ஸலாமு அலைக்கும்....

ஒரு சின்ன பகிர்வு தோழிஸ்....

என் முதல் கதையான கானல் நீராய் என் காதல் கதைக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த கதைக்கு கிடைத்த ஆதரவு குறைவு தான் என வருந்தினார் என் சகோதரி. எனக்கும் அந்த வருத்தம் இருந்தது தான். குடும்ப சூழ்நிலை காரணமாக சின்ன பதிவுகள், பெரிய இடைவெளி என ஏற்பட்டதில் வாசகர்களை இழந்துவிட்டேனோ என தோன்றியது. அதை அறிந்து கொள்ளவே “ என் இஸ்லாமிய கதையான காதல் அடைமழை காலம் யாரெல்லாம் படிக்குறீங்க” என ஒரு பதிவு போட்டேன். என்ன ஆச்சரியம்! இத்தனை ஆதரவை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை மக்கா... நவ் மீ பீலீங் ஹை....

ஆதரவளிக்கும் அனைவரும் நன்றி.... நன்றி.... நன்றி.....

காதல் அடைமழை காலம் – 38

அத்தியாயம் 39

“ சரா.....” குளிர் காற்றில் கலந்து வந்த குரலில் சிந்தை கலைந்து திரும்பினாள். நிலவொளி பட்டு அவளது ஆடை மினுமினுத்துக் கொண்டிருந்தது.

இரவில் தனித்திருந்தவளை கண்டவனின் கண்களும் மின்னின.

“ சரா....” இம்முறை குழைவாய் வந்தது குரல். அந்த நேரத்தில் அவனை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனது கண்களில் வழியும் கல்மிஷத்தில் திடுக்கிட்டாள்.

“ ம...மன்சூர்..... நீ...நீங்க...” என அவள் தடுமாற,

“ ம்.... நீ மன்சூர் னு கூப்பிடுறது மைசூர் பாகு சாப்பிடுற மாதிரி ஸ்வீட்டா இருக்குது.” என அவனது பேச்சு தடம் மாறியது.

அவள் விழி விரித்து பார்க்க,” இன்னைக்கு நீ இந்த ட்ரஸ்ல எவ்ளோ அழகாயிருக்க தெரியுமா?” என்றவனின் பார்வை அவள் மேல் மேய, அது ஆடையை ஆராய்ந்தது போல் தெரியவில்லை.

அவனது செய்கையில் உடல் கூசியவள் அங்கு நிற்க பிடிக்காமல் ,” நா... நா... கீழ போகணும்....” என்று விட்டு தன் நீள கவனை லேசாய் தூக்கி இரண்டெட்டு வைக்க,

அவளின் குறுக்கே கை நீட்டி மறித்தவன்,” உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். அவன் ஒருமையில் பேசுவது அப்படி ஒரு கோபத்தை தூண்டியது அவளுக்கு.

“ ப்ச்.... நா போகணும்....” அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள்.

அவளது வார்த்தைகளை புறம் தள்ளியவன்,” ஐ லவ் யூ சரா...” என்றான் உணர்ச்சி மிகுந்த குரலில்.

இத்தனை நாள் அவன் எதை சொல்லிவிடுவானோ என பயந்து பயந்து ஒதுங்கினாளோ அதை இவன் இன்று சொல்லி விட ஓய்ந்து தான் போனாள் அவள்.

ஒரு முறை கண்ணை மூடி திறந்தவள்,” இன்னொரு முறை இப்படி உளறாதீங்க மன்சூர். நான் தான் அன்னைக்கே உங்கள ப்ரோ னு சொன்னேன்ல” என்றாள் கடுப்பாக.

“ ப்ச்.... நீ அப்படி கூப்பிட்டதும் எவ்ளோ கஷ்டமா இருந்திச்சி தெரியுமா? .... நா உன்னை ரொம்ப லவ் பண்றேன் சரா. உன்னை பார்த்த நிமிஷத்திலேந்து லவ் பண்றேன். “ என்றவன் அவளை சற்று நெருங்க,

“ நான்சென்ஸ் கிட்ட வராதீங்க....” என பதறி பின் சென்றவள்,” நீங்க மட்டும் லவ் பண்ணா போதுமா... நான் பண்ண வேண்டாமா?” என்றாள் கோபமாக.

“ பண்ணு னு தான் சொல்றேன்”

“ சை.... இங்க பாருங்க மன்....” சற்று முன் அவன் கூறிய வர்ணனை நினைவு வர அவன் பெயரை உச்சரிப்பதை நிறுத்தினாள்.” ப்ச்.... எனக்கு உங்க மேல துளி கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை. இனி மேலும் இப்படி பேசாதீங்க. முதல்ல நகருங்க...நா போகணும்” என விலகி நடந்தாள்.

மீண்டும் அவள் முன் வந்து மறித்தவன்,” சரா.... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. ஐ லவ் யூ....” என்றவன் அவளது கரத்தை பிடிக்க வர, அதுவரை பிடித்து வைத்த கோபம் கட்டவிழ்ந்தது.

கரத்தை பின்னிழுத்து கொண்டவள்,” லூசாடா நீ? அறிவில்ல? நா இன்ட்ரஸ்ட் இல்ல னு சொல்லியும் ஐ லவ் யூ.... ஐ லவ் யூ னு பெனாத்துற? ஒழுங்கு மரியாதையா வழிய விடு” எனவும்,

“ முடியாது. நீ ஐ லவ் யூ சொன்னா தான் விடுவேன்” என்றான் அவனும் கறாராக. இவனுடன் பேசினாலே மூக்கு வேர்த்தது போல் வந்து நிற்கும் ரிஸ்வியை அந்த நொடி மனம் தேடியது.

அனிச்சையாய் அவளது விழிகள் வாசலை பார்க்க,”பயப்படாத சரா... இப்போ இங்க யாரும் வர மாட்டாங்க. அதுவும் முக்கியமா அந்த ரிஸ்வி வரவே மாட்டான். நீ எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போ. ப்ளீஸ்....” என கெஞ்சினான்.

“ அத தான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை....”

“ அதான் ஏன்?”

“ தெரியல....”

“ நான் சொல்லவா.... என் கிட்ட பணம் இல்லை. அதனால தானே? இதே ரிஸ்வி வந்து சொல்லியிருந்தா இளிச்சி கிட்டு சரி னு சொல்லுவ” என்றான் இளக்காரமாக.

சட்டென மாறி விட்ட அவனது தொனியும் பேச்சும் அவளுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் தர,” பொறுக்கி..... நீ பார்த்தியாடா? நா அவன் கிட்ட இளிச்சத நீ பார்த்தியா? உங்களுக்கெல்லாம் பொண்ணுங்கனா அவ்ளோ கேவலமா போச்சா? நீ லவ் பண்ணுனா நான் பண்ணணும். இல்லைனா நான் அடுத்தவன பார்த்து இளிக்கிறவளா? இன்னொரு தடவை என் கிட்ட வம்பு பண்ணே பல்லை பேத்துடுவேன்” என கத்தியவள் மடமடவென கீழே இறங்கி வந்தாள்.

நேரே தன்னறைக்கு செல்ல, ரிதா அங்கு இல்லை.

“ பொறுக்கி ராஸ்கல்.... இஷ்டத்துக்கு பேசுறான்? ஆம்பளனா இரண்டு கொம்பு மொளச்சிருக்காமா? கிட்ட வரான், தொட்டு பேசுறான், கண்ணா அது? கொள்ளி கட்டைய வைச்சி பொசுக்கணும்” ஆறாத கோபத்தோடு அறைக்குள் கத்திக் கொண்டிருந்தாள் மைசரா.

“அவன் நீ இவன லவ் பண்றியா னு கேட்குறான்.... இவன் நீ அவன லவ் பண்ணுவ தானே னு கேட்குறான். இவனுங்க என்ன தான் நெனச்சிட்டு இருக்கானுங்க? ஆளாளுக்கு என்னை பந்தாடுறானுங்க. இப்போ தான் புரியுது உம்மா ஏன் வீட்ட விட்டு வந்தாங்க னு. நா இங்க இருந்து கல்யாணத்த சிறப்பிச்சதெல்லாம் போதும். நாளைக்கே கிளம்ப வேண்டியது தான்” என கூறிக் கொண்டவள் தன் பையில் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.

கீழே அவளை தேடி விட்டு மீண்டும் அறைக்கே வந்த ரிதா,” ஓய்.... எங்கலா போயிட்ட... நா கீழே தேடிட்டு வரேன்” என்றாள்.

வாகாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் அவள் துணிகளை அடுக்கி வைப்பதை பார்த்து,” ப்ச்.... டையர்ட்டா இருக்கு னு சொன்னல்ல எதுக்கு இப்போ அடுக்குற” என கேட்டாள்.

“ நா நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன் ரிதா” மைசரா கூறியதும் துணுக்குற்றவள் அப்போது தான் கலங்கி போயிருந்த சராவின் முகத்தை கவனித்தாள்.

“ என்னாச்சு சரா?” எழுந்து வந்து அவளது தோளை தொட்டு திருப்பி கேட்க, பொத்தென கட்டிலில் அமர்ந்தவள் மன்சூர் பேசியதனைத்தும் ரிதாவிடம் கொட்டினாள்.

மைசரா கூறியதை கேட்டு ரிதாவுக்கு ரத்தம் கொதித்தது. “ ராஸ்கல்.... எவ்ளோ தைரியம் அவனுக்கு? நா அன்னைக்கு அவ்ளோ சொல்லியும் இப்படி பண்ணியிருக்கானே” என்றாள் கோபமாக.

“ என்னைக்கு.....”

“ அது வந்து....”

“ அவன் முதல்லயே உன் கிட்ட வந்து சொன்னானா? ஏன் என் கிட்ட சொல்லல ரிதா? சொல்லியிருந்தா நா அன்னைக்கே அவன கிட்ட கிளியர் பண்ணியிருப்பேன்ல” என்றாள் கோபமும் ஆற்றாமையுமாக.

“ இல்லை சரா. உனக்கு எதுக்கு வீண் டென்ஷன் னு நெனச்சேன்” என்றாள் சன்ன குரலில். இவள் இருக்கும் கோபத்தில் இவள் அணிந்திருக்கும் ஆடை அவன் தந்தது தான் என கூறினால் எங்கே இன்னும் குதிப்பாளோ என எண்ணி அதை அப்படியே முழுங்கிவிட்டாள்.

அவளை முறைத்து விட்டு மீண்டும் துணிகளை அடுக்க ஆரம்பித்தவள்,” அவன் சொல்றான்.... நான் ரிஸ்வி ப்ரபோஸ் பண்ணியிருந்தா உடனே ஓ.கே சொல்லியிருப்பேனாம். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன் சட்டை பிடிச்சி நாலு அறை விடணும் போல இருந்தது.” என்றாள்.

ரிதா,“ விட வேண்டியது தானே...” எனவும், அவள் நிமிர்ந்து பார்க்க,

“ அவனுக்கு நாலு அறை விட வேண்டியது தானே? சரி.... இப்போ நீ எதுக்கு கிளம்பற?”

“ இதுக்கப்புறமும் என்னை இங்க இருக்க சொல்றியா.... வேண்டாம் தாயே.... மறுபடியும் அவன் வந்து ஏதாவது வம்பு பண்ணவா” வாய் ரிதாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் வேலையை நிறுத்தவில்லை.

“ஏய்.... அதான் வீட்ல இவ்ளோ பேர் இருக்காங்கல”

“ இப்போ கூட தான் இருக்காங்க.... எல்லா நேரத்திலயும் அடுத்தவங்கள எதிர்பார்க்க முடியாது ரிதா.... நம்ம செப்டிய நாம தான் பார்த்துக்கணும்.... ப்ளீஸ் எனக்கு டிக்கெட் மட்டும் புக் பண்ணு” அதே பிடியில் நின்றாள்.

“ கரெக்ட் தான் ஆனா இப்போ நீ ஊருக்கு போனா மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா. உலகத்திலயே மன்சூர் மட்டும் தான் ஆம்பளயா? இன்னொருத்தன் வந்து இதே மாதிரி பேசுனா சென்னைய விட்டு போயிருவியா? பிரச்சனை பண்றவங்கள அப்புறபடுத்துறத விட்டுட்டு நாம போறது எப்படி சரியாகும் சரா?” என கேட்டு நிறுத்த, அவள் தன்னை கேட்குறாளா இல்லை தன் அன்னையை சொல்லுகிறாளா என யோசித்தாள் மைசரா.

“ முதல்ல அந்த ட்ரஸ கழட்டி வீசிட்டு வேற ட்ரஸ் எடுத்து போடு. அவன நான் பார்த்துக்குறேன்” என்றவள் தன் அலைபேசியை எடுத்தாள்.

சட்டென அதை பிடுங்கியவள்,” தயவுசெய்து இந்த விஷயத்தை பெருசுபடுத்தாத ரிதா. உம்மா சொல்லி அனுப்பினது உனக்கு தெரியுமில்ல” என்றாள் கெஞ்சலாக.

“ அதுக்காக அவன் பேசுனத கேட்டுட்டு என்னை அமைதியா இருக்க சொல்றியா? அவனுக்கு நீ யாருனு தெரியாம இருக்கலாம் ஆனா என்னுடைய கெஸ்ட்ட அவன் எப்படி டீஸ் பண்ணலாம்? நீ போ.... நான் பேசிக்கிறேன்.” தன் அன்பு மச்சானிடமே சராவை விட்டு கொடுக்காமல் சண்டையிட்டவள் மன்சூரை மட்டும் சும்மா விடுவாளா?

அவள் கையிலிருந்து அலைபேசியை வாங்கியவளை மிரட்சியாக பார்த்தாள் மைசரா. மலரினும் மெல்லியவளாய், தன்னன்பில் அடங்கும் சிறு குழந்தையாய் அவள் ரிதாவை நினைத்திருக்க, இப்போது கழுகை விரட்டும் தாய் பறவையாய் தெரிந்தாள் அவள்.

“ ம்..... போ.... போய் ப்ரஷ்ஷாகிட்டு வா. .. போ....” என அதட்ட, அதற்கு மேல் அங்கு நிற்காமல் துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறையிக்குள் புகுந்தாள் மைசரா. முகம் கழுவ வந்தவள் படபடப்பு நீங்க ஒரு வென்னீர் குளியல் போட்டுவிட்டே வந்தாள்.

அவள் வெளியே வரவும், பால்கனியில் இருந்து ரிதா வரவும் சரியாக இருந்தது.

“ பேசிட்டியா ரிதா? அவன் என்ன சொன்னான்?” அவள் கையிலிருந்த பேசியை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“ என்ன சொல்வான்? விட்ட டோஸுல இனி உன் பக்கமே வரமாட்டான். நீ எதையும் நினைச்சி குழம்பாம நிம்மதியா இரு சரா. வா சாப்பிட போலாம். பசிக்குது....” என தன் பசியில் அவள் பசியையும் அறிந்தவள் அவளை இழுத்து கொண்டு போனாள்.

மறுநாள் வலிமா விருந்து......

திருமண சடங்குகளில் திருமண விருந்தை விட மிக மிக முக்கியமான விருந்து. இஸ்லாத்தில் கடமையாக்க பட்ட விருந்து. மணமகன் தன் திருமணத்தை ஊராருக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கும் நிகழ்ச்சி. தன் சக்திக்கு ஏற்றாற் போல் விருந்து கொடுக்க வேண்டும்.

காலையில் ரிதாவும், மைசராவும் எழுந்து கீழே வர மிஸ்பா பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். அதன் பிறகு வரிசையாக வைக்கப்பட்ட உப்பு, வெல்லம், மஞ்சள், அரிசி ஆகியவற்றின் மீது ரசியா கூறியதை போல தன் கரத்தை வைத்தாள். இதை அடுக்களை பார்ப்பது என கூறுவார்கள். இவையெல்லாம் மக்கள் ஏற்படுத்திக் கொண்ட சடங்கு தான்.

இல்லறத்தின் ரகசிய பக்கங்களை புரட்டிய களைப்பும், உவகையும் மணமக்களிடைய நன்றாகவே தெரிந்தது.

மிஸ்பா செய்வதை பார்த்த ரிதா,” இன்டெரக்டா இனிமே நீ தான் சமைக்கணும் னு சொல்றாங்க” என சராவிடம் கிசுகிசுத்து சிரித்தாள்.

சரா, “ கரெக்டா சொன்ன.... அப்படியே கூட்டி போய் பீரோ, லாக்கர்ல லாம் கை வைக்க சொல்ல வேண்டியது தானே? சடங்க கூட எவ்ளோ உஷாரா வைச்சிருக்காங்க பாரு” என நக்கலடித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அதன் பிறகு அனைவரும் தயாராகி மண்டபத்திற்கு சென்றனர். வலிமாவில் பெரிதாக எந்த சடங்குமில்லை. மணமக்களை சற்று நேரம் மணமேடையில் அமர வைத்திருந்தனர். மிஸ்பாவின் உறவுகள் வந்ததும் அவர்களோடு வந்து அமர்ந்து கொண்டாள் மிஸ்பா. ஒரு நாள் கூட ஆகியிருக்காத பிரிவில் பேசிக் கொள்ள மட்டும் ஓராயிரம் விஷயங்கள் இருந்தது அவளுக்கு.

ரமீஸ் வந்தவர்களை வரவேற்று ஆண் உறவுகளோடு சேர்ந்தமர்ந்தான்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
நானும் இந்த கதை முதல்இருந்து படித்து வந்தேன், விடுமுறை விண்ணப்பம் வந்த பின், எப்ப கதை பதிவு வரும் தெரியாமல் இருந்தேன், fb லஇந்த கதை போஸ்ட் பார்த்துதான் தெரிந்து கொண்டு, மீண்டும் மொத்தமாக அணைத்து பதிவும் படித்தேன், பெரும்பாலும் fb ல கதை ரசிகர்கள் நிறைய பேர், நிறைய சைட்ல, கதை ஆசிரியர்களின் போஸ்ட் போடுறாங்க, உங்க போஸ்ட் பார்த்து மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி???, நன்றிகள் ???
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
ரிதா பேசுவதும் சரிதான் மன்சூர் பிரச்சனை பண்ணினா அதை தீர்க்க பார்க்கணும் அதை விட்ட, நான் ஊருக்கு போறேன்னு சொல்ல கூடாது என்று சொல்லி மன்சூர்க்கு டோஸ் குடுப்பது அருமை???, புது பெண் புகுந்த வீட்டில் செய்யும் சடங்குகளை கிண்டல் பண்ணி சரா, ரிதா பேசுவது அருமை ????????????
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
நானும் இந்த கதை முதல்இருந்து படித்து வந்தேன், விடுமுறை விண்ணப்பம் வந்த பின், எப்ப கதை பதிவு வரும் தெரியாமல் இருந்தேன், fb லஇந்த கதை போஸ்ட் பார்த்துதான் தெரிந்து கொண்டு, மீண்டும் மொத்தமாக அணைத்து பதிவும் படித்தேன், பெரும்பாலும் fb ல கதை ரசிகர்கள் நிறைய பேர், நிறைய சைட்ல, கதை ஆசிரியர்களின் போஸ்ட் போடுறாங்க, உங்க போஸ்ட் பார்த்து மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி???, நன்றிகள் ???
மிக்க மகிழ்ச்சி சகி. அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு சிரமம் பராமல் பின்னூட்டம் அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இத்தகைய ஆதரவு தான் எத்தனை இடர்கள் வந்தாலும் மீண்டும் எழுத தூண்டுகிறது. நன்றி சகோதரி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top