காதல் அடைமழை காலம் - 38(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Jun 20, 2019
Messages
193
Reaction score
1,573
Points
93
Location
Chennai
சற்று நேரத்தில் விருந்து ஆரம்பித்தது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, எண்ணெய் கத்திரிக்காய், தயிர் பச்சடி, பழ கேசரி என அசைவ வகைகள் ஒரு புறமும், சோறு, சாம்பார், ரசம், வத்த குழம்பு, மோர், பொரியல், அவியல், கூட்டு, அப்பளம், வடை, பயாசம் என சைவ வகைகள் ஒரு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது போதாது என பனிகூழ் (ஐஸ்கிரீம்), நறுக்கிய பழங்கள், பஞ்சு மிட்டாய், பீடா, நினைவு பரிசாய் மணமக்கள் பெயர் பதித்த பேழை, என அது ஒரு புறம் களைகட்டியிருந்தது. (ஒரு சகோதரி உணவை பற்றி கூறவில்லை என வருத்தப்பட்டார். அவருக்காக இது)

வலிமா முடிந்து மணமக்களை மணப்பெண் வீட்டிற்கு அழைத்து சென்றனர். எத்தனையோ காலம் பிரிந்திருந்தாலும் இப்போது தங்கையை பிரிவது ரமீஸுக்கு நெருடலாகவே இருந்தது. அவனை இன்முகமாக அனுப்பி வைத்த ரிதா, ரசியா வீட்டினர் கிளம்புவதாக கூறும் போது மட்டும் சோக கீதம் வாசித்தாள்.

பெருமளவு உறவு கிளம்பியிருக்க,சில உறவுகள் ஆங்காங்கே சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த பெரிய ஹாலில் ஒரு ஓரத்தில் வந்து அமர்ந்தனர் நம் நாயகியர்.

“ ஏன் லா இப்படி ப்யூஸ் போன பல்பு மாதிரி மூஞ்ச வைச்சிருக்கே? அயான் கிளம்புறாங்க னு பிலிங்ஸா?” என்றாள் மைசரா. ஆமோதிப்பதை போல் பார்த்த ரிதா அவளது தோளில் சாய்ந்து கொண்டாள்.

தோழி வாட்டத்தில் தானும் வருந்தியவள், “ இவ்ளோ பீல் பண்றல்ல அப்போ போய் பேச வேண்டியது தானே” என்றாள் குறையாக.

“ நா தான் போய் பேசணுமா? ஏன் அவங்க வந்து பேச மாட்டாங்களா? இவ்ளோ நாள் தான் பேசாமலே இருந்துட்டோம். இப்போ தான் எல்லாம் கிளியர் ஆயிடுச்சில்ல. இப்பவாவது வந்து பேசலாம்ல” என வருத்தத்தை பகிர்ந்தாள்.

அவளுக்கு என்ன சொல்வது என நினைத்தபடி சரா அமர்ந்திருக்க, ஒரு வாண்டு வந்து அவளை சுரண்டி, “ அந்த மாமா உங்கள கூப்பிட்டாங்க” என்றது.

அவள் திரும்பி பார்க்க சற்று தூரத்தில் அயான் நின்றிருந்தான்.

“ ஆஹா.... ஆஹா.... என்ன ஒரு லவ்வு? நீ பீல் பண்ணதும் எப்படி வந்து நிற்கிறாங்க பாரு என் மச்சான். போ.... போ....” என பரபரத்தாள்.

“ உன் மச்சான் உன்னை தானே கூப்பிட்டாங்க. நீயே போ...” இவ்வளவு நேரம் அவன் வரவில்லை என அழுதவள் இப்போது முறுக்கி கொண்டாள்.

“ ஆமா. .. அந்த மாமா உங்கள தான் கூப்பிட்டாங்க” என ஒத்தூதியது அவ்வாண்டு.

“ சரி... சரி... நான் போறேன். நீ போய் விளையாடு” என்றவள்,” திமிருடி உனக்கு” என்று விட்டு எழுந்து சென்றாள்.

அவள் அருகில் வந்ததும், “ இந்த கிப்ட்ட உங்க ப்ரெண்ட் கிட்ட கொடுத்துடுறீங்களா?” என வண்ண நெகிழியில் பொதிந்த பரிசை அவளிடம் நீட்டினான் அயான்.

“ என் ப்ரெண்ட் ஆலியா கிட்டயா... சரி.. சரி.. கொடுத்துடுறேன்” என இவள் வம்பிழுக்க,

“ அச்சச்சோ..... ஆலியா இல்லங்க நான் ரிதுவ சொன்னேன்” என பதறினான் அவன். மாமி மகன் என்ற உரிமையா இல்லை ரிதாவின் காதலன் என்ற ப்ரியமா தெரியவில்லை மைசரா அவனோடு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள்.

“ ரிதுவா? ஓஹோ.... ஓ.கே... ஓ.கே ரிதா கிட்ட கொடுக்கணுமா? அப்படி தெளிவா சொல்லுங்க” என சிரித்தாள்.

“ பார்றா.... சித் மாதிரி ரிதுவா?... ம்... ரொம்ப தான் லவ்வுறாங்க” என சிரித்துக் கொண்டாள்.

“ ஆமா....” என்றவன் சராவின் ஓட்டலில் அசடு வழிந்தான். ரிஸ்விக்கு தம்பியா இவன் என ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

“ அவளுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்தா அவ கிட்ட கொடுங்க. நடுவுல நாங்க என்ன போஸ்ட்டல் சர்வீஸா?” என கண்ணை உருட்ட,

“ வாயாடி.... கொடுத்தா கொண்டு போய் கொடுக்க வேண்டியது தானே” என மனதிற்குள் அவன் எரிச்சலாகவும்,

“ அவ நீங்க வந்து பேசல னு ரொம்ப பீல் பண்றா.... இத நீங்களே கொடுத்தா ரொம்ப சந்தோஷபடுவா அதான் சொன்னேன்” என்றதும் அவள் மனம் அவனுக்கு புரிந்தது.

“ எங்கங்க.... தூரத்தில நின்னு பார்த்தா சிரிக்குறா... பக்கத்துல போனா ஓடிடுறா.... நா என்ன பண்ண?” என்றான் பரிதாபமாக.

“ சரி.... இருங்க நான் சொல்லி கூட்டிட்டு வரேன்” என்றவள் போய் ரிதாவை அழைத்து வந்தாள்.

இருவரும் சற்று மறைவாக நின்று பேச, மைசரா தள்ளி போய் நின்றுக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் ரிதாவை தேடிக் கொண்டு ரிஸ்வி அங்கு வந்தான்.

நேற்று திருமணத்தில் பார்த்த பின்பு இப்போது தான் அவனை பார்க்கிறாள் மைசரா.அவனை பார்த்ததும் மன்சூர் கூறியது நினைவு வர முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனால் அவன் நேராக சராவிடம் தான் வந்தான்.

“ ரிதா எங்கே?” எனவும்,

மைசரா சற்று தயக்கமாக வலப்பக்கம் சுட்டிக்காட்ட, திரும்பி பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அவன் கோபப்படுவானோ என பயந்தவள், “ ரிதா ரொம்ப.....” என ஏதோ சொல்ல வர அவளை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அங்கே சென்றான் ரிஸ்வி.

நேற்று தான் பேசியதின் தாக்கம் என புரிந்து கொண்டவள் “ போடா வெண்ணை....” என இதழ்களை இடவலமாய் சுளித்து கொண்டாள்.

அவனை கண்டதும் அசடு வழிந்தபடி இருவரும் வந்தனர்.

“ ஆஹா.... மௌன படம் எப்போ பேசும் படமாச்சு” என அவன் சிரிக்க, இன்னும் அசடு வழிந்தனர்.

“ பவர்கட்டான முகத்தில இப்போ 1000 வாட்ஸ் பல்பு எரியுது” என தன் பங்குக்கு கலாய்த்தாள் மைசரா.

“ உம்மா உன்னை கூப்பிட்டாங்க ரிதா வா....” என அழைக்க, அயானும் ரிதாவும் சராவிடம் கூறிவிட்டு சென்றனர்.

அடுத்து வந்த இரு நாட்களும் சற்று மந்தமாக தான் சென்றன. பரபரப்பாக நகர்ந்த நாட்கள் சட்டென வெறுமையானது போல் தோன்றியது. இப்போது சென்னை கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தனர் நம் பூவையர்.

மறுவீட்டு விருந்து முடிந்து ரமீஸ் - மிஸ்பா வந்து விட மீண்டும் கலகலப்பை பூசிக் கொண்டது வீடு. மறுநாள் காலையிலேயே ரமீஸிடம் டிக்கெட் புக் பண்ணும் படி வந்து நின்றாள் மைசரா. சபூராவும் ஏற்கனவே ரமீஸிடம் சராவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவனும் உடனே சம்மதித்தான். மிஸ்பாக்கு தான் அவர்களை அனுப்பவே மனசில்லை. தன் வயதையொத்த தீடீர் தோழியர் அல்லவா அவர்கள்?

“ உங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்பணுமே னு தான் யோசிக்கிறேன்” என தாடை தடவினான் ரமீஸ்.

“ வரும் போது தனியா தானே காகா வந்தேன்”

“ நோ.... நோ... ரிஸ்வி வந்ததால தான் நா உனக்கு டிக்கெட் போட்டேன் சரா. இப்போ மன்சூர் கூட ஊருக்கு கிளம்பிட்டானே” என்றான் யோசனையாக.

அப்பாடா.... என்றிருந்தது மைசராவிற்கு. இந்த இரண்டு நாட்களில் அவன் வீட்டிற்கு வரவேயில்லை. ஏன் வலிமாக்கே வரவில்லை.

“ பரவாயில்ல காகா.... ஜஸ்ட் 5 ஹார்ஸ் தானே. பகல் ட்ரெயின்ல புக் பண்ணுங்க” என்றதும் அரைமனதாய் சம்மதித்தான்.

ஆனால் அன்று மாலையே அவர்களை அழைத்து ரிஸ்வி மறுநாள் சென்னை செல்வதாகவும் அவனோடு காரில் செல்லும்படியும் கூற, இப்போது ரிதாவுக்கு அப்பாடா.... என்றிருந்தது.

ரிதா உற்சாகமாக செல்ல, காற்று போன பலூனாய் அவள் பின்னே சென்றாள் மைசரா.

மறுநாள் மைசரா கிளம்பி வர, கமர் தான் மிகவும் கவலைபட்டார்.

“ இனிமே நீ எப்போ வருவ சரா. இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படி எட்டி நிற்பே” என ஒரே அழுகை. அவருக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் கூறினாள் மைசரா.

தன் மருமகளுக்கும் பேத்திக்கும் இனிப்பு வகைகளும், மிஸ்பா சீராக கொண்டு வந்த குழல் பணியாரத்தையும், பழங்களையும் அட்டைபெட்டியில் கட்டிக் கொடுத்தார் கமர்.

“ ரிதா வரும் போது கண்டிப்பா நீயும் வரணும்” – இது சனோபர், மிஸ்பா, தில்லு ஆகியோரின் அன்புக் கட்டளை.

“ போகாதீங்க லாத்தா....” – இது மழலைகள்.

“ நல்லபடியா போயிட்டு வாமா.... அடிக்கடி வீட்டுக்கு வா....” – இது ரியாஸ்.

அனைவரிடம் சொல்லி விட்டு வந்து காரில் ஏறியவளுக்கு மனம் ஏகமாய் கனத்தது. பதினைந்து நாட்களுக்கு முன் இங்கு வரும் இருந்த மனநிலை இப்போது சத்தியமாய் இல்லை. இவர்களின் அன்பை பிரிய தன் மனம் இத்தனை கலங்கும் என அவளே எதிர்பார்க்கவில்லை.

கார் கிளம்பி செல்ல, பக்கவாட்டு கண்ணாடியில் கம்பீரமாய் நிற்கும் வீட்டை புள்ளியாய் மறையும் வரை இமைக்காமல் பாத்திருந்தாள் மைசரா.

“ வருவேன்.... நிச்சயம் திரும்ப வருவேன்.... இது என் வீடு... இது என் உம்மா வாழ வேண்டிய வீடு...” என கூக்குரலிட்டது இதயம்.

பயணம் முழுவதும் ரிதாவும் ரிஸ்வியும் பேசிக் கொண்டு வர, மைசராவின் எண்ணம் முழுவதும் தன் அன்னையை சுற்றி இருந்தது.

சென்னைக்குள் வந்ததும்,” ரிதா.... அவ வீடு எங்க இருக்குனு சொல்லு... முதல்ல அவள விட்டுட்டு அப்புறம் உன்னை ஹாஸ்டல்ல விட்டுடுறேன்” என்றான்.

“ இ... இல்ல மச்சான். என்னையும் அவ வீட்லேயே விட்டுடுங்க. கா... காலேஜ் திறந்ததும் தான் நா ஹாஸ்டல் போவேன்” என்றாள் தடுமாறிய படி,

“ அவங்க வீட்ல ஸ்டே பண்ணுவியா ரிதா?” ஆச்சரியமாக கேட்டான் ரிஸ்வி.

“ அட போடா. .. அவ ரெண்டு வருஷமா எங்க வீட்ல தான் இருக்கா....” என நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டாள் சரா.

“ லோன்லியா பீல் பண்ணும் போது அங்க தான் தங்குவேன் மச்சான். இப்போலாம் நான் அதிகம் இங்க தான் இருக்கேன்...” என்றாள்.

“ ஓஹ்....” என முடித்துக் கொண்டான்.

ரிதா இடத்தை சொல்ல, ஒரு வழியாய் அவர்கள் வீடிருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் குறுகலான அந்த தெருவில் கார் வர முடியாததால் சற்று தள்ளியே நிற்க வேண்டியதாய் இருந்தது.

பெண்களோடு சேர்ந்து ரிஸ்வியும் இறங்கினான். டிக்கியிலிருந்த ரிதாவுடைய பையையும், அந்த அட்டைப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு நடக்க,

“ அந்த பெட்டிய என்கிட்டேய கொடுத்திடுங்க” என்றாள் மைசரா.

அவன் ஏதும் பேசாமல் நடக்க,” அது ரொம்ப வெயிட் சரா. உன்னால தூக்கிட்டு வேகமா நடக்க முடியாது. இந்த சின்ன பேக்க தூக்கிப்போம். வா....” என்று விட்டு நடந்தாள் ரிதா.

“அவன் இந்த வேலையெல்லாம் செய்திருப்பானா?” என மைசராவுக்கு சங்கடமாக இருந்தது. மடமடவென முன்னே சென்றாள்.

‘ரஹமத் வில்லா’ என பெயரிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் வந்து நின்றாள் மைசரா.

“ வீடு செகண்ட் ப்ளோர். லி...லிப்ட் எதுவுமில்ல” தயக்கமாய் கூறினாள். நடுத்தர வர்க்க மக்கள் வாழும் பகுதியது.

“ ஓஹ்...இட்ஸ் ஓ.கே....” அவன் பைகளை வைத்து விட்டு கைகுட்டையால் வியர்வையை துடைத்துக் கொண்டான். இதுவரை அவன் முகத்தில் வியர்வை வழிந்து அவள் பார்த்தேதில்லை.

மேலும் மேலும் தர்மசங்கடமாக உணர்ந்தவள்,” கீ வாங்கிட்டு வந்திடுறேன்” என கீழ் வீட்டுக்குள் சென்றாள்.

“ஸாரி மச்சான்.... ரொம்ப கஷ்டமா இருக்கா” ரிதா சங்கடமாய் கேட்க,

“ சே... சே... உன் மச்சான பார்த்தா இதையெல்லாம் கூட தூக்க முடியாதவன் மாதிரியா இருக்கு.” என புஜத்தை தட்டி சொல்ல, புன்னகைத்தாள் ரிதா.

“ ஆமா... அவங்க உம்மா இல்லையா?”

“ இல்ல... காலேஜ் போயிருக்காங்க...”

“ இப்போ லீவ் டைம் தானே?”

“ ஆபிஸ் மட்டும் ஓர்க் ஆகும் மச்சான்”

“ ஓ....” அதற்குள் மைசரா சாவி வாங்கி கொண்டு மேலே வரும்படி கூறிவிட்டு படியேறினாள்.

அவள் வீட்டின் வாசலில் பைகளை வைத்தவன்,” அப்போ நான் கிளம்பறேன் ரிதா” என்றான் லேசாக மூச்சிரைத்தபடி.

அவன் தன்னை புறக்கணிக்கிறான் என தெரிந்தாலும், இரண்டு மாடி மூச்சிரைக்க வந்தவனை உள்ளே அழைக்காமல் விட மனமில்லை அவளுக்கு.

“ உள்ளே வந்து ஒரு காபி குடிச்சிட்டு போங்க” என்றாள் மைசரா.

“ இல்ல ரிதா எனக்கு டைம் ஆச்சு” என சராவின் கேள்விக்கு ரிதாவிடம் பதிலளித்தான்.

“அட வாங்க மச்சான்....” என அவனை இழுத்து கொண்டு போனாள் ரிதா.
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
366
Reaction score
595
Points
93
Location
Madurai
ரிது ♥ சித் என்று இருவரையும் சரா, ரிஸ்வி கிண்டல் பண்ணுவது அருமை, ??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top