காதல் அடைமழை காலம் - 38(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Jun 20, 2019
Messages
193
Reaction score
1,573
Points
93
Location
Chennai
அவனை ஹாலில் அமர வைத்து பேனை போட்டு விட்டு சமையலறைக்கு சென்றாள் மைசரா.

அங்கிருந்தே ரிதாவை அழைத்தவள்,” உன் மச்சானுக்கு டீ வேணுமா இல்ல ஜூஸ் வேணுமா கேளு” என்றாள்.

“அவங்க உனக்கு மச்சான் இல்லையா” அவள் வழக்கம் போல் ஆரம்பிக்க, விரலை நீட்டி எச்சரித்தவள்,” விளையாடாம போய் கேளு ரிதா” என்றாள்.

அவளுக்கு ஏனோ ரிஸ்வி தன் வீட்டிலிருப்பது சங்கடமாய் இருந்தது. தன் வீட்டை பார்த்து ஏளனமாக நினைப்பானோ, எள்ளலாக சிரிப்பானோ என ஏதேதோ தோன்றியது.

“ நீயே போய் கேளேன். எனக்கு அர்ஜெண்ட் லா” என சுண்டு விரலை நீட்டி காட்டியவள், ஓடியேவிட்டாள்.

“ சை....” என தலையில் அடித்துக் கொண்டவள் ஹாலிற்கு செல்ல, டீபாய் மீதிருந்த செய்தி தாளை எடுத்து விசிறி கொண்டிருந்தான் ரிஸ்வி. இவளை பார்த்ததும் அதை வைத்துவிட்டான். அவனின் நிலைமைக்கு பழசாறு கொடுப்பதே உசிதம் என நினைத்தவள் ஏதும் கேட்காமல் ஹாலிலிருந்த ஏர்கூலரை போட்டுவிட்டாள். அவன் ஆசுவாசமாக சோபாவில் சாய்ந்து கண் மூடிக் கொண்டான்.

“ முடியலனா கிளம்ப வேண்டியது தானே. யார் இவன பிடிச்சி வைச்சிருக்கா” என மனதிற்குள் நொந்து கொண்டவள் விரைவாக எலுமிச்சை பழச்சாறு கலந்து கொண்டு வந்தாள்.


இப்போது அவன் வீட்டை பார்வையால் அளந்துக் கொண்டிருந்தான். மைசராவின் வீடு இரு அறைகள் கொண்ட சிறிய வீடு தான். சின்ன ஹால் பக்கவாட்டில் இரு அறைகள், சற்று எட்டிப்பார்த்தால் ஹாலை தொடர்ந்து இடப்பக்கம் சமையலறையும் வலப்பக்கம் குளியலறையும் இருப்பது தெரிந்தது. அவ்வளவு தான் வீடு. வாசலே பால்கனி போல தான் இருந்தது.

“ ஜூஸ்....” என அவள் நீட்ட, ஏதும் சொல்லாமல் எடுத்துக்கொண்டான். ரிதாவும் வந்தமர்ந்தாள். சில நிமிடங்களில் அவன் பழசாறை குடித்து முடிக்க, அவன் வைத்த குவளையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் மைசரா.

“ ஓ.கே பாய் ரிதா....” என்றவன் கிளம்பி விட, மைசராவிற்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

தன்னறைக்கு வந்து படுத்தவள், “ ஒரு கர்டஸிக்கு கூட என் கிட்ட சொல்லிட்டு போகணும் னு தோணல பாரேன். எவ்ளோ கேவலமா நினைக்கிறான் என்னை. சரி தான் போடா.... உன் கோபம் என்னை என்ன பண்ணும்?” என அலட்சியபடுத்தியவள் நிம்மதியாக தூங்கி போனாள்.

அதிரி புதிரி ட்விஸ்டை தொடர்ந்து அடுத்த பதிவில் அதிரடியான ட்விஸ்டோடு சந்திக்கிறேன்.

- மழை வரும்
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
366
Reaction score
595
Points
93
Location
Madurai
அஹா ரிஸ்வி சரா கொடுத்த பழச்சாறை குடித்துவிட்டு, ஆனால் ரிதா கிட்ட மட்டும் போய்ட்டு வாரேன் சொன்னது சராவிக்கு கடுப்பாகுது, ??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top