காதல் அடைமழை காலம் - 39(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Jun 20, 2019
Messages
193
Reaction score
1,573
Points
93
Location
Chennai
“ சரி.... உன் கூட இஷ்ரத் இருந்திருப்பால்ல.... அவளுக்கு தெரிஞ்சிருக்குமில்ல.... அவ கூட ஒரு வார்த்தை சொல்லயே. அவளுக்கு போன் போடு” எனவும் பெண்கள் இருவரும் திரு திருவென முழித்தனர். இஷ்ரத் இளங்கலையோடு தன் படிப்பை முடித்து விட,இருவரும் அவளை அப்படியே மறந்துவிட்டனர்.

“ ஏன் ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. இஷ்ரத்துக்கு எல்லா விஷயமும் தெரியும் தானே?”

“ இல்ல மா... அது வந்து இஷ்ரத் என் கூட திருச்சி வரல மா....”

“ வரலயா? இத ஏன் என் கிட்ட சொல்லல? அப்போ எல்லாம் திட்டம் போட்டு தான் செய்திருக்கீங்க இல்ல? நா இஷ்ரத் கண்டிப்பா உன் கூட வரணும் னு சொன்னதே எதுக்கு தெரியுமா? நீயும் அவளை போல ஒரு சிநேகிதி மட்டும் தான் அந்த வீட்டு பிள்ளை இல்லை னு உன் மனசுல பதியணும் னு தான். மொத்தத்தில நா எது நடக்ககூடாது னு நினைச்சனோ அதை எல்லாம் நடத்திட்டு வந்திருக்க”

“ சாச்சி..... நாங்க திட்டம் போட்டு எதுவும் செய்யல. அவ கடைசி நேரத்துல தான் வரல னு சொன்னா. உங்க கிட்ட சொன்னா நீங்க அனுப்ப மாட்டீங்க னு பயந்து நான் தான் அவள சொல்ல வேண்டாம் னு சொன்னே” இப்போது ரிதா பரிந்து பேசினாள்.

“ போதும் நீங்க எத்தனை விளக்கம் சொன்னாலும் நடந்தது நியாயமாகாது. அவ என் கிட்டயிருந்து விலகி போகணும் முடிவு பண்ணிட்டா. நான் தான் புரிஞ்சிக்கல”

“ உம்மா.... உம்மா.... ப்ளீஸ் மா.... அப்படியெல்லாம் சொல்லாத மா. இந்த போட்டோ உண்மை தான் மா ஆனா நீ நினைக்குற மாதிரிலாம் நான் எந்த தப்பும் பண்ணல மா. இது தவறுதலா நடந்தது.....” என அன்றைய நிகழ்வை விளக்க எத்தனிக்க, வாயிற்மணி ஒலித்தது.

ரிதா சென்று கதவை திறக்க அங்கே வெடிக்க போகும் எரிமலையாய் ரசியா நின்றிருந்தார் உடன் அயானும் வந்திருந்தான். மூவருமே ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

“ நீ எங்க இங்க இருக்கே? ஹாஸ்டல்ல இல்லையா நீ?” ரசியா போட்ட சத்தத்தில் அரண்டு போனாள் ரிதா.

“ அது... அது... நீங்க மு... முதல்ல உ....உள்ளே வாங்க மா....மாமி...” வார்த்தைகள் தந்தி அடித்தது அவளுக்கு.

“ ரிது....” சின்ன குரலில் அவளை அழைத்து பார்வையாலே அரவணைத்தான் அயான்.

அரவம் கேட்டு சபூரா ஹாலுக்கு வர இருவரும் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். இப்படி ஒரு சூழலில் ரசியாவை சந்திப்போம் என கனவிலும் நினைக்கவில்லை சபூரா.

இருவரும் அதிர்ச்சியில் அப்படியே நிற்க,” ரிதா இவங்க மைசரா உம்மாவா?” என வினவினான் அயான். ஆமாம் என அவள் தலையசைத்தாள். ரசியாவுக்கு இப்போது மைசராவை பார்க்கும் போது நன்றாகவே தன் குடும்ப ஜாடை தெரிந்தது.

“ நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா? அன்னைக்கு நான் கேட்ட கேள்விக்கு நாண்டுகிட்டு செத்துருப்ப னு நினைச்சேன்.” ரசியாவிடமிருந்து குத்தீட்டியாய் புறப்பட்டன வார்த்தைகள்.

ஆனால் அதில் சபூராவை விட மைசராவும் ரிதாவும் தான் நிலைகுலைந்து போயினர். அயானுக்கு கூட மனம் பதறியது.

கேட்ட வார்த்தையில் இதயம் கிழிந்தாலும்,”எந்த தப்பும் பண்ணாம நா ஏன் சாகனும் ரசியா? என திடமாகவே கேட்டார் சபூரா.

“ ஆமா மா நீ எதுக்கு சாகணும்? அதெல்லாம் மானம் ரோஷம் இருக்குறவ செய்யறது. நீ தான் மானத்த வித்து....” என ஏதோ கூற வந்தவர் தன் பேச்சை நிறுத்தி பார்க்க, கூனிக்குறுகி போனார் சபூரா.

தன் கண் முன்னாலே தன் தாயை இழிவுபடுத்தும் ரசியாவை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் மைசரா.

ரிதா கோபமாக அயானை பார்க்க, “ உம்மா.... நோ மா... இப்படி எல்லாம் பேசாதீங்க....” என கெஞ்சுதலாக கூறினான்.

“ உனக்கு இவள பத்தியெல்லாம் தெரியாது அயான்.” என்றவர் திரும்பி, “ முதல்ல நீ வந்து என் காகாவ மயக்கினே. இப்போ உன் மவள அனுப்பி என் மகன மயக்க பார்குறீயா? ஹூம்.... நல்ல பொழப்பு...” ரசியாவின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன.

அயானுக்கு இப்போது தான் சபூரா தன் மாமி என்பது புரிந்தது. அவன் அதிர்ச்சியாகி ரிதாவை பார்க்க அவள் அவனுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.

பதினேழு வருடங்களுக்கு முன் பார்த்த ரசியா கிஞ்சித்தும் மாறாமல் அப்படியே இருப்பதை கண்டு விரத்தி புன்னகை புரிந்தார் சபூரா. தனக்கு வந்த குறுஞ்செய்தி அவளுக்கும் வந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

“ நீ கொஞ்சமும் மாறவேயில்ல ரசியா. உனக்கு சொல்லி புரியவும் வைக்க முடியாது. பேசி முடிவு எடுக்குறவ இல்ல நீ.... முடிவு எடுத்துட்டு பேசுறவ.... உன் கிட்டலாம் மனுஷி பேசவே முடியாது. என்ன நடந்தது னு நானே இன்னும் முழுசா விசாரிக்கல. அதுக்குள்ள நீ வந்து புது கதை எழுதாத.... ” இவ்வளவு நேரம் மகளை தாறுமாறாக அடித்தாலும், பேச கூடாத வார்த்தைகளை பேசினாலும் ரசியாவிடம் தன் மகளை விட்டு கொடுக்காமல் பேசினார் சபூரா.

“ மனுஷிலாம் பேசலாம் உன்ன மாதிரி ஈன பிறவிங்க தான் பேச முடியாது. அன்னைக்கு என்னவோ பெரிய உத்தமி மாதிரி பேசிட்டு உன் குட்டு வெளியாகிடுச்சுன உடனே திருட்டுத்தனமா ஓடிப் போனவ தான நீ..... இன்னைக்கு மவள வைச்சி ஒட்டிக்க பார்க்கிறீயா? உனக்கு வெட்கமா இல்லை? இத்தனை வருஷமா இந்த வேலைய தான் பார்த்தியா?” தான் யாருக்கும் அடங்காதவள் என்பதை நிரூபித்தார் ரசியா.

“ மா.... நீங்க பேசுறது சரியில்லை. எதுவாயிருந்தாலும் எல்லார் கிட்டயும் கலந்துகிட்டு பேசலாம்... வாங்க போலாம்” என அயான் தாயை அங்கிருந்து அப்புறப்படுத்த விழைந்தான். அந்த படத்தை பார்த்ததும் அவனுக்கும் அதிர்ச்சி தான். கோபத்தில் ரசியா அழைத்ததும் கிளம்பிவிட்டான் தான். ஆனால் இங்கு விஷயம் வேறு மாதிரி இருக்க, சற்றே நிதானித்தான் அவன்.

“ நீ பேசாம இரு அயான். இது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். இந்த விஷச்செடிகள முளையிலேயே கிள்ளிடணும்” என கர்ஜித்தவர்,

மைசராவின் முன் சொடக்கிட்டு, “ இங்க பார்.... இனிமே என் மவன சந்திச்சி பேசவோ, பழகவோ நினைச்ச உன்னை உரு தெரியாம அழிச்சிடுவேன்.” என்றார் எச்சரிக்கும் குரலில்.

ரிதா அயானிடம் கண்களாலே கெஞ்ச,” வாங்க மா போலாம். இனிமே அவங்க காகாகிட்ட பேசமாட்டாங்க” என்றபடி தாயை கை பிடித்து இழுத்தான்.

பின் சபூராவை பார்த்து,” மவள கண்டிச்சி வை. இல்லனா உன் தேர இழுத்து தெருவுல விட்ருவேன்” என அடிக்குரலில் மிரட்ட, தலைகுனிந்து நின்றார் சபூரா.

“ ஏய்..... எவ்ளோ தைரியம் இருந்தா இவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவ... யார் யாரை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும். இப்படி கூட்டி வந்து நடு வீட்டுல உட்கார வைச்சா இப்படி தான் நாறும்” என ரிதாவிடம் சீறியவர்,” ம்.... கிளம்பு....” எனவும், தலைகுனிந்து சபூராவிடம் ஒன்றி கொண்டாள் ரிதா.

“ நான் சொல்லிட்டே இருக்கேன் நீ மரம் மாதிரி அப்படியே நிற்குற. வா என்கூட...” என சத்தம் போட்டார்.

“ ரசியா..... அவள இங்க கூட்டிட்டு வந்தது ரமீஸ். அவன் சொன்னா தான் நா அனுப்புவேன். தயவுசெய்து உன் கோபத்துல இந்த புள்ளய அலைகழிக்காத....” என ரிதாவை அணைத்து கொண்டார்.

“ ஹலோ.... யாருங்க நீங்க இங்க வந்து சத்தம் போட்டுட்டு இருக்கீங்க?” என்றபடி உள்ளே வந்தார் சித்திக்கா. அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் கல்லூரி செல்வார்கள். இன்னும் இவர்கள் வரவில்லையே என்று தான் சித்திக்கா மேலே வந்தார்.

“ ம்.... இந்த பொண்ணு என் பையன வளைச்சி போட பார்க்குறா அதான் நாலு வார்த்தை நறுக்கு னு கேட்க வந்தேன்” நாவில் நரம்பே இல்லாமல் பேசினார் ரசியா.

பாலிலும் தூய்மையான மைசராவை களங்கபடுத்தும் ரசியாவை அற்பமாக பார்த்தவர், “ எங்க பொண்ண பத்தி எங்களுக்கு தெரியும் உங்க பையன நீங்க அடக்கி வையுங்க....” என அமர்த்தலாக கூற, ரசியா முகம் கறுத்து போனது.

ஆனால் அப்போதும் சளைக்காமல் ஏதேதோ கத்தி விட்டு சென்றார் ரசியா. அவர் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. ஆளுக்கு ஒரு திசையில் முடங்கி விட்டனர்.

நொந்து போய் இருப்பவர்களை மேலும் வருத்த விரும்பாமல்,” விடு சபூரா.... நமக்கு நம்ம புள்ளய பற்றி தெரியும். கண்டவ வந்து கத்துனத மனசுல வைச்சிக்காத. நான் கிளம்புறேன். உனக்கு ரெண்டு நாள் லீவு சொல்லிடுறேன். சரா... நீயும் நடந்ததையே நினைச்சிட்டு இருக்காம அடுத்த வேலைய பாரு.“ என ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

சபூராவால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. ரசியாவிடம் தான் சிக்கி சீரழிந்தது போதாதென்று இப்போது சராவும் அல்லவா சிக்கிவிட்டாள் என அந்த தாயுள்ளம் கதறியது..... ரசியா இத்தோடு நிற்க மாட்டாள். விஷயம் அனைவருக்கும் பரவும்.என் பிள்ளைகள் முன் என் கடந்த காலம் கடைவிரிக்கபடும். இனி நடக்க போகும் விபரீதங்களை யோசிக்க யோசிக்க அவரது முதுகு தண்டு சில்லிட்டது. தன் மகளின் எதிர்காலத்தை நினைத்தவருக்கு தலைசுற்ற அப்படியே மயங்கி சரிந்தார்.

பெண்கள் இருவரும் பதறியபடி அருகே வந்தனர்.

“ ம்மா.... மா... எழுந்துருமா... நா எந்த தப்பும் பண்ணல மா. என்னை பாரு மா. நா உன் பொண்ணு மா. நா எப்படி மா தப்பு பண்ணுவேன்” தாயின் கன்னத்தை தட்டி கதறிக் கொண்டிருந்தாள் மைசரா.

“ சரா.... சாச்சிக்கு ஒன்னுமில்லை. பிபி ஷூட் அப் ஆகியிருக்கும். இந்த தண்ணிய முகத்தில தெளி. நா போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்” என ரிதா வெளியே போனாள். மைசரா தண்ணீர் தெளித்ததும் சபூரா கண் விழிக்க, அவரை கை தாங்கலாய் அழைத்து போனாள் மைசரா.

ரிதா கூறியதை போல இரத்த அழுத்தம் தான் அதிகமாகியிருந்தது. ரசியாவின் சொல்லம்புகளில் அடிப்பட்டு சிதைந்து கிடக்கும் தாயின் முகத்தையே வெறித்து கொண்டிருந்தாள் மைசரா.

“ சரா.... நா போய் இந்த மெடிசின்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திடுறேன். கவலைபடாத... அதான் சாச்சிய ஈவ்னிங் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் னு டாக்டர் சொன்னார்ல...” என அவள் தோளை தட்டிக் கொடுத்து விட்டு சென்றாள்.

மைசராவின் பார்வை அன்னை மேல் இருந்தாலும் சிந்தனை வேறிடத்தில் இருந்தது. அது இத்தனைக்கும் காரணமாக ரிஸ்வியை மனதில் போட்டு அரைத்து கொண்டிருந்தது. இவன் கோபம் என்னை என்ன செய்யும்? என அலட்சியமாக நினைத்தது இப்போது நினைவு வந்து சுட்டது. இப்படி போட்டோ எடுத்து வைத்திருப்பான் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை அவள்.

“ வச்சி செய்துட்டான்....” அவள் இதழ்கள் வெறுமையாய் முணுமுணுத்தது.

அதிரடி ட்விஸ்ட் எப்படி இருந்தது மக்கா. கொஞ்சம் சொல்லிட்டு போங்க. கவலைபடாதீங்க தோழிஸ் ...... அதிரடி ட்விஸ்டை அடுத்து ஆனந்த ட்விஸ்ட் அடுத்த பதிவில்.....

- மழை வரும்
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 
Raman

Well-known member
Joined
May 29, 2019
Messages
2,289
Reaction score
6,456
Points
113
Location
Trichy

ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
366
Reaction score
595
Points
93
Location
Madurai
ஆனால் இன்னும் ரசியா தன் குணம் மாறவில்லை என்று தன் விஷ வார்த்தைகளால் சரா, அவள் அம்மாவை பேசி விட்டு சென்று விட்டார், ஆனால் சபூரா தன் பெண்ணின் வாழ்வு இதனால் பாதிக்க படும் என்று வேதனை பட்டு மயங்கி விடுகிறார், இப்ப கோபம் அனைத்தும் சராவிற்கு ரிஸ்வி மேல் திரும்பி விட்டது, இனி என்ன நடக்குமோ ???????
 
shiyamala sothybalan

Well-known member
Joined
Dec 12, 2019
Messages
397
Reaction score
1,287
Points
93
இப்படியும் ஒரு பொம்பிளயா ரசியா. அது நாக்கா அல்லது விசக்கொடுக்கா. சராவும், சபுராவும் பாவம். ரிஸ்வியா, மன்சூரா இப்படி செய்ததென்று தெரியாதே. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கோ.(y)(y)(y)?????????
 
honey1207

Well-known member
Joined
Mar 16, 2020
Messages
740
Reaction score
1,032
Points
93
Location
chennai
Omg what a mouth this rasiya got?..Sara mum also made mistake getting more emotion n forgetting to ask Sara Side .waiting For next ud .may be Indha mansoor oda work ah idhu?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top